இந்திய விஞ்ஞான மேதைகள் சி. ஜெயபாரதனின் நான்காவது விஞ்ஞான நூல் வெளியீடு

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014
Indhiya Vignnanigal
 
விஞ்ஞான நூல்கள் வெளியீட்டில் எனது நான்காவது படைப்பாக இந்தியப் பெரும் விஞ்ஞானிகள் 11 மேதைகளைப் பற்றிய நூல் சென்னைத்  தாரணி பதிப்பகச் சார்பில், திரு. வையவன்  சமீபத்தில்  தமிழ் உலகுக்கு அளித்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அந்த நூலைத் தமிழ் தழுவிய உலகம் கனிவுடன் வரவேற்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

13 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Anna Sundaram via googlegroups.com

    Dear Jayabarathan Ayya

    I do not find words to thank the great work you did in bringing this book in Tamil.

    It will certainly help Tamils living in Tamil speaking places like Tamil Nadu & Sri Lanka and Tamil children living in overseas – other than Tamil Nadu & Sri Lanka

    Australia being a place where Tamil children can choose Tamils as a language in their year 12 subject, certainly your book can be used as a resource for teaching, self motivating, creating the feeling of belonging, creating a feeling of pride from their origin – India

    Recently in our text book called Tamil 6 -recommended for ages 11 and above – they have introduced a topic called “Indian Scientist” in which the life of Ramanujan was addressed – for further readings now we can ask the students to go through your book from school library

    Thanks for your immediate response and PDF file

    With Regards
    Anna Sundaram
    VAP Australia Pty Ltd
    Mob: 0411242134
    VAP means Value Adding Professionals

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    On 21 Jan 2014,

    தேமொழி wrote:

    அன்பு ஜெயபாரதன் ஐயாவிற்கு வாழ்த்துகள், இந்த நூலை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

    விஞ்ஞானத் தமிழ் எழுத்தாளர்களின் கடமைப்பணி என்று குறிப்பிடுகையில் பெரிய எழுத்தாளர்களின் வரிசையில் இரண்டாண்டுகளுக்கும் குறைவான எழுத்தனுபவம் உள்ள எனது பெயரையும் குறிப்பிட்டது உங்கள் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது ஜெயபாரதன் ஐயா.

    இவ்வாறு கொடுக்கும் உற்சாகம் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும். என் நன்றிகளை எப்படித் தெரிவிப்பது என்றே எனக்குப் புரியவில்லை. எனது பெற்றோர்கள் எனக்கு வளரும் வயதில் கொடுத்த ஊக்கத்தினைபோல நீங்கள் கொடுக்கும் ஊக்கத்தினையும் உணர்கிறேன்.

    மிக்க நன்றி, நன்றி, நன்றி.

    (என் அப்பாவையும் தம்பியையும் இந்த நூலை வாங்கிப் படிக்கச் சொல்லப் போகிறேன்.)

    அன்புடன்
    தேமொழி

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    jayasree shanker

    அன்பின் திரு.ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

    திரு.வையவன் அவர்களால் தங்களது படைப்புகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அரங்கேறி வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தங்களது படைப்புகள் என்றென்றும் காலத்தால் அழியாத செல்வமாக மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    தங்களது காலத்தைச் சிறந்த பொக்கிஷமாக்கி, கற்றுக் கொள்பவர்களுக்கு கைவிளக்காக தந்திருப்பதில் தங்களது சீரிய சேவை என்றென்றும் அழியாத புகழ் மிக்கது.

    வணங்குகின்றேன்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ருத்ரா

    விஞ்ஞானத்தமிழ் வித்தகர் அவர்களே

    உங்கள்
    நூல் நுழைந்த அனுபவம்
    நிறைய உண்டு.
    உங்கள்
    அறிவு நூல் கண்டு
    அந்த அன்பின்
    நூல்கண்டு காட்டிய
    வெளிச்சத்தின்
    அம்முனை இன்று கண்டேன்.
    முறுக்கிய மீசையில்
    தமிழின் செருக்கு.!
    கண்களில்
    மகனின் ஒளி கண்ட‌
    அகச்சிவப்புக்கிரணங்கள்
    அண்டத்தையும்
    அளவிட்டு நிற்கிறது.!
    சிங்காரவேல் பாண்டியன் அவர்கள்
    அறிவுப்படையாண்ட ஒரு
    ஜெயபாரதப் பாண்டியனை
    தமிழுக்கு தந்து
    பெருமை பொங்க நிற்கும்
    அந்த உயிரோவியத்துக்கு
    எங்கள் நெஞ்சம் குழைந்த‌
    வணக்கங்கள்..
    விஞ்ஞானிகளின்
    முகங்கள்
    படங்களில் கண்டோம்.
    அவர்களின்
    அற்புதக்கோட்பாடுகள்
    உங்கள் வரிகளில்
    “மணி விளக்கு” ஏற்றி
    தமிழ் மனங்களின்
    சுடர் கூட்டும்.
    நெறி உயர்த்தும்.

    வாழ்த்துக்களுடன்
    அன்புள்ள ருத்ரா

  5. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இதைப்போல் உலக விக்ஞானிகள் பற்றி நீங்கள் எழுதிய வ்யாசங்களும் நூலாக வெளிவந்துள்ளதா? வருமா?

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Sathiya Mani

    Dear and respected Jayabharathan Sir,

    My hearty congratulations and wishes for your work on scientists of India, Most of them are worked in the mother land but their works reached whole earth. Such works are the primary source to motivate the younger generations not only in Indian continent but also those around the globe who knows Tamil.

    I need your permission to circulate your pdf among my fellow Tamil scientists .

    Thanks with regards

    S.Sathiyamani,
    Director (Technical)/Scientist ‘E’
    NIC, DIT, M/o IT And Communcation,
    New Delhi
    9868126406

  7. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Dear Shri. S. Sathiya Mani,

    Thanks for the great compliments. You are welcome to use freely any or all of my science articles.

    They are many science articles [over 500] in my Website
    [http://jayabarathan.wordpress.com/] and in Thinnai Website [old & new] [www.thinnai.com/].

    With Kind Regards,
    S. Jayabarathan

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஸ்ரீ ஜெயபாரதன்

    ஓபன் ஹைமர் பற்றிய உங்களது வ்யாசத்தில்

    “Brighter Than Thousand Suns” என்ற நூலைப்பற்றித் தாங்கள் எழுத வேண்டும் என்று விக்ஞாபித்திருந்தது நினைவில் இருக்கலாம்.

    உங்களுக்குக் கால அவகாசம் இருக்குமானால் இது பற்றி எழுத வேண்டும் என மீண்டும் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார்,

      கேடு கெட்ட விஞ்ஞானியிடம் இப்படி முரணாகக் கேட்கலாமா மேதாவியாகிய நீங்கள் ?

      சி. ஜெயபாரதன்

  9. Avatar
    vetrivel.s says:

    DEAR SIR. I like your information in tamil civilization.This information very useful to me. I have inform to my friends also.so if you found any information kindly requested please forword to my mail id. Thanking you

  10. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திரு ஜெயபாரதன் அவர்களின் ‘இந்திய விஞ்ஞான மேதைகள்’ என்ற நூல் இன்று திரு வையவன் ஐயா அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றேன். நூலை மிக அழகாக வடிவமைத்துள்ள வையவன் ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்.

    “எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் அனைவராலும் இந்த நூல் பாராட்டப்படும்” என்று திரு கே. பெரியசாமி (Atomic Scientist) என்ற தலைப்பில் மிக அழகாக அணிந்துரை வழங்கியுள்ளார். “நமது பொதுஜன மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் சினிமா நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் மட்டுமே மாவீரர்களாக சாதனையாளர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு சமூக வளர்ச்சிக்கு, குறிப்பாக இந்தியாவைப்போன்ற சவால்கள் பலவற்றை எதிர்நோக்கும் நாட்டிற்கு இது உகந்ததல்ல. இந்நூல் வெற்றி பெற இந்நூலை வாசிப்பவர் வாங்கி இளைஞர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும். அவர்களை வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் இது சென்று சேர வேண்டும்” சத்தியமான வார்த்தைகள். வசதியிருப்பவர்கள் கட்டாயம் இதைச் செய்ய் முன்வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்.

    இந்நூலாசிரியர் திரு.ஜெயபாரதன் அவர்கள் தனது முதிர்ந்த வயதிலும், விஞ்ஞானிகள் பலரது சாதனைகளை நுணுக்கமாக ஆராய்ந்து சாதாரண மக்களும் ஓரளவேனும் புரிந்துகொள்ளும் வண்ணம் சிறப்பான முறையில் எழுதியுள்ளார்”

    சத்தியமான வார்த்தைகள். இதனை அவ்வாறே வழிமொழிகிறேன். ஐயா அவர்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நம் வருங்கால சந்ததிகள் தங்களின் பணியால் பயனடைவார்கள் என்பது உறுதி. நல்ல அறிவியல் சிந்தனைகளை நல்ல எண்ணங்கள் எனும் உரமிட்டு கற்பகத் தருவாய் வளர்த்திருக்கும் ஐயாவின் தன்னலமற்ற ​இந்தப் பணி இந்த பூமி வாழும்வரை போற்றப்படும்.

    “பலனை எதிர்பாராது கடமையைச் செய்து வரும் வீரர்’ என்று முனைவர் பி. ஐயம்பெருமாள் அவர்களின் அணிந்துரையும் ஐயாவின் சமூக அக்கறை கொண்ட பணியை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறது. குறிஞ்சி மலர் போன்ற விஞ்ஞாச் சிந்தனை என்கிறார் திரு கி.வ.வண்ணன் அவர்கள்.

    கணித மேதை ராமானுஜன் அவர்கள் முதல் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் வரை 11 அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை மிக அற்புதமாக, தெளிந்த, செறிவான நடையில், அனைவருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். பெரும்பாலும் இந்திய நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியின் வரலாறு முழுமையாக அறியும் வகையில் இந்நூல் வெளிவந்திருப்பது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

    மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    அன்புடன்
    பவளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *