மனம் போனபடி .. மரம் போனபடி

This entry is part 26 of 26 in the series 8 டிசம்பர் 2013

இரா.முருகன் நெட்டிலிங்க மரம் தெரியுமா? உசரமாக, பனை மரத்தை விட உசரமாக, ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும். ஒண்ணு ரெண்டு இல்லை. வரிசையாக எட்டு நெட்டிலிங்க மரம். பள்ளிக்கூடத்தில் உள்ளே நுழைந்ததுமே அவைதான் வாவா என்று வரவேற்கிற பாவனையில் அணிவகுப்பு மரியாதை செய்தபடி நெட்டக் குத்தலாக கண்ணில் படும். இதெல்லாம் பூப்பூத்து காய்க்குமா? டிராயிங் மாஸ்டரைக் கேட்டேன். அவரை ஏன் கேட்கணும்னு தெரியலை. ஆனால் வேறே யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். காய்க்குமே. சாப்பிடலாமா? அவர் யோசித்தார். […]

நிஜம் நிழலான போது…

This entry is part 3 of 26 in the series 8 டிசம்பர் 2013

  விஜயலஷ்மி சுஷீல்குமார் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, உடம்பில் ஒருவித நடுக்கம் வந்து, என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியாது தொண்டைக்குழியை அழுத்தியது. மனமோ நேர்மாறாக “என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? நிஜம்மாவா?” இப்படி எல்லாவிதமான கேள்விகளும்; அகராதியில் உள்ள அத்தனைக் கேள்விகளும் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து, என்னைச் சூழ்ந்தது, ஆனால் விடைதான்… கிடைக்கவில்லை. இன்று, இப்போது கோமதி இவ்வுலகில் இல்லை என்று கேட்டதில் இருந்து என் நிலையைச் சொல்லமுடியவில்லை.. இந்த மூன்று மாதமாக வேலை காரணமாக வெளியூருக்குச் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்

This entry is part 6 of 26 in the series 8 டிசம்பர் 2013

அத்தியாயம் 12 ஜராசந்த வதம் கானடவப்ரஸ்தத்தில் யுதிர்ஷ்டிரரின் சபை கூடியது. அந்த சபையில் குடும்ப அங்கத்தினர், நண்பர்கள் மற்றும் மகரிஷிகளான தௌமியரும் த்வைபாயனரும் கூட இருந்தனர். அவர்களுடைய ஒருமனதான தீர்மானம் என்னவென்றால் தன்னை சக்கரவர்தியாக பிரகடனப் படுத்திக் கொள்ள யுதிஷ்டிரர் ராஜசூய யாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.   ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதி இன்றி மிகுந்த பொருட் செலவில் அத்துனை பெரிய யாகத்தை புரிய யுதிஷ்டிரர் தயங்கினார். ஸ்ரீ கிருஷ்ணரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். ஸ்ரீ கிருஷ்ணரும் […]

மருமகளின் மர்மம் – 6

This entry is part 8 of 26 in the series 8 டிசம்பர் 2013

6 ஜோதிர்லதா கிரிஜா   மாலையில் கோவிலுக்குப் போகலாம் என்று தான் சொன்னதற்கு நிர்மலாவிடமிருந்து உற்சாகமான பதில் வரவில்லை என்று கண்ட சாரதா ஒருகால் தான் சொன்னது அவள் காதில் விழவில்லையோ என்கிற ஐயத்துடன், “என்ன, நிர்மலா? பதில் சொல்லாம இருக்கே?” என்றாள். “என்ன அத்தை கேட்டீங்க?” சாரதா சிரித்தாள் : “ஏற்கெனவே ஒரு மாதிரியா இருந்தே. அவன் கிட்டேருந்து •போன் வேற வந்திடிச்சு. கோவிலுக்குப் போலாம்னு சொன்னேன்.” இன்று ஏதேனும் காரணம் சொல்லிக் கோவிலுக்குப் போவதை […]

திண்ணையின் இலக்கியத்தடம் -12

This entry is part 18 of 26 in the series 8 டிசம்பர் 2013

சத்யானந்தன் ஜூலை1 2001 இதழ்: கதைகள்: செக்குமாடு – குறுநாவலின் முதல் பகுதி- வ.ஐ.ச.ஜெயபாலன் ஜூலை 7,2001 இதழ்: ஜெயமோகனின் கன்னியாகுமரி- வ.ந.கிரிதரன்- ஒரு நாவலைப் படித்து முடித்தபின் அது வாசகர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு நாவலின் வெற்றியின் அளவுகோல். கற்பு என்பது பற்றிய விழுமியங்களை மு.வ., விந்தன், புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன் அனைவருமே கேள்விக்கு ஆளாக்கியிருக்கின்றனர். ஜெயமோகன் நாவலில் அவரது முன்னுரையைக் கருத்திற் கொள்ளாமல் பார்த்தால், நாவலை ஆபாச இலக்கியம் என்னும் […]

ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை

This entry is part 17 of 26 in the series 8 டிசம்பர் 2013

19. ஆஸ்திரேலிய வாழ்க்கை   19. ஆஸ்திரேலிய வாழ்க்கை Jackie-Chan-jackie-chan-5468506-553-800ஆஸ்திரேலியா திரும்பிய மகனைக் கண்டதும் தாய் பெரிதும் மகிழ்ந்தார். வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். பரிசாகத் தந்த கடிகாரத்தைக் கண்டதும், ஆனந்தக் கண்ணீர் வடித்து மகனின்திறமையைக் கண்டு மகிழ்ந்தார். தந்தை பரிசைப் பார்த்து விட்டு அத்தனை மகிழ்ச்சி கொள்ளவில்லை. எப்படி இந்தக் குறைவான காலத்தில் இத்தனைப் பணம் சம்பாதித்திருப்பான் என்று ஐயம்கொண்டரோ என்னவோ. “அப்பா.. என்னுடைய ஒப்பந்தம் மூன்று படங்களில் நடிக்க இருந்தது. அதை மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் முடித்ததால், எனக்கு […]

4 கேங்ஸ்டர்ஸ்

This entry is part 16 of 26 in the series 8 டிசம்பர் 2013

நான் கண்ணீர் விட்டதை யாருமே கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மலைகளை, மரங்களை, மனிதர்களை எப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்தக் காற்றை, இந்த ஊரின் சுவாசத்தை எப்போது சுவாசிக்கப் போகிறோம். இந்த சாலைகளையும், தெருக்களையும் எப்பொழுது தரிசிக்கப் போகிறோம். வீட்டில் இருந்ததைவிட இந்த ஊர் கோயில்களில்தான் நான் அதிக நாட்கள் தங்கியிருக்கிறேன். அதனாலேயே நான் நாத்திகன் என்பது பலபேருக்கு தெரியாமல் போய்விட்டது. கோவிலில் உட்கார்ந்துகொண்டு கடவுளை கிண்டல் செய்ததால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவ்வளவு சுதந்திரத்தைக் கொடுத்த ஊர் […]

உனக்காக மலரும் தாமரை

This entry is part 15 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நீ எழுதவென எழுதாமல் வைத்திருந்த என் மனக் காகிதத்தில் ​எழுந்த​ உணர்வுகளின்​ நிறத்திற்கு ஒரு வண்ணம் ​பூ​சுவாய் என்றிருந்தேன். ​ என் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி அன்பியலை படைத்துச் சென்றாய் ​அழைக்காமலே !​ அழகானதொரு தருணத்தில் காமம் இல்லாது காதலைப் பிறப்பித்துப் போதை ஊட்டினாய் !​ காதலுக் ​​கான காமத்தைப் புதுப்பித்துக்​ ​கொண்டாய் ஆழ் மன உலகில் ​கால் தடம் பதியாமலே !​ நாள் தோறும் கதிரவனுக்காக மலரும் தாமரை போல உனக்காகவே மலர்கிறது இவளின் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !

This entry is part 19 of 26 in the series 8 டிசம்பர் 2013

   (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       ஏலம் போடப் படுகிறது ஓரிளம் பெண்ணின் உடம்பு ! அவள் உடல் மட்டுமா ? இல்லை, தன்னினம் பெருக்கும் தாய்க் குலத்தின் தாய் உடம்புகள் ! ஆண், பெண் இருவரையும் தாய் பெற்று வளர்ப்பவள்; தாயிக்கு ஆண் துணையை அளிப்பவளும் தாயே ! எப்போ தாவது நீ ஓர் மாதின் உடம்பை நேசித் துள்ளயா ? எப்போ தாவது […]

தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று

This entry is part 20 of 26 in the series 8 டிசம்பர் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    தப்பிக் கொள்கிறான் எனக்குத் திகைப்பூட்டி ! தப்பிச் செல்கிறான் இன்னும் எனக்குப் பிடிபடாது ! அவனுக் கென்னை அளித்திட நான் முன்வந் துள்ளேன் ! எங்கே ஒளிந்து கொண்டான் அவன் ? ஒவ்வோர் நாளும் நூறு சாக்குப் போக்குகள் கூறிப் புறத்தே மறைந்து கொள்கிறான் ! என் கனவு நிறைவேறியது வந்து விடு ! என் இளமை வாலிபத்தை நீ வளமை ஆக்கி […]