திண்ணையின் இலக்கியத் தடம் -16

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

மார்ச் 2 2002 இதழ்:
ஞானிக்கு மீண்டும்- மஞ்சுளா நவநீதன்- பெரியார் பிறப்பால் ஜாதி என்னும் அடிப்படையில் தான் தமது எதிர்ப்பை பிராமணருக்கு எதிராகச் செய்தார். இதற்கு மழுப்பலான பதிலையே ஞானி தந்துள்ளார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203022&edition_id=20020302&format=html )

மதக் கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது – ரிச்சர்ட் டாக்கின்ஸ்- தி இன்டிபென்டென்ட் பத்திரிக்கைக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய கடிதம்- மதக் கல்விக்கு அரசின் ஆதரவு கூடாது. மதத்தின் பெயரால் திறக்கப் படும் பள்ளிகளுக்கு அரசு அனுமதி தரக் கூடாது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203023&edition_id=20020302&format=html )

என் தந்தையார் பற்றி சிறுவிளக்கம்- ஞாநி- தமது தந்தை தமிழில் இதழிலியளாராகப் பணி புரிந்ததில்லை என்றும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணிபுரிந்தார் – தொழிற்சங்கவாதியும் நேருவின் சோஷலிஸத்தில் நம்பிக்கை உடையவருமான அவர் சாதி அடையாளங்களை மறுத்தவர் என ஞாநி ஜெயமோகனுக்கு பதில் தருகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203024&edition_id=20020302&format=html )

விருந்துக்கு வந்த இடத்தில் – அரவிந்தன்- மாலன் சிறு பத்திரிக்கைகளையும், சுந்தரராமசாமியையும் விஷமத் தனமாகத் தாக்குகிறார். இலக்கியவாதிகளின் ஆக்கபூர்வமான சமூக அக்கறையுள்ள பல கட்டுரைகள் சிறு பத்திரிக்கைகளில் தான் வந்துள்ளன. (அரவிந்தன் இதை மாலன் இந்தியா டுடேயில் எடுத்து வரும் நிலைப்பாட்டுக்கு எதிர்வினையாக எழுதுகிறார்)
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203025&edition_id=20020302&format=html )

கோயிலுக்கு- விக்கிரமாதித்யன்- ஒரு ‘சிஸ்டம்’ அல்லது ஒழுங்கில் வேலைக்குப் போவது- சம்பாதிப்பது , ஊரோடு ஒட்டி வாழ்வது என்பது அனேகமாக எல்லோருமே கடைப்பிடிப்பது. இதிலிருந்து விலகிய ஜி.நாகராஜன் போன்றோர் அபூர்வம். ஒரு ஒழுங்கில் இல்லாமல் தானே உருவான எனது கவிதைகளில் ‘கோயிலுக்கு’ என்னும் கவிதையும் ஒன்று.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203021&edition_id=20020302&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்- 4- ஐசாக் பஷேலின் ஸிங்கரின் ” முட்டாள் கிம்பல்” ஆசை என்னும் வேர்-பாவண்ணன்- கிம்பல் என்னும் பேக்கரித் தொழிலாளி தன் மனைவி பலருடன் உறவு கொள்வதை இறுதி வரை நம்பவில்லை. இறுதியில் அவள் மரணத்தின் போது வருந்துகிறாள். அவளுக்கு அவளது காதலர்கள் எழுதிய கடிதங்களும் அதை உறுதிப் படுத்துகின்றன. அவளை மன்னித்த பின் ஊரை விட்டு நீங்கி அலைகிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203022&edition_id=20020302&format=html )

மார்ச் 10 2002 இதழ்:

சமரசமன்று- சதியென்று காண்- ஞாநி- “சூத்திரருக்கு ஒரு நீதி , தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று காண்” என்றான் பாரதி. அதே போல – காஞ்சி சங்கராச்சாரியார் அயோத்திப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய முன் வருவது சதி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203101&edition_id=20020310&format=html )

அறுவை சிகிச்சைக்கு கடப்பாரை – ஈவேராவின் அணுகுமுறை- ஜெயமோகன்- தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும், அயோத்திதாசப் பண்டிதரும் , நாராயண குருவும் , நடராஜ குருவும் அவைதீகமான அசல் பண்பாட்டை முன்னெடுக்க நேர்மறையான ஆய்வு பூர்வமான அணுகு முறையைக் கொண்டார்கள். ஆனால் பெரியார் எதிர்மறையான ஆவேசமான ஆய்வுகளற்ற கலகத்தையே செய்தார். அவர் பிராமணரல்லாத மேல்சாதியினர் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் அதிகாரப் பகிர்வில் இடம் பெறும் நிலையைத் தாண்டவில்லை. தலித்துகளுக்கான பங்களிப்பு அவரிடமிருந்து இல்லாமற் போனது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203102&edition_id=20020310&format=html )

காஞ்சி சங்கராச்சாரியார்: இந்துக்களின் போப்பாண்டவர்- மஞ்சுளா நவநீதன்- சமீப காலமாக காஞ்சி சங்கராச்சாரியாரை இந்துக்களின் பிரதிநிதியாகக் கட்டமைக்க அரசியல் ரீதியான முயற்சிகள் நடக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203103&edition_id=20020310&format=html )

மேலோட்டமான சிந்தனைகள், ஆழமான அவநம்பிக்கைகள் இவைதானா ஜெயமோகன்?- மாலன்- தாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு விடையளிக்காதது மட்டுமல்ல மூடிய மனதோடு இருக்கிறார் ஜெயமோகன் எனச் சாடும் மாலன், சிற்றிதழ்கள் மேல்குடி (elistist) மனப்பாங்கு கொண்டவை என்று வெகுஜன இதழ்களுக்கு ஆதரவான தமது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203106&edition_id=20020310&format=html )

மதச்சாயம் மாற்றத்துக்கு வழி வகுக்குமா- மு.பால சுப்ரமணியன்- சிவகாசியில் உள்ள குழந்தைத் தொழிலாளி முறையை எதிர்த்த கடையடைப்புக்கு ஏன் மதச்சாயம் பூச முயல்கிறார்கள்? இது கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்டது இல்லையா?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203107&edition_id=20020310&format=html )

பிறவழிப்பாதைகள்- கோபால் ராஜாராம்- தீம்தரிகிட, பன்முகம் மற்றும் நிழல் ஆகிய சிறு பத்திரிக்கைகளின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கமான விமர்சனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203101&edition_id=20020310&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்- 5- மௌனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி’ – பதற்றமும் பரிதாபமும்- பாவண்ணன் ஒரு முறை பஸ்ஸில் பயணம் செய்யும் போது ஒரு இளம் பெண்ணை அப்பா அருகில் அமர் என்று கூற அது உண்மையில் அவரது மனைவி. இருவரும் இவரைச் சாடி விடுகிறார்கள். மௌனியின் சிறுகதையில் இதே போன்ற ஒரு கிழக் கணவருக்குத் தன்னை தவிர்த்த உலகமே தன் மனைவிக்கு உயிர்ப்புள்ளதாக இருப்பது புரியும் போது அவள் வாழ்வில் தான் ஒரு நடை பிணம் என்று புரிகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203104&edition_id=20020310&format=html )
மார்ச் 17,2002 இதழ்:

இந்தியாவின் இறந்த காலமே ஆயுதமாகிறது- சசி தரூர்- 1992ம் ஆண்டு இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் அந்த மதத்துக்குப் பெரிய அவமானம் இழைத்து விட்டார்கள். 21ம் நூற்றாண்டின் அதி நவீன தொழில் நுட்பத்தில் ஆர்வம் இருக்கும் இந்தியாவில் இத்தைகைய பின்னோக்கிப் போகும் போக்கு முரணானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203172&edition_id=20020317&format=html )

கமலஹாசன், குடும்பம், நீதிமன்றம், அரசாங்கம்- சின்னக் கருப்பன்- திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் சட்டப் படி குற்றமாக்கப் பட வேண்டும். அதுவே பெண்களுக்குப் பாதுகாப்பானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203173&edition_id=20020317&format=html )

ஒரு பேராசானின் மறைவு- வேதசகாய குமார்- பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கட்டுரை. அவரது திருவனந்தபுரத்து இலக்கியப் பணி பற்றிய விரிவான பதிவு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203171&edition_id=20020317&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்- பாவண்ணன்-6- ஜெயகாந்தனின் குருபீடம்- ஞானம் என்னும் ஒளித்திரி- ஒரு ஆள் பைத்தியக்காரனைப் போல யாரும் நெருங்க முடியாத படி சுற்றும் ஆள். அவனை அருகிலுள்ள மடத்தில் உள்ள ஒரு சிறுவன் வணங்கி ” கடவுள் நீங்களே என் குரு என்று கனவில் கூறினார்” என்று பல கேள்விகளைக் கேட்கும் போது “குரு” மனம் போன போக்கில் எதெதோ பதில் சொல்லி அனுப்பி விடுகிறான். சிறுவன் எழுப்பிய சிந்தனையால் ஒரு கேள்வி மனதுள் எழுகிறது ” வந்தவன் குருவா சீடனா?” வந்தவனைத் தேடிப் போனால் அவன் மடத்தை விட்டு நீங்கி விட்டிருக்கிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203172&edition_id=20020317&format=html)

மார்ச் 24 2002 இதழ்:
கலாச்சாரம் பற்றிய விவாதம்- சில கேள்விகள்- ஜெயமோகன்- கலாச்சாரம் மற்றும் எழுத்தாளனுக்குத் தமிழ்ச்சூழல் தரும் (கேவலமான) நிலை இவை இரண்டு பற்றியும் ஜெயமோகனின் நீண்ட செறிவுள்ள கட்டுரை. இது முழுமையாகப் படிக்க வேண்டியது. ஒரு பகுதி கீழே:
எது முந்தைய தலைமுறையிலிருந்து வந்து சேர்கிறதோ அது பாரம்பரியம். எது தலைமுறை தலைமுறையாகக் கைமாறப் படும் சாரமோ அது கலாச்சாரம். பாரம்பரியம் அடுத்த தலைமுறை வரைக்கும் தான். கலாச்சாரம் என்பது ஒரு தொடர்ச்சி. அதாவது கலாச்சாரத்தில் நம் மூதாதயர் சேமிப்புடன் நாம் சொந்தமாக அடைந்தவையும், நம்மால் மாற்றி அமைக்கப் பட்டவையும் அடங்கும். நமக்கு வந்து சேர்ந்தவைக்கும் நம்மால் கைமாறப்படுபவைக்கும் இடையேயான ஒரு சரடினையே நாம் கலாச்சாரம் என்று சொல்கிறோம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203241&edition_id=20020324&format=html )

சீடனும் குருவும்- ஜே.கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்- பி.கே. சிவகுமார்- குரு சிஷ்ய பாரம்பரியம், குரு சிஷ்யனை சுரண்டுவதற்கு மட்டுமே பயன்படும். சுய அறிவுவே வலிமையானது. குரு சிஷ்ய பீடங்கள் தவிர்க்க வேண்டியவை என்னும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203243&edition_id=20020324&format=html )

இந்தியாவின் காமம் தோய்ந்த கலையின் சில காட்சிகள்- “கஜூராஹோ”, இந்திய காம நூல்கள் புத்தக விமர்சனம்-தோலோ மித்ரா- இதன் ஒரு பகுதி:
ஆன்மீகத்தின் மூலப் பொருள் கருவறையில் நிறுவப் பட்டிருக்கிறது. காமச் சிற்பங்கள் அதைச் சுற்றி இருக்கின்றன. மையத்தில் அத்வைதமான உருவற்றது. உயிர்மை உருவற்ற அத்வைதமான அண்டவெளியிலிருந்து வெளி வருகிறது. மனித உடல், ஆண், பெண் என்பது த்வைதத்தின் உச்சி நிலை. இந்த த்வைதம் பௌதிகமான நிலையில் மீண்டும் இணைவது. ஆரம்ப அத்வைத ஒருண்மையான பேரானந்தத்துக்கு திரும்பிச் செல்ல வழி வகுக்கிறது. ஆகவே காமம் ஆன்மீகத்தின் பௌதிக வெளிப்பாடு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203242&edition_id=20020324&format=html )

மார்ச் 31, 2002 இதழ்:

கோயில்களில் அன்னதானம் செய்யும் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டம் தவறானது- சின்னக் கருப்பன்- இந்துக் கோவில்களை மட்டும் அரசாங்கம் நிர்வகித்து அவற்றின் வருமானத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹிந்துக்களால் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி நிர்வகிப்பதே சரியானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203302&edition_id=20020330&format=html )

ஜார்ஜ் வில்லியம் பெரெடெரிக் ஹெகல்
தனி மனிதர்கள் தமக்குள்ளும் , தமக்கும் சமூகத்துக்கும் முரண்களே இல்லாத ஆதரிச மன ஒருமிப்பில் “சமூக மனம்” என்று ஒன்று சாத்தியம் என்று ஹேகல் நம்பினார். மார்க்ஸ் இதையே கம்யூனிஸமாக மேலெடுத்துச் சென்றார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203305&edition_id=20020330&format=html )

தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்- ஜெ.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- ஆசை என்பது எதிர்காலத்தில் ஒன்றை அடைவதற்கானது. அது நிகழ்காலத்தில் செயலில்லாமல் இருக்கச் செய்கிறது. இன்றிலும் இப்போதிலும் எல்லாக் காலங்களும் அடங்கியுள்ளன. நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதே காலங்களிலிருந்து விடுபடுதலாகும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20203307&edition_id=20020330&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-7- கி.ராஜநாராயணனின் கன்னிமை- ஏக்கமும் எதிர்பார்ப்பும்- பாவண்ணன்- நாச்சியாரம்மாள் என்னும் இளம் பெண்ணின் கதை. இரண்டு பகுதிகள் முதல் பகுதியில் திருமணத்துக்கு முன் அனைவரின் அன்புக்குரியவளாய் அனைவரையும் இனியமையாக அரவணைப்பவளாக. திருமணத்துக்குப் பின் பொறுப்புகளில் உழன்று இயந்திரமாகி சிடுசிடுவென்றிருப்பவளாக. கன்னிமை என்னும் காலம் பெண்ணின் வாழ்வின் விலைமதிக்க முடியாத தருணம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203301&edition_id=20020330&format=html )

நூல் விமர்சனம்- நகரம்-90- (சுப்ரபாரதி மணியன்)-போராட்ட வாழ்க்கை- கல்பனா சோழன்- குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் வென்ற சுப்ரபாரதியின் நூல் விமர்சனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203303&edition_id=20020330&format=html )

நீலபத்மநாபனின் படைப்புகள்- சாதாரணத்துவத்தின் கலை- ஜெயமோகன்- ஒரு இலக்கியப் படைப்பு வாழ்க்கையின் ஏதாவது ஒரு தளத்தை வாழ்ந்து பெற்ற அனுபவத்துக்கு சமானமாக நமக்கு விளக்கிக் காட்டுகிறது. வாழ்க்கையின் சாராம்சம் சார்ந்த ஒரு மனநகர்வினை நமக்கு அளிக்கிறது. நீல பத்மநாபனின் நாவல்கள் அந்த அர்த்ததில் தமிழின் கலை படைப்புகளேயாகும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60203305&edition_id=20020330&format=html )

ஏப்ரல் 7 2002 இதழ்:
அ.மார்க்ஸ் – இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி-மஞ்சுளா நவநீதன்-அ.மார்க்ஸ் இந்துப் பெருமான்மையின் பாசிஸம் என்று தாக்கும் அதே நேரம் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் கண்டிக்க வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204072&edition_id=20020407&format=html )

தூண்டப்படாததும் தன்னிச்சையானதுமான இயல்பு- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவக்குமார்- தன் தோழிகளுடன் ஒரு நிகழ்ச்சிக்காகச் செல்லும் ஒரு பெண் தனது ஒப்பனையில் கவனமாக இருப்பது போல நம் நடவடிக்கைகள் எல்லாமே பிறரின் மற்றும் நமக்குப் பயிற்றுவிக்கப் பட்டவையின் தாக்கத்தோடுதான் இருக்கின்றன. எனவே நாம் விடுதலை அல்லது ஆத்ம ஞானம் பற்றி நினைக்கவே முடிவதில்லை. சுயமானது தன்னிச்சையானதுமான மனமே விடுதலையை – ஆத்ம ஞானத்தை நோக்கி நகர முடியும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204073&edition_id=20020407&format=html )

பெர்டிராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31 1970ல் எழுதியது: மத்திய கிழக்கு நாடுகளில் ஆயுதக் குவிப்பையும் போரையும் அதிகரிக்கும் இஸ்ரேலை உலகே கண்டிக்க வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204075&edition_id=20020407&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-8- ஆ.மாதவனின் பறிமுதல்- தர்மமும் சட்டமும்- ஏழைகளின் வாழ்க்கையின் அவல நிலை அவர்களையே ஒருவருக்கு ஒருவர் எதிராகவும் சுரண்டுபவராகவும் நிறுத்தி விடுகிறது. ஒரு பந்த் நாளில் ஒரே பள்ளிக் கூடத்தில் நான்கு வாடிக்கையாளருடன் வருகிறாள் ஒரு விலை மாது. தான் திரும்பி வரும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படி அங்கே ஒரு இடத்தில் படுத்திருக்கும் அப்புக்குட்டனிடம் கொடுக்கிறாள். அவன் அந்தப் பணத்துடன் ஓடி விடுகிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60204071&edition_id=20020407&format=html )

மாட்ரிக்ஸ் (Matrix)- என்ற திரைப்படத்தின் கேள்விகள் – இரா.மதுவந்தி- அந்தப் படத்தில் வரும் ஒரு வசனம்- “உங்களுக்காக எல்லோரும் சந்தோஷமாக இருக்கும் ஒரு உலகத்தை நிர்மாணித்தோம். அதில் உங்களால் ஒரு மாதம் கூட இருக்க முடியவில்லை.உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வேண்டும். யாராவது வருத்தப் படாவிட்டால் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது.” இது இன்றைய உலகத்துக்கும் பொருத்தம் தானே?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60204072&edition_id=20020407&format=html )

ஜெயமோகனுக்கு மறுப்பு -சாரு நிவேதிதா- மாலனின் கட்டுரைக்கு ஜெயமோகன் எழுதிய எதிர்வினையில் சாரு நிவேதிதா பற்றிய குறிப்புகள் இருந்தன. அதற்கான எதிர்வினை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204141&edition_id=20020414&format=html )

மறுபக்கம் – என் அமெரிக்கப் பயணம்- ஞாநி- அமெரிக்காவின் மறுபக்கம் அதாவது மனிதநேயமற்ற முகத்தை விமர்சிப்பவர் பலர் அமெரிக்கவில் உண்டு. ஈராக் நாட்டுக்கு குளோரின் கிடைக்காமல் செய்ததன் விளைவு தூய குடிநீரில்லாமல் பல ஆயிரம் குழந்தைகள் மாண்டன. ஆப்கானில் அமெரிக்கா நடத்தும் போரை எதிர்ப்போர் நிறைவே உண்டு அமெரிக்காவில். தென் கொரியா நாடு சிகரெட் இறக்குமதிக்கு வரி உயர்த்திய போது அமெரிக்கா தலையிட்டுத் தடுத்தது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204143&edition_id=20020414&format=html )

பொறாமை-ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- பொறாமையும் பகைமையும் அன்புடன் சேர்ந்த்ததாகவும், பிரிவும் சேர்தலும் பிணக்குகளும் அன்பின் வெளிப்பாடு என்பதாகவும் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். பொறாமை போன்ற அழுக்கான ஒன்று அன்புடன் இணைந்திருக்க முடியாது. அன்பு -உண்மையான அன்பு- தூய்மையானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204145&edition_id=20020414&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-9- சுந்தர ராமசாமியின் மோகமும் மூர்க்கமும்- பாவண்ணன்- சினிமா வெறியை மையப்படுத்திய கதை. ஒரு துணிக்கடையின் சின்ன முதலாளி ஊரே கொண்டாட்டமாக விடுமுறையில் இருக்கும் போது அப்பாவின் கட்டாயத்துக்காக கடைக்குப் போகிறான். நல்ல விற்பனை அன்று. அப்போது வெகு நாளாகக் கேட்க நினைத்ததை கடை ஆளிடம் கேட்கிறான். அந்த ஆளின் ஒரு கண்ணில் ஏன் பார்வை இல்லை என்பதே அந்தக் கேள்வி.சிறுவயதில் அவரின் தாயார் கைக்குழந்தையான அவரை மடியில் போட்டுக் கொண்டு சினிமா பார்ப்பார். அவ்வப் போது கூழாங்கல்லை எடுத்து வாயில் போடும் குழந்தையின் வாயைத் தோண்டி அந்தக் கல்லை எடுப்பார். ஒரு முறை கவனம் பிசகி ஒரு கண்ணைத் தோண்டி விட்டார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60204141&edition_id=20020414&format=html )

காந்தியின் பொம்மைகளும் தலித்திய-கருப்பு அடையாளங்களும்- காளிதாஸ் – காந்தியடிகளின் அரசியல் குறிக்கோள்களில் தலித் நலனுக்கு உரிய இடம் இல்லை என்பதை “காந்தியின் பொம்மைகள்’ என்னும் கதையின் விமர்சனமாக காளிதாஸ் முன்வைக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60204142&edition_id=20020414&format=html )

ஏப்ரல் 21, 2002 இதழ்: வாழ்க்கையின் கேள்விகள், பதில்கள்,பதில்களுக்கு அப்பால்- ஜெயமோகன்- (பொன்மணி பதிப்பக வெளியீடாக வர இருக்கும் சோதிப் பிரகாசத்தின் ‘வாழ்க்கையின் கேள்விகள்’ என்னும் நூலின் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை) : பொருளியல் மைய அணுகுமுறையான மார்க்ஸிஸத்துக்கு அப்பால் அதன் சித்தாந்த கட்டுமானத்தால் விளக்கிவிட முடியாதபடி எத்தனையோ சமூக உளவியல் மெய்யியல் இயக்கங்கள் உள்ளன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204211&edition_id=20020421&format=html )

உரிமை கொண்டாடுகிற ஆளுமை-ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- நமக்கு உரிமையானதை நாம் உண்மையிலேயே வெறுக்கிறோம். அந்த வெறுப்பே அவநம்பிக்கை பொறாமை ஆகியவற்றால் வெளிப்படுகிறது. எங்கே பற்றும் உரிமையும் இருக்கிறதோ அங்கே அன்பு இல்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204213&edition_id=20020421&format=html )

ரஸ்கான் ஒரு கிருஷ்ண பக்தர் ஸுஃப்பி- யோகீந்தர் சிங்-
சாஸ்திரம் படித்துப் பண்டிதன் ஆனாய்
குரான் படித்து மௌல்வி ஆனாய்
இதில் எல்லாம் நேசம் காணவில்லை என்றால்
நீ ஓதித்தான் என்ன பயன்?
அரக்க உலகத்தின் கவர்ச்சியைக் கழற்றி விட்டு
பிரேம தேவனின் அழகைக் கண்டே நான்
ரஸ்கான் ஆனேன்”
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204215&edition_id=20020421&format=html )

பார்வை- கொங்கு மண்டலக் கூத்துக் கலை- வெளி ரங்கராஜன்- பொன்னர் சங்கர் கதை, காத்தவராயன் மற்றும் பன்றி மலைக் குறவன் கதை ஆகியவற்றின் கூத்து வடிவம் இன்னும் பேணப் படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60204211&edition_id=20020421&format=html )

எனக்குப் பிடித்த கதைகள் -10- பொறுப்பு- பூமணியின் சிரிப்பும் எரிச்சலும்- ஐந்து வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியராய் தம் பொறுப்பை உணராமல் மாணவரிடம் வாயில் வந்ததைப் பேசி, பாடம் எதுவும் நடத்தாமல் தூங்கும் ஆசிரியரை மையமாகக் கொண்ட சிறுகதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60204213&edition_id=20020421&format=html )

ஏப்ரல் 28 2002 இதழ்:
பின் தொடரும் நிழலின் குரல் – நூல் விமர்சனம்- மோகன ரங்கன் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60204281&edition_id=20020428&format=html )

பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை சிங்களக் கவிதைகள் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60204282&edition_id=20020428&format=html )

அடையாளம் காண்கிற தற்காப்பு- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- அடையாளம் என்பது ஒரு புகலிடம். புகலிடத்துக்குப் பாதுகாப்பு தேவை. எது பாதுகாக்கப் படுகிறதோ அது விரைவில் அழிக்கப் படுகிறது. அடையாளம் சுய அழிவைக் கொண்டு வருகிறது
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20204281&edition_id=20020428&format=html )

 

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *