வால்ட் விட்மன் வசனக் கவிதை – 77 ஓர் அன்னியனுக்கு !

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 77
(1819-1892)

ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(To a Stranger)
ஓர் அன்னியனுக்கு !

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எதிரே செல்லும் அன்னியனே !
மதிப்புடன் நோக்கி
உனைநான் நேசிக்கிறேன் என்று
எனைத் தெரியா துனக்கு.
தேடிச் செல்லும்
ஆடவன் அல்லது பெண்மணி
நீயாகத் தான் இருப்பாய்.
கனவு போல் தெரியுது.
நிச்சயம், உன்னோடு எங்கோ
வாழ்ந்திருக் கிறேன்
பூரிப்போடு !
புரட்டிப் பார்க்கிறேன் நினைவை
பரிவோடு, கற்போடு
பக்குவ முடன்
நாம் விலகிய பிறகு !

என்னோடு தான் நீ வளர்ந்தாய்
பெண்ணாகவோ
அல்லது ஓர் ஆணாகவோ !
உன்னோடு தான்
உண்டு, உறங்கினேன் !
உன்னுடல்
உனக்கு மட்டு மின்றி,
என்னுடல்
எனக்கு மட்டும் இல்லாமல்
இருவருக் குமாய்
உருவானது !

எதிரே நீ செல்லும் போது
எனக்கு விருந் தளிக்கும்
உனது விழிகள்,
உன் முகம், உன்னுடம்பு.
என்னிடம் எடுத்துக் கொள்வாய்
பதிலுக்கு,
அகன்ற மார்பு, அழகிய கரங்கள்,
முகத் தாடி !
பேசுவ தில்லை நான் !
நினைத்துக் கொள்வேன் உன்னை,
தனியே உள்ள போதும்,
இரவில் விழிக்கும் போதும் !
காத்திருப்பேன் நான்
மீண்டும் உன்னைச் சந்திக்க,
ஐயமில்லை !
முழுமன தாய் நானதில்
முனைய வேண்டும்
உனை இழக்கக் கூடாதென !

+++++++++++++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *