மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

 

ஒரு காலத்தில் இப்பகுதியில் கொசுக் கடியால் மலேரியா காய்ச்சல் பரவி ஆயிரமாயிரம் பேர்கள் இறந்து போக நேர்ந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அயரா உழைப்பால் மலேரியா இன்று முன்னேறி வரும் நாடுகளில் ஓரளவு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் இடத்தை இன்று டெங்கி காய்ச்சல் பிடித்து வருகிறது என்றால் அது மிகையன்று.

           இன்று கொசுக்கடியால் வைரஸ் தொற்று உண்டாகும் வியாதிகளில் டெங்கி காய்ச்சல்தான் முதலிடம் வகிக்கிறது.             உலகின் வெப்பப் பிரதேசப் பகுதிகளில் வருடத்தில் 500 – 100 மில்லியன் பேர்கள் டெங்கி காய்ச்சலால் தாக்கப்படுகின்றனர் .இவர்களில் 10,000 பேர்கள் டெங்கி இரத்தக்கசிவு காய்ச்சலால் மரணமடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
            பிளேவிவைரஸ் ( Flavivirus ) எனும் பெயர் கொண்ட வைரஸ் கிருமி வகையால்தான் டெங்கி காய்ச்சல் உண்டாகிறது. இந்த வைரஸ் கிருமி முக்கியமாக ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் அதிகம் காணப்படுகிறது.
           இந்த வைரஸ் வகை நான்கு வகையானவை. இவற்றை பரப்பும் கொசுக்களின் பெயர் ஏடீஸ் ஈஜிப்டி ( Aedes Aegypti ) எனும் பெயர் கொண்டது. இந்த கொசு பகலில் கடிக்கும் பழக்கம் கொண்டது.
           இந்த வைரஸ் காய்ச்சல் பரவும் விதம் வருமாறு:
டெங்கி காய்ச்சல் உள்ளவர்கள் முதல் மூன்று நாட்கள் தொற்றும் தன்மையை அதிகம் கொண்டவர்கள். அப்போதுதான் அவர்களுடைய இரத்தத்தில் வைரஸ் எண்ணிக்கை அதிகம் காணப்படும்.
         அந்த மூன்று நாளில் அவரைக் கடித்து அவருடைய இரத்தத்தை உறிஞ்சும் கொசுவின் உடலினுள் வைரஸ் புகுந்து பெருகுகிறது. அதன்பின்பு இரண்டு வாரங்கள் கழித்து அந்த கொசு தனது வாழ்நாள் முழுதும் டெங்கி வைரஸ் கிருமியை தொற்றககூடியதாக நோயைப் பரப்புகிறது! அந்த கொசு யார் யாரைக் கடிக்கிறதோ அவர்களுக்கெல்லாம் டெங்கி காய்ச்சல் உண்டாகும் அபாயம் உள்ளது. அதனால்தான் ஒரு குடும்பத்திலோ அல்லது தெருவிலோ ஒருவருக்கு காய்ச்சல் உண்டானால் அடுத்தவருக்கும் எளிதில் பரவுகிறது.
அறிகுறிகள்
          கொசு கடித்த 5 நாட்கள் பிறகுதான் ஆரம்ப அறிகுறிகள் .தோன்றும். டெங்கி காய்ச்சல் இரண்டு வகைப்படும். 1. இயல்பான டெங்கி காய்ச்சல் ( Classic Dengue Fever ) 2 டெங்கி இரத்தக் கசிவுக் காய்ச்சல் ( Dengue Haemorrhagic Fever ).அறிகுறிகளும் அதற்கேற்ப மாறுபடும்.
           1. இயல்பான டெங்கி காய்ச்சல் – திடீர்க் காய்ச்சல், தலைவலி, பலவீனம்.கண்களுக்குள் வலி, கடும் முதுகு வலி, கரளைக் கட்டிகள், கை கால்களில் தொடங்கி பின்பு முதுகிலும் வயிற்றுப பகுதியிலும் சிவந்த பொரிகள் , தோல் உலர்ந்து உரிதல். பெரும்பாலும் சளி இருமல் இருக்காது .இந் காய்ச்சல் 3 மதல் 4 நாட்களில் குறையும். சில நாட்கள் கழித்து மீண்டும் தோன்றும். காய்ச்சல் குறைந்த பின்பும் சில வாரங்கள் பலவீனமாகவே இருக்கும்.
            2. டெங்கி இரத்தக் கசிவு காய்ச்சல் – இது ஆபத்தானது. இது இரண்டு அல்லது அதற்கு மேலான டெங்கு வைரஸ் கிருமி வகைகள் தொற்றால் உண்டாவது,இது குழந்தைகளை அதிகமாக பாதிக்க வல்லது. தென்கிழக்கு நாடுகளில் மட்டுமே இது காணப்படுவது.இதன் அறிகுறிகள் வேறு விதமாவை.
சாதாரண சளிக் காய்ச்சலுடன் இது தொடங்கும். அதன்பின் திடீர என்று தோல், காது, மூக்கு போன்ற பகுதிகளில் இரத்தக் கசிவு உண்டாகும். நோயாளி அதிர்ச்சிக்குள்ளாகி ( Shock ) நினைவிழக்க நேரலாம்!
,                                          பரிசோதனைகள்
           காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்களுக்குமேல் இருந்தால் கட்டாயம் இரத்தப் பரிசொதனை செய்துகொள்ள வேண்டும். FBE எனும் முழு இரத்தப் பரிசோதைனை யில் பிலேட்லெட் ( Platelets ) எனும் வெள்ளை இரத்த செல்கள் குறைந்திருக்கும் . இது நிச்சயமான அறிகுறி எனலாம்.
           டெங்கி IgG , டெங்கி IgM எனும் மேலும் இரு பரிசோதனைகள் வழியாக நிச்சயப்படுத்திகொள்ளலாம்.
நோயின்
சிகிச்சை
            டெங்கி காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படாததால் பலர் உயிர் இழக்க நேரிடுகிறது.
           டெங்கி காய்ச்சல் என்று நிச்சயிக்கப்பட்டபின் கட்டாயமாக மருத்துவமணியில் சேர்ந்து சிகிச்சை பெற் றுக்கொள்ளவேண்டும். அங்கு தினசரி இரத்தப் பரிசோதனை செய்யப்படும். அதன்பின் பிளேட்லட் அதிகம் குறைந்திருந்தால் Fresh Frozen plasma எனும் இரத்தத்தின் ஒரு பகுதி இரத்தக் குழாய் மூலம் செலுத்தப்படும். நோயால் அதோடு நோயால் உண்டாகும் இதர அறிகுறிகளுக்கும் தகுந்த சிகிச்சைகள் தரப்படும்.
( முடிந்தது )
Series Navigationநீங்காத நினைவுகள் 40புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்புசென்றன அங்கே !’ரிஷி’ கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6நெய்யாற்றிங்கரை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *