Posted in

திண்ணையின் எழுத்துருக்கள்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014
அன்புடை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
திண்ணையின் எழுத்துருக்கள் பழைய முறைக்கு
மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த
மாற்றம்? பிற்போக்காக இருக்கிற்தே! இந்த மாற்றம்
 பற்றிய அறிவிப்பு எதனையும்
நீங்கள் வெளியிட்டிருந்தால் நான் கவனிக்காமல்
விட்டிருக்கலாம். சுட்டிக் காட்டுங்கள்.
இல்லையானால் இது பற்றிய விளக்கம் ஒன்று திண்ணையில்
வெளியிடுவது நல்லது.
ரெ.கா.
Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை

7 thoughts on “திண்ணையின் எழுத்துருக்கள்

  1. திரு. கார்த்திகேசு,
    1) ‘பிற்போக்காக’ என்றால் என்ன? எளிதாக ஒரே எழுத்தில் எழுதக்கூடிய எழுத்துக்களை கூட இரண்டாக பிரித்து னை, லை என காலவிரயத்தொடு எழுதுவது முற்போக்கா?
    2) இருப்பதை refine செய்வதே நல்லது. அல்லது அப்படியே மாறாமல் மரபைக் காப்பது நல்லது. அப்படி இருக்கையில் எந்த பிரயோஜனமும் இன்றி மாற்றுவதால் என்ன பயன்? னை, லை போன்றவற்றில் என்ன refinement இருக்கிறது முற்போக்கு என நினைக்க?
    3) இனி என்ற ஒரு பத்திரிக்கை படித்தேன். அதில் முற்போக்காக ‘இன்ஸ்பெக்டர்’ -க்கு ‘இனுசுபெக்டர்’ , ‘வேஷ்டி’- க்கு ‘வேட்டி’ என்று அச்சு செய்திருந்தார்கள்.

    1. காரணங்கள் ஏதுவாயினும் தமிழ் எழுத்துக்களை ஒரு தகுதரத்துக்கு (standard) கொண்டுவந்துவிட்டோம். திடீரென ஓரடி பின்னால் எடுத்து வைக்கிறது திண்ணை, ஒரு காரணமும் கூறாமல். அதைத்தான் “பிற்போக்கு” (பின்னால் போதல்) என்றேன்.

  2. னை, ணை,லை என்றெல்லாம் எழுத்துருக்கள் மாறி வெகுகாலமாகிவிட்டது. பள்ளிப் புத்தகங்களில் இப்படித்தான் அச்சிருகிறார்கள். றா கூட அப்படித்தான். முற்போக்கு பிற்போக்கு என்பதைவிட பள்ளிப் புத்தகங்கள் எந்த உருவை பயன்படுத்துகிறதோ அதையே திண்ணையும் பயன்படுத்தினால் நன்று. எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த எழுத்துரு வலிக்கிறது
    மாற்றிக்கொள்ளுமா திண்ணை

  3. //எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த எழுத்துரு வலிக்கிறது
    மாற்றிக்கொள்ளுமா திண்ணை//

    this is democracy country….. do u know???????????/

  4. மக்கள் விருப்பம் (democracy) பேசுவதில் அர்த்தமில்லை. எழுத்துருக்கள் ஒரே வகையில் இருப்பதற்கே இப்போது (unicode) அடிப்படையில் எழுத்துக்களை கணினியிலேயே உண்டாக்கியுள்ளனர். இதை விடுத்து பன்வகையிலான எழுத்துருக்களை பயன்படுத்தவது சீர் இல்லாமல் அவதிப்பட நேரிடும். தட்டச்சுப் பற்றி நண்பருக்குத் தெரியாதோ!

  5. வணக்கம் ஐயா…. நான் இந்த பழைய எழுத்துருவினையே விரும்புகின்றேன்… ஆனால் எப்படித் தட்டச்சுவது என்று தெரியவில்லை…

  6. திண்ணை இ.வே.ரா காலத்திற்கு முற்பட்ட தமிழ் எழுத்துருக்களை புழக்கத்திற்கு கொண்டுவந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது.

    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *