தாகூரின் கீதப் பாமாலை – 98 நீ அளித்த கொடை .. !

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. 

இரவு  உறங்கிய போது

எந்த அழிவுப் பாதை வழியே

வந்தாய்  நீ ?

எனக்குரிய  ஏதோ ஒன்று

அழிக்கப் பட்டு,

ஆசிகள் உனக்கு வழங்கி

உன் ஏணிப்படி ஆனது !

அந்தச் சின்னத்தைச்

செந்நிறக் கற்களில்  மாலையாய்க்

கோர்த்து நான்

அணிந்து கொள்வேன்.

தனித்த ரகசியத் துயருடன்

அந்த மாணிக்க  மாலை

எந்தன் மார்பின் மேல்

ஊஞ்சல் ஆடும் !

 

உன் மடி மீது  நீ

இன்னிசை வீணையை வைத்து

இனிய மெட்டுகள்

கனிந்தெழச் செய்தாய்

இரக்க மிலாக் கரத்தால் !

வீணையின் நாண்கள் முறிந்த போது

மண் தரையிலே

வீசிச் சென்றாய்  அதை !

அதன் மௌன இசை

அதற்கு நீ

அளித்த கொடையென

அறிந்தவன் நான் !

வசந்த காலத் தென்றலில்

திரும்பும்  அது நறுமணத்துடன்

எந்த இனிய பண்ணும்

இழக்காமல் !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 221.   1939 ஆண்டு ஜூலை 12 இல் தாகூர்  78 வயதினராய்  இருந்த போது ஶ்ரீநிகேதனில்  எழுதப் பட்டது.   இது  சிதைவுத் தகர்ப்பு  [Bhangon  or  Demolition]  என்னும் செனாய் சேகரிப்பைச்  [Shanai Collection] சார்ந்தது. 

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  January 14,  2014

Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *