வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

 

 (Children of Adam)

எத்தனைக் காலமாய் 

மூடர் ஆக்கப்பட்டோம் நாமிருவரும் ?

 

(We Two, How Long We were Fooled)

(1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

        

எத்தனைக் காலமாய் நாமிருவரும்

மூடர் ஆக்கப் பட்டோம் ?

இப்போது மாற்றப் பட்டு

இயற்கை விரைவில்

விட்டுச் செல்வது போல் நாம்

தப்பிக் கொண்டோம்.

நாமே இயற்கை விளைவு !

நீண்ட காலம் தெரியா திருந்தோம்

மீண்டும் வந்தோம்

இப்போது !

செடி, கொடி ஆனோம்,

மரப்பட்டை, இலை, தண்டு, வேரானோம்.

பூமிப் படிகை,

பூமிப் பாறைகள் ஆனோம் !

தேக்கு மரங்கள் நாமே !

திடல் வெளியே நெருக்கமாய்

நடப்பட்டு வளர்ந்தோம் !

 

மேய்ந்தோம் சுதந்திரமாய்

மூர்க்க விலங்கு மந்தையில் இருவராய் !

சேர்ந்து கடல் நீந்தும் மீன்கள்

ஆனோம் !

தோன்றிய விட்டிலாய்

காலையும் மாலையும் நறுமணம்

சிந்தினோம் சந்துகளில் !

கொடிய மிருகம்,

தான்யம், தாதுக்கள் ஆனோம் !

வெகு உயரத்தில் பறந்து

கீழ்நோக்கிப் பாய்ந்து கொத்தும்

இரு கழுகுகள் ஆனோம் !

 

பேரொளி வீசும் சூரியனாய்

மாறினோம்,

வால்மீன்கள் போலானோம்

நாம் இருவரும் !

கோளுக்கும், விண்மீனுக்கும் இடையே

சமத்துவம் செய்வோர்

நாமே தான் !

முற்பகல், பிற்பகற் பொழுதில்

தலைமேல் விரையும்

இரண்டு முகில்கள் நாம் !

கலக்கும் இரண்டு கடல்கள் நாம் !

அவற்றில்

ஒன்றின் மேல் ஒன்று

உருண்டோடிக்

கரைகளை ஈர மாக்கும் இரு

கலகலப் பான

கடல் அலைகள் நாம் !

 

ஒளி ஊடுருவும்

பரந்த சூழ்வெளி ஆனோம் !

வரவேற்பது,

வழி விடுவது, வழி விடாதது !

மழை, பனிப்பூ, இருள், குளிர் நாங்கள் !

பூகோளம் உருவாக்கும்

தூண்டுப்

பொருட்கள் நாங்கள் !

சுற்றிச் சுற்றி வந்தோம்

மீண்டும் எங்கள்

வீட்டில் புகுந்திடும் வரை !

விலக்கி விட்டோம் அனைத்தும்

விடுதலை தவிர !

புறக்கணித் தோம்  அத்தனையும்

எங்கள்

பூரிப்பைத் தவிர !

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman  [February 5, 2014]

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *