சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1

author
1 minute, 46 seconds Read
This entry is part 2 of 27 in the series 21 செப்டம்பர் 2014

 

என். செல்வராஜ்

 

இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன. அவை 15000 க்கு மேலும் இருக்கலாம். அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். அவை எத்தனை என்பதை நாம் அறிய இதுவரை வெளிவந்துள்ள பல்வேறு எழுத்தாளர்களின் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பட்டியல் இடுவது என்பது க நா சுப்ரமணியம் காலத்தில் இருந்தே இருக்கிறது. எல்லா எழுத்தாளர்களும் பட்டியலாகத் தரவில்லை. க.நா.சுப்ரமணியம், கோவை ஞானி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சி.மோகன், அசோகமித்திரன், விக்கிரமாதித்யன் வண்ணநிலவன் ஆகியோர் பட்டியலாகத் தந்துள்ளனர். கட்டுரைகளில் சுந்தரராமசாமி, நாஞ்சில் நாடன், வெங்கட் சாமினாதன், ந முருகேச பாண்டியன், சு.வேணுகோபால், பெ.தேவி, க.பூரணசந்திரன், இராம குருநாதன்

ஆகியோர் சிறந்த நாவல்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

 

வலைப்பூக்களில்ஆர்.வி, பா.ராகவன், சரவணகார்த்திகேயன், பாலகுமாரன், இரா.முருகன், பாவண்ணன், அய்யனார் விஷ்வனாத், எம்.வேதசகாயகுமார் , சுந்தர், கொழந்த, வெங்கட் ரமணன், விஜயமகேந்திரன், ம.மணிமாறன் ஆகியோர் பட்டியலாகத் தந்துள்ளனர்.

 

முதலில் சில முக்கிய பதிவுகளைப் பார்க்கலாம்.

 

நூறு சிறந்த நாவல்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் ( எஸ்ராமகிருஷ்ணன்.காம்)

 

1.பிரதாப முதலியார் சரித்திரம் 2. கமலாம்பாள் சரித்திரம் 3. கிளாரிந்தா 4. நாகம்மாள் 5. தில்லான மோகனாம்பாள் 6.பொன்னியின் செல்வன் 7. வீரபாண்டியன் மனைவி 8.சயாம் மரண ரயில் 9. லங்காட் நதிக்கரை 10. தீ 11. பஞ்சமர் 12. பொய்த்தேவு 13. வாடிவாசல் 14.அபிதா 15.நித்ய கன்னி 16.பசித்த மானுடம் 17.அம்மா வந்தாள் 18 மோகமுள் 19.மரப்பசு 20.வாசவேஸ்வரம் 21. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 22. சில நேரங்களில் சில மனிதர்கள் 23. பாரீசுக்கு போ 24. புயலிலே ஒரு தோணி 25. கடலுக்கு அப்பால் 26. நினைவுப்பாதை 27. நாய்கள் 28. ஒரு புளிய மரத்தின் கதை 29. ஜே.ஜே. சில குறிப்புகள் 30. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 31. கோபல்ல கிராமம் 32. சாயாவனம் 33.தொலைந்து போனவர்கள் 34. நாளை மற்றுமொரு நாளே 35.குருதிப்புனல் 36. கருக்கு 37. கரிப்பு மணிகள் 38. வாடாமல்லி 39. கல் மரம் 40. போக்கிடம் 41. புத்தம் வீடு 42. கரைந்த நிழல்கள் 43.பதினெட்டாவது அட்சக்கோடு 44. ஒற்றன் 45. இடைவெளி 46.பள்ளி கொண்டபுரம் 47. தலைமுறைகள் 48. கிருஷ்ணபருந்து 49.அசடு 50. வெக்கை 51. பிறகு 52. தலைகீழ் விகிதங்கள் 53. எட்டு திக்கும் மத யானை 54. ஒரு கடலோர கிராமத்தின் கதை 55. மானுடம் வெல்லும் 56.சந்தியா57காகித மலர்கள் 58. என் பெயர் ராமசேஷன் 59. ரத்தம் ஒரே நிறம் 60. உடையார் 61. கரிசல் 62.கம்பா நதி

  1. கடல் புரத்தில் 64. பழையன கழிதலும் 65. மௌனப்புயல் 66. ஈரம் கசிந்த நிலம் 67. பாய்மரக்கப்பல் 68. பாழி 69.ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 70. வார்ஸாவில்ஒரு கடவுள் 71.கோவேறு கழுதைகள் 72. செடல்

73.உள்ளிருந்து சில குரல்கள் 75. கரமுண்டார் வீடு   76. விஷ்ணுபுரம் 77. காடு 78. கொற்றவை 79. உப பாண்டவம் 80.நெடுங்குருதி 81. யாமம் 82.கூகை 83. புலிநகக்கொன்றை 84. ஸீரோ டிகிரி 85. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் 86. சொல் என்றொரு சொல் 87. சிலுவை ராஜ் சரித்திரம் 88.தகப்பன் கொடி 89. கொரில்லா 90. நிழல் முற்றம் 91. கூளமாதாரி 92. சாயத்திரை 93. ரத்த உறவு 94. கனவுச் சிறை   95. அளம்   96. அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் 97. அரசூர் வம்சம் 98. அஞ்சலை 99. குள்ளச்சித்தன் சரித்திரம் 100. ஆழி சூழ் உலகு

 

 

தமிழ் நாவல்கள் : விமரிசகனின் சிபாரிசு- ஜெயமோகன் ( நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் )

 

1.பிரதாப முதலியார் சரித்திரம் 2. கமலாம்பாள் சரித்திரம் 3. பத்மாவதி சரித்திரம் 4. நாகம்மாள் 5.சட்டி சுட்டது 6. இதய நாதம் 7. கேட்ட வரம் 8. இருபது வருடங்கள் 9. பகல் கனவு 10. பொய்த்தேவு 11.ஒரு நாள் 12. வாழ்ந்தவர் கெட்டால் 13. வாடிவாசல் 14. ஜீவனாம்சம் 15. அபிதா 16. புத்ர 17. வேள்வித்தீ 18. நித்ய கன்னி 19. காதுகள் 20. பசித்த மானுடம் 21. பஞ்சும் பசியும் 22. மோகமுள் 23.அம்மா வந்தாள் 24. மலர் மஞ்சம் 25. செம்பருத்தி 26. அன்பே ஆரமுதே 27. மரப்பசு 28. மண்ணாசை 29.வாசவேஸ்வரம் 30. தர்மஷேத்ரே 31. புகை நடுவில் 32.நேற்றிருந்தோம் 33.ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன 34. தந்திர பூமி 35. சுதந்திர பூமி 36. குருதிப் புனல் 37. வேதபுரத்து வியாபாரிகள் 38. கிருஷ்ணா கிருஷ்ணா 39. குறிஞ்சித்தேன் 40. வளைக்கரம் 41. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 42. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 43. பாரீசுக்குப் போ 44. சில நேரங்களில் சில மனிதர்கள் 45. சுந்தர காண்டம் 46.கங்கை எங்கே போகிறாள் 47. தாகம் 48. சங்கம் 49. தேனீர் 50. மலரும் சருகும் 51. புயலிலே ஒரு தோணி

  1. கடலுக்கு அப்பால் 53. நினைவுப்பாதை 54. நாய்கள் 55. வாக்குமூலம் 56. நவீனன் டைரி 57. ஒரு புளிய மரத்தின் கதை 58. ஜே ஜே சில குறிப்புகள் 59. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 60. கோபல்ல கிராமம் 61. கோபல்லபுரத்து

மக்கள் 62. சாயாவனம் 63. சூரியவம்சம் 64. தொலைந்து போனவர்கள் 65. அவன் ஆனது 66. நாளை மற்றுமொரு நாளே 67. குறத்தி முடுக்கு 68. புத்தம் வீடு 69. பதினெட்டாவது அட்சக்கோடு   70. தண்ணீர்      71. கரைந்த நிழல்கள்

  1. மானசரோவர் 73. தலைமுறைகள் 74. பள்ளி கொண்டபுரம் 75. உறவுகள் 76. கரிசல் 77. புதிய தரிசனங்கள் 78. கிருஷ்ணப்பருந்து 79. புனலும் மணலும் 80. சோற்றுப்பட்டாளம் 81. வாடாமல்லி 82. போக்கிடம் 83. நதிமூலம் 84. இடைவெளி 85. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 86. கம்பாநதி 87. ரெயினீஸ் அய்யர் தெரு
  2. கடல்புரத்தில் 89. பிறகு 90. வெக்கை 91. தலைகீழ் விகிதங்கள் 92. என்பிலதனை வெயில்காயும் 93. மாமிசப்படைப்பு 94.எட்டுத்திக்கும் மதயானை 95. மிதவை 96. ஒரு கடலோர கிராமத்தின் கதை 97. கூனன் தோப்பு 98. துறைமுகம் 99.சாய்வு நாற்காலி 100. மானுடம் வெல்லும் 101. மகாநதி 102. காகித மலர்கள் 103. என் பெயர் ராமசேஷன் 104. கருக்கு 105. சங்கதி 106. பழையன கழிதலும் 107.ஆனந்தாயி 108. கனவுச் சிறை 109. மௌனப்புயல் 110. நிற்கநிழல் வேண்டும் 111. ஈரம் கசிந்த நிலம் 112. மானாவாரி மனிதர்கள் 113. நல்ல நிலம் 114. உப்பு வயல் 115.பாய்மரக் கப்பல் 116. மற்றும் சிலர் 117. சாயத்திரை 118. தூர்வை 119. கூகை 120. சிலுவைராஜ் சரித்திரம் 121. காலச்சுமை 122. கோவேறு கழுதைகள் 123. ஆறுமுகம் 124. செடல் 125. கள்ளம் 126. கரமுண்டார் வீடு 127. பாழி 128. பிதிரா 129. விஷ்ணுபுரம் 130. காடு 131. ஏழாம் உலகம் 132. கன்யாகுமரி 133. கொற்றவை 134. உப பாண்டவம் 135. நெடுங்குருதி 136. உறுபசி 137. எக்சிஸ்டென்ஷலியசமும் ஃபேன்சி பனியனும் 138. ஸீரோ டிகிரி 139. புதைக்கப்பட்ட மனிதர்களும் எரிக்கப்பட்ட பிரதிகளும் 140. சொல் என்றொரு சொல் 141. குள்ளச்சித்தன் சரித்திரம் 142. பகடையாட்டம் 143. நிழல் முற்றம் 144. கூளமாதாரி 145. நுண்வெளிக் கிரணங்கள் 146. கொரில்லா 147. ம் 148. ஆழிசூழ் உலகு 149. அம்மன் நெசவு 150. மணல் கடிகை 151. அஞ்சலை 152.கோரை 153. நிலாக்கள் தூரதூரமாக

 

வரலாற்றுக் கதைகள்

 

  1. பொன்னியின் செல்வன் 2.சிவகாமியின் சபதம் 3. மன்னன் மகள் 4. யவன ராணி 5. கடல்புறா 6. ஜலதீபம் 7. கன்னி மாடம் 8. ராஜமுத்திரை 9. வீரபாண்டியன் மனைவி 10. ஆலவாய் அழகன் 11. பத்தினிக் கோட்டம் 12.திருச்சிற்றம்பலம் 13. திருவரங்கன் உலா 14. மோகவள்ளி தூது 15. வேங்கையின் மைந்தன் 16. வெற்றித் திருநகர் 17. கயல்விழி 18. மணிபல்லவம் 19.ராணி மங்கம்மாள் 20. ரத்தம் ஒரே நிறம் 21. கோபுர கலசம் 22. ரோமாபுரிப் பாண்டியன் 23.பொன்னர் சங்கர் 24. தென்பாண்டிச் சிங்கம் 25. நந்திபுரத்துநாயகி 26. உடையார்.

பொதுவான கதைகள்

 

1.தியாகபூமி 2. அலைஓசை 3. மிஸ்டர் வேதாந்தம் 4. தில்லானா மோகனாம்பாள் 5. உயிரோவியம் 6.முள்ளும் மலரும் 7. கல்லுக்குள் ஈரம் 8. அணையா விளக்கு 9. கள்ளோ காவியமோ 10.கரித்துண்டு 11.நெஞ்சில் ஒரு முள் 12.ரங்கோன் ராதா 13. அரக்கு மாளிகை 14. காஞ்சனையின் கனவு   15. ஒரு காவிரியைப் போல 16. நாயக்கர் மக்கள் 17. சின்னம்ம 18. மலர்கின்ற பருவத்தில் 19. பிறந்த நாள் 20. கூந்தலிலே ஒரு மலர் 21. ஜி எச் 22.படகு வீடு 23.புரபசர் மித்ரா 24. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 25.குறிஞ்சி மலர் 26. பொன்விலங்கு 27. சமுதாய வீதி

28.பாவை விளக்கு 29. சித்திரப்பாவை 30. பெண் 31. எங்கே போகிறோம் 32. நெஞ்சின் அலைகள் 33. தரையில் இறங்கும் விமானங்கள் 34. பாலங்கள் 35. ஒரு மனிதனின் கதை 36. வாஷிங்டனில் திருமணம் 37.ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் 38. கரையெல்லாம் செண்பகப்பூ 39. அனிதா இளம் மனைவி 40.நைலான் கயிறு 41. பதவிக்காக 42. மெர்க்குரிப்பூக்கள் 43.கரையோர முதலைகள் 44. பந்தயப்புறா

  1. அது ஒரு நிலாக்காலம் 46. கள்ளிக்காட்டு இதிகாசம் 47. கருவாச்சி காவியம்

 

ஜெயமோகனின் பதிவு விரிவான ஒன்றாகக் காணப்படுகிறது. இது போன்ற ஒரு பதிவை நாஞ்சில் நாடன் அவரது பனுவல் போற்றுதும் கட்டுரை நூலில் தந்திருக்கிறார். அவரது கட்டுரையிலிருந்து நாவல்களின் பட்டியல் இதோ.

 

நாஞ்சில் நாடன்   ( ஐம்பதாண்டுத் தமிழ் நாவல் – பனுவல் போற்றுதும்)

 

1.பொய்த்தேவு 2. நாகம்மாள் 3. சட்டி சுட்டது 4. குறிஞ்சித் தேன் 5. சில நேரங்களில் சில மனிதர்கள் 6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 7. கல்லுக்குள் ஈரம் 8. ரத்த உறவு 9.அஞ்சலை 10. நெடுஞ்சாலை 11.கருக்கு 12.சங்கதி 13. மோகமுள் 14. அம்மா வந்தாள் 15. மலர் மஞ்சம் 16. அன்பே ஆரமுதே 17. உயிர்த்தேன் 18.செம்பருத்தி 19. நளபாகம் 20. மரப்பசு 21. வேள்வித்தீ 22.அரும்புகள் 23. நித்யகன்னி 24. பசித்த மானுடம் 25. கடலுக்கு அப்பால் 26.வாசவேஸ்வரம் 27.நாளை மற்றுமொரு நாளே 28. குறத்தி முடுக்கு 29. இடைவெளி 30. தண்ணீர் 31. பதினெட்டாவது அட்சக்கோடு 32. மானசரோவர் 33. புயலிலே ஒரு தோணி 34. குருதிப்புனல் 35. சுதந்திர பூமி 36. தந்திர பூமி 37. காகித மலர்கள் 38. என் பெயர் ராமசேஷன் 39. தலைமுறைகள்

40.பள்ளிகொண்டபுரம் 41. கிருஷ்ணபருந்து 42. புணலும் மணலும் 43. அசடு 44. நினைவுப்பாதை 45. நாய்கள் 46. நவீனனின் டைரி 47. வாக்குமூலம் 48. புத்தம்வீடு 49. புதிய தரிசனங்கள் 50. மறுபக்கம் 51. ஒரு கடலோர கிராமத்தின் கதை

52.சாய்வு நாற்காலி 53 கூனன் தோப்பு 54. ஒரு புளியமரத்தின் கதை 55. ஜே ஜே சில குறிப்புகள் 56. குழந்தைகள் பெண்கள்   ஆண்கள் 57. தலைகீழ் விகிதங்கள் 58.என்பிலதனை வெயில் காயும் 59. எட்டுத் திக்கும் மதயானை 60. மாமிசப்படைப்பு

  1. மிதவை 62. சதுரங்க குதிரை 63. விஷ்ணுபுரம் 64. ரப்பர் 65. கடல் புரத்தில் 66. ரெயினீஷ் அய்யர் தெரு 67.கம்பாநதி 68. உப்பு வயல் 69. புலிநகக்கொன்றை. 70. ஆழி சூழ் உலகு 71. கொற்கை 72.பிறகு 73. வெக்கை 74. கோபல்ல கிராமம்
  2. கோபல்ல புரத்து மக்கள் 76. குற்றப்பரம்பரை 77. காவல் கோட்டம் 78. வெட்டுப்புலி 79. உபபாண்டவம் 80. நெடுங்குருதி 81. உறுபசி 82. யாமம் 83. மலரும் சருகும் 84.தேனீர் 85. தாகம் 86. சர்க்கரை 87. வானம் வசப்படும்
  3. மானுடம் வெல்லும் 89. மகாநதி 90. சொல் என்றொரு சொல் 91. அலெக்ஸாண்ல்டரும் ஒரு கோப்பை தேநீரும் 92. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் 93. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 94. எக்சிஸ்டன்ஷியலிசமும்

ஃபேன்சி பனியனும் . 95. ஸீரோ டிகிரி 96. ராஸலீலா 97. ஆறுமுகம் 98. செடல் 99. வெள்ளாவி 100. சிலுவைராஜ் சரித்திரம் 101. குள்ளசித்தன் சரித்திரம் 102. பகடையாட்டம் 103. கன்னி 104. நுண்வெளி கிரணங்கள் 105. சோளகர் தொட்டி

  1. ஏறுவெயில் 107. நிழல் முற்றம் 108. கூளமாதாரி 109. சாயத்திரை 110. மணல்கடிகை 111. அம்மன் நெசவு 112. இரண்டாம் ஜாமங்களின் கதை.113. கல்மரம் 114. கள்ளி 115. கூப்பிடுவது எமனாக இருக்கலாம் 116.காக்டெயில் 117. ஆஸ்பத்திரி 118. கள்ளம் 119. கரமுண்டார் வீடு 120. கற்றாழை 121.அளம் 122. கீதாரி 123. மீன்காரத் தெரு 124. கருத்த லெப்பை 125. துருக்கித் தொப்பி 126.பஞ்சமர் 127. கனவுச்சிறை 128. கொரில்லா 129. ம் 130. தீ 131. சடங்கு 132. மாயினி 133. ஈரம் கசிந்த நிலம் 134. பாய்மரக்கப்பல் 135. போக்கிடம் 136. நதிமூலம் 137. சோற்றுப் பட்டாளம் 138. வாடாமல்லி 139. யாரும் யாருடனும்இல்லை 140. நல்ல நிலம் 141. ஆத்துக்குப் போகணும் 142.கிடங்குத்தெரு 143. இதயநாதம் 144. கேட்ட வரம் 145. இருபது வருடங்கள் 146. பகல் கனவு 147. வாடிவாசல் 148. ஜீவனாம்சம் 149. சுதந்திர தாகம் 150.பஞ்சும் பசியும் 151. இடைவெளி 152. பின் தொடரும் நிழலின் குரல்
  2. காடு 154. ஏழாம் உலகம் 155. கொற்றவை. 156.அஞ்சுவண்ணம் தெரு

 

 

கோவை ஞானி— 47 க்குப் பின் தமிழ் நாவல்கள் படைப்பும் பார்வையும் ( நாவல் கட்டுரை தொகுப்பு)

 

கோவை ஞானி ஒரு விமர்சகர் . அவரது பார்வையில் முக்கிய நாவல்களின் பட்டியலை தந்துள்ளார்.அவை

 

  1. பொய்த்தேவு 2. சிவகாமியின் சபதம் 3. சுதந்திர தாகம் 4. பாவை விளக்கு 5. குறிஞ்சி மலர் 6. நெஞ்சில் ஒரு முள் 7. குற்றாலக் குறிஞ்சி 8. மோகமுள் 9. காதுகள் 10. பசித்த மானுடம் 11. ஜே ஜே சில குறிப்புகள் 12. பாலும் பாவையும் 13. ஒரு மனிதன் ஒரு வீடுஒரு உலகம் 14. வானம் வசப்படும் 15. பஞ்சும் பசியும் 16. தேநீர் 17. சங்கம் 18. புதிய தரிசனங்கள் 19. மண்ணகத்து பூந்தளிர் 20. வாடாமல்லி 21. ஏசுவின் தோழர்கள் 22. ஒற்றன் 23. தொலைந்து போன்வர்கள் 24. கடல்புரத்தில் 25.இடைவெளி 26. கனவுத் தொழிற்சாலை 27. இரும்புக்குதிரைகள் 28. சொப்பன பூமியில் 29. ஞானக்கிருக்கன் 30. பறளியற்று மாந்தர்கள் 31.ஆத்துக்கு போகணும் 32. சாய்வு நாற்காலி 33. நாலாவான் 34. பாலங்கள் 35. மணிக்கொடி 36. சதுரங்க குதிரைகள் 37. மஞ்சுவெளி 38. சாரா 39. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 40. மற்றும் சிலர் 41. மானாவாரி மனிதர்கள் 42. ஆற்றங்கரையோரம் 43.கள்ளம் 44. கருக்கு 45. ஸீரோ டிகிரி 46. பஞ்சமர் 47. சடங்கு 48. விஷ்ணுபுரம் 49. கோவேறு கழுதைகள் 50.தூர்வை 51. நுண்வெளி கிரணங்கள் 52. தலைமுறைகள் 53. கிருஷ்ண பருந்து 54. அந்தி 55. ஒன்பது ரூபாய் நோட்டு 56.கோபல்லபுரத்து மக்கள் 57.கவலை 58. நாளை மற்றுமொரு நாளே 59.தென்பாண்டிச் சிங்கம் 60. நல்ல நிலம் 61. கல்லுக்குள் ஈரம் 62. புத்தம் வீடு 63. வேர்களைத் தேடி 64. அபிதா 65.நேற்றிருந்தோம் 66. தொட்டிக்கட்டு வீடு 67. மெல்ல கனவாய் 68. வாக்குமூலம் 69. மானுட சங்கமம் 69.புயலிலே ஒரு தோணி 70. நதிமூலம் 71. ஏறுவெயில் 72. ஆனந்தாயி 73. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 74. காகித மலர்கள் 75. நைவேத்யம் 76. மிதவை 77.நாகம்மாள்

 

 

சி மோகன்     ( சி மோகன் கட்டுரைகள் )

 

சி மோகன் படைப்பாளியாகவும் விமர்சகராகவும் இருக்கிறார். அவர் 1987ல் புதுயுகம் பிறக்கிறது என்ற இதழில் எழுதிய கட்டுரையில் நாவல்களை பட்டியலிட்டு இருக்கிறார். அந்த பட்டியல் இதோ

 

சிறந்த நாவல்கள்

 

  1. மோகமுள் 2. ஜே ஜே சில குறிப்புகள் 3. புயலிலே ஒரு தோணி

 

நல்ல நாவல்கள்

 

  1. பொய்த்தேவு 2. இடைவெளி 3. ஒரு புளிய மரத்தின் கதை 4. அம்மா வந்தாள் 5. நாகம்மாள் 6. கிருஷ்ணப் பருந்து 7. நினைவுப்பாதை 8. தண்ணீர் 9. பள்ளிகொண்டபுரம் 10. கடல் புரத்தில்

 

குறிப்பிடத்தக்க நாவல்கள்

 

1.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 2. இதயநாதம் 3. தலைமுறைகள் 4.செம்பருத்தி 5. புதியதோர் உலகம் 6.வேள்வித்தீ 7. நித்ய கன்னி 8. அசடு 9. புத்தம் வீடு 10. ஒரு நாள் 11. சட்டி சுட்டது 12. நாளை மற்றுமொரு நாளே 13. அபிதா 14. கரைந்த நிழல்கள் 15. வாடிவாசல் 16. சாயாவனம் 17. கம்பா நதி 18. பிறகு 19. நிழல்கள் 20. தலைகீழ் விகிதங்கள் 21. பசித்த மானுடம் 22. ஜீவனாம்சம் 23. புனலும் மணலும் 24. சடங்கு 25. கடலுக்கு அப்பால்

  1. தாகம்

 

ந முருகேச பாண்டியன் – அறுபது எழுபதுகளில் தமிழ் நாவல்கள் என்ற கட்டுரையில் (புதிய தமிழ் இலக்கிய வரலாறு)

 

முக்கிய நாவல்களாக 35 நாவல்களைக் குறிப்பிடுகிறார். இவர் ஒரு விமர்சகர்.

 

  1. தலைமுறைகள் 2. பள்ளி கொண்டபுரம் 3. பாரீசுக்குப் போ 4. சில நேரங்களில் சில மனிதர்கள் 5. புத்தம் வீடு 6. சாயாவனம் 7. ஒரு புளியமரத்தின் கதை 8. கடலுக்கு அப்பால் 9. மலரும் சருகும் 10. வேரும் விழுதும் 11. மோகமுள் 12. செவ்வானம் 13. அபிதா 14. புயலிலே ஒரு தோணி 15. நாளை மற்றுமொரு நாளே 16. நினைவுப்பாதை
  2. நாய்கள் 18. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 19. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 20. பதினெட்டாவது அட்சக்கோடு 21.காகித மலர்கள் 22. தந்திர பூமி 23. தாகம் 24. கடல்புரத்தில் 25. கோபல்ல கிராமம் 26. நேற்றிருந்தோம் 27. புணலும் மணலும் 28. கீறல்கள் 29. பிறகு 30. அசடு 31. பசித்த மானுடம் 32. குருதிப்புனல் 33.மரப்பசு 34.தலைகீழ் விகிதங்கள் 35.அலைவாய்க்கரையில்

 

கடந்த பத்தண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்குகள் (காலச்சுவடு, ஜனவரி 2010 இதழ்) என்ற கட்டுரையில் இவர் குறிப்பிடும் நாவல்கள்.

 

  1. யாமம் 2. நெடுங்குருதி 3. சொல் என்றொரு சொல் 4. யுரேகா என்றொரு நகரம் 5. சிலந்தி 6. 37   7. பகடையாட்டம் 8. குள்ள சித்தன் சரித்திரம் 9. கானல் நதி 10. வார்ஸாவில் ஒரு கடவுள் 11. ராஸ லீலா 12. நிலாவை வரைபவன்
  2. சூரனைத் தேடும் ஊர் 14. பாழி 15. பிதிரா 16. தாண்டவராயன் கதை 17. காக்டெயில் 18. ஆஸ்பத்திரி 19. ஜி சௌந்திரராஜன் கதை 20. ரத்த உறவு 21. ஆழி சூழ் உலகு 22. மணல் கடிகை 23. சோளகர் தொட்டி 24. மீன்காரத்தெரு 25. கருத்த லெப்பை 26. கூளமாதாரி 27. கங்கணம் 28. ஏழாம் உலகம் 29. காடு 30. கள்ளி 31. கல்மரம் 32. ஓடும் நதி 33. உறுபசி 34. நீலக்கடல் 35.ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் 36. செடல் 37. வாங்கல் 38. அஞ்சலை 39. கூகை 40 மரம் 41. அளம் 42. மாணிக்கம் 43. கீதாரி 44.கற்றாழை 45. ஆறுகாட்டுத்துறை 46. கண்ணகி 47. இரண்டாம் ஜாமங்களின்கதை 48. யாரும் யாருடனும் இல்லை 49. ம் 50. கொரில்லா 51. கனவுச்சிறை 52. சிலுவைராஜ் சரித்திரம் 53. காலச்சுமை 54. நிலாக்கள் தூர தூரமாக.

 

. பூரணசந்திரன் – எழுபதுக்குப் பிறகு தமிழ் நாவல்கள் ( புதிய தமிழ் இலக்கிய வரலாறு)

 

1.தண்ணீர் 2. ஜே ஜே சில குறிப்புகள் 3. நாளை மற்றுமொரு நாளே 4. இடைவெளி 5. கோபல்லபுரத்து மக்கள் 6. சுந்தரகாண்டம் 7. குறிஞ்சித்தேன் 8. கூட்டுக்குஞ்சுகள் 9. அலைவாய்க்கரையில் 10. வேருக்கு நீர் 11.வளைக்கரம் 12. கரிப்பு மணிகள் 13. சேற்றில் மனிதர்கள் 14. என் பெயர் ராமசேஷன் 15. ஏசுவின் தோழர்கள் 16. விசாரனை கமிஷன் 17. அவன் ஆனது 18. சூரிய வம்சம் 19. தொலைந்து போனவர்கள் 20. மாமிசபடைப்பு 21.எட்டு திக்கும் மத யானை 22. சதுரங்க குதிரைகள் 23. கம்பா நதி 24.ரெயினீஷ் அய்யர் தெரு 25. வெக்கை 26.மற்றும் சிலர் 27. ஆண்களும் பெண்களும் 28.மகாநதி 29.சந்தியா 30. மானுடம் வெல்லும் 31. வானம் வசப்படும் 32. ஒரு கடலோர கிராமத்தின் கதை 33. துறைமுகம்

  1. கூனன் தோப்பு 35. சாய்வு நாற்காலி 36. ஈரம் கசிந்த நிலம் 37. ஜன கன மன 38 ஆகாச வீடுகள் 39. நிற்க நிழல் வேண்டும் 40. மௌனப்புயல் 41. வேர்களைத் தேடி 42. ரப்பர் 43. கவலை 44. கள்ளம் 45. கரமுண்டார் வீடு 46. நல்ல நிலம்
  2. ஒன்பது ரூபாய் நோட்டு 48. புலிநகக் கொன்றை 49. டேபிள் டென்னிஸ் 50. சிலுவைராஜ் சரித்திரம் 51. தாகம் 52. சங்கம் 53. சர்க்கரை 54. ஊருக்குள் ஒரு புரட்சி 55. வாடாமல்லி 56. சோற்றுப் பட்டாளம் 57. கரிசல் 58.புதிய தரிசனங்கள்
  3. தோழர் 60. மானாவாரி மனிதர்கள் 61. பழையன கழிதலும் 62. கருக்கு 63. சங்கதி 64.கோவேறு கழுதைகள் 65.ஆறுமுகம் 66. ஏறுவெயில் 67. தூர்வை 68. கூளமாதாரி 69. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் 70. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் 71.எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் 72.ஸீரோ டிகிரி 73. விஷ்ணுபுரம் 74. பின் தொடரும் நிழலின் குரல்

 

அசோகமித்திரன் டாப் 10 நாவல்களாக “காலக்கண்ணாடி” என்ற கட்டுரை நூலில் குறிப்பிடும் நாவல்கள்

 

  1. பிரதாப முதலியார் சரித்திரம் 2. கமலாம்பாள் சரித்திரம் 3. தியாகபூமி 4. மண்ணாசை 5. நாகம்மாள் 6. வாழ்ந்தவர் கெட்டால் 7. தில்லானா மோகனாம்பாள்

8-10 இடங்களுக்கு அவர் பரிந்துரைக்கும் நாவல்கள்

1.அசடு 2. அவன் ஆனது 3. உயிர்த்தேன் 4. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 5. ஒரு புளியமரத்தின் கதை 6. கரிக்கோடுகள் 7. காகித மலர்கள் 8. நினைவுப் பாதை 9. பள்ளிகொண்டபுரம் 10. கிருஷ்ணப் பருந்து 11. நதிமூலம் 12. சுதந்திர பூமி

 

அசோகமித்திரன் – படைப்பாளிகளின் உலகம் என்ற கட்டுரை நூலில் இந்திய விடுதலைக்குப் பின் வெளியான தமிழ் நாவல்களின் மைல் கற்கள் எனக் குறிப்பிடும் நாவல்கள்

 

  1. மோகமுள் 2. அசுரகணம் 3. அறுவடை 4. ஒரு புளிய மரத்தின் கதை 5. தலைமுறைகள் 6. கரைந்த நிழல்கள் 7. மலரும் சருகும் 8. அம்மா வந்தாள் 9. காகித மலர்கள் 10. தந்திரபூமி 11. கடல்புரத்தில்

 

 

சு வேணுகோபால்           ( உயிர்மை நூறாவது இதழ் )

 

  1. கொற்றவை 2. கன்னி 3. ஆழிசூழ் உலகு 4. மணல்கடிகை 5. அஞ்சலை 6. காவல்கோட்டம் 7. நெடுங்குருதி 8. கூகை 9. தகப்பன் கொடி 10. செடல் 11. கூளமாதாரி 12.ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் 13. அஞ்சுவண்ணம் தெரு

14.ஏழரை பங்காளி வகையறா 15. யாரும் யாருடனும் இல்லை 16. சோளகர் தொட்டி 17.இமயத் தியாகம் 18. மாயினி 19. கனவுச்சிறை 20. கொரில்லா 21. ம் 22. குற்றப் பரம்பரை 23. புலிநகக் கொன்றை 24. அரசூர் வம்சம் 25. ஸீரோ டிகிரி 26. கள்ளி 29. கரமுண்டார் வீடு 30. சொல் என்றொரு சொல் 31.பிதிரா 32. தாண்டவராயன் கதை

  1. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைதேநீரும் 34. குள்ளச்சித்தன்சரித்திரம் 35. வார்ஸாவில் ஒரு கடவுள் 36. மில் 37. மறுபக்கம் 38. தோல் 39. நிறங்களின் உலகம் 40. ஏழாம் உலகம் 41. சாயத்திரை 42. முறிமருந்து 43. சிலுவைராஜ் சரித்திரம் 44. நிலாக்கள் தூர தூரமாக 45. நாடு விட்டு நாடு 46. ரத்த உறவு

 

பாவண்ணன் டாப் 10 மற்றும் முக்கிய நாவல்கள் (வலைத்தளம் மற்றும் பேட்டிகள் )

 

டாப் 10

  1. பொய்த்தேவு 2. ஒரு புளிய மரத்தின் கதை 3. மோகமுள் 4. நித்யகன்னி 5. வாடிவாசல் 6. சாயாவனம் 7. பிறகு 8. ஜே ஜே சில குறிப்புகள் 9. கூனன் தோப்பு 10. சதுரங்க குதிரைகள் 11. விஷ்ணுபுரம்

 

முக்கிய நாவல்கள் (திண்ணை பேட்டி மற்றும் தீராநதி பேட்டி ஜனவரி 2013)

  1. தலைமுறைகள் 2. கோபல்லபுரம் 3. காடு 4. ஏழாம் உலகம் 5. நெடுங்குருதி 6. யாமம் 7. மாதொருபாகன் 8. மணல் கடிகை 9. கூகை 10. காவல்கோட்டம் 11. ஆழி சூழ் உலகு 12. யாரும் யாருடனும் இல்லை 13.நெடுஞ்சாலை 14. முறிமருந்து 15. சிலுவைராஜ் சரித்திரம்

 

மேலும் பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளை இந்த கட்டுரையில் சேர்க்க இயலவில்லை. அவற்றை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.   தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என்ற எனது முந்தைய கட்டுரையில் டாப் 10 இடத்தைப் பிடித்த 24 நாவல்களைப் பார்த்தோம். இந்த கட்டுரையில் அந்த 24 நாவல்களையும், புதிதாக இந்த பட்டியலில் இடம் பிடித்த கிருஷ்ணப்பருந்து நாவலையும் , வெக்கை நாவலையும் சேர்த்து     26     நாவல்களை   முதலில் வரிசைப்படுத்தலாம்.

 

கிருஷ்ண பருந்து நாவலை டாப் 10 க்கு பரிந்துரைத்தவர்கள்ஜெயமோகன்,

அசோகமித்திரன், சி.மோகன், கோபால் ராஜாராம்.

 

வெக்கை நாவலை டாப் 10க்கு பரிந்துரைத்தவர்கள்ஆர் வி, க நா சுப்ரமணியம் ,பூரி ,

எம்.சுந்தரமூர்த்தி

 

 

 நாவல் ——-       ஆசிரியர்–           பரிந்துரைகள்

 

 

           1.மோகமுள்-     தி.ஜானகிராமன் – ( டாப் 10 பரிந்துரைகள்-20, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

 

  1. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி– ( டாப் 10 பரிந்துரைகள்-15, பட்டியலுக்கான பரிந்துரைகள் -20 )

 

  1. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி- ( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

 

  1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்-( டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -16 )              

            

  1. கடல்புரத்தில் – வண்ணநிலவன்— ( டாப் 10 பரிந்துரைகள்-10, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )

 

  1. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்–( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19 )

 

           7 .கோபல்ல கிராமம்   – கி ராஜநாராயணன்—-( டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )

 

  1. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19 )  

 

  1. பொய்த்தேவு – க நா சுப்ரமணியம் –( டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )
  2. தலைமுறைகள் – நீலபத்மநாபன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )

 

  1. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -17 )

    

  1. பொன்னியின் செல்வன் – கல்கி- -( டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -11 )

 

  1. 18 வது அட்சக்கோடு – அசோகமித்திரன்–( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13 )

 

  1. சாயாவனம் – சா. கந்தசாமி–     ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

 

  1. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

 

  1. கோவேறு கழுதைகள் – இமையம்-   ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13 )

 

  1. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

 

  1. நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

 

  1. நினைவுப்பாதை – நகுலன்–         ( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

 

  1. கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்–( டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -8 )

 

  1. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்– ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -18 )

  

  1. ஆழி சூழ் உலகு – ஜோ.டி.குரூஸ் — ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -14 )

 

  1. வெக்கை -பூமணி       —— ( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )

 

  1. கிருஷ்ணப்பருந்து – ஆ.மாதவன் —( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -10 )  

    

  1. வானம் வசப்படும் – பிரபஞ்சன்–( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

 

  1. வாசவேஸ்வரம் –     கிருத்திகா–( டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )

 

 

இந்த 26 நாவல்களில் 24 நாவல்களைப் பற்றி எனது “தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை” என்ற    கட்டுரையில் விரிவாக   பார்த்துவிட்டதால் அடுத்த 11வது இடத்தைப் பிடிக்கும் நாவல்கள் எவை என்பதையும்   அவற்றின்   தர வரிசையையும் , பரிந்துரைத்த எழுத்தாளர்கள் பற்றியும் பார்க்கலாம். டாப் 10 பட்டியலில் 3   பரிந்துரைகளைப் பெற்று பட்டியலில் குறைந்தது 4 பரிந்துரைப் பெற்ற நாவல்கள் இதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

டாப் 10 பட்டியலில் 3 பரிந்துரைகளைப் பெற்று 11 வது இடத்தைப் பிடித்த நாவல்கள்

 

வாடிவாசல் , குருதிப்புனல், பிறகு, நெடுங்குருதி , சில நேரங்களில் சில மனிதர்கள், மானுடம் வெல்லும்    பின்தொடரும் நிழலின் குரல், சோளகர் தொட்டி , காவல் கோட்டம் , வேள்வித்தீ , சித்திரப்பாவை, அவன் ஆனது, உயிர்த்தேன், ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

 

 

இந்த 14 நாவல்களும் 11 வது இடத்தைப் பிடித்துள்ளன.அவற்றைப் பரிந்துரைத்தவர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

 

  1. வாடிவாசல்- சி சு செல்லப்பா

          

           டாப் 10 பரிந்துரைகள் – 3, சிம்புதேவன், பாலகுமாரன், பாவண்ணன்

           பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 14, இரா முருகன், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சி மோகன், க நா சுப்ரமணியம் , இரா குருநாதன் , ஆர் வி, வெங்கட் சாமினாதன் , நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி ,பா ராகவன், அய்யனார் விஸ்வனாத், சுந்தர், கொழந்த

 

  1. குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி

 

டாப் 10 பரிந்துரைகள் – 3, வெங்கட், பாலகுமாரன், ரமணி

 

     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 13, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், இரா முருகன், நாஞ்சில் நாடன், க நா சுப்ரமணியம் , சி சரவண கார்த்திகேயன், பா ராகவன், அய்யனார் விஸ்வனாத்,   வெங்கட ரமணன், ந முருகேச பாண்டியன், இரா குருநாதன் , ஆர் வி, ஜெ வீரனாதன்

 

  1. சில நேரங்களில் சில மனிதர்கள் –   ஜெயகாந்தன்

 

    டாப் 10 பரிந்துரைகள் – 3, வெங்கட், மய்யம்.காம், பாலகிருஷ்ண பாலாஜி

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 12,   பூரி, இரா முருகன், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் , க நா சுப்ரமணியம், சி சரவண கார்த்திகேயன், பெ.தேவி, வெங்கட ரமணன், ந முருகேச பாண்டியன், ஆர் வி, ஜெ வீரனாதன் ,         நாஞ்சில் நாடன்,

 

  1. பிறகு – பூமணி

 

டாப் 10 பரிந்துரைகள் :- 3, விக்ரமாதித்யன், வண்ணதாசன், பாவண்ணன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 12, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சி மோகன், பாலகுமாரன், நாஞ்சில் நாடன், வெங்கட் சாமினாதன், க நா சுப்ரமணியம் , வேதசகாயகுமார், பெ.தேவி, ந முருகேசபண்டியன், இரா குருநாதன் , ஆர் வி

 

  1. பின் தொடரும் நிழலின் குரல்- ஜெயமோகன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 3, ஆர் வி, ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 11,நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி,சி சரவண கார்த்திகேயன், பா ராகவன், அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார், வெங்கட ரமணன், க பூரணசந்திரன், அரங்கசாமி, அம்பை , பிரேம் ரமேஷ்

 

  1. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 3, ஜெயமோகன், கிரிஜா, கோபால் ராஜாராம்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 11, இரா முருகன்,எஸ் ராமகிருஷ்ணன், வெங்கட் சாமினாதன்,நாஞ்சில் நாடன், பா ராகவன், சுப்ரபாரதி மணியன், அய்யனார் விஸ்வனாத், க பூரணசந்திரன்,ஆர் வி,   பிரேம் ரமேஷ், ஜெ வீரனாதன்

 

  1. நெடுங்குருதி – எஸ் ராமகிருஷ்ணன்

 

   டாப் 10 பரிந்துரைகள் :- 3, நாஞ்சில் நாடன், கலாப்ரியா,சு வேணுகோபால்,

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 10, எஸ் ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, பா ராகவன், ஜெயமோகன், அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார்,

ந முருகேச பாண்டியன், சுந்தர், ஆர் வி, பாவண்ணன்

 

 

 

 

 

  1. சோளகர் தொட்டி – ச பாலமுருகன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 3, சின்னகுத்தூசி,கற்றது ராம், நாஞ்சில் நாடன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 7, சு வேணுகோபால், அய்யனார் விஸ்வனாத், ந முருகேச பாண்டியன், கொழந்த, விஜயமகேந்திரன், மா மணிமாறன், வேனில் கிருஷ்ணமூர்த்தி

 

  1. காவல் கோட்டம் – சு வெங்கடேசன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 3 , சு வேணுகோபால், நாஞ்சில் நாடன், தமிழ்மகன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-6, வேதசகாயகுமார், சுந்தர், விஜயமகேந்திரன், ஜெ வீரனாதன், ஜெயமோகன், பாவண்ணன்

 

 

  1. ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் – தமிழவன்

 

     டாப் 10 பரிந்துரைகள் :- 3 , கோபால் ராஜாராம், அசோகமித்ரன் , சுந்தரமூர்த்தி,

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-6, இரா முருகன், கோவை ஞானி, எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பிரேம் ரமேஷ்,

 

  1. உயிர்த்தேன் – தி ஜானகிராமன்

 

       டாப் 10 பரிந்துரைகள் :- 3, அசோகமித்திரன், கலாப்ரியா, ரமணி

 

      பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :-5, விக்ரமாதித்யன் , நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், பெ.தேவி, இரா குருநாதன்

 

  1. வேள்வித்தீ – எம் வி வெங்கட் ராம்

 

                 டாப் 10 பரிந்துரைகள் :- 3 , எஸ் ராமகிருஷ்ணன், பாலகுமாரன், கற்பக வினாயகம்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 5, ஜெயமோகன், சி மோகன், நாஞ்சில் நாடன், பெ.தேவி, சுந்தர்

 

 

  1. அவன் ஆனது – சா கந்தசாமி

 

டாப் 10 பரிந்துரைகள் :- 3, சா கந்தசாமி, அசோகமித்திரன், க நா சுப்ரமணியம்

 

           பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 4 , விக்ரமாதித்யன், பா ராகவன், க பூரணசந்திரன், ஜெயமோகன்

 

  1. சித்திரப் பாவை — அகிலன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 3, தி டாப் டென்ஸ்.காம் , காசி ஆனந்தன், ஃபோரம்ஹப்.காம்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் :- 3, ஜெயமோகன், இரா குருநாதன், ஜெ வீரனாதன்

 

 

அடுத்த 12வது இடத்தைப் பிடிக்கும் நாவல்கள் எவை என்பதையும் அவற்றின்   தர வரிசையையும் , பரிந்துரைத்த எழுத்தாளர்கள் பற்றியும் பார்க்கலாம். டாப் 10 பட்டியலில் 2   பரிந்துரைகளைப் பெற்ற நாவல்கள் இதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. பட்டியல்களில் பரிந்துரைகள் இதில் சேர்க்கப்பட்டு அவை தர     வரிசைப் படுத்தப்பட்டுள்ளது

 

டாப் 10 பட்டியலில் 2 பரிந்துரைகளைப் பெற்று பட்டியலில் குறைந்தது 5 பரிந்துரைகளைப் பெற்று 12 வது   இடத்தைப் பிடித்த நாவல்கள்– 22 . அவை

 

     எட்டு திக்கும் மத யானை , ஒரு கடலோர கிராமத்தின் கதை, கோபல்லபுரத்து மக்கள், பசித்த மானுடம், ரப்பர், என் பெயர் ராமசேஷன், ஏழாம் உலகம், தண்ணீர், கமலாம்பாள் சரித்திரம், அஞ்சலை, இடைவெளி, ரத்த உறவு, காகித மலர்கள், சாய்வு நாற்காலி, நித்யகன்னி, கூகை, கொற்றவை, குறிஞ்சி மலர் ,மணல்கடிகை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சிவகாமியின் சபதம், பிரதாப முதலியார் சரித்திரம்,

 

41.எட்டு திக்கும் மத யானை – நாஞ்சில் நாடன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, வெங்கட் சாமினாதன், பாலகிருஷ்ண பாலாஜி

   

       பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:12, எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், பா ராகவன், ஜெயமோகன் அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார்,க பூரணசந்திரன், இரா குருநாதன், ஆர் வி, அரங்கசாமி,

ஜெ வீரனாதன், வேனில் கிருஷ்ணமூர்த்தி

 

42.ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரான்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, கற்பகவினாயகம், சுந்தரமூர்த்தி

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:-12 ,ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், இரா முருகன், வெங்கட் சாமினாதன் , நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி,அய்யனார் விஸ்வனாத்,சுந்தர், க பூரணசந்திரன், ஆர் வி, அரங்கசாமி, அம்பை

 

  1. கோபல்லபுரத்து மக்கள்- கி. ராஜநாராயணன்

 

           டாப் 10 பரிந்துரைகள் :- 2, ரமணி, வெங்கட்

 

         பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:11, க பூரணசந்திரன்,அய்யனார் விஸ்வனாத்,பாவண்ணன், கோவை ஞானி,   ஜெயமோகன், வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், கொழந்த, ஆர் வி, அரங்கசாமி, பிரேம் ரமேஷ்

 

  1. பசித்த மானுடம்- கரிச்சான் குஞ்சு

 

             டாப் 10 பரிந்துரைகள் :- 2, எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன்

 

             பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10, ஜெயமோகன்,சி மோகன், கோவை ஞானி, நாஞ்சில் நாடன், பா ராகவன், விக்ரமாதித்யன், அய்யனார் விஸ்வனாத், சுந்தர், ந முருகேச பாண்டியன், ஆர் வி

 

  1. ரப்பர்- ஜெயமோகன்

 

           டாப் 10 பரிந்துரைகள் :- 2, சா கந்தசாமி, பாலகிருஷ்ண பாலாஜி

 

           பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10,ஜெயமோகன், இரா முருகன்,நாஞ்சில் நாடன்,சுந்தர ராமசாமி,பா ராகவன்,   சுப்ரபாரதி மணியன், க பூரணசந்திரன், வேதசகாயகுமார், ஆர் வி, அரங்கசாமி,

 

 

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர்

 

                டாப் 10 பரிந்துரைகள் :- 2, அசோகமித்திரன், கிரிஜா

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, இரா முருகன், ஜெயமோகன்,எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன், க நா சுப்ரமணியம், வேதசகாயகுமார், பெ.தேவி, ஆர் வி, ஜெ வீரனாதன்

 

  1. என் பெயர் ராமசேஷன்- ஆதவன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, ஆர் வி, செந்தில்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,ஜெயமோகன்,எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன்,

நாஞ்சில் நாடன், சரவண கார்த்திகேயன், அய்யனார் விஸ்வனாத்,வெங்கட

ரமணன், இரா குருநாதன், பிரேம் ரமேஷ்

 

  1. ஏழாம் உலகம்- ஜெயமோகன்

 

           டாப் 10 பரிந்துரைகள் :- 2, கலாப்ரியா, நாஞ்சில் நாடன்

 

           பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, சு வேணுகோபால், சரவண கார்த்திகேயன், ஜெயமோகன், அய்யனார் விஸ்வனாத், ந முருகேச பாண்டியன், வெங்கட ரமணன், ஆர் வி, பாவண்ணன், அரங்கசாமி,

 

49.இடைவெளி- சம்பத்

 

             டாப் 10 பரிந்துரைகள் :- 2, எஸ் ராமகிருஷ்ணன், சி மோகன்,

 

             பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, ஜெயமோகன், கோவை ஞானி, வெங்கட் சாமினாதன்,நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, அய்யனார் விஸ்வனாத்,

க பூரணசந்திரன், ஆர் வி

 

  1. காகித மலர்கள்- ஆதவன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, ரமணி, அசோகமித்திரன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, ஜெயமோகன், சுப்ரபாரதி மணியன், கோவை ஞானி,இரா முருகன்,நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஷ்ணன்,வண்ணநிலவன், ந முருகேச பாண்டியன்,

 

51.தண்ணீர் – அசோகமித்திரன்

 

               டாப் 10 பரிந்துரைகள் :- 2, சி மோகன், க நா சுப்ரமணியம்

 

               பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, விக்ரமாதித்யன், நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார், க பூரணசந்திரன், இரா குருநாதன், ஆர் வி, ஜெயமோகன்

 

52.ரத்த உறவு – யூமா வாசுகி

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, பெருமாள் முருகன், வண்ணதாசன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, எஸ் ராமகிருஷ்ணன்,சு வேணுகோபால், நாஞ்சில் நாடன், அரங்கசாமி, சுந்தர ராமசாமி, அய்யனார் விஸ்வனாத், ந முருகேச பாண்டியன்,கொழந்த

 

  1. அஞ்சலை – கண்மணி குணசேகரன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2,சு வேணுகோபால், சு வெங்கடேசன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, எஸ் ராமகிருஷ்ணன்,நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அய்யனார் விஸ்வனாத், வேதசகாயகுமார், ந முருகேச பாண்டியன், ஆர் வி

 

54.சாய்வு நாற்காலி- தோப்பில் முகமது மீரான்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, ரமணி, செந்தில்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, இரா முருகன், கோவை ஞானி, ஜெயமோகன், வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி,

க பூரணசந்திரன்

 

  1. நித்ய கன்னி- எம். வி வெங்கட்ராம்

 

             டாப் 10 பரிந்துரைகள் :- 2, பாவண்ணன், விக்ரமாதித்யன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, சி மோகன், நாஞ்சில் நாடன், க நா சுப்ரமணியம், ஆர் வி, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், பெ.தேவி

 

  1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, சா கந்தசாமி , அசோகமித்திரன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், க நா சுப்ரமணியம்,  ஆர் வி, வேதசகாயகுமார், பெ.தேவி,

ஜெ வீரனாதன்.

 

 

  1. கூகை – சோ. தர்மன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, சு வேணுகோபால், செந்தில்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, ஜெயமோகன், ந முருகேச பாண்டியன், கொழந்த, மா மணிமாறன், எஸ் ராமகிருஷ்ணன், ஆர் வி

 

58.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – ஜெயகாந்தன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, சின்னகுத்தூசி, ஃபோரம்ஹப்.காம

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, க நா சுப்ரமணியம், ஜெயமோகன்,

பெ.தேவி, ந முருகேச பாண்டியன், ஆர் வி

  1. சிவகாமியின் சபதம் –   கல்கி

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, காசி ஆனந்தன், ஃபோரம்ஹப்.காம்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, ஜெயமோகன், கோவை ஞானி, பெருமாள் முருகன், பெ.தேவி , இரா குருநாதன்

 

60.குறிஞ்சி மலர் – நா பார்த்தசாரதி

டாப் 10 பரிந்துரைகள் :- 2 சின்னகுத்தூசி, தி டாப்டென்ஸ்.காம்

 

             பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, ஜெயமோகன், கோவை ஞானி, பாலகுமாரன், சுந்தர்,இரா குருநாதன்

 

 

  1. கொற்றவை- ஜெயமோகன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2, சு வேணுகோபால், செந்தில்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், வேதசகாயகுமார், சுந்தர்

 

  1. மணல்கடிகை-   எம்.கோபாலகிருஷ்ணன்

 

டாப் 10 பரிந்துரைகள் :- 2 , சு வேணுகோபால், நாஞ்சில் நாடன்

 

பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, ஜெயமோகன்,வேதசகாயகுமார், ந முருகேச பாண்டியன், கொழந்த, பாவண்ணன்

 

 

இதுவரை 62 நாவல்களைப் பற்றி பார்த்தோம். டாப் 10 பட்டியலில் இரண்டு பரிந்துரைகள், மூன்று  பரிந்துரைகள் பெற்று பட்டியலில் குறைந்தது 4 பரிந்துரைகள் பெற்ற நாவல்கள் சிறந்த நாவல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் நாவல்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அவை பட்டியலில் பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் இடம் பெறும். 135 ஆண்டுகளை கடந்த நாவல் வரலாற்றில் 135 நாவல்களை பரிந்துரைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

 

டாப் 10 பரிந்துரைகள், எனது தலை சிறந்த நாவல்கள் கட்டுரையில் உள்ளது. நாவல் பரிந்துரைப் பட்டியல், சிறந்த நாவல்கள் பட்டியலில் உள்ளவை. இவற்றையே பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறேன். சிறந்த நாவல்களுக்கான பட்டியல் 2041 பதிவுகளைக் கொண்டது. இந்த பரிந்துரைகளின் பட்டியலை நான் முழுவதும் கொடுக்க காரணம் வாசகர்கள் பயனடைவர் என்பதற்காகவே. சிலர் இந்த பட்டியலைப் படிக்கும்போது குறிப்பிட்ட எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட நாவல்களைப் படிக்க இயலும். மேலும் ஆதாரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தந்தால் வாசகர்கள் பட்டியலின் முழு பரிமாணத்தைக் காண்பர். அவ்வகையில் அடுத்த கட்டுரையில் , இக் கட்டுரையில் விடுபட்ட முக்கிய எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும், இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் நாவல்களையும் பார்க்கலாம்.

 

(பட்டியல் தொடரும்)

 

 

Email:- enselvaraju@gmail.com

Series Navigationயேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்புநிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்ஒரு புதிய மனிதனின் கதைவாழ்க்கை ஒரு வானவில் – 21ஈரத்தில் ஒரு நடைபயணம்எக்ஸ்ட்ராக்களின் கதைமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டதுதொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்பாவண்ணன் கவிதைகள்ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6அமர காவியம்!சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசுதினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகைஇந்த நிலை மாறுமோ ?அப்பாஅழகுக்கு அழகு (ஒப்பனை)பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சுபாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *