வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam)

(Salute Au Monde !)

[Salute to World]

வையகமே வந்தனம் உனக்கு !

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

வால்ட் விட்மன் ! நீ

வரவேற் பாய் என் கரம் குலுக்கி !

எத்தகை விந்தைகள் சருக்கிடும் !

எத்தகை

இனிய காட்சிகள் !

எழுந்திடும் ஒலி நயங்கள் !

அடுத்தடுத்து தொடுக்கப் பட்ட

சங்கிலிகள்

அந்தம் இல்லா தவை !

ஒவ்வொன்றும் பதில் சொல்லும்

ஒவ்வொன்றும் பூமியைப்

பகிர்ந்து கொள்ளும்

எல்லா வற்றோடும்.

 

வால்ட் விட்மன் ! நீ

உனக்குள்ளே விரிவ தென்ன ?

எந்த அலைகள், கரைமண்

வெளியேறும் ?

இருப்ப தெந்த நபர் அங்கே ?

எந்த நாடு, எந்த நகரம்

உள்ளது அங்கே ?

யார் அந்தக் குழந்தைகள் ?

விளையாடும் சில !

தூங்கிடும் சில !

பெண்டிர் யார் ?

திருமணம்

செய்த மாதர் யார் ? 

 

ஒருவர் கழுத்தை ஒருவர்

நெறிக்க

மெதுவாய்க் கரத்தை நீட்டும்

பழைமைக் குழு மனிதர் யார் ?

என்ன மாதிரி நதிகள்

இவை ?

எந்தவிதக் கானகங்கள்

இவை ?

எப்படிப் பட்டவை

இந்தக் கனிகள் யாவும் ?

பனி மூட்டத்தில்

ஓங்கி உயர்ந் துள்ள

இந்த மலைகளை

என்ன வென்று அழைப்பது ?

குடிவாசிகள் நிரம்பிய

பல்வேறு மாதிரிக் குடில்கள்

எப்படி யானவை ?

  

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 23, 2014

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *