கவிதாயினியின் காத்திருப்பு

author
0 minutes, 6 seconds Read
This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

“ ஸ்ரீ: “

 

                             மழைக்கால நாளொன்றின் இரவு நேரம் –

கண்ணாடி ஜன்னலின் வெளியே

அவ்வப்போது தீக்குச்சி கிழிக்கும்

மின்னல் வெட்டு ;

பணி முடித்துச் செல்லும் வேலையாட்களின்

சன்னமான பேச்சொலியாய்

இடியோசை ஒன்றிரண்டு ;

நின்றுவிட்ட பெருமழையின்

நினைவேந்தல் நிகழ்ச்சியென

சன்னமாய்த் தொடரும் தூறல் ;

வெண்டிலேட்டர் இடைவெளியில்

சில்வண்டுகள் ஒலிபரப்பும் புல்லாங்குழல் ;

வயதான வித்வானின் குரலைப் பிரதியெடுக்கும்

தவளைகளின் இசை ஒத்திகை ;

வந்துபோகும் மின்சாரம்

வழக்கம் போலவே ;

2

தொட்டிலில்

பிருஷ்டம் தூக்கிக் கவிழ்ந்துறங்கும்

மூன்றுவயது முதற்கவிதை ;

படுத்திருப்பவளின் புஜ அணைப்பில்

கதகதக்கும் இரண்டாம் சிருஷ்டி ;

மின்விசிறி தேவையில்லாக் குளிர்ச்சூழல் ;

மாறனின் அம்புக்கு

வேலையேயின்றிப்போகும் தனிச்சூழல் ….

எதையும் இப்போது

ரசிக்கும் மனநிலையில்லாமல்

தவிக்கிறாள் நமது கவிதாயினி –

‘குடிகாரன் வீடுவந்து சேர்ந்தால் போதும்….’

 

**** **** **** **** Email Id : sriduraiwriter@gmail.com

 

 

 

 

“ ஸ்ரீ: “

எஸ். ஸ்ரீதுரை                                                                                                 2, கொசத்தெரு,           (9486139685)                                                                                                சலவன்பேட்டை,                                                                                                                                வேலூர் – 632001.

கவிதை

கொஞ்சநாள் தள்ளலாம்

நித்தமும் ஓர் ஊழல் செய்தி முகத்தில் அறைகிறது

பேப்பரைத் திறக்கவே பயமாயிருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு பேய்களின் வசம் விடப்பட்டுள்ளது

குழந்தைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்

பிறக்கும் வார்டிலேயே பாதுகாப்பு தேவைப்படுகிறது

கல்வித்தந்தையர்கள் அட்டகாசம்

வாழ்நாள் முழுக்க உழைத்ததும் சேர்த்ததும்

வாரிசுகள் படிப்பிற்கே வாய்க்கரிசியாகிறது

ராகிங்க், சீண்டல், மார்க் குறைவு, மனத்தளர்வு,

மேலோங்கும் தற்கொலை எண்ணம்,

பிளேஸ்மெண்ட் பித்தலாட்டங்கள் எல்லாம் போக

வேண்டாத சகவாசம், போதை, ப்ளூ ஃபிலிம்,

சிகரெட், பார்ட்டி, பார்லர், பஃப்களிடம்   தப்பிப் பிழைக்க

பக்குவம் தேவைப்படுகிறது இரண்டு தலைமுறைகளுக்கும்.

2

மின்சாரம் போதாமை சுகாதாரம் இல்லாமை

போக்குவரத்து புண்படுத்தல்

பேரணி பஸ்டேக்கு பயந்து பெரும்பாலும் முடங்கிவிடுதல்

பெட்ரோல் டீஸலுக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தி

ஏ(ற்)றிய விலைகளுக்குப் பணியவைக்கும் தந்திரங்கள்

ஆட்சிகளைக் கைப்பற்ற – பற்றியதைக் காப்பாற்ற

அரங்கேறும் அவலங்கள்

மக்கள் மன்றங்களில் மாறாத கூச்சல்கள்

பணவீக்கம் மழைக்குறைவு    மானியத்தில் கைவைத்தல்

எலி புழங்கும் ஆஸ்பிட்டல்கள் ஏறாத சம்பளங்கள்

குடும்பச்சண்டை, குறையாடை சினிமாக்கள்

தொலைக்காட்சி விகாரங்கள் ஐபிஎல் ஊழல்கள்….

இன்னும் இன்னும் எத்தனையோ தொல்லைகள்

இருந்தாலும் வாழ்க்கை எனக்கு

இன்னும் அலுக்காததற்கு

இலக்கியம் மட்டுமல்ல….

இலங்கையில் ஒரு தமிழனாகப் பிறக்காததும் கூட

வலுவானதொரு காரணமென்று என் மனசெனக்குச் சொல்கிறது.

**** **** **** ****         Email Id : sriduraiwriter@gmail.com

“ ஸ்ரீ: “

எஸ். ஸ்ரீதுரை                                                                                                2, கொசத்தெரு, (9486139685)                                                                                                           சலவன்பேட்டை,                                                                                                                                வேலூர் – 632001.

கவிதாயினியின் காத்திருப்பு

                             மழைக்கால நாளொன்றின் இரவு நேரம் –

கண்ணாடி ஜன்னலின் வெளியே

அவ்வப்போது தீக்குச்சி கிழிக்கும்

மின்னல் வெட்டு ;

பணி முடித்துச் செல்லும் வேலையாட்களின்

சன்னமான பேச்சொலியாய்

இடியோசை ஒன்றிரண்டு ;

நின்றுவிட்ட பெருமழையின்

நினைவேந்தல் நிகழ்ச்சியென

சன்னமாய்த் தொடரும் தூறல் ;

வெண்டிலேட்டர் இடைவெளியில்

சில்வண்டுகள் ஒலிபரப்பும் புல்லாங்குழல் ;

வயதான வித்வானின் குரலைப் பிரதியெடுக்கும்

தவளைகளின் இசை ஒத்திகை ;

வந்துபோகும் மின்சாரம்

வழக்கம் போலவே ;

2

தொட்டிலில்

பிருஷ்டம் தூக்கிக் கவிழ்ந்துறங்கும்

மூன்றுவயது முதற்கவிதை ;

படுத்திருப்பவளின் புஜ அணைப்பில்

கதகதக்கும் இரண்டாம் சிருஷ்டி ;

மின்விசிறி தேவையில்லாக் குளிர்ச்சூழல் ;

மாறனின் அம்புக்கு

வேலையேயின்றிப்போகும் தனிச்சூழல் ….

எதையும் இப்போது

ரசிக்கும் மனநிலையில்லாமல்

தவிக்கிறாள் நமது கவிதாயினி –

‘குடிகாரன் வீடுவந்து சேர்ந்தால் போதும்….’

 

**** **** **** ****

 

 

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *