வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78
(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(This Moment Yearning & Thoughtful)
இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இக்கண ஆர்வத்தில்,
ஏகாந்தியாய் என் சிந்திப்பு !
எனக்குத் தெரியுது
வேறு நாடுகளிலும் அதுபோல்
ஆர்வமுள் ளோரும்
சிந்திப் போரும் இருப்பார்.
எதிர்நோக்கலாம்
நானவரது வரவுக்கு
இத்தாலி, ஜெர்மெனியில்
ஃபிரான்ஸ், ஸ்பெயினில்,
அல்லது அப்பால்
வேற்று மொழி பேசும்
ஜப்பானில்
சைனா, ரஷ்யாவில்,
அவரைப் பற்றி
அறிந்திட நேர்ந்தால்,
அவரோடு நான் பிணைந்து
உறவாட வேண்டும்
என் சொந்த
நாட்டாரைப் போல் என்றும்
எனக்குத் தெரியுது !
நான் அவரைச்
சகோதர ராக
நேசிக்க வேண்டும்.
அவரோடு
இன்புற் றிருக்கவும்
தெரிய வேண்டும் எனக்கு.
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
- வாழ்க்கை ஒரு வானவில் – 6
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 7
- கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்
- ஜோதிஜியின் “ டாலர் நகரம் “
- திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு
- கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்
- இயக்கி
- தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்!
- கவிக்கு மரியாதை
- பாதுகாப்பு
- தந்தை சொல்
- காயா? பழமா?
- திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்
- பத்மா என்னும் பண்பின் சிகரம்
- என் பால்யநண்பன் சுந்தரராமன்
- தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு
- உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்
- கனவில் கிழிசலாகி….
- டைரியிலிருந்து
- நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.
- காஃப்காவின் பிராஹா -4
- Malaysian and Tamil Poets Meet and Interact!
- நீங்காத நினைவுகள் – 49