உனக்காக மலரும் தாமரை

This entry is part 15 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

நீ எழுதவென
எழுதாமல் வைத்திருந்த
என் மனக் காகிதத்தில்
​எழுந்த​
உணர்வுகளின்​
நிறத்திற்கு ஒரு வண்ணம்
​பூ​சுவாய் என்றிருந்தேன்.

என் எதிர்பார்ப்புகளை
புறந்தள்ளி
அன்பியலை படைத்துச்
சென்றாய்
​அழைக்காமலே !​

அழகானதொரு தருணத்தில்
காமம் இல்லாது
காதலைப் பிறப்பித்துப்
போதை ஊட்டினாய் !​

காதலுக் ​​கான காமத்தைப்
புதுப்பித்துக்​ ​கொண்டாய்
ஆழ் மன உலகில்
​கால் தடம் பதியாமலே !​

நாள் தோறும்
கதிரவனுக்காக மலரும்
தாமரை போல
உனக்காகவே மலர்கிறது
இவளின் மனம்.

Series Navigationகவுட் Gout மூட்டு நோய்4 கேங்ஸ்டர்ஸ்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *