இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா?

author
6
0 minutes, 1 second Read
This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014
hamas_human_shield_kartoonலாரி கோல்ட்ஸ்டீன்

(டொரோண்டோ சன்னில் வெளியான கட்டுரை )

(இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் ஏற்படும் என்று எண்ணுபவர்கள் ஹமாஸின் கொள்கை விளக்க அறிக்கையைப்  படித்ததில்லை.)

ஹமாஸிற்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்படும் போதெல்லாம், ஐநா பொதுச் செயலாளர் பான் கிமூன் தொடங்கி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரையில் இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.
அடிப்படையில் ஹமாஸுடன் இஸ்ரேல் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக முனைய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை.
இந்த அறிவுரையில் இரண்டு பிரசினைகள் உள்ளன.
முதலாவதாக ஹமாஸின் தலைவர்கள் பித்த வெறி பிடித்தவர்கள்.
இரண்டாவதாக ஹமாஸிற்கு சுதந்திர பாலஸ்தீனம் தேவை  இல்லை.
இஸ்ரேலில் உள்ள யூதர்களை அழித்து ஒழிப்பது ஒன்று தான் ஹமாஸின் நோக்கம்.
கீழே உள்ள வாசகங்கள் ஹமாஸின்  1988-ம் ஆண்டு வெளியிடப் பட்ட நிறுவன கொள்கை விளக்க அறிக்கையிலிருந்து எடுக்கப் பட்டது.
“இஸ்லாம்  மற்றவரைக் கொன்றழித்தது போலவே இஸ்ரேலையும் அழிக்கும்.”
“ஹமாஸின் கோஷம் : அல்லாவே எங்கள் குறிக்கோள், இறைத்தூதுவரே  வழிகாட்டி, குரானே சட்ட அமைப்பு. அல்லாவிற்ககாக மரணம் அடைதலே பெருவிருப்பம்.”
“அல்லாவின் ஆணையை நிறைவேற்றுவதே ஹமாஸின் கடமை. எத்தனை காலமானாலும் சரி. இறைத் தூதுவர் சொன்னார் ” முஸ்லிம்கள் யூதர்களைக் கொன்றழிக்கும் வரையில் நற்காலம் வராது. கல்லிலும், மரத்திலும் யூதர்கள் மறைந்திருந்தால்- முஸ்லிம்களே அவர்களைக் கண்டுபிடித்துக் கொல்லுங்கள்.”
“இஸ்லாமிய இயக்கம் இஸ்ரேலை இஸ்லாமிய வக்ப் (சொத்து) என்று நம்புகிறது. இறுதித் தீர்ப்பு நாள் வரையில் முஸ்லிம்களின் எதிர்காலத் தலைமுறைகளே அவற்றில் வசிக்க வேண்டும். இதில் விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.”
”  அமைதி பேச்சு வார்த்தை, அகில உலக மாநாடுகள் எல்லாம் இஸ்லாமிய போராட்டத்திற்கும் இயக்கத்திற்கும் முரண்பட்டவை. ஜிஹாத் அல்லாமல் பாலஸ்தீனப் பிரசினைக்கு தீர்வு இல்லை. அமைதித் தீர்வு என்பதெல்லாம் கால விரயம் தான்.”
“சியோனிச ஊடுருவல் நச்சுத் தன்மையானது. அது பிரீமேசன், லயன்ஸ் கிளப், ரோடரி கிளப் போன்ற அமைப்புகளையும் இது போன்ற மற்ற ரகசிய அமைப்புகளையும் கொண்டது. இந்த அமைப்புகள் எல்லாம் ஜியோனிசத்தின் ஏவலாளிகள். சமூகத்தைக் கெடுத்து, மதிப்பீடுகளை தாழ்த்தி, மனசாட்சியை நசித்து, நற்குணங்களை அழித்து இஸ்லாமை அழிக்க நோக்கம் கொண்டுள்ளார்கள். போதை மருந்து வியாபாரம், மது வியாபாரம் செய்து தம்மை விரிவாக்கம் செய்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.”
“இஸ்ரேல், யூத மதம் , யூதர்கள் இஸ்லாமையும், முஸ்லிம் மக்களையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர். அவர்களை நிம்மதியாய்த் துங்க விடமாட்டோம்.”
“ஜியோனிஸத்தை எதிர்ப்பதை நிறுத்துவது பெரும் துரோகம். அப்படிச் செய்பவர்களைச் சபிப்போம். எல்லா ஆற்றலையும் பயன் படுத்தி இந்த நாஜிகளை எதிர்ப்போம்.”

“இரண்டு நாடுகளாகப பிரித்து தீர்வு காணுதல்” என்பதும் , பாலஸ்தீன் அருகில் இஸ்ரேல் அமைதியுடன் சகவாழ்வு வாழக் கூடும் என்பதும் இன்றைய நிலையில் ஆகாத ஒன்று.

தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியறினால் அமைத் திரும்பும் என்று சொல்பவர்களுக்கு – 2005-ல் காஸா பகுதியிலிருந்துதானாகவே முன்வந்து இஸ்ரேல் வெளியேறியது

பிரதமர் ஏறிய ஷரன் 45,000 இஸ்ரேல் படையினரையும், 8,500 யூத வாசிகளையும் காஸாவிலிருந்து பின்வாங்கச் செய்தார்.
மேற்குக் கரைப் பகுதியிலிருந்தும் சில குடியிருப்புகள் காலி செய்யப் பட்டன.  பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுடன் சகவாழ்வு வாழ்வார்கள் என்று அவர் நம்பினார்.

ஆனால் காஸாவை ஹமாஸ் உடனடியாகக் கைபற்றி ஏவுகணைகளு நிறுவியது. இன்றுவரை அங்கு ஏவுகணைகள் அங்கிருந்துதான் இஸ்ரேலுக்குள் வீசப் படுகின்றன.

Series Navigation
author

Similar Posts

6 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    மத்திய தரைக்கடல் பகுதி ஒரு வகையில் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதிதான். காரணம் உலகின் மூன்று முக்கிய மதங்கள் தோன்றியது அங்குதான். ஆபிரகாம் சந்ததியில் தோன்றிய யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களுக்குள் இன்றுவரை நல்லிணக்கம் வர இயலாதது இயல்பானதே! இந்த மூன்று மதங்களுக்கும் அஸ்திவாரம் ஒன்றாக இருந்தாலும் அவை மேலெழுந்த பின்பு ஆட்டம் காண்பதும் இயல்புதான். ஆகவே இந்த அடிப்படைக் கோளாறு உள்ளவரை மத்திய தரைக்கடல் பகுதியில் அமைதி வருவது அங்கு பாலைவனத்து கானல்நீர்தான்….. டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    ஷாலி says:

    // இறைத் தூதுவர் சொன்னார் ” முஸ்லிம்கள் யூதர்களைக் கொன்றழிக்கும் வரையில் நற்காலம் வராது. கல்லிலும், மரத்திலும் யூதர்கள் மறைந்திருந்தால்- முஸ்லிம்களே அவர்களைக் கண்டுபிடித்துக் கொல்லுங்கள்.”//

    இ ஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பு அரசியல், எப்படியெல்லாம் உண்மையை குழி தோண்டி புதைக்கிறது என்பதற்கு இந்தக் கட்டுரை ஒன்றே போதும்.இயேசு கிருஸ்து என்று கிறிஸ்துவர்களாளும் ஈஸா நபி என்று முஸ்லிம்களாலும் அழைக்கப்படும் ஜீசஸ் உலகத்தின் இறுதிக்காலத்தில் இப்பூமிக்கு வருவார்.இதையே கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்று கூறப்படுகிறது.

    இவ்வருகையின் நோக்கம், நானே கடவுள் என்று கூறியும் பல அற்புதங்களைக்காட்டியும் மக்களை வழி கெடுக்கும் அந்தி கிறிஸ்ட் ( Anti Chirist ) தை எதிர்த்து கொல்வதற்காகவே ஜீசஸ் வருவார். இதையே இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகமும் முன்னறிவிப்பு செய்தார்கள்.

    தச்சால் (Dajjal, அரபு:மஸீஹ் தஜ்ஜால்) அல்லது மசீக் தச்சால் என்பவன் உலக அழிவின் சமீபத்தில் வெளிப்படும் விசித்திர மனிதன் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும். உலக இறுதியின் பத்து அடையாளங்களின் தச்சாலின் வெளிப்பாடு இரண்டாவது மற்றும் மிக முக்கிய அடையாளம் ஆகும். இசுலாமிய நம்பிக்கைகளின் படி, பூமி தனது இறுதி நாளை நெருங்கும் நேரத்தில் தச்சால் நடு கிழக்கு ஆசியாவில் இருந்து வெளிப்படுவான்.

    ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் இவனை பின்பற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இசுபகான் எனும் பகுதியை (ஈரான்) சேர்ந்த 70,000 யூதர்கள் இவனை பின்பற்றி இவனுடைய படையில் சேர்வார்கள். இறுதியில் சிரியாவில் இருந்து வெளிப்படும் நபி ஈசா(இயேசு) வினால் இசுரேலின் லூத்து என்னும் இடத்தில் வைத்து கொல்லப்படுவான்.

    இவனைப் பின்பற்றிய யூதர்கள் கற்களுக்கு பின்னாலும்,மரங்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொள்வர்.அந்நேரம் “ எனக்குப் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துள்ளான் அவனைப் பிடித்துக் கொல்லுங்கள் “ என்று கற்களும்,மரங்களும் பேசும்; என்று நபிகள் நாயகம் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.

    உலக இறுதிக்காலத்தில் இயேசு கிறிஸ்து வருகையின் போது இரண்டாவது முறை ய ஆதரவு யூதர்களை கல்லும்,மரமும் காட்டிக்கொடுக்கும். இனி மேல் வருங்காலத்தில் நடக்கப் போகும் முன்னறிவிப்பு செய்தியை திரித்து இன்றுள்ள யூதர்களை முஸ்லிம்கள் கொல்லச் சொல்வதாக முடிச்சிப்போட்டு நஞ்சைக் கக்குவதுதான் “டொராண்டோ சன்”பத்திரிகை தர்மமா? பொய் சொல்வதற்கும் ஒரு அளவில்லையா?

  3. Avatar
    சின்னக்கருப்பன் says:

    அன்புள்ள ஷாலி,
    நீங்கள் டொரண்டோ சன் பத்திரிக்கை தர்மத்தை பற்றி கேள்வி கேட்கவேண்டாம். ஏனெனில் அது அந்த முடிச்சை போடவில்லை. முடிச்சுபோட்டது ஹமாஸ்.
    www . palestine-studies . org/files/pdf/jps/1734.pdf
    டொரண்டோ சன் பத்திரிக்கை, ஹமாஸின் நிறுவன கொள்கை விளக்க அறிக்கையை மேற்கோள் காட்டுகிறது. கட்டுரையையும், அறிக்கையையும் சரியாக படித்து பாருங்கள்.

  4. Avatar
    எம்.எஸ்.ராஜேந்திரன் says:

    ஒரு சார்பு ஊடகங்களின் செய்தி திணிப்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை கட்டுரை ஆசிரியர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.நபிகள் கூறியதாக “ஷாலி” மேற்கோள் காட்டியது உண்மையாக கூட இருக்கலாம்.ஆனால் ஹமாஸ் தீவிரவாதிகள்,கட்டுரை ஆசிரியர் கூறியவாரே இதனை புரிந்துகொண்டிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.நம் எண்ணங்களை பிரதிபலிப்பது நம் நடவடிக்கைகள் தானே?

  5. Avatar
    ஷாலி says:

    அன்புள்ள திரு.சின்னக்கருப்பன் நீங்கள் கொடுத்த இணைப்பில் உள்ள ஹாமாஸின் கொள்கை பிரகடனத்தைப் படித்தேன்.அதிலும் இன்றுள்ள உள்ள யூதர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனை மீட்க தொடர் போராட்டம் செய்வோம்.அது நபிகள் நாயகம் சொன்ன தீர்க்க தரிசனப்படி உலக இறுதி நாள் வரை அது தொடர்ந்தாலும் என்று கூறி, அந்த நாளில் முஸ்லிம்கள் மீது போர் தொடுக்கும் யூதர்களை கொல்வார்கள்.அப்போது கல்லும்,மரமும் ஒளிந்திருக்கும் யூதர்களை காட்டிக்கொடுக்கும்.” என்றுதான் உள்ளது.விரிவான செய்தியை விக்கி இணைப்பில் Dajjal என்ற பெயரில் காணலாம்.

    The Islamic Resistance Movement is a link in [a long] chain of the Jihad against the Zionist occupation, which is connected and tied with the initiation [of the Jihadl of the Martyr ‘Izz al-Din al-Qassam and his Mujahid brothers in 1936. And the chain continues on to connect and tie another episode to add to thejihad of the Palestinians and thejihad of the Muslim Brotherhood in the war of 1948 and the Jihad operation of the Muslim Broth- erhood in 1968 and thereafter.

    Even though the episodes were few and far between, and were not continuous in Jihad due to the ob- stacles placed by those in the sphere of [influ- ence of] the Zionist entity in the face of the Mujahidin. Even though the Islamic Resist- ance Movement looks forward to fulfill the promise of Allah no matter how long it takes because the Prophet of Allah (saas) says: The Last Hour would not come until the Muslims fight against the Jews and the Muslims would kill them, and until the Jews would hide themselves behind a stone or a tree and a stone or a tree would say. Muslim or Servant of Allah there is a Jew behind me; come and kill him; but the tree of Gharqad would not say it, for it is the tree of the Jews (Bukhari and Muslim).
    இதுவும் ஹாமாஸின் கொள்கை பிரகடனம்தான்.
    The People of Other Faiths Article 3 1:
    The Islamic Resistance Movement is a hu- manistic movement that takes care of human rights and follows the tolerance of Islam with respect to people of other faiths. Never does it attack any of them except those who show enmity toward it or stand in its path to stop the movement or waste its efforts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *