திண்ணையின் இலக்கியத் தடம் -11

author
1
4 minutes, 23 seconds Read
This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

மே 5 2001 இதழ்:

Rewarding the Politicians Financially for their work – T.Kishore, T.Gopal Rao- சட்டபூர்வமாக ஒரு தொகுதியின் மேம்பாட்டில் ஒரு எம் எல் ஏ அல்லது மந்திரி செய்த சாதனை மற்றும் உயர் வரி வருவாய் அடிப்படையில் ஒரு தொகையை மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுத்தால் அப்போது நல்ல விளைவுகள் காணப்படும் என்னும் கட்டுரை. நகைசுவை மற்றும் வித்தியாசமானவை பகுதியில் வந்திருக்க வேண்டிய கட்டுரை. அரசியல் சமூகம் பகுதியில் வந்துள்ளது. கிஷோரும் கோபால் ராவும் இந்தியாவில் இல்லை என்றே தோன்றுகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105051&edition_id=20010505&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.ஜெயலலிதாவுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை. 2. அமெரிக்கா உளவுக்கு செயற்கைக் கோள்களைப் பயன் படுத்துகிறது. 3.பாமக காங்கிரஸ் இணைகிறது. 4. அமெரிக்காவில் தனியார் குழுமங்கள் விண்வெளிப் பயணங்களை ஏற்பாடு செய்கின்றன. 5.அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதத்துக்கு யார் காரணம்? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105052&edition_id=20010505&format=html )

கணினி யுகத்திற்கான இன்றியமையா சமூகச் சிந்தனை-1- சி.குமாரபாரதி- கணினி யுகத்தில் பொருளாதாரமோ சமூகம் சம்பந்தப் பட்டவையோ எதுவானாலும் ஒருவரது எதிர்வினை அல்லது கருத்து வலைத்தளங்கள் மூலம் வெளியாகி முன்னெப்போதையும் விடக் கருத்துப் பரிமாற்றம் நிகழ்கிறது. ஆனால் தமிழ் சூழலின் மேம்போக்கான, பொறுப்புணர்வு அற்ற வாய்ப்பந்தல் போடும் தன்மை தன்னை இந்த யுகத்தின் நற்பயன்களை உள்வாங்கத் தோதுவாக இல்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105053&edition_id=20010505&format=html )

சத்யஜித் ராய் தரும் மனித நம்பிக்கை- எஸ்.ஆல்பர்ட்- பதேர் பாஞ்சாலி என்னும் நாவலின் அடிப்படையில் ராய் எடுத்த மூன்று படங்கள் பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அப்புர் சம்சார் ஆகிய மூன்று படங்கள் மற்றும் கணசத்ரு ஆகிய படங்களின் விரிவான விமர்சனத்துடன் அவரது ஆளுமையை நமக்கு விளக்கும் அருமையான கட்டுரை. Film Society என்று திருச்சி ஜோசப் கல்லூரியில் உலக சினிமாக்களைத் திரையிட்ட காலத்தை நினைவு கூறுகிறார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105055&edition_id=20010505&format=html )

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு-கன்ஃபூஷியஸின் போதனைப்படி உடல் இறைவன் தந்த பேறு அதை வெட்டி ஆராய வழியில்லை என்பதால் சீனாவில் அறுவை சிகிச்சை முறை வரக் கால தாமதமானது. பௌத்த காலத்துக்குப் பின் கண் புரை அறுவை சிகிச்சையே முதலில் இந்தியாவில் இருந்து சீனம் சென்றது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40105051&edition_id=20010505&format=html )

கதைகள்: அடங்குதல் – வண்ணதாசன், பயம் – நீல.பத்மநாபன்

கவிதைகள்: கரி யார் முகத்தில் – திலக பாமா, தினம் தினம்- ஜெயானந்தன், நூறு நிலவுகள்- ருத்ரா, ஒரு பழைய வீடு- வெ. அனந்த நாராயணன்

மே 13 2001 இதழ்:

யுரேக்கா (அல்லது) அறிவியலில் படைப்புத் தருணங்கள்- குமார பாரதி – கலிலியோ காலம் தொடங்கி இன்றைய காலம் வரை பௌதீகத்தில் நிகழ்ந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பற்றிய விரிவான கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105131&edition_id=20010513&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1. ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் வெற்றி, 2.கேரளாவில் இடது சாரிகள் தோல்வி, மேற்கு வங்கத்தில் வெற்றி, 3. ஆர் கே நாராயண் மறைவுக்கு அஞ்சலி, 4.சன் டிவி தேர்தல் முடிவு ஒளிபரப்பு சரியாக வரவில்லை. 5. அதிமுக வேட்பாளர் திமுக வேட்பாளரைத் தாக்கிய போது போலீஸ் ஏன் வேடிக்கை பார்த்தது? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105132&edition_id=20010513&format=html )

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 3- விஜயா தேஷ் பாண்டே- சுஸ்ருதர் கண்களின் பல்வேறு வகையான குறைகள் அல்லது நோய்களைப் பகுத்து ஆய்ந்து தங்க ஊசி மூலம் புரை நீக்கம் செய்யும் முறையைக் கொண்டு வந்தார். 7 முதல் 14ம் நூற்றாண்டில் இது சீனத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105133&edition_id=20010513&format=html )

கணினி யுகத்தில் இன்றியமையாத சமூக சிந்தனை- 3- குமார பாரதி – பகுதி 2ல் கணினி யுகத்துக்கு முற்பட்ட காலத்தின் சமூக விழுமியங்கள் குறித்த விவரமான அலசல். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105134&edition_id=20010513&format=html )

அரசியல்வாதிகள் வேலைக்குத் தகுந்த ஊதியம்- எதிர்வினை-1- கிரிஸ்- அரசியல்வாதிகளுக்கு ஊக்கத் தொகை தேவையில்லை என்னும் எதிர்வினை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105135&edition_id=20010513&format=html )

புஷ்ஷின் ‘வெற்றி முரச் கொட்டும் நூறாவது நாள்’ – டெக்ஸன்- முதல் நூறு நாட்களில் புஷ் தேறி விட்டார். அவரது அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் கிளின்டனை ஒப்பிட சிறப்பானவை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105136&edition_id=20010513&format=html )

கதைகள் : மௌனம் – நீல பத்மநாபன், இரண்டாம் பீஷ்மன்- பாரதி ராமன்

கவிதைகள்- புலவு நுணுக்கம்- பசுபதி, காதல் என்னும் ஒரு தொல்காப்பியம் – ருத்ரா, புற நானூறு 367 -ஔவையார், ஓசைகள் – அ.பறவை

சமையற் குறிப்பு – அரிசி வடை, பூரிப் பாயாசம்

மே 19, 2001 இதழ்:

புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம்? -கோபால் ராஜாராம்

காலச் சுவடு பதிப்பகத்துக்கு புதுமைப் பித்தனின் மகளார் அவரது எழுத்துக்களைப் பதிக்கும் உரிமையை வழங்கிய போது மற்றொருவர் (இளைய பாரதி) இரண்டாம் பதிப்பை வெளியிட முயன்ற போது அவருக்கு முதல் பதிப்புக்கு மட்டுமே உரிமை இருந்தது என்று தினகரி விளக்கம் அளித்தார். இன் குலாப் மற்றும் இடதுசாரிகள் புதுமைப் பித்தன் எழுத்துக்கள் நாட்டுடமையாக்கப் பட வேண்டும் என்னும் கருத்தை வரவேற்கிறார் கோபால். திடீர் என்று இடது சாரிகள் புதுமைப் பித்தனை சொந்தம் கொண்டாடுவதைச் சாடுகிறார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105191&edition_id=20010519&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.ஜெயலலிதா முதலமைச்சரானார். 2.அவரது வெற்றிக்கான காரணங்கள். 3. அமெரிக்க ராணுவக் கொள்கையை இந்தியா வரவேற்கிறது. 4.மலேசியாவுக்கு இந்தியப் பிரதமர் விஜயம். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105192&edition_id=20010519&format=html )

கணினி யுகத்தில் இன்றியமையாத சமூக சிந்தனை- 3- குமார பாரதி- கணினி வழியே ஊடகங்களை மேம்பட்ட சமுதாயத்துக்கான விவாதங்களுக்கான நாம் பயன்படுத்த வேண்டும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105193&edition_id=20010519&format=html )

விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்- இளைய ஜீவா- விஷ்ணுபுரம் நாவல் பற்றிய ஒரு விரிவான விளக்கக் கட்டுரை – கேள்வி பதில் வடிவில். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60105192&edition_id=20010519&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- வாழ்க்கை என்னும் லாட்டரி- மைக்கேல் லாட்டன்- மரபணு தொழில் நுட்பம் இப்போது ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே என்னென்ன நோய்களுக்கு ஆளாகும் என்று பரிசோதித்து, பெற்றோரைத் தேவையானால் கருக்கலைப்பு செய்யும் முடிவெடுக்கும் அளவு வளர்ந்துள்ளது. இதுவே வருங்காலத்தில் பெற்றோரின் இன்னின் குணாதிசயங்களுடன் குழந்தை பிறக்க வேண்டும் என்று பெற்றோர் முடிவு செய்யும் அளவு பயன் படலாம். இதுவே வருங்காலத்தில் வழக்கமான ஒன்றாகவும் மாறலாம். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40105191&edition_id=20010519&format=html )

கவிதைகள்:மாண்டுக்யோபநிஷதம்- ருத்ரா, கவலைப் படாதே -பிரபு, எங்கே போனது ஜனநாயகம்- விஜய்.

கதைகள்- பத்து செட்டி தி.ஜானகிராமன், குருவி வர்க்கம் -அஸ்வ கோஷ், இனியும் விடியும் – சேவியர்

சமையற் குறிப்பு- மிளகு பூண்டுக் குழம்பு அல்லது முட்டைக் குழம்பு

மே 25 2001- கவிதைகள் – சில நேரங்களில் – விஜய குமார் சிவராமன்

மே 27, 2001:

பாராட்டு- பாரி பூபாலன் – ஒரு மேலாளர் ஒரு உதவியாளரைப் பாராட்டினால் அந்த ஆளுக்கு எந்த அளவு மனம் உற்சாகம் பெறும் என்று விளக்கும் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105271&edition_id=20010527&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்-1.ஜெயலலிதா பதவி ஏற்றதை எதிர்த்து வழக்கு, 2.முஷாரஃப் வாஜ்பாய் சந்திப்பு, 3. இந்துக்கள் மஞ்சள் துணி அணிந்து வலம் வர வேண்டும் – தாலிபான்கள் கட்டாயம், 4.போக்குவரத்துக்கழகங்களுக்கு மீண்டும் தலைவர்கள் பெயர்- ஜாதித் தலைவர்கள் தான் முன்பு அந்தப் பெயர்களை நீக்கினார்கள், 5. பெண்களுக்கு பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடா?- ஜெயலலிதா போன்றோரே பயன் பெறுவார்கள், 6.உழவர் சந்தைகளை மூடப் போகிறார்கள், 7.காங்கிரஸ் துவங்கும் தெலுங்கானாப் போராட்டம் சந்திர பாபு நாயுடுவுக்குத் தலைவலி தரவே.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105272&edition_id=20010527&format=html)

இந்துக்கள் மஞ்சள் முண்டாசு அணியச் சொல்லும் தாலிபான் உத்தரவு சரிதான் -சின்னக் கருப்பன்- பல முஸ்லீம்கள் பாரம்பரிய உடை அணியாமல், தொழாமல் மாட்டிக் கொண்டால் தப்பிக்க இந்து என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதைத் தடுக்க தாலிபான் கொண்டு வந்துள்ள சட்டம் சரியானதே.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20105273&edition_id=20010527&format=html )

விளக்கு இலக்கிய அமைப்பு – அதன் நிறுவனர்கள் தமது நோக்கம், கொள்கை, செயற்பாடு , மற்றும் உறுப்பினர் பற்றிய விவரங்கள் தரும் அறிவிப்பு – தமிழிலும் ஆங்கிலத்திலும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60105271&edition_id=20010527&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்-
தொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வு முறை மாற்றங்களும் – குமார பாரதி – சாமியார் பூனை வளர்த்த கதை போல ஒவ்வொரு தொழில் நுட்ப வளர்ச்சி கொண்டு வரும் முன்னேற்றமும் நம் வாழ்க்கை முறையிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. அந்த வாழ்க்கை முறை மாற்றம் நம் மீது திணிக்கப் படுகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40105271&edition_id=20010527&format=html )

கவிதைகள்- நாளை மீண்டும் காற்று வீசும், நண்பன்- சேவியர், புறநானூறு- பரணர்.

கதைகள்- வாப்பா நான் செஞ்சது தப்பா?- முடவன் குட்டி, ஆறுதல் – வண்ணதாசன்

சமையற் குறிப்பு- ஐஸ்கிரீம் செய்வது எப்படி?, எலிமிச்சை ரசம்

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் – பட்டு கிட்டு அமெரிக்கா ஸ்டைல்- ஆசை ஆசைத்தம்பி

ஜூன் 2 இதழ்:

சி. குமாரபாரதியின் கட்டுரை பற்றிய கருத்து- கிரிஸ்- குமாராபாரதியின் கட்டுரைக்கு எதிர் வினை- நுகர்வு பொருள் வாணிகத்தில் வந்துள்ள மாற்றங்கள் சுழற்சியாக இருக்கின்றனவோ?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106021&edition_id=20010602&format=html )
அறிவியலும் தொழில் நுட்பமும்-
தொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வு முறை மாற்றங்களும் – 2-குமார பாரதி – இலவசம் என்றும் , உதவிக்கரம் என்றும் நம் மீது வலைத்தளங்கள் திணிக்கும் மென்பொருட்கள் நம்மை வேவு பார்க்கின்றன. நம் அந்தரங்கம் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது. நம் விருப்பத்தை தணிக்கை செய்ய ஃபயர் வால் என்னும் அமைப்பு காத்திருக்கிறது. ஹாக்கர் என்னும் ஊடுருவல்களுக்குப் பல மென்பொருட்கள் துணையானவையே.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106022&edition_id=20010602&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்-1.ஜெயலலிதாவின் பழி வாங்குதல்கள் துவங்கி விட்டன. 2.பாமக படு தோல்வி அடைந்தது. 3.நேபாள மன்னர் குடும்பம் அழிந்தது. 4.கள் இறக்கப் போராட்டம்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106023&edition_id=20010602&format=html )

கனடா பல்கலைக் கழகம் சுந்தர ராமசாமிக்கு இயல் விருது கொடுத்து கௌரவித்தது – அ. முத்துலிங்கம்,
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60106021&edition_id=20010602&format=html )

கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு- ஊர்க்குருவி

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60106022&edition_id=20010602&format=html )

கதைகள்- நாத ரட்சகர்- தி.ஜானகிராமன் , இழப்பு- கோகுலக் கண்ணன்

கவிதைகள்- பிப்-14-கலியுகன், ஜீவ ராசி,காதல் நதியினிலே – கே ஆர் விஜய், பாரத சமுதாயம் – ஸ்ரீநி

சமையற் குறிப்பு- அவல் கேசரி, அவல் உப்புமா, பால் கொழுக்கட்டை

ஜூன் 10 2001- டெல்லிக்குப் போகும் பாகிஸ்தான் பிரதமர்- (முன்னாள் பாக் பிரதமர்) பேனசிர் புட்டோ- முஷாரஃப் மிகவும் பலவீனமான நிலையில் இந்தியா போகிறார். ஒரு சிலந்தி ஒரு சிறு பூச்சியைப் பார்த்து என் வலைக்குள் வந்து விடு என்று அழைப்பது போல் வாஜ்பாயி அழைப்பு விடுத்திருக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106101&edition_id=20010610&format=html )
தமிழகத்தில் இந்தத் தேர்தலில் மக்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள்?- படிக்காத மக்கள் அரசியல்வாதிகளின் சூதுவாது அறியாமல் ஓட்டுப் போடுகிறார்கள். படித்தவர்கள் பாமரரை வழி நடத்த வேண்டும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106102&edition_id=20010610&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்-ஜெய்பூரில் செயற்கைக் கால் தயாரித்த டாக்டருக்கு விருது, 2.முஷாரஃப் டெல்லி விஜயத்துக்கு எதிர்வினைகள், 3. நேபாளப் படுகொலைகள்- யூகங்களும் வதந்திகளும் 4.இந்த ஆண்டு நூலக ஆண்டாக மத்திய அரகு கொண்டாடுகிறது.

ர்வாண்டா- ஏன் எப்படி இனப் படுகொலை நடந்தது? -ர்வாண்டா நாட்டின் பெரும்பான்மையினரான ஹூடு இன மக்கள் டுட்ஸி என்னும் சிறு பான்மையினரில் 8 லட்சம் பேரை 1994 ஏப்ரல் முதல் ஜூன் வரை வேட்டையாடிக் கொன்றார்கள். இதற்கு அரசாங்கம் துணை போனது. பண்பாட்டு ரீதியாக இந்த இரு இன மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது பெல்ஜியமே. பெல்ஜியத்தின் காலனியாக ர்வாண்டா இருந்த போது இது நிகழ்ந்தது. துறவிகள் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டது இப்போது வெளி வந்துள்ளது. இந்தியப் பத்திரிக்கைகள் இதைக் கண்டு கொள்ள்வே இல்லை.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106104&edition_id=20010610&format=html )

புதுமைப் பித்தன் படைப்புகள் – என் ஆய்வின் கதை- வேத சகாய குமார்- புதுமைப்பித்தன் பற்றிய ஆய்வுகளில் அவரது மூலப் பிரதிகளைத் தேடிச் சென்ற போது தாம் எதிர் கொண்ட சவால்களை விரிவாக விளக்குகிறார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60106101&edition_id=20010610&format=html )
அறிவியலும் தொழில் நுட்பமும்-

இணையக் கலைச் சொற்கள் – டாக்டர் விஜயராகவன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40106102&edition_id=20010610&format=html )

யுரேக்கா-2 -அறிவியல் படைப்புத் தருணங்கள்- குமாரபாரதி – மின்சாரம் மற்றும் மின் காந்தவியல் பற்றிய விரிவான கட்டுரை

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=4010610&edition_id=20010610&format=html )

கதைகள் – தேடல் – நீல.பத்மநாபன், அறம்- மாலன்

கவிதைகள்- இலவங்காடுகள்- ருத்ரா, ஆளற்ற லெவல் கிராசிங்- கே.கே, முதல் காலை- வாஸனா, பயம்- சேவியர், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு நினைவாஞ்சலி- அனந்த நாராயணன், ஈசன் தந்த வீசா- பாரதி ராமன், வாழ்க்கை- கஜல்

சமையற் குறிப்பு- பூசணி அல்வா

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்- வீரப்பன் முதல்வரானால் சிறப்பிதழ் – தின கப்ஸா

ஜூன் 18 2001 இதழ்:

இந்த வாரம் இப்படி- ஜெயலலிதா- 1. அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கலாமா? 2. அவரது கூட்டணிகள் முறிந்தன. 3. அவர் எல்லோர் மீதும் வழக்குப் போடுகிறார்., 4.ஈரானில் காதாமி ஆட்சிக்கு வந்தார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106181&edition_id=20010618&format=html )

காதலுக்கு மரியாதை- லாவண்யா- 70 80 களை ஒப்பிட இப்போது வரும் சினிமாப் பாடல்களில் காதல் மையப் படுத்தப் பட்டாலும் ” என்னைத் தின்னாதே” என்று நரபட்சிணி போன்ற வரிகள் வருகின்றன. மட்டாக எழுதி காதலுக்கும் மரியாதை தர வேண்டும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106183&edition_id=20010618&format=html )

சுந்தர ராமசாமிக்கு இயல் விருது- 1- கோபால் ராஜாராம்- இடது சாரித் தத்துவ சார்புடன் தம் இலக்கிய வாழ்க்கையைத் துவங்கியவர் சு.ரா. அவரது படைப்புகளில் அறிவின் கூர்மையும் அங்கதமும் உள்ள அளவு மனித் நேயம் இல்லையோ என்றே தோன்றுகிறது. திகசி போல பல படைப்பாளிகளுக்கு ஊக்கம் தந்தவர் சு.ரா.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60106181&edition_id=20010618&format=html )

அரசாண்ட கூடு – சேவியர், ம் – மூர்த்தி, என் கணக்கு வாத்தியார்- அனந்த், மரணம் -ஸ்ரீனி, இருமை- வ.ஐ.ச.ஜெயபாலன், நல்ல நாள் – அ.முத்துலிங்கம், முத்தமிடு- பசுபதி, வசந்தத்தின் வாசல் இதுவல்ல- அகல்யா, கனவுக் குதிரைகள் – அல் ஹண்டர் (தமிழில் வ.ந.கிரிதரன்), மூன்று கவிதைகள்- பாரதிராமன், நொறுங்கிய பழமைகள்- திலக பாமா

கதைகள் – சிறியன செய்கிலாதார்- அஸ்வ கோஷ், கடன்-நாஞ்சில் நாடன்

சமையற் குறிப்பு- ஒயின் வறுத்த சாதம், அவல் புலாவ்

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் – திண்ணை அட்டவணை- சூன் 2001

ஜூன் 23,2001 இதழ்:

க்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல் போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford’s column about Pol Pot G)- கம்போடியாவில் 20 ஆண்டுகளுக்கு முன் போல் பாட் முன்னெடுத்த கொலைகள் 10 லட்சம் கம்போடிய மக்கள் உயிரழப்பில் முடிந்தது. வேறு எந்தக் கொடுங்கோலரைப் போலவும் அவர் கொள்கை, இலட்சியம் இவைகளைப் பேசித் தான் கொன்றார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106231&edition_id=20010623&format=html )

போல் பாட் ஒரு வாழ்க்கை வரலாறு- கம்போடியாவில் ரூஜ் கட்சி மற்றும் போல் பாட்டின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளின் பட்டியல்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106232&edition_id=20010623&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு எதிரான வழக்குகள் என்னவாகும் 2. கடலைப் புண்ணாக்கு சத்துணவில் இரண்டு ஆட்சியிலுமே இருப்பதாகக் குற்றச் சாட்டு. 3. இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி. 4.முஷாரஃப் தேர்தலில் வெற்றி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106234&edition_id=20010623&format=html )

CineSangam- London festival for short films in October 2001- details
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60106231&edition_id=20010623&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- இணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி- விஜயராகவன்
கதைகள்: தவறு- அழகிய சிங்கர், பொருத்தம் -நீல.பத்மநாபன்
கவிதைகள்- உயிரோடு என்னை நீ தின்னடா- ருத்ரா, முயற்சி-கோகுல கிருஷ்ணன், இரண்டாவது ஜாமத்துக் கதை- சல்மா, 5 கவிதைகள் -சேவியர்
சமையற் குறிப்பு- பச்சை மிளகாய் சட்டினி, பயத்தம் பருப்பு தோசை

ஜூன் 29 இதழ்:

இந்த வாரம் இப்படி மஞ்சுளா நவநீதன்

யுகோஸ்லேவியாவின் மிஸோலோவிச் ஐநா சிறையில் போர்க் குற்றங்களுக்காக அடைக்கப் பட்டிருக்கிறார்.2.கருணாநிதி கைது எதிர்பார்த்ததே.3.கேவி மகாதேவனுக்கு அஞ்சலி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106291&edition_id=20010629&format=html )

பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)- அ.ராமசாமி- ஸ்பெஷல் நாடகம் என்றால் ஒவ்வொரு ஊர்க்காரருக்கும் உள்ள திறமை பல வேறு பகுதிக் கலைஞர்கள் தெருக்கூத்தில் வித்தியாசமான பங்களிப்பைத் தருவதாகும். வள்ளித் திருமணம் பாரம்பரியத் தெருக்கூத்து. இதை பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர் நிகழ்த்தினர்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20106292&edition_id=20010629&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும் – இந்த வார அறிவியல் செய்திகள்
கதைகள்- ஆயுள்- அ.முத்துலிங்கம், செக்கு மாடு (குறுநாவல் – பகுதி 1) வ ஐ ச ஜெயபாலன்
கவிதைகள்- தீயவனாக இரு- கஜல், எங்கேயோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு- வ.ந. கிரிதரன், மூன்றாவது நிலவு- வ ஐ ச ஜெயபாலன், விசித்திர வதை, காதல் சேவை-அனந்த், முடிவின் துவக்கம், இருதயம் கூடவா இரும்பு? -சேவியர், இருதயம் எங்கே- ராஜ், இருளில் மின்மினி- திலக பாமா, பொறாமை- மூர்த்தி.
சமையற் குறிப்பு-மனக் கோலம்

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    paandiyan says:

    //ர்வாண்டா- ஏன் எப்படி இனப் படுகொலை நடந்தது?//
    the portal link has no such contents..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *