எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014
நண்பர்களே,
வணக்கம்.
எனக்கு விருது அளிப்பதாக வெளிவந்த செய்தி. உங்கள் பார்வைக்கு…

 

எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது

அமுதன் அடிகள் விருது 2014 தமிழ்மகன் எழுதிய வனசாட்சி நாவலுக்கு வழங்கப்படுகிறது. அவர் தமிழக அரசு வழங்கும் சிறந்த நாவலுக்கான விருது, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, எழுத்தாளர் ஜெயந்தன் அறக்கட்டளை விருது, எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை விருது, மலைச்சொல் விருது, மார்த்தாண்டம் ஜி.எஸ்.மணி அறக்கட்டளை விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

மலர்வதி எழுதிய தூப்புக்காரி நாவலும் அன்வர் பாலசிங்கம் எழுதிய  நூர்ஜஹான் என்ற கருப்பாயி நூலும் விருது பெறுகின்றன.

தோப்பில் முகமது மீரான் (1996), வல்லிக்கண்ணன் (1997), இந்திரா பார்த்தசாரதி (1998), நாஞ்சில் நாடன் (1999), பூமணி (2000),
இமயம் (2001), மேலாண்மை பொன்னுசாமி (2002), பாமா (2003), பெருமாள் முருகன் (2004), எஸ்.வி. ராஜதுரை (2005) (படம் இல்லை), கவிஞர் சல்மா (2006), ஜோ டி குரூஸ் (2007), சோ.தர்மன் (2008), ஆகியோர் இந்த விருதைப்பெற்றிருக்கிறார்கள்.

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

தமிழ்மகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *