ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
1
“சரி” என்று நான் உடன்பட்டேன் நேற்று;
“இல்லை” என்கிறேன் இன்று காலையில்,
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிறங்கள்
வேறாய்த் தெரிந்திடும் பகற்பொழுதில் !
2
உன்னதமாய் வாத்தியக் கருவி இசைக்கும் போது
புன்னகை புரியும் விளக்குகள் மேலும் கீழும்.
“என்னை நேசி”, என்பது நகைப்பாய்த் தொனிக்கும் !
உடன்பாடோ, மறுப்போ அதற்கேற்ற பதிலாகலாம்.
3
மாதரின் தவறென்றோ, உரிமை என்றோ சொல் !
ஏதோ விளக்கொளி மின்னு வதாய்ச் சூளுரை;
உன் முகத்தோ டொருவன் பார்க்க முடியாது
என் துயரில் ஏற்படும் மாறுதல் எதையும் !
4
பாபம் விழுவது நம்மிருவர் மேல்தான்;
ஆடும் சமயம் கவர்ந்து மயக்குவ தில்லை;
கவர்ச்சி வெளிச்சம் பேதமைக் குறுதி
என்னை இகழ்வ துன்னைத் தாக்கும் !
5
மங்கை மனதைப் பற்றக் கற்றுக் கொள்
கண்ணியமுடன், அது உன்னத மாவதால்,
தைரியமாய் இரு பிறப்பிலும், இறப்பிலும்;
காதலுக் குறுதி அளிக்கக் கற்றுக் கொள்.
6
அழைத்துச் செல் அவளை விழாக் களுக்கு
விண்மீன்கள் வானத்தைச் சுட்டிக் காட்டு
காப்பாய் அவளை உன் உண்மைப் பேச்சால்
களவு உறவைக் கடந்து நேர்மை காட்டு.
7
உனது மெய்யுறவு அவளது நிஜ மன நிறைவு
நேர்மை உறவே பழமை மனையாள் ஆக்கும்
சரி யெனச் சொல்லும் அவள் உடன்பாடு
அரிதாய் என்றும் நிலைக்கும் மனப்பாடு.
++++++++++++++++
மூல நூல் :
From Poems of 1844
Elizabeth Barrett Browning Selected Poems
Gramercy Books, New York 1995
- http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
- http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
- http://www.online-literature.com/elizabeth-browning/
- பெண்களும் கைபேசிகளும்
- தரி-சினம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி.
- குண்டலகேசியில் யாக்கை நிலையாமை
- பாரம்பரிய வீடு
- அரசற்ற நிலை (Anarchism)
- அடுத்தடுத்து எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு
- எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மறைந்தார்
- ஆனந்தபவன். நாடகம் காட்சி-10
- குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்
- தொடுவானம் 39. கடல் பிரயாணம்
- சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2
- தவறாத தண்டனை
- தந்தையானவள் அத்தியாயம்-6
- ஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. !
- வாழ்க்கை ஒரு வானவில் -26