குளத்தங்கரை
வாகைமரம்
நான் விரல்பிடித்து நடந்த
இன்னொரு கரம்
உச்சிக்கிளையில்
கிளிகளின் கூச்சலில்
காட்சியும் கானமுமாய்
விடிகிறது என் காலை
பனம்பழம் சுட்டது
பட்டம் விட்டது
பதின்மக் காதலைப்
பகிர்ந்துகொண்டது
நட்புகள் பிரிவுகள்
முகிழ்ந்தது முடிந்தது
இன்னும் இன்னுமென்று
வாகையடியே
வாழ்க்கையானது
தாழப் பறக்கும்
தட்டான் பூச்சிகள்
தாவத் தயாராய்
தவளைகள்
முதுகு சொரியும்
வாத்துக்கள்
சுழிக்கும் மீன்கள்
கலையும் அலைகளில்
உடையும் முகில்கள்
அத்தனையும்
அதிகாலைத் தூறலில்
மனவெளி நனையும்
மந்தகார நினைவுகள்
வெளிநாடு செல்லும்
வேளை வந்தது
அழுதேன்
வாகையைத் தழுவி
‘வரட்டுமா’ என்றேன்
பொத்திவைத்த
மழை மிச்சத்தை
பூவாய்த் தூவியது
புறப்பட்டேன்
இன்று
நாற்பது ஆண்டுகள்
நகர்ந்துவிட்டன
குப்பைமேடானது குளம்
கண்ணீர் இலையுதிர்த்து
நிர்வாணமானது வாகை
கிளிகளின் குடும்பங்கள்
கொள்ளுப் பேரர்கள்
எங்கெங்கோ
எப்படியோ
நேற்று வந்த செய்தி
வேரடி மண்ணோடு
வீழ்ந்துவிட்டதாம் வாகை
அமீதாம்மாள்
- சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்
- முரண்களால் நிறைந்த வாழ்க்கை
- இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்
- திறவுகோல்
- கோணங்கிக்கு வாழ்த்துகள்
- கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
- தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு
- தந்தையானவள் அத்தியாயம்-3
- தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்
- பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…
- தேவதாசியும் மகானும் (2)
- அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்
- குளத்தங்கரை வாகைமரம்
- முத்தொள்ளாயிரத்தில் மறம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95
- பாவண்ணன் கவிதைகள்
- சுத்த ஜாதகங்கள்
- அழியாச் சித்திரங்கள்
- வள்ளுவரின் வளர்ப்புகள்
- வெண்சங்கு ..!
- பாரதியின் காதலி ?
- காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி
- வாழ்க்கை ஒரு வானவில் – 23
- பொன்வண்டுகள்
- ஆங்கில மகாபாரதம்