வால்ட் விட்மன் வசனக் கவிதை – 87

This entry is part 6 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam)

(Salute Au Monde)

[Salute to World]

வையகமே வந்தனம் உனக்கு [3]

அடிமை இனத்தின் அணிவகுப்பு

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

வால்ட் விட்மன் ! சொல்

உன் காதில் விழுவ தென்ன ?

உழைப்பாளி பாடிக் கொண்டி ருப்பது

கேட்கிற தெனக்கு !

விவசாய மாது பாடுவதும்

கேட்கிறது.

தூரத்தில் பிள்ளைகள் விளையாடும்

கூச்சல் கேட்கும் !

பொழுது புலரும் போது

பூனை, நாய்கள் சத்தம் கேட்கும்.


ஆஸ்தி ரேலியர்

காட்டுக் குதிரை துரத்தும் பெருஞ்சத்தம்

கேட்கும் !

ஸ்பானியர் இசைக் கருவியுடன்

மர நிழலில்,

ஆடும் ஆட்டம் கேட்கும்.

தேம்ஸ் நதியில் தொடர்ந் தெழும்

எதிரொலிகள் கேட்டேன் !

பிரெஞ்சுக் காரர்

புரட்சிப் பாடல்களைக்

கேட்டேன்.

இத்தாலியர்

படகுத் துடுப்புடன் பழம்பாடல்

பாடுவதைக் கேட்டேன் !

சிரியா வில் தானியம் அடித்து

மரவகை நெற்றை

மழைச் சாரலில்

பிரிப்பதைக் கேட்டேன்.

மதிக்கத் தகுந்த

அகண்ட

நைல் நதி மாதா மார்பில்

வீழ்ந்து தவழும்

எகிப்தின் மொழியைக்

கேட்டேன்,


சூரிய அத்தமிப்பு வேளையில்.

மெக்சிகன் ஓட்டுநர்

கோவேறு கழுதை நடத்திச் செல்லும்

மணியோசை கேட்டேன்.

மசூதியில் அரேபியர்

வணங்கும், தொடர்

இசையொலி கேட்டேன்.

கிறித்துவப் பாதிரியர்

ஆலயப் பீடத்தின் முன்பு

ஆராதனை

புரியக் கேட்டேன்.

யூதர்கள் துதிப்பா முணுக்கக்

கேட்டேன்.

கிரேக்கர், ரோமர்

தாள ஒருமையுடன்

புனைவுகள் பாடக் கேட்டேன்.


எழில் இறைவனாம்,

ஏசுக் கிறிஸ்து

இரத்த வேதனையில்

மரணமுற்ற தெய்வீகக் கதையைக்

கேட்டேன்.

பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னர்

ஞானியர் எழுதி

இன்று வரை பரவி,

இந்துக் குரு தன் சீடருக்குப்

போரும், பாசமும் [கீதை] பற்றிப்

போதிக்கக் கேட்டேன் !

அமெரிக்காவில்

இரண்டு மூன்றாக நிறுத்தி

வரிசையாய்

கைச் சங்கிலி, கால் சங்கிலியில்

பிணைத்த

அடிமை இனத்தார்

அணி வகுத்துச் செல்லும்

இருமல் மூச்சு

அரவத்தைக் கேட்டேன் !

 

+++++++++++++++++++++++

 

 

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 7, 2014

Series Navigationதினம் என் பயணங்கள் -28 பாராட்டு விழாவெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *