இயக்கமும் மயக்கமும்

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

  (1) ஓடும் ஆற்றைச் சதா பாலம் கடக்கும்.   (2) ஊருக்கு நடக்கும் முன்னே ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை.   (3) எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு நாய்.   (4) இளைக்க ஓடும் இரயிலின் சக்கரக்கால் பாய்ச்சலை முறியடிக்கும் மலைத் தொடர் சாவகாசமாய் ஊர்ந்து. (5) நீந்த நதி நெடுக இரு கரையும் சதா காத்திருக்கும்.   (6) ஊரும் எறும்புகளில் […]

தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதமாக இருக்கும், நண்பர் மாலனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கோவையில் நடைபெறவுள்ள ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனக்கேட்டிருந்தார். என்ன பதில் சொல்வேன் எதிர்பார்ப்பீர்களோ அப்பதிலை மிக்க மகிழ்ச்சியுடன் எழுதினேன். கரும்பு தின்ன கூலியா என்பார்கள். ‘கோவை தமிழ் பண்பாட்டுமையம்’ கருப்புத்தோட்டத்தையும் கொடுத்து கருவூலத்தையும் திறந்துவைத்திருந்தார்கள். உயிர் உள்ளவரை மறக்கவொண்ணாத கனிவான விருந்தோம்பல்   கோவ தமிழ்பண்பாட்டு மையம் (http://www.centerfortamilculture.com):   கோவையில் தமிழ்ப்பண்பாட்டு மையம் […]

பெரியவன் என்பவன்

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  வீட்டுக்குள் நுழைந்து பள்ளிக்கூடப் பையை வைத்ததுமே “கைகால கழுவிகினு கடபக்கமா போய் அப்பாவ பாத்து செலவுக்கு காசு வாங்கிட்டு வரியா?” என்று கேட்டாள் அம்மா. “சரிம்மா” என்றபடி தோட்டத்துப்பக்கம் சென்று பானையிலிருந்த தண்ணீரில் கைவைத்தேன். பக்கத்தில் வேலியோரமாக ஒரு சின்னஞ்சிறு புளியங்கன்று விரல்நீளத்துக்கு பச்சைப்பசேலென நின்றிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதன் வேர்ப்பகுதியில் கோழிகளால் சீய்க்கப்பட்ட பள்ளங்களை காலாலேயே மண்ணை இழுத்துத்தள்ளிச் சரிப்படுத்தினேன். வேகவேகமாக அது வளர்ந்து திசையெங்கும் கிளைவிரித்தபடி அடர்ந்து நிற்கிற காலம் விரைவில் […]

தினம் என் பயணங்கள் – 8

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  இன்று நான் ஒரு புதிய ஆங்கில வார்த்தைக் கற்றுக்கொண்டேன். Fantasy –[மனப்புனைவு] கற்பனை  என்பது தான் அது. இந்த வார்த்தையைக் கூகுள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. ஆனால் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் எண்ணம் என்னுள் எழுந்ததினால் மட்டுமே இது நிகழ்ந்தது.   அனுதினமும் புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டால் புத்துணர்ச்சியோடு இருப்போம் என்று என் நண்பர் சொல்வார். இதை நான் உணர்ந்ததும் உண்டு நாம் கற்றுக் கொள்ளத் தலைப்படும் போது நம் கவலைகளுக்காக கவலைப்பட நேரம் இருக்காது. […]

மருமகளின் மர்மம் – 19

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

சகுந்தலாவின் வீட்டு வாசலில் சோமசேகரனின் பைக் வந்து நின்ற போது சரியாக மணி ஐந்தே முக்கால். பைக் ஓசை கேட்டதுமே நிர்மலா ஓடி வந்து கதவைத் திறந்து, மலர்ச்சியுடன், “வாங்க, மாமா!” என்றாள். அவர் சிரித்துக்கொண்டே அவளுடன் உள்ளே சென்று அமர்ந்தார். சகுந்தலா அவருக்காகவே காத்துக்கொண்டிருந்தவள்  போல் ஒரு தட்டில் பாதாம் அல்வாவையும், இன்னொன்றில் வாழைக்காய் பஜ்ஜியையும்  கொண்டுவந்து வைத்தாள். “நீங்க சாப்பிட்டாச்சா?” என்று கேட்டபடி பாதாம் அல்வாவிலிருந்து கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்த சோமசேகரன், […]

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

தேசியநூலக வாரியத்தின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இந்த ஆய்வரங்கிற்கான அழைப்பிதழ் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.  மிக்க நன்றி. ஏற்பாட்டாளர்கள். ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு தேதி: 23 மார்ச் 2014 நேரம்: மாலை 5.00 – 8.30 இடம்: விக்டோரியா ஸ்திரீட் நூலகம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்   வரவேற்புரை  முனைவர்   சீதாலட்சுமி – முழுமையான ஒரு பார்வை இராம கண்ணபிரான் – குறுநாவல்கள் ஒரு பார்வை காயத்ரி – ஓர் இளம் […]

நீங்காத நினைவுகள் – 37

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

                                                                                                                                                                முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விஷயம். தொடர்ந்து என் கதைகளை வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு வார இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பினேன். நான் கவிஞை யல்லேன். எனினும் என்னைக் கவிதை எழுத வைத்த ‘குற்றத்தை’ அவ்விதழ் புரிந்தது! பெண்களின் அங்க அவயங்களைக் கொச்சையான பாணியில் விவரித்து எழுதிவந்த எழுத்தாளர்களை ஆதரிப்பதில் அவ்விதழ் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் ஆசிரியர் மிகவும் நல்லவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர். நிறைய நல்லனவற்றைச் செய்துள்ளவராம்.  ஆனால் அவர் நடத்திய வார இதழின் […]

செயலற்றவன்

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

வில்லவன் கோதை   ‘ இதாண்டா  ஒனக்கு லாஸ்ட் சான்ஸ் ! மிஸ் பண்ணிடாதே. அவனவன் பணத்த மடில கட்டிட்டு ஓயெண்டம் போஸ்ட்டுக்கு தவமா கெடக்கிறான். பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்ண்ணு முடிச்சி லைப்ல ஹையா செட்டிலாயிடலாம் ’ உற்சாகமாக பேசினான் வைகுண்டம். ‘ அவன் சொல்றாண்ணு  கேக்காதே. மொதல்வேலையா எஸ்சிய பாத்து எம்மார்டி இல்ல எஸ்சஸ்ல ரீபோஸ்டிங் வாங்கிற வழிய பாரு. அப்பதான் ஒழுங்கா ரிட்டயர்டு ஆவ. இன்னிக்கு இருக்கிற நெலமல அங்கல்லாம் ஒன்னால ஒருநாளைக்கு […]

திண்ணையின் இலக்கியத்தடம் – 25

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

செப்டம்பர் 4 2003 இதழ் சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்- அசுரன்- நிலத்தடி நீரை மிதமிஞ்சி எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப் படுகிறது. குளிர்பான ஆலைகளின் கழிவுகள் நிலத்தை மாசு படுத்துகின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309048&edition_id=20030904&format=html ) இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ! தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த பாமரன் ஒருவனின் சில கேள்விகள்- அக்கினிபுத்திரன் – சிங்கப்பூர் – (பாய்ஸ் படம் போன்ற) ஒரு மஞ்சளை சங்கரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309049&edition_id=20030904&format=html ) கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள் – சி.ஜெயபாரதன் […]

தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

            வெறும் புத்தகப் புழுவாகவே இருந்து பழக்கப் பட்டுவிட்டவன் நான். படிப்பில் மட்டுமே சிறந்து விளங்கிய நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற மனக் குறை என்னுள் இருந்தது. ஓட்டப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறையவே இருந்தது.ஆனால் வெட்கமும் அச்சமும் அதைத் தடுத்தது. தேர்வு எழுதுவது யாருக்கும் தெரியாமல் செய்வதாகும். அது எளிது. ஆனால் பந்தயத்தில் ஓடுவதை பலர் பார்ப்பார்கள். அதில் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் […]