ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.

This entry is part 2 of 18 in the series 26 ஜனவரி 2014

 

ஸ்ரீ கிருஷ்ணர் கிளம்பும்பொழுது கர்ணனை தனது தேரினில் அழைத்துச் செல்கிறார். கர்ணன் ஸ்ரீ கிருஷ்ணரை சிறைப் பிடிக்க வந்த கூட்டத்தைச் சேர்ந்தவன். அவனை அவர் எதற்காக தேரினில் அழைத்துச் செல்லவேண்டும்? அதனை விரிவாக எடுத்துரைப்பது ஸ்ரீ கிருஷ்ணரின் நற்குனங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும். போர்த்திறங்களிலும் , சட்ட நுணுக்கங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணர் சிறந்தவர் என்று ஏற்கனவே பார்த்து விட்டோம்.. முரண்பாடுகளை முன் நிறுத்தி அவர் காரியங்களை எவ்வாறு சாதித்துக் கொள்கிறார் என்று பார்ப்போம். இதையும் சேர்த்து ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு தனது பரிவு நல்லெண்ணம் புத்திசாலித்தனம் ஆகியவற்றினால் மானுடர்களுள் சிறந்த மானுடராக விளங்கினார் என்று பார்ப்போம்.

ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரிடமும் தயாள குணம் மிக்கவர். இவர் ஒருவர்தான் மகாபாரதம் முழுமையிலும் போரினால் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் மாய்ந்து போகும் என்று கவலைப் பட்டவர். விராட ராஜ்யத்தில் முதன் முதலில் போர் நேரிடும் சூழல் ஏற்பட்ட பொழுது அந்தப் போரை தவிர்க்க ஸ்ரீ கிருஷ்ணர்தான் முதலில் குரல் எழுப்புகிறார். அதே போல் இப்பொழுதும் அர்ஜுனனும் நிகழ உள்ள போரினால் ஸ்ரீ கிருஷ்ணரை தன் பக்கம் நின்று போரிட அழைத்தபொழுது ஸ்ரீ கிருஷ்ணர் அதனை மறுத்து தான் போரில் பங்கு கொள்ளாமல் மற்ற எல்லா வகையிலும் போரினால் அர்ஜுனனுக்கு உதவுவதாக ஸ்ரீ கிருஷ்ணர் உறுதி அளிக்கிறார்.அவருடைய போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இறுதியாக போர் மூளப் போகிறது என்ற தருணத்தில் கூட ஸ்ரீ கிருஷ்ணர் சற்றும் மனம் தளராமல் துரியோதனனை தனி ஒரு மனிதனாக சந்தித்து அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார். எதிர்பார்த்ததைப் போலவே அதுவும் பயனின்றி போனது. போர்க்களத்தில்’வீரர்கள்  செத்து மடிவது இனி தவிர்க்க முடியாது. எனவே ஸ்ரீ கிருஷ்ணர் என்கிற ஒரு மன்னர் போரை நிறுத்த வேறு உபாயங்களைத் தேடிச் செல்கிறார்.

கர்ணன் ஒரு மாவீரன். ஒரு வில்லாளியாக அவன் திறமையில் அர்ஜுனனுக்கு நிகரானவன். கர்ணன் தன் பக்கம் இருப்பதனாலேயே துரியோதனன் கவலையின்றி இருக்கிறான். கர்ணனின் வீரத்தின் மீது துரியோதனன் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைதான் அவனால் பாண்டவர்களை துணிவுடன் எதிர்க்க முடிகிறது. கர்ணன் கௌரவர்களுக்குத் துணை நிற்கவில்லை என்றால் துரியோதனன் போரைப் பற்றி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான். கர்ணன் தங்கள் பக்கம் இல்லை என்பது தெரிய வந்தால் துரியோதனன் கண்டிப்பாக போரை நிறுத்தியிருப்பான்.இப்படி நிலைமை வாராதா என்பதை யோசித்துதான் ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணனை தன்னுடன் தேரில் அழைத்து செல்கிறார். அவனுடன் தனிமையில் பேசுவது அவருக்கு அவசியமான ஒன்றாகிறது.

கர்ணனை சமாதானப் படுத்தி அவனை பாண்டவர்கள் அணியினால் சேர்த்து விட ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒரு எளிய விஷயம் என்று தோன்றியிருக்க வேண்டும். ஏன் எனில் கர்ணனைப் பற்றி அவனுக்கே தெரியாத ரகசியம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரிந்து இருந்ததுதான் காரணம்.

கர்ணன் அதிரதன் என்ற சூதனின்  மகனாக அறியப் பட்டான். ஆனால் அவன் அதிரதனின் வளர்ப்பு மகன் . கர்ணனுக்கு இந்த விஷயம் தெரியாது. சூரிய பகவான் மூலம் திருமணத்திற்கு முன்பே  கர்ணனைக் கருவுருகிறாள் குந்தி. மணமாவதற்கு முன்பே பிறந்தவன் என்பதால் அவனைப் புறக்கணிக்க எண்ணுகிறாள். ஒரே தாய் வயிற்றுப் பிள்ளை என்பதால் கர்ணன் பாண்டவர்களின் மூத்த சகோதரன் ஆகிறான். கர்ணனின் இந்த ஜனன ரகசியம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நன்கு தெரியும்.அவருடைய புத்தி கூர்மையினால் இந்த ரகசியம் அவருக்கு எளிதில் புலப்பட்டு விடுகிறது.மேலும் தந்தை வழியில் குந்தி அவருக்கு அத்தை முறை வேண்டும். முறை தவறிய கர்ப்பமும் பிரசவமும் ஸ்ரீ கிருஷ்ணரின் உறவினரான போஜ மகாராஜாவின் அரண்மனையில்தான் நடை பெறுகிறது. எதனையும் புத்திசாலித்தனத்துடன் அணுகும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த விஷயம்  தெரியாமல் போக வாய்ப்பில்லை.

தேரில் தன்னுடன் வரும் கர்ணனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த விஷயம் அனைத்தையும் கூறுகிறார்.” கர்ணா! சாஹ்திரங்கள் அறிந்தவர்கள் சொல்கின்றனர் காளீனனுக்கும்* சகோடனுக்கும்** தாயாக உள்ள பெண்ணை மணந்து கொள்பவன் அந்த இருவருக்கும் தந்தையாகிறான் என்று. நீ அப்படிப் பட்ட ஒருவனாக இருக்கிறாய். எனவே நீ உன்தாயின் கணவருக்கு புத்திரன் என்பது உறுதியாகிறது.இதனால் நீயும் ஒரு அரசன்தான்.” என்கிறார்.மேலும் பாண்டவர்களின் மூத்தவனாக இருப்பதால் ஆட்சி புரியும் அதிகாரம் கர்ணனுக்கே வந்து சேரும் என்கிறார். பாண்டவர்கள் அவன் சொல்லும் வழியில் நடப்பார்கள் என்றும் அவனது தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றும் கூறுகிறார்.

இந்தப் பரிந்துரை தர்மத்தின் வழியாகவும் அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்பதாலும் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்படுகிறது. இது கர்ணனுக்கும் நன்மை பயக்கும் விஷயமாகும்.அவன் பாண்டவர் பூமியை ஆள்வதோடு அவர்களோடு சமாதானமாகவும் போய் விடுகிறான்.இது துரியோதனனையும் காப்பாற்றும் செயலாகும்.ஏன் என்றால் ஒரு போர் என்பது துரியோதனனை அவன் குடியை அவன் அரசாங்கத்தை முற்றிலும் அழித்து விடும்.மேலும் போர் நிறுத்தத்திற்கு துரியோதனன்  பானடவ்ர்களுக்கு சொந்தமான நிலத்தை மட்டும் விட்டுக் கொடுத்தால் போதும். இது இருவருக்கும் சாதகமாக போய் விடும்.தர்மத்தின் வழி செல்லும் பாண்டவர்களுக்கும் இந்த முடிவு சாதகமாக அமையும். ஏராளமான உறவினர்களைக் கொன்று குவிக்கப் போகிற யுத்தம் நின்று போனதற்கு தங்கள் சசோதரன் கர்ணன்தான் என்று அறிந்து அவர்கள் கர்ணனுடன் மகிழ்ச்சியுடன் இனைந்து வாழலாம். இந்த போர் தவிர்க்கப் படுமேயானால் பல்லாயிரம் உயிர்கள் பலியாகாமல் காக்கப் படும் என்பது அனைத்திற்கும் மேலான விஷயம்.

கர்ணனும் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த திட்டத்தை ஆமோதிக்கிறான். அவனுக்கும் துரியோதனனும் அவன் சகோதரர்களும் போரில் பிழைக்க மாட்டார்கள் என்பது புரிகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணரின் சொல் படி நடந்தால் அவன் மகா பாதகம் செய்தவன் ஆகி விடுவான்.அதிரதனும் ராதையும்தான் அவனுடைய வளர்ப்பு பெற்றோர்கள். அவர்கள் அரவணைப்பில் வளரும் கர்ணன் சூத குல வழக்கத்தின்படி திருமணங்கள் புரிந்து கொண்டு தனது மனைவிமார்கள் மூலம் பில்லைகையும் பேரப பிள்ளைகளையும் பெற்று ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றான். எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை அவனால் உதறித் தள்ள முடியாது.கர்ணன் கேட்கிறான்.” நான் குந்தியை அன்னையாக ஏற்றுக் கொண்டால் இதுவரை என்னை சொந்த மகனைப் போல போற்றி வளர்த்த ராதை இறந்த பின்பு அவளுக்கு  பிண்ட பலி என்னால் போடா முடியாமல் போகுமே. அது பெரிய பாவமில்லையா? “ என்கிறான்.மேலும் கர்ணன் துரியோதனனின் ஆதரவில் 13 ஆண்டுகள் மன்னன் என்ற அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறான்.. துரியோதனனும் கர்ணன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறான். இந்த நேரத்தில் கர்ணன் துரியோதனனைப் பிரிந்தால் உலகத்தோர் அவனை நன்றி கெட்டவன்  என்றும் பாண்டவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படி செய்துவிட்டான் என்றும் பாண்டவர்களை எதிர்க்க முடியாதவன் என்றும் தூற்றுவார்கள். எனவே ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த பரிந்துரையை ஏற்கும் நிலையில் தான் இல்லை என்பதை கர்ணன் தெளிவு படுத்தி விடுகிறான்

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் ‘” என் வார்த்தைகள் உன்னை அசைக்கவில்லை என்றால் உலகம் அதன் முடிவை நெருங்குகிறது என்றுதான் அர்த்தம்.”

ஸ்ரீ கிருஷ்ணரிடம் முறைப்படி விடை பெறும் முகமாக கர்ணன் அவரை ஆரத்தழுவிக் கொள்கிறான்.பிறகு விடை பெறுகிறான்.

இங்கே நாம் கர்ணனைப் பற்றி ஆழமாக விவாதிக்க முடியாத நிலையில் உள்ளோம் .எனவே இதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கர்ணன் நிஜமாகவே ஆளுமை மிக்க போற்றப் படும் மானுடன் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

 

Series Navigationமருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )வால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *