டாக்டர் உஷா வெங்கட்ராமன்
கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருவைணவ குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் ஏறக்குறைய நூறு வருட சம்பவங்களின் அழகாகத் தொகுக்கப்பட்ட நாவல் “ ஆலமரம் “ . ஆசிரியரின் மூன்று வருட கால அயராத உழைப்பின் பயனாக கனிந்த நாவல் பழம்.
ஒரு சிறந்த நாவல் என்றால் அதன் கதை கதா பாத்திரங்கள் குணாதிச்யங்கள், வசன, மொழிப்பிரயோகம், சம்பவச்சூழ்நிலையின் அமைப்பு, நாவலின் தலைப்பு என இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாஞ்சோலை கிராமத்தில் பத்ரி இல்லத்தில் அவருக்கு இரு மகள்கள். அவரின் மறைவிற்குப் பின் பாலவிதவையான அவர் பெண் அம்புஜம் இரு தம்பிகளையும் வளர்த்து, அவர்களின் திருமணம், பிள்ளைப்பேறு, பின் அந்தக் குழந்தைகளின் வளர்ப்பு, அவர்களின் கல்யாணம் என்று மூன்று தலைமுறைக்கு அக்குடும்பத்தை ஆலமரமாய் தாங்குகிறாள். கால ஓட்ட்த்திற்கு ஏற்ப வாழ்க்கை முறையில் மாற்றங்களை மாஞ்சோலை கிராம வாழ்க்கை, கும்பகோண நகரம், சென்னை மாநகரம், வடநாட்டின் புற நகரம், பின் வெளிநாடு வரை படிப்படியாக மாற்றங்களுடன் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. அதிலும் மாஞ்சோலை வாழ்க்கை நடைமுறை, பழக்க வழக்கங்கள் ருசிகரமாகவும், பழக்கமில்லாத நம்மில் பலருக்கு அதிசயமாகவும் உள்ளன.
இந்த நாவலின் கதாபாத்திரங்கள் சுமார் இருபது. அவர்களின் குணாதிசயங்களிலும் அத்தனை வகைகள் தனித்தன்மை வாயந்த்தாக சித்தரிக்கப்பட்டுள்ளன மிகவும் சிறந்த அம்சம். இரண்டாம் தலைமுறையின் மூத்தவன் வீர்ராகவன் முன் கோபி. சட்டென்று கை நீளும் . அடிக்கவும், கொடுக்கவும்.. படிப்பை நிறுத்தி விட்டு அக்காள் அம்புஜத்திற்கு உதவியாக பண்ணையைக் கவனித்துக் கொள்கிறான். இளையவன் பாட்டாளி படிப்பில் சுட்டி, பொறுப்பு , பொறுமை-குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று அறிந்த்தும் மலடியென் மனைவியை ஒதுக்காமல், அவள் கடைக்குட்டித் தங்கையை த்த்து எடுத்துக் கொண்ட பரந்த் மனம் கொண்டவள்( கதையின் காலத்திற்கு இது பெருமைக்குரிய செயல் )
ஏட்டறிவில்லாவிடினும் இளம் விதவை அம்புஜம் பொறுமை, கண்டிப்பு, அன்பு அனுபவ அறிவின் பலனாக சாமார்த்தியம் கொண்ட பெண் பாத்திரம். அமுதா வீரராகவனின் மனவி. அழகும் கர்வமும், நாகமாய் விஷம் க்க்கும் நாவும் கொண்ட சுயநலத்தின் மொத்த ரூபம். கதையின் பல திருப்பங்களுக்கும் காரணம் இப்பெண் பாத்திரம். பட்டாபியின் பார்யா வேதா படிப்பறிவும், பொறுமை, விட்டுக் கொடுக்கும் தன்மை ஆக குடும்ப்ப்பாங்குடன் வளைந்து வளைய வரும் பாத்திரம். மூன்றாம் தலைமுறையில் படிப்பில் அதிக நாட்டம் உள்ள ஒரு பையன். பாட்டில் ஆர்வம் உள்ள முன் கோபியான ஒரு பையன் ( வாசு ) , கோயில் பிரசாதம் உண்ணக் குருக்களுக்கு உதவி புரிந்து கொண்டு நடுவில் கொஞ்சம் படிக்கும் ஒரே பையன். படிப்பும் ஏறாமல், உடம்பு வணங்காமல் ‘ஒப்பாரி ‘ பாட பழக்கும் ஒரு மகன் என விதவிதமான குணங்களைக் கொண்ட ஆண் பாத்திரங்களுடன், சிறு வயதிலேயே கல்யாணம் குழந்தை குட்டி என் சம்சாரி ஆகி அம்மாவிடமிருந்து என்ன கிடைக்கும் என்ற பேராசை கொண்ட பெண்களும் படிப்பும் பண்புபணிவு பதவிசு மேலும் தனக்கு சரி என்ப்பட்ட்தை எடுத்துச் சொல்லும் துணிவும் உள்ள பெண் என பல விதப் பெண்பாத்திரங்கள்.
நான்காம் தலைமுறையில் சங்கீத ஆர்வம் கொண்ட ஒரு மகள். படித்துப் பட்டம் பெற்று வெளிநாடு சென்ற ஒரு மகன். ஆண் மக்கள் தந்தையின் முன் வாய் திறக்க யோசிக்கும் பலவீனம் கொண்டவர்கள் ஆனால் பெண்குட்டிகளோ பாரதியாரின் கனவினை நனவாக்கும் மூர்க்கஸ்வபாவ தந்தையை எதிர்த்து நின்று வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்ளும் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்ட பாத்திரங்கள். வக்கீல், பத்திரிக்கை நிருபர் என் வெளுத்து வாங்குகிறார்கள். ப்ரமனின் ஸ்ருஷ்டியை போன்ற பாத்திரங்கள் – குணவிசேசங்களில் வெரைட்டி- நாவலின் ஸ்பெஷலிட்டி.
கதையின் கால, பாத்திரங்களுக்கு ஏற்ற மொழி அமைப்பு , விமர்சனங்களின் போக்கு, சூழ்நிலைகளின் வருணனை, விவரணம், சுதந்திரப் போராட்டகாலத்தின் அரசியல், சமூக வாழ்க்கையிம் மாறுதல்கள், இரண்டாம் உலக் யுத்த்த்தின் பாதிப்ப்பு சுதந்திரப்ப் போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் கல்ந்து கொண்ட முறை, ஆர்வம் சிறு குழந்தை முதல் சுதந்திரப்பாட்டைப்பாடி ஆடி மகிழும் காட்சிகளுடன் கதையின் அமைப்பு நம்மை அந்தக் காலத்திற்குக் கொண்டு போய் விடுகின்றன.
தலைப்பு “ ஆலமரம் “ நேர் அர்த்த்த்தில் தழைத்து வளரும் குடும்பக்கதை என்றாலும் ஆசிரியர் இதற்கு ஒரு விசேசஅர்த்தம் தருகிறார். :” ஆலமரத்தின் கீழ் வேறொரு புல்லும் முளைக்காது. பெயரில் அமுதமும் தலைமுதல் பாதம் வரை விசம் கொண்ட பெண்கதாபாத்திரத்தின் குணத்தைச் சித்தரிப்பதாக தலைப்பு ஆலமரம்
குழந்தைப் பேறு, கல்யாணம் போன்ற சடங்குகளின் விவரங்கள் சீர்வரிசை பட்சணம், கோயில் பூஜை, விழாக்கள், கிராம தேவதை விழாக்கள் என் பல நுண்ணிய விசயங்களையும் கொண்ட இந்த நாவல் நேற்று இன்று நாளை என் எக்காலத்துக்கும் காப்பாற்ற வேண்டிய அருமையான சொத்து… நல்ல வாசகர்களுக்கு பெரும் விருந்து.
( ரூ 485, மணிமேகலைப் பதிப்பகம், சென்னை )
- அறுபது ஆண்டு நாயகன்
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12
- ஆதலினால் காதல் செய்வீர்
- எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது
- தொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா
- பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.
- கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015
- வாழ்க்கை ஒரு வானவில் – 28
- எல்லா நதியிலும் பூக்கள்
- தூய்மையான பாரதம்
- ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]
- ” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்
- சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது
- திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்