(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Song of the Open Road)
(திறந்தவெளிப் பாட்டு -3)
ஞானத்தின் விளக்கம்
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பூரண மனிதர் ஆயிரம் பேர்
இப்போது
என்முன் தோன்றினும்
வியப்படையச் செய்யா தென்னை !
ஆயிரம் பேரெழில் வடிவு மாதர்
இப்போது
என்முன் தோன்றினும்
விந்தையுறச் செய்யா தென்னை !
வாழ்வோரை
உன்னத மானிடராய்
ஆக்கும் ரகசியத்தை
நோக்குவேன் நானிப் போது !
வையத்தில் உண்டு உறங்கி
வளர வேண்டும் அந்த ரகசியம்
திறந்த வெளியில் !
தனிப்பட் டோரின் உன்னத
வினையே
இங்கு இடம்பெற முடியும்.
அத்தகைய வினைகள்
அனைத்து மனித இனத்தின்
இதயத்தைப் பற்றி
இழுத்துக் கொள்ளும் !
அதன் வலிய உறுதித் தெளிப்பு
சட்டத்தை மீறி
ஆளுமை ஆதிக்கத் தையும்
அனைத்து வாதத் தையும்,
நகைப்புக் குள்ளாக்கும் !
இங்குள்ளது ஞானத்துக்கு
தேர்வு வினா !
கல்விக் கூடங்களில்
இல்லை
ஞானத்தைச் சோதிக்கும்
முடிவான தேர்வு !
ஊர்ந்திடம் பெயராது ஞானம்
உள்ளவனிட மிருந்து
இல்லா தவனுக்கு !
ஆத்வா வுக்குச் சொந்தம்
ஞானம் என்பது !
தொய்விலாச் சான்றுள்ளது ;
ஞானம்
தானே தனக்குச் சான்று !
எல்லா அரங்கு களுக்கும்
உயிரினங் களுக்கும்,
குணப்பாடு களுக்கும்,
இசைந்து கொண்டு அது
திருப்தி அடையும்.
மெய்ப்பாடுக்கு உறுதி,
மானி டத்தின் நிலைப்பாடு அது;
ஞானம் என்பது
பொருளியலின் பாலாடை !
ஆத்மாவி லிருந்து
உசுப்பி விடும்
ஏதோ கனவுக் காட்சி !
+++++++++++++++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
- Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
- Jayabarathan [jayabarathans@gmail.com] September 18, 2014
- யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு
- நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்
- ஒரு புதிய மனிதனின் கதை
- வாழ்க்கை ஒரு வானவில் – 21
- ஈரத்தில் ஒரு நடைபயணம்
- எக்ஸ்ட்ராக்களின் கதை
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22
- பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது
- தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6
- அமர காவியம்!
- சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.
- உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு
- தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை
- இந்த நிலை மாறுமோ ?
- அப்பா
- அழகுக்கு அழகு (ஒப்பனை)
- பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு
- பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி
- வாக்குமூலம்
- சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1
- அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்
- சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93
- என் சுவாசமான சுல்தான் பள்ளி
- தந்தையானவள் – அத்தியாயம்-1