(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Song of the Open Road)
(திறந்தவெளிப் பாட்டு -3)
ஆத்மாவின் ஆனந்தம்.
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஆத்மாவின் வெளிப் பயணம்
ஆனந்தம் அளிப்பது.
திறந்த வெளி எங்கணும்
காற்றினில் பரவி
காலங் காலமாய் என்றும்
காத்திருக்கும்.
நம்முள்ளே ஆத்மா இப்போது
ஊடுருவி
நாமெல்லாம் செம்மையாய்
உயிர்த்துள்ளோம் !
பண்பையும் சேர்த்து
ஊற்றுக் கனிரசம் போலிங்கு
எழுச்சி யுறும் !
ஈர நெஞ்சும், நேர்மைப் பண்பும்
மானிடரின்
தூய்மைக் கனிகள்.
காலையில் துளிர்க்கும்
மூலிகை விதைகள் வேரை விடத்
தூயவையோ
இனிய வையோ அல்ல !
நீர்மையும், நெறிப் பண்பும்
இளைய முதிய வம்சத்தின்
வேர்வைகள் !
அவற்றி லிருந்து பொங்கி
எழுவது
மானிடக் கவர்ச்சி;
எழிலும் சாதனையும்
அதன் முன்
எள்ளி நகைக்கப் படும் !
தொட்ட ணைக்கும் இச்சை
அலைகள் போல்
நடுங்கிச் செல்லும் !
+++++++++++++++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
- Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
- Jayabarathan [jayabarathans@gmail.com] October 9, 2014
- நாம்
- காதல் கண்மணிக்குக் கல்யாணம்
- தாம்பத்யம்
- பிஞ்சு உலகம்
- தந்தையானவள் – அத்தியாயம் 4
- ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—
- கு.அழகர்சாமி கவிதைகள்
- வாழ்க்கை ஒரு வானவில் – 24
- முகப்புகழ்ச்சியா நம் முகவரி?
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 96
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3
- தொடுவானம் -37. அப்பா ஏக்கம்
- அவனும் அவளும் இடைவெளிகளும்
- தலைதூக்கும் தமிழ்ச்செல்வி
- ஆசை துறந்த செயல் ஒன்று
- மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்
- 2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு
- உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி
- அண்ணன் வாங்கிய வீடு
- தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8
- மரபுக்குப் புது வரவு
- கம்பன் விழா 18-10-2014, 19-10-2014