இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி

author
66
0 minutes, 30 seconds Read
This entry is part 16 of 23 in the series 7 டிசம்பர் 2014

MINOLTA DIGITAL CAMERAஆதிவாசி

பிரபலமான செம்மொழி இலக்கணவாதி பாணிணி. அவர்  முந்தைய சகாப்தம் 4ஐச் சேர்ந்தவர் (4 BCE). அவருக்கும் முன்பே பல செம்மொழி இலக்கணவாதிகள் இருந்தார்கள். உதாரணமாக “யாஸ்க”.

இவர் முந்தைய சகாப்தம் 5 அல்லது 6ஐச் ( 5 BCE or 6 BCE)ஐச் சேர்ந்தவர். அதாவது சற்றொப்ப 2554 ஆண்டுகளுக்கு முந்தைய நம்முடைய மூதாதையர்.

செம்மொழி இலக்கணவாதியான யாஸ்க, செம்மொழிக்கு ஒரு நிகண்டு எழுதியிருக்கிறார். (நிகண்டு என்பது டிக்‌ஷனரி போன்ற ஒரு மொழி அகராதி. அதில் உள்ள வார்த்தைகளின் பொருள் பற்றி விளக்கம் அளித்து அவர் எழுதிய நூல் “நிருக்தம்”.  அதில் செம்மொழி சார்ந்த அனைத்து வார்த்தைகளும், ஒவ்வொரு வார்த்தையின் பொருளும், அந்தப் பொருள் காலம்தோறும் எங்கனம் வேறுபட்டது என்கிற தகவல்களும் இருக்கும். Etymology என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.) அப்படிப்பட்ட ஒன்றை எழுதி அதற்கு “நிருக்தம்” என்று பெயரிட்டார் யாஸ்க.

செம்மொழி வார்த்தைகளுக்கு அவர் காலம்வரை வழங்கப்பட்ட பொருள் பற்றி சரியாக அறிய வேண்டுமானால், நிருக்தம் படிக்க வேண்டும். அந்த நிருக்தத்தில், மற்ற வார்த்தைகளைப் போலவே “ஸிஶ்ன தேவாஹ்” (शीक्षनदेव) என்கிற செம்மொழி பதத்துக்கும் பொருள் விளக்கம் தருகிறார் அவர்.

அந்தப் பதத்தைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்?

“கிறுத்துவர் அல்லாத மற்றவர்கள் பல்வேறு உருவங்களில் சாத்தானை வழிபடுகிறவர்கள். இருப்பதிலேயே கொடிய பாவமான காமம் நிறைந்தது சாத்தான் வழிபாடு. எனவே, கிறுத்துவர் அல்லாதவரின் வழிபாட்டுச் சடங்குகளின் அடிப்படையில் இருப்பது காமவெறி மட்டுமே.”

இப்படிப்பட்ட கிறுத்துவப் பார்வையே மற்ற மதங்களைப் பற்றி ஆய்ந்த ஆளும்வர்க்க வரலாற்றறிஞர்களின் புரிதலாக இருந்தது. முக்கியமாக இந்தியாவை ஒட்டுண்ணியாகப் பற்றிச் சுரண்டிப் பிழைத்த காலனியப்பார்வை இப்படித்தான் இருந்தது. அப்படிப்பட்ட புரிதலோடு விளங்கிய அவர்கள் இந்தியர்களின் ஆன்மீகத் தொகுப்புகளைப் பற்றியும் ஆய்ந்தார்கள் (?).

பேகன் (pagan)களான இந்தியர்களின் ஆன்மீகம் சாத்தானிய வழிபாடுதான் என்கிற ‘உண்மையை’ உலகுக்குச் சொல்ல அவர்கள் விழைந்தார்கள். மானுடத்தின் ஆதி மரபுக் கருவூலங்களான வேதங்களிலும், புராணங்களிலும் உள்ள வார்த்தைகளைத் திரித்து, வெட்டி எப்படியேனும் காமத்தைத் திணித்துவிடுவார்கள். செரிமானம் ஆகாத புரிதல்களோடு விளங்கியதால் இந்த ஆய்வுகளில் ஆய்கள் அதிகம்.

அப்படி அவர்களால் திரிக்கப்பட்ட பதங்களில் ஒன்று “ஸிஶ்ன தேவாஹ்”. ரிக் வேதத்தில் இந்திரனால் வெல்லப்பட்டவர்கள் பற்றி விவரிக்கும்போது இந்தப் பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் பதத்திற்குக் ஐரோப்பியர் கொடுக்கும் பொருள் “ஆண்குறியை வழிபடுபவர்கள்”.

நீங்கள் ஆங்கிலேய வார்த்தை ஒன்றின் பொருள் பற்றி அறிய வேண்டுமானால், அந்த ஆங்கிலேயர்கள் எழுதிய மொழி அகராதியைத்தான் பார்ப்பீர்கள். அதேபோல செம்மொழி வார்த்தைகளை எழுதிய இந்தியர்கள் கொடுத்த பொருள் என்ன என அறியவேண்டுமென்றால், இந்தியர்களுடைய அகராதியைத்தான் பார்க்க வேண்டும். அதாவது, யாஸ்க படைத்த நிருக்தம் போன்றவற்றை. ஆனால், அவை எழுதப்பட்டுப் பல பத்தாயிரம் வருடங்கள் ஓடிவிட்டன. புரிவது கடினம்.

அவை நமக்குப் புரியாது என்பதால், அவ்வப்போது மிகப் பழைய படைப்புகளை யாரேனும் விளக்குவார்கள். உதாரணமாக, பரிமேலழகர், மு. வரதராசனார், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி போன்றோரின் அருமையான விளக்க உரைகள் திருக்குறளுக்கு உண்டல்லவா ? அதுபோல யாஸ்கவின் நிருக்தத்திற்கு 14ம் நூற்றாண்டில், விஜயநகர அரசைச் சார்ந்த ஸாயனா என்பவர் விளக்க உரை தந்திருக்கிறார்.

அவரது உரைப்படி, நிருக்தத்தில் யாஸ்க தரும் பொருளைப் பார்ப்போம்.

ஸிஶ்ன-தேவாஹ் ஸிஸ்னேன திவ்யந்தி க்ரிதந்தி இதி
ஸிஶ்ன-தேவாஹ் அப்ரஹ்மச்சர்யா இதியர்த்தஹ் ததா ச யாஸ்கஹ்

Yaska in his Nirukta (IV. 19)

“….. ஸிஶ்ன-தேவாஹ் அப்ரஹ்மச்சர்யாஹ்” — இதன் பொருளைச் சுருக்கமாகச் சொன்னால், “புலன்களுக்கு அடிமையானவர்கள்”, “புலன்களைத் துர் உபயோகம் செய்பவர்கள்”.

பிரம்மச்சாரி என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதன் உண்மையான பொருள் “இறைசக்தியோடு வாழ்பவர்”, “சரியான நடத்தை” உள்ளவர். அங்கனம் இறைசக்தி–ஆன்ம வலிமை இல்லாமல் புலன்களுக்கு அடிமையாகி துன்பப்படுகிறவர்கள் ஸிஶ்ன தேவர்கள்.

இந்தப் பொருளில்தான் யாஸ்க அந்தப் பதத்தைப் பயன்படுத்துகிறார் என்று 14ம் நூற்றாண்டில் ஸாயனா எனும் ஒரு இந்தியரும் சொல்லி இருக்கிறார். அதன் பொருளை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மீண்டும் 20ம் நூற்றாண்டில் (1880-1972), பேராசிரியர் டாக்டர். பாண்டுரங்க வாமன் கானே எனும் மாபெரும் படைப்பாளியும் அந்தப் பதத்துக்கு “வேறு எந்த இன்பங்களையும் அறிய முடியாதவர்கள்” என்று பொருள் சொல்லுகிறார். அவரும் அதே பொருளை உறுதி செய்கிறார்.

இந்தியத் தத்துவங்களைப் பற்றி அறிமுகக் கட்டுரைகள் எழுதிய முன்னாள் ஜனாதிபதி பேராசிரியர் டாக்டர். ராதாகிருஷ்ணனும் யாஸ்க சொன்ன பொருள்தான் சரி என்று சொல்லுகிறார். டாக்டர். ராதாகிருஷ்ணன் மார்க்ஸியப் பார்வை கொண்டவர். ஆனால், அவரும் அதே பொருளைத்தான் உறுதி செய்கிறார்.

அதாவது, இந்தியத்துவத்தில் ஊறிய இந்தியர்கள், அவர்களுடைய சொந்த மரபுக்கு இப்படிப் பொருள் தருகிறார்கள். ஒரு சில காலனியம் போற்றும் யூரோப்பியர்கள் மட்டும் வழக்கம்போல ஆண்குறி பெண்குறி தேடுகிறார்கள்.

அவர்களின் அந்தத் தேடுதலுக்குப் பின் இருந்தது அக்காலத்தில் அவர்கள் உருவாக்கிக்கொண்ட ஐரோப்பிய இனவெறி.

<h>இனவெறியின் கதை</h>

தங்களை ஒரு உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், மற்ற இனங்களை அடக்கி ஆண்டவர்களாகவும் காட்ட யூரோப்பியர்கள் விரும்பினார்கள்.

ஏனெனில், உலகம் முழுவதும் மற்ற நாடுகளையும், கலாச்சாரத்தையும் கொள்ளையடித்து, கொலைகள் செய்து, வியாதிகள் பரப்பி, அழித்து ஒழித்து மட்டுமே பிழைத்து வந்த அவர்களுக்கு அந்தக் கேவலமான வேலைகளை நியாயப்படுத்த, பிறப்பு அடிப்படையில் அச்செயல்களைச் செய்யும் பிறப்புரிமையைத் தர ஒரு சாக்கு தேவைப்பட்டது.

அந்தப் போலிக்காரணத்தை உயர்ந்த நோக்கம் கொண்டதாகவும், பிறப்பு அடிப்படையில் உரிமை தரக்கூடியதாகவும் காட்ட வேண்டிய அவசியமும் இருந்தது.

அச்சமயத்தில் எழுந்த தொழில்மய சூழலானது, மிகப் பெரிய சமூக மாறுதல்களை உருவாக்கியது. கிறுத்துவத்துடன் இணைந்துகொண்டு ஐரோப்பாவில் அப்போது பிறப்பு அடிப்படையில் நிலவிவந்த கேஸ்ட்களை (ஐரோப்பிய சாதியமைப்பை) அழித்தது. சாதி அமைப்பு அழிந்தால், அங்கே இனவெறி தலைதூக்கும். இது இயற்கை நியதி. இனவெறியானது சாதியமைப்பை அழிக்க முயலும். இதுவும் இயற்கை நியதி. பல ஐரோப்பிய கேஸ்ட்கள் அழிந்தன. அதற்குப் பதிலாக பிறப்பு அடிப்படையில் இனங்களை உருவாக்க ஆரம்பித்தார்கள்.

சாதியமைப்பு அழிந்து இனங்களாகப் பிரிந்தனர் ஐரோப்பியர். அந்த இனங்களையும் இணைத்து ஒரு பிறப்பு அடிப்படை ஒற்றை இன அடையாளத்தைக் கண்டடையத் துடித்த அவர்களுக்கு இந்திய ஆதிஞானமான வேத இலக்கியங்களில் பயன்படுத்தப்படும்“ஆரிய” என்கிற வார்த்தை பலியானது.

பிறப்பு அடிப்படை இல்லாமல் “பண்படைந்த” என்கிற பொருளில் மட்டுமே இந்தியாவில் அவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அந்த வார்த்தையின் பொருளை ஐரோப்பியர்கள் திரித்தார்கள். “பண்படைந்தவர்” என்கிற அவ்வார்த்தையை பிறப்பு அடிப்படையில் அமைந்த  “இனம்” என்று உருவகித்தார்கள்.

ஏனெனில், அவர்களது இனவெறிப் போக்கின்படி ஐரோப்பியர்கள் மட்டுமே “பண்படைந்தவர்கள்”. ஐரோப்பியர் எல்லாம் “ஆரிய” இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பண்படைந்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் எல்லாம் ஆரியர்களாக மட்டுமே இருக்க முடியும். எனவே, ஆரியர்கள் என்பது ஒரு இனம் என்று ஒரு பொய்யுரையை உருவாக்கினார்கள்.

இந்த துர்உபயோகத்தை மாக்ஸ் ம்யூலர் போன்ற ஐரோப்பிய அறிஞர்களே கண்டித்தார்கள். இருப்பினும், இனவெறிக்கு எப்போதுமே புரியாதது ஞானம். புரிந்தது கபடமும், திருட்டும், துரோகமும் மட்டுமே.

காலைக்கடன்களை முறையாகச் செய்தல், டூத் ப்ரஷ் உபயோகித்துப் பல் தேய்த்தல், குளியல் பழக்கம் உட்படப் பல வழக்கங்களை ஆசிய நாடுகளிடம் இருந்து கற்றுக்கொண்டார்கள் ஐரோப்பியர்கள். கைமாறாக அவர்களிடம் இருந்த பல தீய மரபுகளை அந்த நாடுகளின்மேல் கழிந்துவிட்டுப் போனார்கள்.

சேரிகள், டௌரி எனும் வரதட்சணை முறை, கேஸ்டிஸம் எனும் சாதீய உயர்வு தாழ்வு, தீண்டாமை, மனிதர் மலத்தை மனிதர் சுமந்து தூய்மை செய்யும் வழக்கம் என்பன அந்த ஐரோப்பியக் கழிவுகளில் ஒரு சில துளிகள் மட்டுமே. (காதல் மணம், களவு மனம், சுயம்வரம் போன்ற தமிழர் முறை அழிந்து பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமண முறைகூடக் காலனியக்காலத்தில்தான் இந்தியர்மேல் திணிக்கப்பட்டது.)

ஆசிய, ஆஃப்ரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற காலனியத்துக்கு உட்பட்ட நாடுகளில் இருந்து பெற்ற நல்ல வழக்கங்களைத் தங்கள் வழக்கங்களாகக் காட்டவும், தங்களுடைய வழக்கங்களை அடிமைப்பட்டவர்களின் வழக்கங்களாகக் காட்டவும் அவர்களுக்கு இந்த இனவெறி உதவியது.

அந்த இனவெறிக்குக் இறையியலளவில் (theology) கிறுத்துவ மதம் உதவியது. அடிமைப்படுத்தப்பட்ட நாட்டு மக்கள் சாத்தானை வழிபடுகிறக் கீழ்த்தரக் காமப் பழக்கங்கள் கொண்டவர்களாகக் கிறுத்துவம் உருவகித்தது. அவ்வகையில் “ஸிஶ்ன தேவாஹ்” போன்ற பதங்கள் திரிக்கப்பட்டன.

அப்படித் திரித்ததையும் ஐரோப்பியர்கள் ஓரளவு அறிவோடுதான் செய்தார்கள். ஆனால், அந்த விஷம அறிவுகூடத் தேவையில்லை என்று நிறுவி அவர்களையே மிஞ்சி விட்டார்கள் அவர்களது அடிமைகள்.

<h>கிறுத்துவரையும் விஞ்சும் கிறுத்துவப் பிரச்சாரகர்கள்</h>

உடலால் இந்தியராகவும், உடையால் சிந்தனையால் கலாச்சாரத்தால் வாழ்க்கை முறையால் சமூக அமைப்பால் முற்றிலும் ஐரோப்பிய அடிமைகளாகத் திகழும் மெக்காலேவின் புத்திர புத்திரர்கள்தான் அந்த கிறுத்துவப் பிரச்சாரகர்கள். அறிந்தும், அறியாமலும் கிறுத்துவத்தின் இனவெறுப்புப் பிரச்சாரத்தையே அவர்கள் செய்கிறார்கள்.

எந்தவித மொழி, அறிவியல், புத்திசாலித்தனத்தையும் கைக்கொள்ளாமல் கழிவறைச் சுவர்களில் எழுதப்படும் ஒருவரி கதைகளே இந்த ஐரோப்பிய அடிமைகளின் சுயவரலாறாகிப் போனது. ஆனால், அந்த ஐரோப்பிய சுயவரலாறை மற்ற தமிழர்களின்மேலும் திணிப்பது ஏற்க முடியாது.

ஏனெனில், அந்த இனவெறி வரலாற்றுக் கதைகளுக்கும், பிரச்சாரம் செய்பவருக்கும் தருக்க அறிவோ, இலக்கிய ரசனையோ தேவையே இல்லை. அவர்களுக்குக் கிடைத்தவை அடக்குமுறை ஐரோப்பியர் தந்துவிட்டுப் போன இனவெறியும், பொய்ப் புரட்டுகளும்.

விஷம அறிவு கொண்ட ஐரோப்பியர்கள் ஸிஶ்ன தேவாஹ் எனும் பதத்தை இரண்டாகப் பிளந்து ‘ஸிஶ்னம்” “தேவாஹ்” என்று ஆக்கிக் கொண்டார்கள். அதன்படிச் செய்தால் ஆண்குறி தெய்வங்கள் என்கிற பொருள் வரும். அதை வைத்து, ஆண்குறியை வணங்குகிற ஒரு ‘இனம்’ இருந்ததாக அவர்கள் கதை கட்டி விட்டார்கள். அந்தக் கீழ்த்தரமான ஒரு ‘இனத்தை’, ஐரோப்பிய ‘ஆரிய’ இனத்தினர் வென்றதாகச் சொன்னார்கள். அத்துடன் அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள்.

இந்த விஷமப் பிரச்சாரம் மேலும் பரவி, ஒரு புதிய திரிபை அடைந்தது. அதன்படி, அப்படி வெற்றிகொள்ளப்பட்ட ஆண்குறி வணங்குகிறவர்கள்தான் திராவிடர்களாம். இந்தக் கீழ்த்தரப் பிரச்சாரம் ஐரோப்பிய இண்டாலஜிஸ்ட்டுகளுடையதல்ல. அவர்களது விஷம அறிவுகூட இல்லாமல், விஷம் மட்டுமே அறிந்த காலனியத்தின் அடிமைகளுடையது.

இந்திய அகராதிகள் வேறு ஒரு பொருள்தர, தங்களுடைய கிறுத்துவ முதலாளிகள் தந்த பொருளை மட்டும்தான் நன்றியுடைய இந்த மெக்காலே இந்தியர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதாவது “ஆண்குறி வழிபாட்டாளர்கள்” என்கிற பொருளை.

ஆனால், அந்தப் பொருளைத் தந்த அடக்கும்வர்க்க ஐரோப்பியரின் அறிவு இவர்களுக்கு இல்லை. ஸிஶ்னம்+தேவாஹ் என்றெல்லாம் பிரித்துத் திரிக்கும் அறிவு இவர்களுக்கு இல்லை. எனவே, தங்களுக்குச் சொல்லித்தரப்பட்ட இனவெறியையும், பொய்ப்புரட்டுகளையும் அறிவற்ற வழிகளில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

அவ்வகையில் “ஸிஶ்ன தேவாஹ்” எனும் பதத்தைத் தங்களுக்கு சுத்தமாகப் புரியாத வார்த்தைகளின்மேலும் திணித்தார்கள். அப்படித் திணிக்கப்பட்ட வார்த்தைதான் “சிசு” எனும் வார்த்தை.

இந்தியர்களான உங்களுக்கு “சிசு” என்றால் “குழந்தை” என்பது தெரியும். ஆனால், அடக்குமுறை ஐரொப்பியர்களின் அடிமைகளுக்கு “சிசு” என்பதன் பொருள் “ஆண்குறி வழிபாட்டாளர்கள்” என்பது.

அதாவது குழந்தையை போய் ஆண்குறி என்கிறார்கள். நீங்கள் உங்கள் குழந்தையை, அந்த சந்தோஷப் பூங்கொத்தைப் போய் ஆண்குறி என்று அருவருப்புடன் வசவு வார்த்தையாக அழைப்பீர்களா ? உங்கள் குழந்தை என்றில்லை, வேறு எந்தக் குழந்தையையும் அப்படி அழைக்க மனம் வருமா ?

இனவெறி இருந்தால் அத்தகைய மனமும் வரும். தமிழர்கள் கேவலமானவர்கள், தமிழ்க் குழந்தைகள் எல்லாம் வெறும் ஆண்குறி என்கிற ஐரோப்பிய கிறுத்துவ இனவெறிப் பார்வை இருந்தால் இந்த வசவு உண்மையானதாகக் கூடத் தெரியலாம்.

செம்மொழியில் குழந்தை என்பதைக் குறிக்கும் வார்த்தை  शीशु (ஸிஸு). ஆனால், ஆண்குறிக்கான வார்த்தையில் பயன்படுத்தப்படும் எழுத்து முற்றிலும் வேறு எழுத்து. முற்றிலும் வேறு ஒரு பொருள். ஆண்குறிக்கான வார்த்தை शीक्षन (ஸிஶ்ன). இங்கு வேறுபடும் எழுத்து क्ष.

இங்கனம் வேறுபட்ட வார்த்தையினைத் திரித்து பொய் உரைக்கக் காரணம் என்ன?

கிறுத்துவ இனவெறிப் போதனைகளின் காரணமாகத் தமிழர்கள் மேல் இருக்கும் மட்டமான கருத்து.

பேகன் (pagan) இந்துக்களான தமிழர்கள் ஆண்குறியை வணங்குகிறவர்கள், காமத்தைத் தவிர வேறு இன்பங்கள் அறியாதவர்கள். மட்டுமல்ல, அவர்கள் முட்டாள்கள், மடையர்கள். அவர்களை மிக எளிதாக ஏமாற்றிவிடலாம் என்கிற இனவெறி மனப்பான்மைதான் காரணம்.
தமிழர்களிடம் போய் “தமிழ் வாழ்க” என்று சொல்லிவிட்டுத் தமிழின் முதுகில் குத்தித் துரோகம் செய்யலாம். பொய்யான உணர்ச்சி மிக்க கோஷங்களை எழுப்பியே தமிழை அழித்துவிடலாம் என்கிற ஆரிய-திராவிட இனவாதக் கிறுத்துவ வெறி.

இந்த இனவெறியின் பின் இருக்கும் கிறுத்துவப் பார்வைக்கு, கிறுத்துவம் தவிர மற்ற அனைத்து மதங்களும், கலாச்சாரங்களும் சாத்தானின் வழிபாட்டு முறையான காம முறைகள் மட்டுமே. அவர்களுக்கு அனைத்தும் காமம். காமம் மட்டுமே.

அதனால் நீங்கள் எந்த வார்த்தையைச் சொன்னாலும் அந்த வார்த்தைக்குப் பொருள் “ஆண்குறி” என்று சொல்லிவிடுவார்கள்.

“வாழைப்பழம்?”

“ஆண்குறி!”

“ஆப்பிள்?”

“ஆண்குறி!”

“பேனா?”

“ஆண்குறி!”

“மோதிரம்?”

“ஆண்குறி!”

“பஸ் டிக்கெட்?”

“நீயே எடு.”

அவர்களது நூலகம் கழிவறைச் சுவர்களைத் தாண்டவில்லை. அதனால், தமிழர்களான எங்களை “ஆண்குறி வழிபாட்டாளர்கள்” என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.

<h>தமிழர்கள் சாத்தானை கும்பிடுகிறவர்களா ?</h>

நாங்கள் தமிழர்கள். ஆதிமரபான வேதமரபு எங்கள் மரபு. நாங்கள் ஆண்குறியையும், உருவங்களையும், கல்லையும், மண்ணையும், மரத்தையும் வழிபடுபவர்கள் இல்லை. இயற்கையை வணங்குகிறோம். இயற்கையாக இருக்கும் இறைசக்தியையே வணங்குகிறோம். கல்லை அல்ல. கல்லாகவும் இருக்கும் கடவுளை. கடந்தும் உள்ளும் இருக்கும் கட – வுளை.

ஆனால், பழ. கருப்பையா அதை மறுக்கிறார். தமிழர்கள் ஆண் குறியைத்தான் வணங்கினார்கள் என்கிறார். ஆனந்த விகடன் எனும் ஒரு பிரபலப் பத்திரிக்கையில் அப்படிச் சொல்லும் அவரது இந்தப் பேட்டி வெளியாகி உள்ளது.

அப்பேட்டியில் மதிப்பிற்குரிய பழ. கருப்பையா அவர்கள் இப்படிச் சொல்லுகிறார்:

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=100184

//“திராவிடர்கள் ஆவிடைக்குள் இருக்கும் லிங்கத்தை வழிபடுபவர்கள். உலகிலுள்ள எல்லாத் தொன்மையான நாகரிகத்தினரும் குறி வழிபாட்டினர்தாம்.

ஆயினும் திராவிட சமயத்தினரை ஆண்குறியை (சிசுனத்தை) வழிபடுபவர்கள் எனப் பழித்த வைதிக மரபில் வந்த ஆதிசங்கரர், அந்தச் சமயத்தை உயர்த்திப் பிடித்த ஞானசம்பந்தரை ‘திராவிடச் சிசு’ என்றும் பழித்தார்.

பிறப்பில் ஆரியராயினும், அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டுத் திராவிடச் சிசு ஆக்கப்பட்டார்.

அவ்வளவு சினம் ஆதிசங்கரருக்கு.

ஞானசம்பந்தருக்கு மிகவும் பின்னால் வந்தவர் ஆதிசங்கரர். செத்துப் போனவரைக்கூடத் தன் சாதியில் இருக்கவிட ஆதிசங்கரருக்கு மனம் இல்லை.”//

தமிழரான நாங்கள் ஆண்குறியை வணங்கினோமா? என்ன ஒரு அவச் சொல் ? நாங்கள் தமிழர் என்றால் எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமாகப் பேசி அவமதிப்பதா ?

அதிலும், குழந்தைகள் எல்லாம் ஆண்குறிகள் என்கிற பொருளில் இவர் பேசுகிறார். அவர் பின்பற்றும் வெள்ளையர்கள் கூடப் பேச அஞ்சுகிற பிறழ்தலைகளை இந்த மதிப்பிற்குரியவர் பேசலாமா ?

எங்கள் சைவ சித்தாந்தத்தின் மதிப்புக்கு உரிய தலைவர்களில் ஒருவர் ஞானசம்பந்தர். அவரைச் சாதி விலக்கம் செய்தார்கள் என்று பழ. கருப்பையா சொல்லுகிறார். சாதி விலக்கம் செய்ய மற்ற சாதிக்காரர்களின் அனுமதி வேண்டும் என்கிற அடிப்படையான இந்திய மரபுகூட இந்த அறிஞருக்குத் தெரியாமல் போனது வேதனை தருகிறது.

<h>ஆதிவாசிகளின் சாதியமைப்பு முறை </h>

இந்தத் தமிழ் மண்ணில் ஒரு சாதியானது மற்ற சாதிகளோடு இணைந்துதான் செயல்படும். ஆதிவாசிகளின் இயற்கை சார்ந்த ஆன்மிகப் புரிதலின்படி சாதிகள் ஒன்றிணைந்து குலங்களாக மட்டுமே “ஒத்திசைவுடன்” செயல்படும். மார்க்ஸியவாந்திகள் சொல்லுவதுபோல “முரணியக்கத்துடன்” அல்ல.

ஒரு குலத்தில் பல சாதிகள் உண்டு. ஒரு குலத்தில் உள்ள ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவரை சாதிவிலக்கம் செய்ய வேண்டுமானால், அந்தக் குலத்தில் உள்ள மற்ற சாதியினரின் அனுமதி வேண்டும். அப்படியல்லாமல், தனிப்பட்ட அரசனோ, சமூகத் தலைவரோ, மதத் தலைவரோ உத்தரவு போட்டு யாரையும் சாதியில் இருந்து விலக்கிவிட முடியாது.
சமூகத்தில் இருக்கிற தலைவர்களாலேயே முடியாது. சமூகத்திற்கு வெளியே இருக்கிற துறவியால் முடியுமா?

எல்லாவித சமூக முறைகளுக்கும் வெளியே இருக்கிற ஆதி சங்கரர் போன்ற ஒரு துறவிக்கு சாதிவிலக்கம் செய்யும் அதிகாரம் கிடையவே கிடையாது. இந்த அடிப்படையான உண்மைகள் அறிஞரான பழ. கருப்பையாவிற்குத் தெரியாமல் போனது வருந்தத்தக்க நிலை.

அப்படிப் பல சாதியினர் ஒன்று சேர்ந்து நிர்வகித்துக் கொண்ட பஞ்சாயத்து முறையைத்தான் மகாத்மா காந்திஜியும் போற்றினார். முழுமையான காந்தியவாதி தரம்பால் அவர்கள். அவர் இந்திய சாதி அமைப்பு பற்றி இப்படிச் சொல்லுகிறார்:

// “இந்தியாவின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக ஜாதியே சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு எப்படி வந்து சேருகிறோம்? கிராமங்களைப் போலவே ஜாதியும் இந்திய வரலாறு முழுவதும் இந்திய சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத அங்கமாகவே இருந்துவந்திருக்கிறது. மனுஸ்மிருதி போன்றவை இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தியது உண்மைதான்.

ஆனால், அதற்கு முன்பிருந்தே பழங்குடிகளும் ஜாதிகளும் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. இன்றும் இருந்து வருகின்றன. ஆனால், இந்திய வரலாற்றில் இப்போது இருப்பதுபோல் ஜாதியானது என்றைக்குமே பெரிய பிரச்சினையாக இருந்ததாகத் தெரியவில்லை.

பல்வேறு ஜாதிகள் அருகருகே வசித்து வந்திருக்கின்றன. தமக்குள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான, பெருமைக்குரிய சடங்கு சம்பிரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று சண்டையும் இட்டும் வந்திருக்கின்றன.

பொதுவாக நம்பப்படுவதற்கு முற்றிலும் மாறாக, அதாவது மனு ஸ்மிருதி பற்றிச் சொல்லப்படும் பொய்களுக்கு முற்றிலும் எதிராக, பிரிட்டிஷார் இந்தியாவை வென்றபோது ஆட்சியில் இருந்த பெரும்பான்மையான அரசர்கள் எல்லாம் சூத்ர ஜாதியைச் சேர்ந்தவர்களே.

இந்தியாவில் தனித்தனியான ஜாதிகள் இருந்தது இந்திய அதிகாரவர்க்கத்தின் பலவீனமான நிலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அதேநேரத்தில் அந்த ஜாதி அமைப்பே இந்திய சமூகம் நீடித்து நிலைக்கவும் காரணமாக இருந்திருக்கிறது. அதன் தாக்குபிடித்தலுக்கும் மீண்டும் எழுந்து நிற்கும் வலிமைக்கும் காரணமாக இருந்திருக்கிறது.

ஜாதி அமைப்பு இந்தியாவைப் பிரித்திருக்கிறதா… ஒத்திசைவுடன் இயங்க வைத்திருக்கிறதா என்பது விரிவான விவாதத்துக்கு உரியது. இன்றுவரை அதற்கு எந்த உறுதியான பதிலும் கிடைக்கவில்லை.

பிரிட்டிஷார் இந்திய ஜாதி அமைப்பைத் தீமையானது என்று சொன்னதற்கு அவர்கள் ஜாதி (குழு) அற்றதன்மையை நம்பியவர்கள் என்பதோ மேல் கீழ் கட்டுமானத்தை வெறுப்பவர்கள் என்பதோ காரணமல்ல.

இந்திய சமூகத்தை அவர்கள் விரும்பியதுபோல் உடைப்பதற்கு ஜாதி தடையாக இருந்தது என்பதுதான் காரணம். இந்திய சமூகத்தை பலவீனப்படுத்தி ஒரே குடையின் கீழ்கொண்டு வந்து நிர்வாகம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருந்திருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்ன பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது வேறு விஷயம். ஆனால், நேற்றைய இந்திய சமூகத்துக்கு அது கெடுதலாக இருந்தது என்ற கருத்தாக்கம் பிரிட்டிஷாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்றுதான். அது உண்மை அல்ல என்பதற்கான ஆதாரங்கள் பிரிட்டிஷாரின் ஆவணங்களிலேயே ஏராளம் இருக்கின்றன.” //

காந்தி சொன்னவையோ காந்தியவாதிகளின் ஆய்வோ காங்கிரஸ்க்காரர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அதைப் பெரிது படுத்த வேண்டாம்.

ஆனால், தமிழர்கள் ஆண்குறி வழிபட்டவர்கள் என்று சொன்னதன் மூலம், தமிழர்கள் எல்லாம் சாத்தானைக் கும்பிடுகிறவர்கள் என்கிற அவப் பெயருக்கு இட்டுச் செல்ல முயல்கிறார் பழ.கருப்பையா அவர்கள். அறிந்தோ. அறியாமலோ.

<h>ஆதித்தமிழர் மனம் கதறுகிறது</h>

இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆதித்தமிழர் மனம் கதறுகிறது. தமிழர்களின் தாய்மதமான சனாதன தர்ம மரபில் சாத்தான் என்கிற கருத்தே கிடையாது. எம் தமிழ் ஆதி மரபின்படி “கடவுள் உண்டு. கடவுள் மட்டுமே உண்டு. சாத்தான் கிடையாது.”

இதைச் சொல்லும் தைரியம் தூய தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. தைரியம் இருந்தால், பழ. கருப்பையா அவர்கள் “சாத்தான் என்பது கிடையாது. அது பொய். சாத்தான் இல்லை. சாத்தான் இல்லை. சாத்தான் இல்லை. சாத்தானை நம்புகிறவன் முட்டாள்.” என்று சொல்லட்டுமே.

அவர் தமிழன் என்றால், அவர் உடலில் தமிழர்களின் ரத்தம் இன்னும் ஓடுகிறது என்றால், அவர் சொல்லுவார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

<h>யார் திராவிட சிசு?</h>

திராவிட சிசு என்று ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரரால் கொண்டாடப்படுகிறவர் யார் என்பது குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

திராவிட தேச மொழிகளான தெலுங்கிலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் ஸௌந்தர்ய லஹரிக்கு உரை எழுதியவர்கள் திராவிட சிசு என்று குறிப்பிடப்படுகிறவர் ஆதி சங்கரர் என்று சொல்லுகிறார். அதாவது, அப்படிப் பெருமிதமாகத் தன்னையே ஆதி சங்கரர் குறிப்பிடுகிறார் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

அப்படி அவர்கள் சொல்லுவதற்குப் பொருந்தும்விதமாக ஆதி சங்கரரின் வரலாற்றிலேயே ஒரு நிகழ்வு வருகிறது. தனது செயல்த்திட்டத்தின் கடைசித் தலமாகக் கஷ்மீரில் உள்ள, இப்போது பாகிஸ்தானில் இருக்கும் சாரதா பீடத்துக்குப் போகிறார் ஆதி சங்கரர்.

அங்கே இந்தியாவின் ஒவ்வொரு திசையைச் சேர்ந்த மாபெரும் ஞானிகளும் அவரவருக்கான திசை சார்ந்த வாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும் என்பது விதி. அப்போது, ஆதி சங்கரர் எந்த வாசலைத் தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

ஆதிதிராவிடர்களான நாங்கள் வாழும் தென் திசையையே அந்த ஆதி திராவிட சிசு தேர்ந்தெடுத்தார்.

தென்னாடுடைய சிவன் காலடிக்கு அருகில் உள்ள மாணிக்க மங்கலம் எனும் கிராமத்திலும் இருக்கிறார். அங்கே அவரது காதல் மனைவியான காத்யாயினி ஆதி சங்கரருக்கு ஞானப் பால் தந்ததாக ஆதி சங்கரர் வரலாறு சொல்லுகிறது. அந்த நாட்டார் கதையும்கூட மற்ற திராவிட உரையாசிரியர்களின் கருத்துடன் பொருந்துகிறது.  ஆதி சங்கரர் தன்னைத்தானே திராவிட சிசு என்று சொல்லி இருக்கலாம்.

ஆனால், ஆதித்தமிழரான எங்களுக்கு இக்கருத்து ஏற்புடையதல்ல.

<h>வேதங்களைக் காக்கும் ஆதித்தமிழ் மரபு</h>

வேதங்கள் காக்கும் தமிழ் மரபானது, “திராவிட சிசு” என்று குறிப்பிடப்படுபவர் ஆதி சங்கரர் என ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்படி, ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரரால் திராவிட சிசு எனப் பாராட்டப்படுகிறவர் திருஞான சம்பந்தர்.

எங்கள் தமிழ்த் தெய்வமான சிவனும் பார்வதியும் பாலூட்டிய திருஞானசம்பந்தரையே ஆதி சங்கரர் போற்றிப் பாடுகிறார் என்று தமிழர்கள் சொல்லுகிறோம்.

அதாவது, மற்ற திராவிட தேச தெலுங்கு, மலையாள, கன்னட, குஜராத்தி மொழிபெயர்ப்புகளில் திராவிட சிசுவாகப் போற்றப்படுகிறவர் ஆதி சங்கரர் என்று சொல்லுவதை எங்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மறுக்கிறார்.

ஆம். தமிழர்கள் அறிஞர்கள். ஆண்குறி தவிர வேறு இன்பங்கள் அறிய முடியாத அலிகள் இல்லை. ஸௌந்தர்ய லஹரியை ஆதிதிராவிடத் தமிழர் ஒருவரும் மொழிபெயர்த்துள்ளார். 14 அல்லது 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிராஜ பண்டிதரே அந்த அம்மொழிபெயர்ப்பைச் செய்தவர். அவர் வீரை எனும் வீரவநல்லூரைச் சேர்ந்தவர்.

தமிழ்நாட்டை ஐந்து தேசங்களாகப் பிரிப்பார்கள். அவற்றில் பாண்டிய தேசத்தைச் சேர்ந்தவர் அவர். அவரது அந்த மொழிபெயர்ப்புக்கு 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ எல்லப்ப நாவலர் எனும் தமிழர் உரை எழுதி இருக்கிறார்.

1800களில் முதன் முதலில் அச்சுப் பதிப்பு இந்தியாவுக்கு வந்தது. அப்போது அச்சு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நூல்களில் மிகவும் பிரபலமானதாக இருந்தது இந்த சைவ எல்லப்ப நாவலர், சௌந்தர்ய லஹரிக்கு எழுதிய உரைதானாம்.

அந்த உரையின்படி புஷ்பதண்டர் என்பவர்தான் சௌந்தர்ய லஹரியின் முதல் பாகமான ஆனந்த லஹரியை எழுதியவர். அவர் கௌடபாதருக்குச் சொல்லித் தர, அவர் ஆதிசங்கரருக்குச் சொல்லித் தந்திருக்கிறார். ஆதி சங்கரர் மேலும் 41 பாடல்களைப் புனைந்து சௌந்தர்ய லஹரியை உருவாக்கினாராம்.

அந்த மொழிபெயர்ப்பில் வீரை கவிராஜ பண்டிதர் கருத்துப்படி, சீர்காழியில் வாழ்ந்த கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த குழந்தைக்கு எங்கள் தமிழ்த்தாய் பார்வதி பாலூட்டினாளாம்.

<h>யார் அந்தக் குழந்தை?</h>

அது வேறு யாருமல்ல, சைவக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர்தான்.

இப்படித் தமிழ் மொழிபெயர்ப்பாளர் சொல்வதற்கும் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் சொல்வதற்கும் உள்ள முரண்பாட்டை விலக்கி உண்மையை ஒளியை அறிவது எப்படி ?

உண்மை ஒளியை உலகிற்குக் காட்டிய ரமண மகிரிஷியைத்தான் கேட்கவேண்டும். அவரும் மிகத் தெளிவாக, உறுதியாக ஆதி சங்கரரால் “திராவிட சிசு” என்று போற்றப்பட்டு இருப்பவர் திருஞானசம்பந்தரே என்று போட்டு உடைத்து விட்டார். அவர் இப்படி பொருள் விளக்கிய இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. தமிழ்க்கடவுளின் அவதாரமான அந்த ரமணரும் ஆதித்தமிழர்தானே.

அந்த ரமணரைப் போற்றிய மகத்தான் கவிஞரான நாயனார். அவர் ரமணரைப் போற்றிப் பாடிய பாடலில் ரமணருக்குப் பல பெயர்கள் தருகிறார். அந்தப் பலபெயர்களில் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும் ரமணரின் அருள் நமக்குக் கிடைக்கும் என்கிறார். அந்தப் பாடலில் ரமணரின் பலபெயர்களில் ஒரு பெயர் என்ன தெரியுமா?

திராவிட சிசு.

<h>தமிழ்ப் பண்டிதர் யார்? </h>

இப்படியெல்லாம் தெளிவாகத் திராவிட சிசு எனப்படுவது திருஞானசம்பந்தர்தான் எனச் சொல்லுகிற வீரை கவிராஜ பண்டிதரும் ரமணரும் தமிழரா, இல்லை பழ. கருப்பையா அவர்களுக்கு வெள்ளையர்களின் போதனைப்படி பொய்யான தகவல் தந்த இன்னொருவர் பண்டிதரா?

யார் அந்த இன்னொரு பண்டிதர் என்று கேட்கிறீர்கள். அவர் என்ன செய்தார் என்று கேளுங்கள்.

தமிழர்கள் ஆண்குறியை வணங்கினார்கள் என்கிற வசவைத் தமிழர்கள் மேல் சுமத்துகிறார் பண்டித அப்பாத்துரை. அவர் சொல்லுகிறார்:

“இருக்குவேத ஆரியர் தங்கள் எதிரிகளை ஆரியர் அல்லாத வர்கள், தாசர்கள்
(கறுப்பர்கள்), புரியா மொழி பேசுபவர்கள், சப்பை மூக்கர், தமக்கென்று
வேறுமாதிரியான வழிபாடுகளையுடையவர்கள், சிசுன தேவர்கள் (இலிங்கத்தை
வணங்குபவர்கள்), மாயமந்திரம் வல்லவர்கள், கோட்டையால் பாதுகாக்கப்பட்ட பல
நகரங்களையுடைவர்கள், மிகுந்த செல்வமுடையவர்கள் என்றெல்லாம்
குறிப்பிட்டுள்ளனர். இவ்வர்ணனைகள் அனைத்தும் சிந்துவெளி நாகரிகத்துடன்
முற்றிலும் பொருந்துபவையே. இந்திரன் உதவியால் இம்மக்கள் நகரங்களைத் தாங்கள்
அழித்ததாக அவர்கள் பல தடவை கூறுகின்றனர்.”

அதாவது சிந்துச் சமவெளியில் இருந்தவர்கள் தமிழர்கள். அவர்கள் ஆண்குறியை வணங்கினார்கள். அவர்களை ஐரோப்பிய ஆரியர்கள் வென்றார்கள். அப்படி ஐரோப்பிய ஆரிய இனத்தால் வெல்லப்பட்ட தமிழர்கள் என்று அப்பாத்துரை அவர்கள் நம்மைக் கேவலப்படுத்துகிறார்.

அப்படி அப்பாத்துரை சொன்னதை அப்படியே உள்வாங்கி பழ.கருப்பையாவும் பேசுகிறார்.

தமிழர்கள் ஆண்குறியை வணங்குகிறவர்கள் என்று சொல்லி ஐரோப்பியர்களுக்கு சாமரம் வீசுகிற இந்த அப்பாத்துரை பண்டிதரா?

அல்லது, எங்கள் குரவர்களில் ஒருவரான ஞானசம்பந்தரைப் போற்றுகிற வீரை கவிராஜர் பண்டிதரா?

சுயமதிப்பு உள்ள தமிழர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.

<h>வியர்த்து விறுவிறுத்து அமர்ந்தது விவேகானந்தரா?</h>

எதுகை மோனையோடு பேசவேண்டும் என்பதற்காக விவேகானந்தர் எனும் ஞான தீபத்தைக் கேவலப்படுத்தி இருக்கிறார் பழ. கருப்பையா. ஒருவேளை விவேகானந்தர் அடிமைத்தன்மை இல்லாத சுதந்திரமானவர் என்பதால் அவருக்கு வயிற்றெரிச்சலா? தெரியவில்லை.

பழ. கருப்பையா அவர்கள் சொன்னது போல விவேகானந்தரிடம் மனோன்மனீயம் அருளிய சுந்தரம் பிள்ளை அவர்கள் உரத்த “ஆணித்தரமான குரலில்” குறுக்கிடவில்லை. சுந்தரம் பிள்ளை அவர்கள் வீட்டில் விவேகானந்தர் பல நாட்கள் தங்கி இருந்தார். அப்போது, சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அவருடைய கோத்திரம் என்ன எனக் கேட்டிருக்கிறார் விவேகானந்தர். அந்தக் கேள்விக்கு, “நாங்கள் திராவிடர்கள். எங்களுக்கு அதெல்லாம் கிடையாது” என்று கிறுத்துவ ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட ஒரு பொய்யான நம்பிக்கையை, கருத்தைச் சொல்லுகிறார் சுந்தரம் பிள்ளை.

அதைக் கேட்ட விவேகானந்தர் மிகவும் வேதனை அடைந்தார். “இப்படி எல்லாம் பொய்களை நம்பி வேதங்களின்மேல் உங்களுக்கு இருக்கும் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் வேதங்கள் ஓதிய தமிழர்கள். வேதம் ஓத அனைவருக்கும் உரிமை உண்டு. அதை முற்றிலும் மறந்துவிட்டு, பார்ப்பனர்களுக்கு மட்டுமே அதைக் கொடுத்துவிட்டீர்களே. உங்கள் கடமையை, உரிமையை விட்டுவிட்டீர்களே.” என்று வருத்தப்பட்டார்.

“இப்படி உங்கள் உரிமையை நீங்களே கைகழுவி விட்டு பார்ப்பனர்கள் அதில் ஆதிக்கம் செய்யும்படி செய்துவிட்டீர்கள்” என்றும் வருத்தப் பட்டு இருக்கிறார். இதுவும் பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்ச்சி.

விவேகானந்தரோடு பழகியவர்கள் அனைவரும் ஒன்று சொல்லுகிறார்கள். அவரோடு பழகும்போது உங்களுக்குள் மிகுந்த சக்தி ஒன்று புகுந்துகொண்டதை உணர்வீர்கள். விவேகானந்தரை ஒரு சக தோழராக, சமத்துவ உணர்வோடு மட்டுமே பழகுவீர்கள். அவரைவிட நான் தாழ்ந்தவள் என்பது போன்ற உணர்வு எனக்கு வரவில்லை. யாருக்கும் வரவில்லை என்கிறார்கள்.

மனோன்மணீயம் தந்த சுந்தரம் பிள்ளை அவர்களும் பக்குவமானவர். அங்கனம் நாகரீகம் மிகுந்த இருவர் உரையாடிய நிகழ்வை, சண்டை போலத் திரிக்கிறார் பழ. கருப்பையா. இரண்டு நல்ல நண்பர்களை எதிரியாக்கிப் பார்ப்பது சகுனிகள்கூடச் செய்யாத தவறு.

<h>வேதம் காக்கும் தமிழர் பற்றி விவேகானந்தர் </h>

பழ. கருப்பையாவால் வங்காளி என்று பிரித்துப் பேசப்படுகிற விவேகானந்தர் தமிழர்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

இந்தியாவின் உன்னத ஆன்மீக-சமூக எதிர்காலத்தைத் தமிழர்கள்தான் உயர்த்திப் பிடிக்கப் போகிறார்கள். அவர்களால்தான் இந்தியா உயரப்போகிறது என்று விவேகானந்தர் சொல்லுகிறார்.

அங்கனம் இந்தியர்களுக்குத் தலைமை ஏற்கப் போகிற தூய அத்துவித தமிழ்ச் சிங்கம் பழ. கருப்பையா அவர்கள் வீட்டில் இருந்தும் கூட வரலாம்.

அப்படித் தமிழர்கள்மேல் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்த விவேகானந்தரைப் போற்றுவதா, அல்லது தமிழர்கள் எல்லாம் ஆண்குறியை வணங்கிய ஐரோப்பிய ஆரியர்களின் அடிமைகள் என்று சொல்லுகிற பழ. கருப்பையாவைப் பின்பற்றுவதா என்பதைக் கொஞ்சமேனும் சுயமதிப்பும் சுயசிந்தனையும் உடைய தமிழர்கள் அறிவார்கள்.

அவர்களிடம் ரேஸிஸமோ கேஸ்டிஸமோ கிடையாது.

__

Series Navigationஅழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா
author

Similar Posts

66 Comments

  1. Avatar
    ஷாலி says:

    அய்யா ஆதிவாசி! சுயமதிப்பும் சுயசிந்தனையும் உடைய தமிழர்கள் இன்று ஐரோப்பியரையும் பழ.கருப்பையாவையும் பின்பற்றவில்லை. . ஸிஶ்ன-தேவாஹ் என்ற பதத்தை ஐரோப்பியர்கள் மொழி பெயர்த்ததை வைத்து யாரும் கும்பிடுவதில்லை. இந்து புராணங்கள் கூறுவதை நம்பியே (சிவ)லிங்க பூசை செய்கிறார்கள்.

    லிங்கம் என்ற வட மொழி சொல் ஆணின் இனப் பெருக்க உருப்பையே குறிக்கும். சிவனும் பார்வதியும் புணரும் பொழுது சிவன் சபிக்கப் பட்டதால் லிங்க வடிவமாகவே அறியப் படுவதுதான் புராணச் செய்தி.

    “ஸ்கந்த புராணத்தின்படி சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, சரஸ்வதி நதிக்கரையில் மகரிஷிகளும் தேவர்களும் உலக நன்மை கருதி மஹா யாகம் ஒன்று நடத்தினார்கள். சப்த ரிஷிகளில் ஒருவரான அதில் பிருகுவும் கலந்துகொண்டார். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யாருக்கு பூர்ணாஹுதியும் முதல் மரியாதையும் சமர்ப்பிப்பது என்ற கேள்வி எழ… மும்மூர்த்திகளில் எல்லா வகையிலும் உயர்ந்தவருக்கே பூர்ணாஹுதி செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    மும்மூர்த்திகளில் சிறந்தவர் யார் என்பதைப் பரீட்சித்து முடிவு செய்யும் பொறுப்பை பிருகு ஏற்றுக்கொண்டார். . பிரம்மா சிருஷ்டியை ஆரம்பித்தபோது, தனக்கு உதவி செய்ய பிரஜாபதிகளை உருவாக்கினார். அவர்களில் ஒருவர்தான் பிருகு மஹரிஷி. முதலில், பிரம்மலோகம் சென்றார் பிருகு. அங்கே நிஷ்டையில் இருந்த பிரம்மா, முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. ‘மானஸ புத்திரனே வா!’ என்று அழைக்க வில்லை. இதனால் கோபம் கொண்ட பிருகு, காரண- காரியங்களைப் பற்றிச் சிந்திக்காமல் பிரம்மனுக்குச் சாபம் தந்தார். ‘கலியுகத்தில் உமக்கு ஆலயங்கள் இருக்காது. எவரும் உமக்கு நித்ய பூஜைகள் செய்ய மாட்டார்கள்’ என்பதே அவர் தந்த சாபம். இன்றும் இது நடைமுறையில் இருப்பது பலரும் அறிந்த உண்மை. புஷ்கர் என்ற இடம் தவிர, வேறு எங்கும் பிரம்மனுக்குப் பிரசித்தமான ஆலயங்கள் கிடையாது.

    அடுத்து, திருக்கயிலாயம் சென்றார் பிருகு முனிவர். அங்கு சிவபெருமான் பார்வதியுடன் ஆனந்த தாண்டவத்தில் இணைந்து ஈடுபட்டிருந்ததால், முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. நந்திதேவரும் முனிவரைத் தடுத்து, சற்றுக் காலம் தாழ்த்தி சிவ தரிசனம் செய்யுமாறு வேண்டினார். சிவனார் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்ததாகக் கருதி, அவருக்கும் சாபம் தந்தார் பிருகு. ”கலியுகத்தில் உம்மை அருவுருவமான லிங்க வடிவில் மட்டுமே வழிபடுவார்கள்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்….”

    பிருகு முனிவரின் சாபப்படியே இன்றும் ஆவுடையுடன் இணைந்த லிங்க வழிபாடு தமிழர்கள் கோயில்களில் நடைபெறுகிறது. பிருகு முனிவர் உருவாக்கிய ஜோதிட சாஸ்திரம் ‘பிருகு ஸம்ஹிதை’ எனப்படுகிறது. இதுவே இந்து ஜோதிட சாஸ்திரத்தின் மூலாதார நூல். இந்த பிருகு புராணத்தை நம்ப முடியாதென்றால் இன்றைய சுய சிந்தனை,சுய மதிப்பு தமிழர்கள் பார்க்கும் ஜோதிட ஜாதகங்களையும் புறந் தள்ளவேண்டும்.சு.சி, சு.ம. தமிழர்கள் தயாரா?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இலிங்கம் என்பது ஆண் குறியன்று; அதை ஆண் குறியென்று ஆங்கிலேயர்கள் திரித்துச் சொல்லி நம்மை நம்ப வைத்துவிட்டார்கள் என்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. இலிங்கம வழிபாட்டை (இங்கு போடப்பட்டிருக்கும் படத்தைப்பாருங்கள்) ஆண்குறி வழிபாடு. அதாவது பெண் பிறப்புறுப்பில் ஆண் பிறப்புறுப்பு என்று இந்துக்களே மறுக்காமலிருக்கும்போது இஃதென்ன புதுக்கதையாக இருக்கின்றது? இறைவனும் இறைவியும் சேர்ந்து நம்மைப் பெற்றார்கள்; அவர்களே நம் வாழ்க்கைக்குத் துணையென்ற கொண்டதுதான் அவ்வழிபாட்டின் மொத்த கருத்து என்பதை வெள்ளைக்காரன் சொல்லித்தான் நாம் புரிந்தோம் என்கிறீர்களே எப்படி? அப்புணர்ச்சி கேவலமானது என்ற எண்ணம் எப்படி உங்கள் மணத்தில் நுழைந்தது? எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிதன் விளைவாகத்தானே நாம் பிறந்தோம். அம்மகிழ்ச்சியை கேவலம் என்பது எப்படி? ஏன் வெட்கம்? அப்படி வெட்கப்படச்சொல்லி உங்களை மூளைச்சலவை செய்தததுதான் கிருத்துவம். ஆக, பிறமதக்கருத்துக்கு அடிமை யாரிங்கே?

      விவேகானந்தருக்கும் சுந்தரம் பிள்ளைக்குமிடையில் நடைபெற்ற உரையாடலை பழ கருப்பையா திரிக்கிறார் எனபதை ஆதாரத்தோடுதான் நிரூபிக்கவேண்டும். ஆதாரத்தைக் காட்டினால் நேரடியாகப்போய் படித்துக்கொள்ளலாம். சும்மா

      //பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்ச்சி.//

      எங்கே பதிவுபண்ணப்பட்டிருக்கிறது? ஆதாரத்தைச் சகாட்டுங்கள்.

      பிள்ளை உரத்தகுரலில் சொல்லவில்லை, மெதுவான குரலில்தான் சொன்னர் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? அங்கு நீங்கள் இருந்தீர்களா? பழ கருப்பையா, பிள்ளையில் எதிர்வாதத்தில் இருந்த வேகத்தை வைத்து
      //உரத்த குரலில் ஆணித்தரமாக பிள்ளை விவேகானந்தரிடம் சொன்னார்//

      என்று ஒரு ஊகமாகத்தான் சொல்கிறார்.. அவர் சொன்னதாவது நம்பும்படி இருக்கிறது. நீங்கள் சொல்வது அரசியலாகவல்லவா இருக்கிறது?

      கட்டுரையில் பலவிடங்களில் ‘நாங்கள் தமிழர்கள்” என்கிறீர்கள். அப்படியென்றால் பழ.கருப்பையா இங்கிலீஸ்காரரா?

      //நாங்கள் தமிழர்கள். ஆதிமரபான வேதமரபு எங்கள் மரபு. //

      கொஞ்சம் விட்டால் சமஸ்கிருதமே தமிழரின் தாய்மொழி என்று சொல்லிவிடுவீர்கள். தமிழர்கள் தாய்மதம் ஹிந்துமதமன்று. வேதங்கள் வைதீக இந்து மதமாகும். வேதமதம் வடக்கிலிருந்து பிராமணர்களால் சமஸ்கிருத்தோடு கொண்டுவரப்பட்டது. வேதமதம் தமிழருக்கு அந்நிய மதம். வேதமதத்தை உங்களதாக கொண்டிருக்கும் நீங்கள் எப்படி ஆதி தமிழர்களின் பிரதிநிதியாகப் பேச முடியும்? வடக்கிலிருந்து அம்மதத்தைக்கொண்டுவந்தவர்கள் சார்ப்பாக அன்றோ பேசமுடியும்?

      இதையெல்லாம் சொன்னால், ஆங்கிலேயனுக்கு அடிமை என்பீர்கள்.

      தமிழரின் தாய் மொழி தமிழ் என்று சொல்ல ஆதாரம் தேவையேயில்லை. தமிழரின் தாய் மதம் வேதமதம் என்பதற்கு ஆதாரம் தேவை. சங்க இலக்கியத்தையும் தொல்காப்பியத்தையும் காட்டாதீர்கள். அக்காலத்திற்கு முன்பே சமஸ்கிருதம் பேசி தமிழகத்துக்குள் பிராமணர்கள் வந்தேறி தமிழர் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, சிலப்பதிகாரக் காலத்தில் முற்றிலும் மாற்றிவிட்டார்கள் எனபதை தமிழ்ப்பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. சங்ககாலத்திலிருந்துதான் தமிழ்நாட்டில் மக்கள் வாழத்தொடங்கினார்கள் என்ற கதைவேண்டாமிங்கே :-)

  2. Avatar
    வெங்கடேஸ்வரி says:

    ​ஒரு துப்பறியும் கதையைப் படிப்பது போல விறுவிறுப்பாக, எதிர்பாராத திருப்பங்களுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது. புதிய தகவல்கள் தரும் சூப்பரான கட்டுரை.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. sensational thriller !

  3. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    தாங்கள் பகிர்ந்தது சுட்ட கதையா சுடாத கதையா :-)

  4. Avatar
    ஷாலி says:

    வாங்க கிருஷ்ணாஜி வாங்க! தளத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது.நலம்தானே!

    //சுட்ட பழமா? சுடாத பழமா?//

    என்ன ஸ்வாமி! என்னைப்பார்த்து இந்த கேள்வியை கேட்டுவிட்டீர்கள்? நான் என்று மூலத்தைப் பார்த்து எழுதினேன்?ஒரிஜினல் மூலப் பிரதியை வைத்தே நெட்டில் முழம் போடுவது தாங்கள் மட்டும்தானே! நெட்டில் சுட்ட பழத்தை மட்டுமே பகிர்வதுதான் என் பரிதாப நிலைமை.இருந்தாலும் ஒரு ஆறுதல் தங்களின் ஆஸ்தான தமிழ் இந்து தளத்திலிருந்துதான் இதை சுட்டிருக்கிறேன்.

    சந்தோசமாக சாப்பிடுங்கள்.சுட்டதோ,சுடாததோ, கோழி குருடா இருந்தால் என்ன ஸ்வாமி! குழம்பு ருசியா இருக்கான்னு பாருங்கோ!

  5. Avatar
    ஷாலி says:

    //தமிழரான நாங்கள் ஆண்குறியை வணங்கினோமா? என்ன ஒரு அவச் சொல் ? நாங்கள் தமிழர் என்றால் எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமாகப் பேசி அவமதிப்பதா ?//

    நம்ம ஆதிவாசிக்கு ஆண்குறி என்றால் அருவருப்பாக உள்ளது.அதை கேவலமாக நினைக்கிறார். உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமுமே அதனதன் வேலையைச் செய்ய அவசியமாகிறது.தலைமுறை சந்ததிகளை உருவாக்கும் ஆண் குறியும் அப்படி உருவான சந்ததிக்கு உலகத்தைக்காட்டும் பெண் குறியும் கீழ்த்தரமா? என்ன மூடத்தனம்!

    சிவன் சிவலிங்கமாக

    “சிற்பவியலில் (Iconography) புலமை பெற்றவர்களிடையே சிவலிங்கம் முக்கியமான சர்ச்சைக்குரியதாவே இருக்கிறது. கடுந்தூய்மை (Puritanism) ஒழுக்க நெறிகளைப் பின்பற்றும் பெரும்பாலான மேற்கத்திய அறிஞர்கள் சிவலிங்க வழிபாட்டை போலியான, சீர்கெட்ட ஆண்குறி வழிபாடு எனக் குறுக்கியே நெடுங்காலம் விளக்கமளித்தனர். பக்தர்களான இந்து அறிஞர்கள் இக்கருத்துகளுடன் முரண்பட்டாலும், இத்தகைய தங்களது மத மரபுகளின் மீது வருத்தம் கொண்டிருந்தனர். ஆனால், தெளிந்த சிந்தனையுடைய பண்டைய இந்திய ரிஷிகளுக்கு, பாலியல் விழைவை மனித வாழ்வின் முக்கிய அம்சம் என்று ஏற்றுக்கொள்ளும் மனவிரிவு மட்டுமன்று, அதற்கு ஆன்மீகக் கருத்துருவின் தகுதி தந்து, அதனைக் கையாளும் தெளிவும் இருந்தது.
    இதில் சந்தேகம் எழுபவர்கள், பிருஹதாரண்யக உபநிஷத்தில் விளக்கம் பெறலாம் (அத்தியாயம்-1, பிராமணா-4). ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் இங்கு பிரம்மவித்யாவின் (Brahmavidya) புனிதத்துடன். போற்றப்படுகின்றன. சிவலிங்கம், ஆன்மீகத்தின் நிமிர்வு நிலையும் (புருஷா), கிடைத்தள நிலையில் இயற்கையின் தாய்மையும் இணையும் ஒத்திசைவைக் காட்டி நிற்கிறது…”

    -நித்ய சைதன்ய யதி.
    https://gurunitya.wordpress.com/2014/04/

  6. Avatar
    ஷாலி says:

    //வேதங்கள் காக்கும் தமிழ் மரபானது, “திராவிட சிசு” என்று குறிப்பிடப்படுபவர் ஆதி சங்கரர் என ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்படி, ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரரால் திராவிட சிசு எனப் பாராட்டப்படுகிறவர் திருஞான சம்பந்தர்.//

    ஸௌந்தர்ய லஹரி- சங்கரரே எழுதியதாய்ச் சொல்லப்படும் ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களில் ஒன்று.
    முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி எனப்படும். அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் ஸெளந்தர்ய லஹரி எனப்படும். இவை அனைத்தும் சேர்ந்தே ஸெளந்தர்ய லஹரி என்று அழைக்கப்படுகிறது. அதன் எழுபத்தி ஐந்தாம் ஸ்லோகத்தில் இந்தக் குறிப்பிட “த்ரவிட சிசு” என்னும் வார்த்தை காணப்படும்.

    தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
    பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ:
    தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
    கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா

    அம்பாளின் மார்பகங்ளிலிருந்து ஞானம், கருணை, செளந்தரியம், போன்ற அனைத்தும் அவள் இருதயத்திலிருந்து ஊறிப் பாலாகப் பெருகித் தன்னையும் அவளின் குழந்தையாக ஆக்கியது என்கிறார். இதை உண்டதாலேயே ஸாக்ஷாத் சரஸ்வதியின் சாரம் தமக்குள்ளே ஊறிக் கவிதை மழை பொழிய முடிந்தது எனவும் கூறுகிறார்.

    இது சங்கரரே எழுதியதாய்ச் சொல்லப்படும் ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களில் ஒன்று.
    இங்கே ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் குறிப்பிடக் காரணம் ஏதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. மேலும் மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன் முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது என்பதையும் அறிவோம். ஆதிசங்கரரும் அப்படியான தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவரே என்பதால் தம்மைத் தானே இங்கே மூன்றாம் மனிதர் போல் பாவித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அம்பாளின் ஞானப்பாலைக் குடித்து சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தைப் பெற்றதால் தம் வாக்கு வன்மை அதிகரித்துக் கவிஞர்களுக்கெல்லாம் கவியாகத் தம்மை ஆக்கிவிட்டது. இதுவும் அவள் அனுகிரஹமே என்கிறார் ஆதி சங்கரர்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //ஆதிசங்கரரும் அப்படியான தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவரே என்பதால்/

      சேர நாட்டினர் தமிழைத்தாய்மொழியாகக் கொண்டு பேசியிருக்கலாம். ஆனால் ஆதிசங்கரர் தமிழ்க்குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பது சென்னையில் அழகாகத் தமிழ் பேசும் மார்வாடி ஒருவரை தமிழ்க்குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பது போல. காரணம். ஆதிசங்கரர் ஒரு நம்பூதிரிப் பிராமணர். கேரளத்தில் இருவகை பிராமணர்கள்: 1. நம்பூதிரிப் பிராமணர்கள்; 2. கேரள ஐயர்கள். ஐயர்கள் தமிழ்நாட்டிலிருந்து போனவர்கள். நம்பூதிரிகள் வடக்கிலிருந்து கேரளத்துக்குச் சென்றவர்கள். கேரளமக்களில் பாதிப்பேர் நல்ல கலரில் இருப்பது நம்பூதிரிகள் வடகொடை. இப்படி கேரளத்தவரே சொல்லிக்கொள்ளும்போது உள்ளுழைந்து நம்பூதிரிகள், நாங்கள் பூர்விகக்குடிகள் என்றெல்லாம் பினாத்த மாட்டார்கள். சங்கரர் பூர்விக மலையாளியன்று. 7 ம் நூற்றாண்டென்பதால், மலையாளம் இல்லாத காலமானதால், அவருக்குத் தமிழும் வடமொழியும் தெரியும் மொழிகள். தமிழரும் இல்லை. மலையாளியும் இல்லை. தமிழரில்லாத காரணத்தாலும் வடமொழியைவைத்தே அவர் தன் மாயாவாதத்தை முன்வைத்த்தாலும், மாயாவாதத்தை ஏற்காத காரணத்தாலும் அவரைத் தமிழ்ச்சைவர் ஏற்கவில்லை. காஞ்சி மடம் தமிழ்ச்சைவர் மடமன்று.

  7. Avatar
    ஷாலி says:

    //தமிழரான நாங்கள் ஆண்குறியை வணங்கினோமா? என்ன ஒரு அவச் சொல் ? நாங்கள் தமிழர் என்றால் எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமாகப் பேசி அவமதிப்பதா ?//

    கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
    வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
    கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே
    (தொல்காப்பியம், புற. 27)

    கது>கந்து = மரத்தூண், தெய்வத்தூண் (மரத்தில் தெய்வப் படிமத்தைச் சிறிதாகக் கீறி குறிஞ்சி மாந்தன் வழிபட்டிருக்க வேண்டும். “கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்து” என்பது மணிமேகலை.)

    சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. லிங்க வழிபாடு சிவ வழிபாடாக மாற்றம் கொள்வதற்கு முன்னே ஆண்குறி வழிபாடு வேளாண்மையோடும் போரோடும் தொடர்பு கொண்ட இன்றியமையச் சடங்காக இருந்துள்ளது. தொல்காப்பியர் கந்தழி எனக் குறிப்பது ஆண்குறி வழிபாடே ஆகும் (கன்றாப்பூர் நடுதறி என அப்பர் கூறியது இதையே) . கந்தழி என்பது லிங்க வழிபாட்டை குறிப்பது என்று பல ஆய்வாளர்களால் முன்மொழியப்படுகிறது.

    “ஆழி பெரிது”-அரவிந்தன் நீல கண்டன் கூறுகிறார். “முருகனின் ஆகப்பழமையான வழிபாட்டு முறையான கந்தழி வழிபாட்டினைக் கூறலாம். சிவலிங்க வழிபாட்டுடன் தொடர்புடையது இது. சிவலிங்க வழிபாடோ ஹரப்பா மொஹஞ்சதாரோ காலம் தொட்டே நமக்கு கிடைக்கக் கூடிய ஒன்றாகும். ராமச்சந்திரன் கூறுகிறார்:
    “சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த “கந்துடைப் பொதியில்” குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை கியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.”

    இந்த வழிபாட்டின் தொன்மையான பதிவுகள் வேதத்திலேயே காணப்படுகின்றன. ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச் வேத மரபின் ருத்ரனுக்கும், லிங்க வழிபாட்டிற்குமான தொடர்பு குறித்து குறிப்பிடுகையில், “ஸ்தாணு – (வேர் சொல் ஸ்த – நிற்பது) -ஒரு கம்பம்- ருத்ரனின் குறியீடாகும். அது மேல்நோக்கி நிற்பதென்பது பிரபஞ்சத்தினூடே ருத்ரன் நெகிழ்வற்று நிற்பதைக் குறிப்பதுடன் விந்துவினை மேல்நோக்கி செலுத்துவதனையும் குறிப்பதாகும். ஸ்தாணு எனும் கம்பம் எனும் இந்த சித்திர உருவாக்கம், விறைப்படைந்த ஆண்குறியினை எதிர்மறையாக விலக்கிடும் (negation) முரணான (paradox) உருவாக்கமாகும்….ஸ்தாணுவின் செங்குத்தான தன்மை ருத்ர-சிவனின் யோகித்துவத்தின் குறியீட்டாகும். இந்த குறியீட்டு உருவக கம்பம் உயிரினை உருவாக்கும் விசைக்கும் அதனை விலக்கிக் கட்டுப்படுத்துவதற்கும் இடையிலான விறைப்பினைக் குறிப்பதாகும்.” என்கிறார். (க்ராம்ரிஸ்ச், The Presence of Siva,1981, பக்.119).”

  8. Avatar
    ஷாலி says:

    //தமிழர்கள் ஆண்குறியை வணங்குகிறவர்கள் என்று சொல்லி ஐரோப்பியர்களுக்கு சாமரம் வீசுகிற இந்த அப்பாத்துரை பண்டிதரா?//

    உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்…. கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும் உருவகித்து “நாயக- நாயகி – பாவ”த்தை காட்டியது தமிழ் வழிபாடு.

    பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக – நாயகி பாவ வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம் தான் லிங்கம்

    இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில் கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம்.

    வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு சின்னம்.ஆமாம்… காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம்.

    ஆணும்… பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.

    தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால்லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின் மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.
    -அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
    http://thathachariyar.blogspot.in/2010/10/12.html

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      ஷாலிக்கு வைணவத்தைப்பற்றி பரிச்சயம் இல்லை போலும்! சைவத்தோடு, அதாவது சிவன் வழிபாட்டோடு, நின்று விட்டார். அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் சுவாமி வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அதே நூலில், வைணவத்திலும் உள்ள இச்சிருங்கார வழிபாட்டைப்பற்றியும் எழுதியிருக்கிறார். குறிப்பாக, திருவரங்கத்தில் இரங்கன்ம இரங்கநாயகி நாச்சியாரோடு இணையும் பொருட்டு இரவில் எவருக்கும் தெரியாத படி செல்வதாக ஒரு நிகழ்ச்சி உண்டு என்கிறார். ஷாலி தேடிப்படித்துப்படிப்பார் என நம்புகிறேன்.

      வைணவம் என்ன சொல்கிறது? இந்த உலகத்திலும் பிரபஞச‌ங்களிலும் ஒரே ஒருவர்தான் ஆண். அவர் பெருமாள். சேதனர்கள் அனைவரும் பெண்களே.

      அதாவது நாம் பெண்ணாகி இறைவன் ஆணாகி, இறைவனோடு கலத்தலே முக்தி நிலை. இறைவனுக்கு நிகராக உலகில் ஆண் இல்லை; இல்லவே இல்லை. ஒப்பில்லா அப்பன் அவன். உப்பிலியப்பன் என்பது திரிபு.

      இக்கலத்தல் பக்தியில் ஒருவகையான சிருங்காரத்தில் கொண்டு விட்டால் வியப்பேது?

      இதனாகவே, பெண் பக்தைகளுக்கு அடிச்சது லக். அவர்கள் தங்கள் பாலை(sexula idenity) மாற்றாமல் பெருமாளைக் காதலிக்கலாம்; காமுறலாம்; கலத்தல் செய்யலாம்.

      ஆண்களாய் பிறந்தோருக்கு என்ன வழி? ஒரே வழி. பெண் பாவனைதான். இதனாலேயே, நம்மாழ்வார் பராங்குச நாயகியாக தன்னை மாற்றிக்கொண்டு திருக்குறுங்குடி நம்பிராயரை காதலிக்கிறாள்.; ஏங்குகிறாள். எப்படியாவது நம்பியை நான் அடைந்தே தீருவேன் எனக்கங்கணம் கட்டுகிறாள். ஊண் உறக்கம் இன்றி தவிக்கிறாள். இளைத்து மெலிகிறாள் அவள் தாயோ, என் பிள்ளை இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்படுகிறாள்.. திருக்குறுங்குடி நம்பியை நோக்கி அவள் ஓடும் போது சேரிப்பெண்கள் நகைக்கிறார்கள். அடடே இவளுக்கு நம்மூரில் ஒரு ஆணழகன் இருக்கிறான் இப்போதுதான் தெரிகிறதோ ! என்று. ஏனென்றால், அவர்களெல்லாரும் எப்போது அக்கலத்தலைச்செய்து முக்திபெற்றவர்கள் என்கிறார் நம்மாழ்வார்.

      திருமங்கையாழ்வார், தன்னைப் பரகால நாயகியாக்கிக் கொண்டு தலைவன்-தலைவி என இலக்கியமரபில் எழுதிய பாசுரங்கள் சிருங்கார ரசத்தின் உச்ச கட்டம். High voltage sensual poetry in Tamil language ::-) ஒரு தோட்டத்தில் தான் அழகிய மணாளனுடன் கல்ந்தே என்கிறாள் பரகால நாயகி.

      தமிழ் இலக்கிய மரபில் தலைவனே தலைவிக்கு காதல் மடல் அனுப்புவான். இதனை மடலூறுதல் என இலக்கியம் பகரும். இந்த இலக்கிய மரபை உடைத்தவர் திருமங்கையாழ்வார். பெருமாள் என்ற ஆணழகனுக்கு, பரகால நாயகியே மடலூறுகிறாள்.

      ஆண்டாளின், பக்தி தெரிந்ததே. இரங்கனுக்காகவே தன் தடமுலைகள் என்றும் மனுஷருக்கெனில் வாழ்க்கைப்படேன் எனத்தந்தையிடம் தன்னைக்கொண்டு போய் இரங்கனிடம் விட்டுவிடுமாறு அழற்ற தந்தையும் விட்டுவிட்டு, //செங்கண்மாலே கொண்டு போனான்// என தன் மகளின் பிரிவை நினைத்து அழகிறார் பெரியாழ்வார்.

      அழகிய மணவாளன் என்றுதான் பெருமாளுக்குத் திருநாமம்.

      இந்துப்பாரம்பரியத்தில் காமமும், காதலும் காதலாகிக் கண்ணீர் மல்குவதும் முக்திநிலைடைய வைக்கப்பட்டிருக்கும் உபாயங்களுள் ஒன்றாகும். முக்தி நிலையடைவதே இந்துக்களின் இறுதியாசை. அதை நம்மாழ்வார்: விண்ணகம் புகுவது மண்ணவர் விதியே// என நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

      வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்

      வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று

      வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர்

      வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

  9. Avatar
    IIM Ganapathi Raman says:

    கட்டுரை எழுதியவருக்கு இறைவனும் இறைவியும் புணர்ந்து உலகம் உருவானது மிகக்கேவலமான செயல் என்று வெள்ளைக்காரன் சொல்லி உள்வாங்கிக்கொண்டு வெள்ளைக்காரனையே திட்டுகிறார். கோவில் சிலைகளும் விக்கிரஹங்களும் அம்மன சிலைகளின் காணப்படும் உடல் வெளிப்பாடுகளும் – இப்படி வெள்ளைக்காரன் சொன்னதை உள்வாங்கிக்கொண்டால் – அசிங்கமாக, ஆபாசமாகத்தான் தெரியும். அதே வெள்ளைக்காரன், அசிங்கமோ, அழகோ பார்ப்பவரைப்பொறுத்த subjective element என்றும் சொல்லியிருக்கிறானன்றோ! அம்மையே அப்பா ஒப்பிலாமணியே என்று சிவனையும் உமையம்மையும் தாயும் தந்தையுமாகப்பார்ப்பதுதான் இந்துமதம்.

    இது போகட்டும். ஒரு வெள்ளைக்கார துரை ( பிரிட்டிஷ் ராஜ் சர்காரின் அதிகாரி) ஒரு நான் மத்தியபிரதேசக்காடுகளில் வேட்டையாடச்சென்ற போது கண்டுபிடித்த கோயில்கள் இந்துமதத்தின் ஒரு பெரும்கோட்பாட்டையே உலகத்துக் காட்டியது, கட்டுரையாளரின் கண்களில் படாதது வியப்பே. இணையத்தில் படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பார்க்கட்டும். யுவனும் யுவதியும் கடவுளர்கள் பலவிதமான காமசூத்திர லீலைக்காட்சிகளோடு இருக்கும் கோயில்களும் கோயில்சுவர்களையும் கஜுராஹோவில் வெள்ளைக்காரன் கண்டு பிடித்து அதை வரலாற்று சின்னங்களாகப்போற்றிவைத்துவிட்டு பின்னர் நம்மையும் செய்யவைத்துவிட்டானே? இடித்தா போட்டு விட்டீர்கள்?

    அக்காட்சிகளுக்கு என்ன விளக்கம்? ஆம், ஷாலி சொன்ன அதே விளக்கம்.

    இந்துமதமே வேறு. மற்ற மதங்கள் வேறு. அதாவது வழிமுறைகள் வேறு எல்லாம் இறைவனைப்போய்ச்சேரும்படி சொன்னாலும். இந்துமதக்கோட்பாடுகளை ஏற்றால்தான் இந்து. சிவனின் விந்துக்கள் ஆறு விழுந்து முருகன் பிறந்தானென்றும் சிவனும் விஷ்ணுவும் புணர்ந்து பிறந்தவன் ஹரிஹரசுதன் எனவழைக்கப்படும் ஐய்யப்பன். இப்படி புணர்ச்சிகள் புனிதமானவை என்று சொல்வதை ஏற்காவிட்டால், வேறு மதத்துக்குத் தாவிக்கொள்ளலாம். வெள்ளைக்காரன் சொன்னதை வைத்து பூச்சாண்டி வேலை காட்டுவது தேவையா?.

  10. Avatar
    ஷாலி says:

    //ஷாலிக்கு வைணவத்தைப்பற்றி பரிச்சயம் இல்லை போலும்! சைவத்தோடு, அதாவது சிவன் வழிபாட்டோடு, நின்று விட்டார். .//
    IIM.கணபதி ராமன் ஸார்! உங்களைவிற்கு எனக்கு விபரம் தெரியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.நான் சைவத்தை முன்னிறுத்த காரணம் நமது “ஆதிவாசி”

    // எங்கள் தமிழ்த் தெய்வமான சிவனும் பார்வதியும் பாலூட்டிய திருஞானசம்பந்தரையே ஆதி சங்கரர் போற்றிப் பாடுகிறார் என்று தமிழர்…//

    என்று தம்மை சைவராக காட்டிக்கொண்டதால் (தாருகாவனத்து) சிவனை குறிப்பிட்டேன்.

    // திருவரங்கத்தில் இரங்கன்ம இரங்கநாயகி நாச்சியாரோடு இணையும் பொருட்டு இரவில் எவருக்கும் தெரியாத படி செல்வதாக ஒரு நிகழ்ச்சி உண்டு…//

    மற்றபடி நீங்கள் குறிப்பிட்டதுபோல் நள்ளிரவில் ரங்க நாச்சியாருடன் இணைவதற்கு ஸ்ரீ ரெங்கநாதர் போனதாக சம்பவம் இல்லை.அதேசமயம், நள்ளிரவிலும் பிராட்டியார் உடன் சேரவேண்டும் என்ற ஆசை ரங்கநாதருக்கு ஏற்பட்டு விடுகிறது.அதற்காக தனது அங்கத்தை (ஆண்குறி-ஆனந்த நாடி) அனுப்பி ரங்கநாயகி சன்னதிக்குள்அது சென்று தன் இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார் என்பதை பராசர பட்டர் தனது “குணரத்ன கோஷத்தில்” குறிப்பிடுகிறார்.

    ஒருமுறை நாரத முனிவர் கிருஷ்ண பகவானை அணுகி, நீர் 60,000 கன்னிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரக்கூடாதா? என்று கேட்க,

    அதற்க்கு கண்ணன் நான் இல்லாப்பெண்ணை வரிக்க என் உடன் பட்டுத்தான் (60,000 )வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால்,கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு,அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருக்க எண்ணம கொண்டேன் என்றார்.

    கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானம் செய்யச் சொல்லி ஏவ, நாரதர் அவ்வாறு செய்து அழகிய பெண்ணாக மாறினார்.
    இவளுடன் (நாரதர் முனிவர்) கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரரை பெற்றனர்.இவர்களே “பிரபவ” முதல் “அட்சய” வரை உள்ள அறுபது மாதங்கள்.

    ஆதாரம்: அபிதான சிந்தாமணி. பக்கம்.1392.

    பிராமணனை கொன்றதால் பிரமஹத்தி தோஷம் பீடித்த இந்திரன் அதை பெண்களிடம் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறான்.பரிதாபப்பட்ட பெண்கள் அந்த தோஷத்தை எற்றுக்கொண்டதால் மாதம் மூன்று நாட்கள் மாதவிடாய் தோஷமாக கழிகிறதாம்.

    “விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்ட ரூபானி பீமிசது ஆசிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது…”என்று திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள்.

    பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி,மத்யமம்,உபஸ்தம் இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது..அதாவது விஷ்ணு,தொஷ்டா,தாதா ஆகிய தேவதைகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள் புரிய வேண்டும் என்று மந்திரம் ஓதப்படுகிறது,

    இப்படி ஏராளமான செய்திகள் இந்து புராணங்களில் உண்டு கட்டுரை ஆசிரியர் திரு.ஆதிவாசி அவர்கள் கட்டுரை தலைப்பை “ இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி” என்பதற்குப் பதிலாக “இடுப்பின் கீழ் வட்டமிடும் இந்து நெறி” என்று வைத்திருந்தால் பின்னூட்டம் எதுக்கும் வேலையில்லாமல் போயிருக்கும்.

  11. Avatar
    ஷாலி says:

    // திருவரங்கத்தில் இரங்கன்ம இரங்கநாயகி நாச்சியாரோடு இணையும் பொருட்டு இரவில் எவருக்கும் தெரியாத படி செல்வதாக ஒரு நிகழ்ச்சி உண்டு என்கிறார். ஷாலி தேடிப்படித்துப்படிப்பார் என நம்புகிறேன்.//

    நண்பர்.IIIM.கணபதி ராமன் அவர்கள் கூறிய பிரகாரம் இரங்க நாயகி நாச்சியாரோடு இணையும் பொருட்டு இரவில் எவருக்கும் தெரியாமல் பெருமாள் செல்வதாக சொல்லப்படவில்லை.பெருமாள் செல்லாமல் தனது ஆனந்த நாடி என்னும் ஆண்குறியை மட்டும் நாச்சியார் சன்னதிக்கு அனுப்பி ஆனந்தம் அடைந்தார் என்று தான் பராசர பட்டர் தனது “குணரத்ன கோஷத்தில்” குறிப்பிடுகிறார்.
    பெருக்காரனை சக்கரவர்த்தி ஆச்சாரியர் எழுதிய “ மும்மத்ஸாரம் “ என்னும் நூலில் தமிழிலேயே இதை வாசிக்கலாம்.

    வைணவத்தலங்களில் இன்றும் நடைபெறும் “பாரி வேட்டை” உற்சவ ஊர்வலத்தில் குதிரை வாகனத்தில் பெருமாள் நாதஸ்வரம் மேளம் முழங்க வீதி உலா வருவார். தாசிகள் வசிக்கும் தெரு வரும்போது மேளதாளம் நாதஸ்வரம் நிறுத்தப்பட்டு உறையில் போடப்பட்டு விடும்.அங்குள்ள மண்டபத்தில் பெருமாளை இறக்கி வைக்கிறார்கள்.இரவு முழுவதும் தாசிகளிடம் தங்கி விட்டு காலையில் கோயிலுக்கு திரும்புவதாக ஐதீகம்.

  12. Avatar
    ஆதிவாசி says:

    @ ஷாலி

    இக்கட்டுரையில் இருந்த குறையை தீர்த்தீர்கள். நன்றி.

    எதைச் சொன்னாலும், அதை ஆண், பெண் உறுப்புகளாக மட்டுமே கிறுத்துவ அடிமைகளால் பார்க்க முடியும் என்பதற்கு நான் ஆதாரம் தரவில்லை. உங்கள் பதில்கள் ஆதாரமாக அமைந்து இக்கட்டுரையின் குறையை தீர்த்தது.

    மிக்க நன்றிகள்.

    நீங்கள் பதிந்திருக்கும் கருத்தில் உங்களுக்குத் தரவேண்டிய பதில் இருக்கிறது.

    //சிவனார் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்ததாகக் கருதி, அவருக்கும் சாபம் தந்தார் பிருகு. ”கலியுகத்தில் உம்மை அருவுருவமான லிங்க வடிவில் மட்டுமே வழிபடுவார்கள்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்….”//

    அருவுருவம் என்றால் எந்த உருவமும் இல்லாத ஒரு வடிவம்.

    எந்த உருவும் இல்லாத ஒன்றில்கூட ஆண்குறியைக் கண்டுபிடித்து சாதனை செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    அன்புடன்,
    ஆதிவாசி
    aaadivaasi@gmail.com

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      கிருத்துவர்களோ, வெளிநாட்டவரோ எதை எப்படி பார்க்க வேண்டும் என நீங்கள் கட்டாயப்படுத்த முடியுமா? நீங்களென்ன அவர்கள் மதத்துச்சடங்குகளை புரிந்து மதித்தீர்களா? பிணத்தை வணங்குகிறார்கள்; குருதி குணப்படுத்துமா என்று கிண்டலடித்து திண்ணையிலேயே பின்னூட்டங்களைப்போட்டுள்ளார்களே?

      உண்மையான இந்து எவர் என்ன சொன்னாலென்ன என்று தம் வழிபாட்டின் மீது நம்பிக்கை கொள்வான். எல்லாரும் அப்படித்தான் இருக்க வேண்டும். என் மதம் எனக்கு; பிறர் மதம் பிறருக்கு என்பது இசுலாம்.

      மற்றவர்களைப்பற்றிக்கவலை கொள்வதை விட்டுவிட்டு உங்கள் தெய்வத்தை ஆராதனை செய்யுங்கள்.

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        நான் மேலே எழுதியவை இந்துவாக இருப்பவரைப் பார்த்தே. இந்துத்வாவினருக்கல்ல.

  13. Avatar
    ஆதிவாசி says:

    @ IIM Ganapathi Raman

    //ஆண்குறி வழிபாடு. அதாவது பெண் பிறப்புறுப்பில் ஆண் பிறப்புறுப்பு என்று இந்துக்களே மறுக்காமலிருக்கும்போது இஃதென்ன புதுக்கதையாக இருக்கின்றது?//

    இந்து மதத்தின் அடிப்படைகள் தெரிந்தவர்கள் மறுக்கிறார்கள். மற்றவர்களுக்குத்தான் இது புதுக்கதை.

    //அப்புணர்ச்சி கேவலமானது என்ற எண்ணம் எப்படி உங்கள் மணத்தில் நுழைந்தது? //

    புணர்ச்சி கேவலம் என்று இக்கட்டுரை எங்கும் சொல்லவில்லை.

    காமத்தை தவறு என்று சொல்லி, அதை வைத்து பிற மதங்களை கீழ்மைப்படுத்த முயன்ற கிறுத்துவ மனப்போக்கை மட்டுமே இக்கட்டுரை சாடுகிறது.

    //எங்கே பதிவுபண்ணப்பட்டிருக்கிறது? ஆதாரத்தைச் சகாட்டுங்கள்.//

    பிள்ளையவர்களுடன் விவேகானந்தர் உரையாடிய சம்பவம், விவேகானந்தருடைய வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலானவற்றில் வரும் விஷயம்தான். அதிக விவரங்களுடன் ”அறிவுக்கனலே, அருட்புனலே” என்கிற தலைப்பில் ரா. கணபதி எழுதிய நூல் தெளிவுகள் தரக்கூடும்.

    அடிமை மனப்பான்மை கொண்ட தமிழர்கள் திராவிட இனவாதம் பேசுவதை மறுத்து விவேகானந்தர் பேசியது “கொழும்பு முதல் அல்மோரா வரை” என்கிற நூலில் இருக்கிறது.

    //கொஞ்சம் விட்டால் சமஸ்கிருதமே தமிழரின் தாய்மொழி என்று சொல்லிவிடுவீர்கள். //

    ஸம்ஸ்கிருதம் தமிழரின் தாய்மொழி அல்ல. தந்தை மொழி என்று சொல்லலாம்.

    //தமிழர்கள் தாய்மதம் ஹிந்துமதமன்று. வேதங்கள் வைதீக இந்து மதமாகும். வேதமதம் வடக்கிலிருந்து பிராமணர்களால் சமஸ்கிருத்தோடு கொண்டுவரப்பட்டது. //

    தற்காலத்திய காலனிய அடிமைகளாக இருக்கும் தமிழர்களுக்கு இப்படிப்பட்ட, ஆதாரங்கள் இல்லாத குழப்பம் நிலவுகிறது.

    ஆதித் தமிழர் உருவாக்கியதுதான் ஹிந்து மதம். வேதங்களை உருவாக்கியதில், காத்ததில் தமிழர்களுக்கும் பங்குண்டு.

    மறுப்பதாக இருப்பின் ஆதாரங்கள் தரவும்.

    அன்புடன்,
    ஆதிவாசி
    aaadivaasi@gmail.com

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      As long as the mode is denial, so long as there will be bitter controversies. தமிழரின் தாய்மொழி சமஸ்கிருதம் இல்லை. அவர்தம் தாய்மொழி தமிழே! தமிழே!! தமிழே !!!

      சமஸ்கிருதம் இல்லாமல் வேதங்கள் இல்லை. வேதங்கள் இல்லாமல் வைதீக இந்துமதம் இல்லை.

      இதுதான் ஆதாரம். இவ்வாதாரத்தின்படி, வைதீக இந்துமதம் தமிழகத்தில் பிறந்தவொன்றன்று.

      உண்மையை ஒத்துக்கொண்டு, அம்மதத்தின் அருமையான கோட்பாடுகளை எடுத்துச்சொல்லி, வளர்க்கப்பாருங்கள். எவரும் உங்களைத் திட்டப்போவதில்லை. மறுக்க மறுக்க நீங்கள் அம்மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முனைகிறீர்கள். Don’t fear if Vedic religion is not the original religion of Tamilland, no harm will come to that religion.

      சுட்டல், காட்டல் என்று இருசொற்கள். முதலாவது நேரிடையாகச் சொல்லல். இரண்டாவது சொன்னவற்றிலிருந்து பிறர் எடுக்கும் உட்பொருட்கள். அல்லது மறைபொருட்கள். திருவாய்மொழியில் எங்கும் நம்மாழ்வார் வேதங்கள் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஆனால், வைணவம் அப்பனுவலை, நான்குவேத சாரமென எடுத்து, திராவிட வேதம் எனச்சொல்கிறது. அவர் எழுதிய பாசுரங்களில் எப்படி வேதக்கருத்துக்கள் பொதிந்துகிடக்கின்றன எனவிளக்குகிறார்கள் ஆச்சாரியர்கள். ‘தெளியாத மறைநிலங்கள் தெளிந்தோமே! என்கிறார் வேதாந்த தேசிகன்.

      உங்களின் தலைப்பே போதும் – புணர்ச்சி என்பது உங்களுக்கு ஒரு தவறான விடயமாகத்தோன்றுகிறது. வெள்ளைக்காரன் எடுத்த கருத்தைக்கண்டு களேபரம் அடைந்து இக்கட்டுரை போட்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லுமுன்பே அனைத்து வாசகர்களுக்கும் அது தெரியும். சிவலிங்கத்தை எப்படி பிறர் பார்த்தனரென்று. கட்டுரையினுள் நிறைய விடயங்கள் உங்கள் பார்வை இந்துமத்தைத் தவறாக நோக்குகிறது என்று காட்டுகிறது. காட்டல்.

      மறுப்பீர்கள். பரவாயில்லை. Inferences are for others, not for you :-)

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      /ஆதித் தமிழர் உருவாக்கியதுதான் ஹிந்து மதம். வேதங்களை உருவாக்கியதில், காத்ததில் தமிழர்களுக்கும் பங்குண்டு.//

      இரண்டாவது சொற்றொடரை ஏறகலாம் ஓரளவுக்கு. வைதீக மதம் நிலவு கொண்டபின் தமிழரால் அம்மதம் ஏற்கப்பட்டவுடன் பல தமிழர்கள் வேதக்கருத்துக்களை காத்தார்கள் எனலாம். ஆழ்வார்கள் செய்தார்கள். ஆழ்வார்கள் தமிழர்கள். ஆனால், வேதங்களை உருவாக்கினார்கள் என்பது பிராமணர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகும். சிந்துவெளிக்கரைப் பிராமணர்களே வேதங்களை உருவாக்கியோர்.

  14. Avatar
    ஆதிவாசி says:

    @ ஷாலி

    //ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் இங்கு பிரம்மவித்யாவின் (Brahmavidya) புனிதத்துடன். போற்றப்படுகின்றன. சிவலிங்கம், ஆன்மீகத்தின் நிமிர்வு நிலையும் (புருஷா), கிடைத்தள நிலையில் இயற்கையின் தாய்மையும் இணையும் ஒத்திசைவைக் காட்டி நிற்கிறது…ற்கையின் தாய்மையும் இணையும் ஒத்திசைவைக் காட்டி நிற்கிறது…”
    -நித்ய சைதன்ய யதி.//

    ப்ருஹதாரண்ய உபநிஷதத்தில் எங்கும் ஆண், பெண் குறி சார்ந்து கருத்துகள் இல்லை.

    நித்ய சைதன்ய யதி வேறு ஒரு விஷயம் பற்றி விளக்குவதை இதில் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்.

    //அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.
    -அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்//

    கிறுத்துவ அடிமைகள் தங்களுடைய பிரச்சாரங்களை எல்லாம் சேர்த்து அக்னி ஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார் பெயரில் வெளியிட்டு உள்ளனர். இந்தப் பிரச்சாரத்துக்குத் தன்னுடைய பெயரை விற்ற இந்த தத்தாச்சாரியாரும் கிறுத்துவ அடிமைதான்.

    அன்புடன்,

    ஆதிவாசி

    aaadivaasi@gmail.com

  15. Avatar
    ஆதிவாசி says:

    @ IIM Ganapathi Raman

    //கட்டுரை எழுதியவருக்கு இறைவனும் இறைவியும் புணர்ந்து உலகம் உருவானது மிகக்கேவலமான செயல் என்று வெள்ளைக்காரன் சொல்லி உள்வாங்கிக்கொண்டு வெள்ளைக்காரனையே திட்டுகிறார்.//

    சிவலிங்கம் உருவானதற்கும் காமத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதோடு கட்டுரை நிறுத்திக் கொள்கிறது.

    காமம் கேவலம் என்று கட்டுரை எங்கும் சொல்லவில்லை.

    கட்டுரையில் சொல்லி இருப்பதை மட்டும் விமர்சிக்கவும். சொல்லாததை அல்ல.

    அன்புடன்,
    ஆதிவாசி
    aaadivaasi@gmail.com

  16. Avatar
    ஆதிவாசி says:

    //பெருமாள் செல்லாமல் தனது ஆனந்த நாடி என்னும் ஆண்குறியை மட்டும் நாச்சியார் சன்னதிக்கு அனுப்பி ஆனந்தம் அடைந்தார் என்று தான் பராசர பட்டர் தனது “குணரத்ன கோஷத்தில்” குறிப்பிடுகிறார்.//

    அப்படி எதுவும் அந்த நூலில் இல்லை.

  17. Avatar
    ஷாலி says:

    //அருவுருவம் என்றால் எந்த உருவமும் இல்லாத ஒரு வடிவம்.
    எந்த உருவும் இல்லாத ஒன்றில்கூட ஆண்குறியைக் கண்டுபிடித்து சாதனை செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.//

    ஆண் குறி வடிவில் சிவலிங்கம்:
    இந்து சமயத்தில் சிவபெருமானை அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் வழிபடுகின்றனர். இவற்றில் லிங்க வழிபாடு அருவுருவ நிலையை குறிக்கிறது.
    இந்த பிரபஞ்சத்தின் மூலமாக உள்ள ஆண் குறியையும், பெண் குறியையும் குறிப்பிடும் விதமாகவே லிங்கதின் தோற்றம் பார்க்கப்படுகிறது. அதாவது லிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றம் ஆண் வடிவத்தையும், அது வைக்கப்பட்டிருக்கும் பாகமான ஆவுடையார், பெண் குறியையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
    அதோடு ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என் மூன்றாக பகுக்கப்பட்டுள்ள வேளையில், பெண் பாகம் சக்தி பாகம் என்று அழைக்கப்படுகிறது.
    மேலும் உலகில் சுயம்பு லிங்கம், தேவி லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், அசுர லிங்கம், மானுட லிங்கம், பரார்த்த லிங்கம், சூக்கும லிங்கம், ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என பல வகை லிங்கங்கள் காணப்படுகின்றன.
    தேவிபுரம் சிவலிங்கம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தேவிபுரம் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் பட்டவர்த்தனமாக ஆண் குறி வடிவில் காட்சியளிக்கிறது.புகைப்படத்தைப் பார்க்கவும். இப்படத்தில் உள்ளது அருவுருவ லிங்கமா?அல்லது ஆண்குறி லிங்கமா?என்பதை ஆதிவாசிதான் சொல்லவேண்டும்.
    http://www.jaffnajet.com/2014/09/1522

    ஒருவேளை திரு.ஆதிவாசி சொல்வதுபோல் தேவிபுரம் சிவலிங்கம் கோயிலும் கிருஸ்துவ அடிமைகளால் நடத்தப்படுகிறதோ என்னமோ?

  18. Avatar
    ஷாலி says:

    //இந்தப் பிரச்சாரத்துக்குத் தன்னுடைய பெயரை விற்ற இந்த தத்தாச்சாரியாரும் கிறுத்துவ அடிமைதான்.//

    ஸ்ரீ குணரத்ன கோஷத்தில் ஆனந்த நாடி சமாச்சாரம் உள்ளதாக தாத்தாச்சாரியார் சொல்கிறார்.இப்ப தாத்தாச்சாரியார் உங்களால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு கிருஸ்தவ அடிமை ஆக்கப்பட்டதால்,அவர் ஆதாரத்தை சேதாரமாக தள்ளி விடுவோம்.ஆனால் கீழ் காணும் ஸ்லோகத்தில், மற்ற தேவியர்களுடன் ஸ்ரீ ரங்கநாதர் கூடும்போது அப்பெண்களின் அவயங்கலான கைகள்,ஸ்தனம் எனும் மார்பு – இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார். இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

    போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்

    நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்

    தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா

    யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.

    பொருள் – தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ? அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர். ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும். இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர். இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய். அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ? அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க – இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா

    விளக்கம் – இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார். இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

    ஸ்ரீ குணரத்ன கோசம்-26
    http://raghavhema.blogspot.in/2012/02/blog-post_14.html

  19. Avatar
    IIM Ganapathi Raman says:

    //பிள்ளையவர்களுடன் விவேகானந்தர் உரையாடிய சம்பவம், விவேகானந்தருடைய வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலானவற்றில் வரும் விஷயம்தான். அதிக விவரங்களுடன் ”அறிவுக்கனலே, அருட்புனலே” என்கிற தலைப்பில் ரா. கணபதி எழுதிய நூல் தெளிவுகள் தரக்கூடும்.
    அடிமை மனப்பான்மை கொண்ட தமிழர்கள் திராவிட இனவாதம் பேசுவதை மறுத்து விவேகானந்தர் பேசியது “கொழும்பு முதல் அல்மோரா வரை” என்கிற நூலில் இருக்கிறது.//

    எவர் எழதினாலும் அவரால் அன்று எந்த தொனியில் எவர் பேசினார் என்று சொல்லவியலாது. பழ கருப்பையா சொன்ன தொனியை – உரத்த குரலில் பிள்ளை சொன்னாரென்பதை – நீங்கள் மறுக்கிறீர்கள். ரா கணபதி உரையாடல் நடந்த இடத்தில் இருந்தாரா? ரா கணபதி நம் காலத்து ஆள். விவேகானந்தர் வந்தது உரையாடியது எப்போது முன்பு. ரா கணபதிக்கு மூன்று தலைமுறைகள் முன்.

    பழ கருப்பையா, பிள்ளையின் மறுவாதத்தில் இருந்த உரப்பான கருத்தால், பிள்ளையின் தொனியை ஊகித்தார் என்று எடுக்கலாம். ஏனென்றால், அவரும் அங்கே இல்லை. அதை மறுக்க, ரா கணபதி என்ற நம்முடன் வாழ்ந்த ஒருவரைக் குறிப்பிடுகிறீர்கள்.

    கொழும்பு முதல் அல்மோரா என்ற் நூலும் அவரின் தொண்டர்களால் எழுதப்பட்டதே. Hagiography doesn’t carry 100 per cent truth. It will distort everything to propel their icon. Don’t cite it here. அவர்களும் அங்கில்லை.

    எவருமே சொல்லமுடியாது. இதுதான் உண்மை.

  20. Avatar
    KRISHNA says:

    லிங்கம் என்னும் சொல் ஆண்குறி என்னும் பொருளை நேரடியாகத் தருவதன்று. அது அடையாளம் என்னும் பொருளையே தரும்.

    அப்படித் தருவதானால் புல்லிங்கம் – ஆண்பால், ஸ்த்ரீ லிங்கம் – பெண்பால், நபும்ஸக லிங்கம் – மற்ற பால் என்று வரூஉம் ஸம்ஸ்க்ருத மொழிகள் ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆண்குறி உண்டு என்று கூறுகிறது என்று ஷாலி, கணபதி போன்ற அறிவில் ஆதவர்கள் கூற வருகிறார்களா.

    பாரிஸ் ஸர்வ ஸமய மாநாட்டில் சிவலிங்கம் ஆண்குறியைக் குறிப்பதாக கட்டுரை விஷம கிறித்தவர்களால் படிக்கப்பட்டபோது, ஸ்வாமீ விவேகாநந்தர் தன் தகுதிக்கு ஏற்றவாறே ஒருவர் விஷயத்தைப் புரிந்துகொள்ளமுடியுமென்றும், அதற்குத் தகுந்தாற் போல் விளக்கமளிக்க முயற்சிக்கிறார்கள் என்றும்,

    ஆனால் உண்மையில் யாகத்தில் யாக விலங்கைக் கட்டப் பயன்படும் யூபத்திற்கு/ தூணிற்கே லிங்க வழிபாட்டின் துவக்கம் அளிக்கப்படவேண்டும் என்றும் நிறுவினார்.

    கிறித்தவ விஷமிகள் மூஞ்சியைத் தொங்கப் போட்டனர்.

    உடலுறவின் போது ஆண்குறியின் மொட்டு போன்ற பாகம் பெண்குறிக்குள் சென்றபிறகு வழிபடும் சிவலிங்கம் போன்று காட்சியளிக்காது என்னும் அரிச்சுவடி கூட அறியாமல் அது உடலுறவைக் காட்டுகிறது என்றும், ஆண், பெண்குறியைக் காட்டுகிறது என்றும் பிதற்றுபவர்கள் சிலுவைக்குறியீடே ஆண், பெண் உறவை இரு பரிமாணத்தில் தெளிவாகக் காட்டுகிறது என்பதை அறியாதவர்களா.

    பரம்பரை பரம்பரையாக எந்த இந்துவும், தமிழனும் இது ஆண்குறி, பெண்குறி இணைந்த வடிவம் என்று கற்பிக்கப்படவில்லை என்னும் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்களா.

    சிவன் காமனை வென்றவன் என்ற கதையை அவனுக்கு பெண்துணை அவசியமில்லை என்ற கதையை மறந்தது போல் நடிக்கிறார்களா.

    விஷ்ணு, தேவி போன்றவர்களும் லிங்க வடிவில் வழிபடப்படுவதை அறியாமல் பேசுகிறார்களா.

    வழிபாட்டின் போது என்த இடத்திலும் அது குறித்து எந்த குறிப்பும் வராததை மறைக்கப் பார்க்கிறார்களா.

    பெண்குறியில் கிளிட்டோரிஸ், வெளி உதடு, உள் உதடு, மூத்திரத் துவாரம், கருவாய் எல்லாம் எங்கோ.

    பெண்குறி யாருக்கு வட்ட வடிவில் இருக்கிறது – ஷாலிக்கா. நீள்கோடு தானே சாதாரணப் பெண்களுக்கு.

    ஆண்குறியில் முன் வழுக்குத் தோல் எங்கே. மூத்திரத் துவாரம் எங்கோ. கணபதிக்குக் கிடையாதா.

    லிங்கம் என்பது அடையாளம்/ சின்ஹம் என்னும் பொருளில் பலவிதமான இடங்களில் பயன்படுத்தப்படுவது தெரியாவிட்டால் வாயை மூடி இருப்பது உத்தமம். அக்னிஹோத்ரம் போன்ற பிக்காளிப் பயல்களை எல்லாம் ஆதாரம் காட்டுவதற்குப் பதிலாக நாமே நூல்களை மொழியறிவுடன் கற்பது நன்று.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //லிங்கம் என்பது அடையாளம்/ சின்ஹம் என்னும் பொருளில் பலவிதமான இடங்களில் பயன்படுத்தப்படுவது தெரியாவிட்டால்//

      சரியாகச்சொன்னீர்கள். நன்றி. ஒரு அடையாளமே என்றுதான் எடுக்க வேண்டும். மதத்தில் எல்லாவற்றையுமே அப்படிஅப்படியே விலாவரியாகச் சொல்ல மாட்டார்கள். அடையாளங்கள்; குறியீடுகளை வைத்தே மதம் அமைக்கப்படுகிறது. symbols, metaphors, images, signals. Religion uses these things to construct: Hindu religion the most. வேதங்களையே மறைகள் என்றுதான் சொல்வார்கள். மறைந்திருப்பதுவே மதம். நாம் தேடிக்கண்டெடுக்கவேண்டும். அதற்கு உதவ ஆச்சாரியர்களிடம் செல்லவேண்டும்.

      இந்துமதத்தைப்புரிந்து கொள்ளப்பாருங்கள். வெள்ளைக்காரன் எதையும் சொல்வான். நமக்கெங்க போச்சு அறிவு? நான் எடுத்த அடையாளம் ஆண்குறி-பெண்குறியென்றில்லை. இறைவனும்-இறைவியும் சேர்ந்து ஒரு சக்தியான பின் நாமானோம். உமையொரு பாகன்; அம்மையே அப்பா ஒப்பிலாமணியே; ஆவுடையப்பன். இந்துமதம் ஆண் பாதி-பெண்பாதியாகவும், திருமகள் கேள்மார்பன் அல்லது திருவாழ்மார்பனாகவும் பார்க்கிறது என்ற அடிப்படைக்கூட தெரியாமல் என்ன இந்து நீங்கள்? ஆண்டாளின் பக்தி, ஆழ்வார்களின் பெண்பாவனைகள் பற்றி எழுதியிருக்கின்றேனே படிக்கவில்லை? நான் வெள்ளைக்காரனிடம் போய் என் மதத்துக்கு விளக்கம் கேட்பதில்லை கிருஷ்ணா! அவனைக்கண்டு பயப்படுவதும் இல்லை.

      எனவே சிவலிங்கம் ஒரு அடையாளமே. விலாவரியாக அலசல் மதத்தில் தேவையில்லை. விவேகானந்தர் சொன்னதை முழுவதுமாக ஒரு கட்டுரையில் எழுதுங்கள். அரைகுறையாக எழதினால் குழப்பமே மிஞ்சும்.

  21. Avatar
    paandiyan says:

    KRISHNA — good. salute you!! you will have to come here regularly, register your comments. Thanks much for clarifications.

  22. Avatar
    Dr. ராஜ சுந்தரம், Ph.d. says:

    அற்புதமான கட்டுரை. இந்தியாவை துண்டாட சொல்லப்படும் பொய்களை எல்லாம் திரு. ஆதிவாசி அவர்கள் மிக அருமையாக நிர்மூலமாக்கிவிட்டார். அவர் சொல்லிய விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல் ஷாலி, கணபதி ராமன் போன்றோர் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது அலுப்பைத் தருகிறது. திரு. ஆதிவாசி அவர்கள் தொடர்ந்து இதுபோன்று கட்டுரைகள் எழுத வேண்டும்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      கட்டுரை பல பொய்களை எடுத்தியம்புகிறது.
      – முன்னால் வாழ்ந்த தனிநபர்கள் செய்யாத செயல்களை நேரில் பார்த்ததுபோல பொய் சொல்கிறது. இக்காலத்தில் வாழ்ந்த ரா. கணபதி அக்காலத்தில் வாழ்ந்த விவேகானந்தர்- பிள்ளை உரையாடலை நேரில் கண்டார் என நம்மை நம்ப வைக்க முயற்சிக்கிறது.
      -பழ கருப்பையா தமிழருக்காக பேசிய பிள்ளையை விதந்தோதினால், கோபம் கொள்கிறது.
      -வேதங்கள் தமிழரால் உருவாக்கப்பட்டது என்ற‌ பச்சைப்பொய்யை வைக்கிறது.
      -வேதங்கள் வடமொழியில் யாக்கப்பட்டவை. தமிழருக்கு தாய் மொழி தமிழ் என்ற உண்மையை மூடி மறைத்து வேத வழி வைதீக மதம் தமிழர் மதம் என வைக்கிறது.
      -தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுதான் சமஸ்கிருதமும் வைதீக மதமும் என்ற உண்மையை மறுக்கிறது.
      -இந்து மதத்தின் அடிப்படைக்கோட்பாடுகளை புரிந்தும் புரியாததது போல நடிக்கிறது.
      -இந்துத்வாவினர் கொள்கைகளை ஏற்காதவர்களை கிருத்துவ அடிமைகள் எனப்பரிகாசிக்கிறது.
      மொத்தத்தில் இக்கட்டுரை ஒரு இந்துத்வாவினரால் எழுதப்பட்ட்வொன்று.
      (அதனால்தான் ஒரு பின்னூட்டத்தில், இந்துக்கள் என்றால் மட்டுமே நான் எழுதுவது பொருந்தும். இந்துத்வாவினருக்கன்று என்று சொல்லியிருக்கிறேன்._

      இவைகளுக்கெல்லாம் துணைபோகும் மெத்தப்படித்தவர்களைப்பார்க்கும்போது, பாரதியாரின் வரிதான் நினைவுக்கு வருகிறது: படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோன்னு போவான்!

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      Hindutva is religio-politics. Hindu religion is religion only. Please don’t mix the two. My point is we should not mind what Europeans say about our religion. Their approach is their matter. But many of them are scholars of Oriental religions; and they write books for their academies and students. Why do you read them? You are a PhD scholar and lets assume, your subject is a different one which I don”t know single word of it. Should I read your thesis? Never. Similarly don’t read anything western if you are a Hindu. On the contrary, If you are a Hindutvaite, you can read and fight with them.

  23. Avatar
    வரலட்சுமி ராஜசுந்தரம் says:

    பல தவறான கருத்துக்களை சீர்திருத்தும் நல்ல கட்டுரை. நன்றி.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      அது தவறான கருத்தில்லை திருமதி லட்சுமி அவர்களே!

      இலக்குமியோடு இணைந்தவனே பெருமாள் என்பதும் அர்த்தநாரீசுவரன் என்பதுதான் சிவன் எனப்தும். சக்தியில்லாமல் சிவனில்லை; சிவனில்லாமல் சக்தியில்லை என்பதுமே இந்துமத்ததின் அடிப்படைக் கோட்பாடு. இல்லையென்கிறார் கட்டுரையாளர். அதைபபடித்து புளகாகிதம் அடைகிறீர்கள். லட்சுமி சுந்தரம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அப்பெயருக்கு இந்துமதம் தரும் பொருளென்ன என்று நீங்கள் தெரிய முயற்சி செய்யவில்லை என சங்கையே எழுகிறது.

      இணைதல் என்றால் ஏகப்பட்ட பொருட்கள். வெள்ளைக்காரன் அந்த இணைதலைக் கிண்டலடித்தானாம். அதை இவர் சுட்டிக்காட்டுகிறானாம்.

      உலகத்தில் ஏராளாமான சமயங்கள் உள அன்றிலிருந்து இன்றுவரை. பெரிய மதங்களாக இருந்தாலும் அதைப்பற்றிக் கிச்சித்தும் தெரியா மக்கள் உலகத்தில் வாழ்கின்றனர். சீக்கியமதத்தைப்பற்றி தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்குத் தெரியாது. கருப்பசாமி வழிபாடு பற்றி பஞ்சாபில் வாழும் பஞ்சாபிகளுக்குத் தெரியாது. இந்துமதத்தைப்பற்றி லட்டீன் அமெரிக்கருக்குத் தெரியாது. கத்தோலிக்கத்தைப்பற்றித் தமிழரில் பலருக்கு தெரியாது. பெந்தேகோஸ்டோவைப்பற்றி ஒன்றுமே புரியாமல் அவர்கள் செயலை நகையாடமட்டும் செய்பவரே நாம்.

      ஆக, ஒருவர் இன்னொருவர் மதச்சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பார்த்து அதைப் பற்றி விதம்விதமான தமக்குத் த்தோன்றிய வண்ணம் கருத்து கொளல் இயற்கை. அக்கருத்துக்கள் நகையெனத்தெரிந்தாலும் நம்மால் ஒன்றும் செய்யவியலா. அது கிண்டலோ கேலியோ, அதை நம்முன் செய்யாதவரை அவருக்கு உரிமையுண்டு. முடிந்தால் இசுலாமியரைப்போல படவா போடுங்கள். ஆனால், அதற்கு இந்துமதம் வசதி செய்துகொடுக்கவில்லை எனப்தையும் உணருங்கள்.

      ஏசு எப்படி பிறந்தார் என்பதை கிருத்துவர் சொல்லும் போது நம்பமுடியாத கதை மட்டுமன்று; நகைச்சுவையையும் திருமதி லட்சுமி ராஜசுந்தரத்துக்குத் தருமன்றோ? கிருத்துவர் அதற்காக திருமதி லட்சுமி ராஜசுந்தரததை வைதால், அதை மேலே சொன்னவாறே சொல்லி என்னைப்போன்றோர் தடுப்பர். காரணம். பிறமதக்கொள்கைகளை தமக்குத்தெரிந்தவரை அணுகிப்பார்த்தல் கருத்து கொளல் அவரவர் உரிமை. இந்துமதத்தைச் சாத்தான் மதம் என நினைக்க அவர்கள் குழந்தைகளுக்கும் அவர்தம் உறவுகளுக்கும் சொல்ல அவருக்கு உரிமை; கிருத்துவமதத்தை பேய்கள் மதம் என நினைக்க, நும் குழந்தைகளுக்குச் சொல்ல, நும் உறவுகளுக்கும் சொல்ல நுமக்கு உரிமை உண்டு. conversion is to bring people to your religion; but preventing people from going to other religion !

      ஆக, வெகுசுலபமான கருத்து என் கருத்து. பிறர் என்ன சொல்கிறார் என் மதத்தைப்பற்றி என்று நான் போய்க்கொண்டிருந்தால், அது மதவெறியில் போய் முடியும். மதவெறியாளருக்கு மதமில்லை. மத அரசியலே உண்டு. வாழ்ந்து மடியும் அப்பாவிகள். மதமற்ற வாழ்க்கை பரிதாபமானது. நாத்திகனைக்கண்டு எப்படி நாம் பரிதாபப்படுகிறோமோ, அப்படி இப்படிப்பட்ட மதமற்றோரையும் கண்டு பரிதாப்பட மட்டும்தான் முடியும்.

      Live your religion. It is difficult but rtry. சுவாமி சின்மயானந்தர் சொன்னார்: இந்துக்களை இந்துக்களாக நாம் மாற்றிவிட்டால், இந்துக்கள் பிறமதம் போக மாட்டார்.

      என்ன உட்பொருள்? இந்துக்களுக்கு இந்துமதத்தின் அடிப்படைக்கோட்பாடுகளே தெரியவில்லை. ஏனோ தானோ என்று
      இருந்தால், மதமாற்றுவோருககு வேலை இலகு. இந்துக்களாகிய நாம் நம் மதக்கோட்பாடுகளைப் புரிந்து பெருமை கொள்ளுங்கள். வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் நும் நம்பிக்கையை அசைக்காது. கோபம் கொள்ள்வைக்காது. தாழ்வு மனப்பான்மையைத் தராது.

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      சரியான கருத்து என்னவென்பதைத் தெரியப்படுத்தினால் நன்றி. நானும் தெரிந்துகொள்வேனல்லவா?

  24. Avatar
    முனைவர் ச.இரமேஷ் says:

    சேரிகள், டௌரி எனும் வரதட்சணை முறை, கேஸ்டிஸம் எனும் சாதீய உயர்வு தாழ்வு, தீண்டாமை, மனிதர் மலத்தை மனிதர் சுமந்து தூய்மை செய்யும் வழக்கம் என்பன அந்த ஐரோப்பியக் கழிவுகளில் ஒரு சில துளிகள் மட்டுமே. (காதல் மணம், களவு மனம், சுயம்வரம் போன்ற தமிழர் முறை அழிந்து பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமண முறைகூடக் காலனியக்காலத்தில்தான் இந்தியர்மேல் திணிக்கப்பட்டது.)”-இதை ஏற்கமுடியாது தோழரே!எட்டுவகை திருமணமுறைகளை உடையது ஆரிய முறை அவை பிரமம்,பிரஜாபத்யம்,ஆரிடம்,தெய்வம்,இராக்கதம்,காந்தர்வம் முதலானவை,தவிர தொல்காப்பியர் ”பொய்யும் வழுவும் தோன்றியபின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப”என்று ஏற்பாட்டுத்திருமணம் பற்றிக்கூறிவிட்டார்.ஆரியர்களாகிய அந்தணர்கள் இன்று சாதிவேறுபாடு பார்க்காமலா இருக்கிறார்கள்?

  25. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\\ எனவே சிவலிங்கம் ஒரு அடையாளமே. விலாவரியாக அலசல் மதத்தில் தேவையில்லை. விவேகானந்தர் சொன்னதை முழுவதுமாக ஒரு கட்டுரையில் எழுதுங்கள். அரைகுறையாக எழதினால் குழப்பமே மிஞ்சும். \\

    திண்ணை தளத்தை வாசிப்பவர்கள் ஷாலி மற்றும் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற இருவர் மட்டிலுமே என்பது உங்கள் நினைப்பானால் மிகவும் தவறு. யார் அறைகுறையாக எழுதுகிறார்கள் யார் முழுமை சார்ந்து எழுதுகிறார்கள் என்பதனை வாசிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வர்.

    அறைகுறையாக மட்டிலுமே எழுதுவது உங்களது அடிப்படை உரிமையாயிற்றே.

    காந்தியடிகளின் பெருமையைப் பற்றி அறிய விழைபவர்களுக்கு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ போன்ற அறிவாளிகள் கோட்ஸேவின் வாக்குமூலத்தின் மூலம் அதை விளக்க முனையலாம் தான்.

    ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாயத்தைப் பற்றி…….. இழிவாக *சிரிவைணவம்* என்று முந்தைய அவதாராதிகளில் எழுதிப்பழக்கமுள்ள உங்களுக்கு அந்தக் காழ்ப்புணர்வு அகலாததால் வர்த்தமான அவதாரத்திலும் ………….. ஸ்ரீ வைஷ்ணவத்தைப் பற்றி அறிய பேத்தாச்சாரியின் பேத்தல்களை சுட்ட முடிகிறது.

    வெட்கம்.

    ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் நாட்டமுள்ளவர்கள் டம்பாச்சாரியான பேத்தாச்சாரியின் சண்ட ப்ரசண்ட பிதற்றல்களையும் அறிவர். அதற்கு ஜவாபாக வைஷ்ணவச் சுடராழி என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொண்டாடும் வணக்கத்திற்குரிய டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள்………. சாஸ்த்ரங்களை விசாரம் செய்து விஜயபாரதம் தளத்தில் எழுதிய வ்யாசாதிகளையும் அறிவர்.

    முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கிகளுக்கு பேத்தாச்சாரியின் பேத்தல்கள் ஏன் இனிக்கிறது வைணவச் சுடராழியின் சாஸ்த்ர விசாரம் ஏன் கசக்கிறது என்பதற்கு ராக்கெட் சயின்ஸ் வாசிக்க ஏதும் அவச்யமில்லை.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      அடிக்கடி திரும்பச் சொன்னதையே சொல்கிறீர்கள். எனக்கு ஸ்ரீ டைப் அடிக்கத் தெரியாத காரணத்தால் சிரி என்று எழுதுகிறேன். இப்போது போட்ட ஸ்ரீ உங்கள் மடலிலிருந்து காப்பி பேஸ்ட். எப்படி ஸ்ரீ டைப் அடிப்பது என்று எவராவது சொன்னால் நலம். ஆழ்வார்கள் நாலாயிரம் பாசுரங்களிலும் சிரி என்றுதான் எழுதியிருக்கிறார்கள். ரிஷிகள் என்பதைக்கூட இருடிகள் என்றுதான்; சிஷயர்கள் எனபதை ஆண்டாள், சிட்டர்கள் என்றுதான் பாடுகிறார். அவர்களுள் பலர் வடமொழியில் கரைகண்டவர்கள். எனினும் தமிழ்ப்பாசுரங்களில் தமிழே நன்று எனபது அவர்தம் கொள்கை. நாலாயிரத்தை மதிக்காத அல்லது படிக்காத ஆட்களுக்கு இது புரிய கஷ்டம்தான் :-)

      மற்றவர்கள் பாராட்டுகளுக்கேங்கி ஒருவர் மதம் அனுசரிக்கக்கூடாது. அது போலி. Above all, to thy own self be true (Shakespeare) என்பதுதான் என் கொள்கை. இந்துத்வா கொள்கைகள் உங்களுக்கு. எனக்கு வேறுகொள்கைகள்.

      எனவே நீங்கள் என்னை அங்கீகரிப்பீர்கள் என்று வைணவக்கருத்துக்கள் என்னால் எழுதப்படவில்லை. அது பிறவாசகர்களுக்காகப் போடப்படுகிறது. ஸ்ரீ வைணவம் (காப்பி பேஸ்டுதான்) தமிழ்நாட்டில் பிறந்தது. ஆனால் இன்று அது நாயுடுக்களிடம் ஐயங்கார்களிடமும் ஒடுங்கிவிட்டது. மக்கள் பெருமாள் கோயிலுக்குப்போவது சிவன் கோயிலுக்குப்போவது என்று ஒன்றாகத்தான் செய்கிறார்கள். ஆழ்வார் பாசுரங்களைப்பாடிச் செல்வதும், ஸ்ரீ வைணவக்கோட்பாடுகளை அறிந்தும் செல்வதில்லை. காரணம்: அவ்வளவு அறியாமை. தேவாரம் திருவாசகம் கந்தபுராண்ம் என்று சொல்ல ஏராளம் பேர் இருக்க, ஆழ்வார்களைபப்ற்றிப் பேச்சு ஐயங்கார்களிடமும் நாயுடுக்களிடம் போய் ஒடுங்கி விட்டது என்ற ஆதங்கத்தால் எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி சுடராளி ஜோசப்பாக நான் ஆக வேண்டும் என்ற நினைப்பன்று.

      சுடராளி ஜோசப்பும் அவரது மனைவி பாத்திமாவும் முறையாக தங்கள் கத்தோலிக்க மதத்திலிருந்து விலகவில்லை. விலகியிருந்தால் சொல்லவும். அவரது பெயரை மாற்றவேண்டாமென ஜீயர் சொன்னதாக தகவல். அவர் திருமண் அணிவதில்லை. நான் அணிகிறேன். அவர் ஒரு தமிழ்ப்பேராசிரியர். தமிழ் சொல்லிக்கொடுப்பதற்காக கற்ற ஆழ்வார் பாசுரங்களுக்குப் பரிச்சயமாகி, அதாவது இலக்கியம் மூலமாக ஆழ்வாரைப்பற்றித் தெரிந்தார். அவர் வெறும் பேச்சாளர் மட்டுமே. ஆச்சாரியர் அன்று. அவர் ஆழ்வார் பாசுரங்களுக்கு உட்பொருள்கள் சொல்லி மேடைப்பேச்சில் நான் கேட்டதில்லை. வரலாறுதான் சொல்வார். உட்பொருள் தெரிய அவரிடம் எவரும் போகார். ஆச்சாரியர்கள் இன்றும் இருக்கிறார்கள். வைணவப்பெரியார்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் போவார்கள். தற்போது திருப்பாவை உபன்யாசங்கள் வைணவப்பெரியார்களால் நடாத்தப்பட்டு வருகின்றன. அங்கு தெளியலாம். சென்னையிலிருந்தால் மந்தை வெளி மெட்ரோ ரயில் நிலையத்துக்கருகிலும் (இராஜா அண்ணாமலை புரம்). தில்லியில் இருந்தால், கரோல் பாக் லட்சுமிநரசிம்மர் கோயிலுக்கும் போய் கிருஷ்ணகுமார் கேட்டு பயன்பெறலாம். என்னால் முடிந்த அளவு அதையும் இணையங்களில் எழுதுகிறேன். வினவு தளத்தில் ஒருவருக்கு திருமங்கைஆழ்வாரைப்பற்றி விளக்கியிருக்கிறேன் படிக்கவும்.

      இப்படிப்பட்ட என்னைப்பற்றி முழுவதும் அறியாமல் தளத்துக்குத்தளம் பொய்யுரைகளைப் பரப்புவது தெய்வ நிந்தனையாகும். பெருமாள் எவரையும் மன்னிப்பான்; அவன் அடியாரை நிந்திப்பவரை விடமாட்டான் என்பதை பிரஹலாதாழ்வாரின் சரிதத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு வயது அதிகம். இருப்பதோ சில்லாண்டுகள். இப்படிப்பட்ட பாவங்களைச்சேர்க்கவேண்டுமா? சிந்தியுங்கள்.

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      2015ல் நான் திண்ணையில் எழுதினால் அது வேறு புனைப்பெயரில்தான். என்னை இலகுவாக கண்டுபிடிக்க முடியும். அப்பெயரைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆர்சனல் வில் பிகம் ஸ்ட்ராங்கர். புத்தாண்டு வாழ்த்துகள்.

      திண்ணை வாசகர்கள் அனைவருக்கும்.

      //பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
      நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
      கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
      மலியப் புகுந்து இசை பாடி ஆடி யூழி தரக் கண்டோம் //

      —————திருவாய்மொழியென்ற திராவிடவேதத்திலிருந்து நம்மாழ்வார்.

  26. Avatar
    paandiyan says:

    //படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோன்னு போவான்//

    appadiya solli irrukkaru??

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான், ஐயோ என்று போவான் // இதுதான் பாரதியார் எழுதியது. நினைவிலிருந்து நான் எடுத்துப்போட்டதால், சரியாக எழுதவில்லை.

      இதை நான் போட்டதற்கு விளக்கம்.

      முனைவர் என்று தன் பட்டத்தைப்போட்டு ராஜ சுந்தரம் என்பவர் இப்படி தொடங்குகிறார்: //இந்தியாவைத்துண்டாட நினைக்க சொல்லப்படும் பொய்களை…// இப்படித்தொடங்கி கட்டுரையில் சொல்லப்படும் பொய்களை மூடி மறைக்கும் அவாக்கொள்கிறார். எங்கிருந்தோ வங்கத்திலிருந்து வந்த ஒருவர், ஆன்மிகத்தில் ஆழங்கால் பட்ட தமிழர் பிள்ளைக்கு இந்து மதத்தைப்பற்றிச் சொல்கிறார். அதிலுள்ள பிழையைப் பிள்ளைச் சுட்டிக்காட்டுவதைப் பற்றிப் பழ. கருப்பையா எழுதுகிறார். விவேகானந்தரை ஹீரோவாகக் கொண்ட‌ இந்துத்வாவினருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து பழ. கருப்பையாவை இழிவுபடுத்தி போட்ட‌ கட்டுரைக்கு ஒரு மெத்தப்படித்தவர் இப்படி எழுதுகிறார்.

      மேலும், //இந்தியா என்றால் இந்துக்கள் மட்டுமே; இந்தியாவில் இந்து ராஷ்ட்ரம் உருவாக்கப்பட்டு அந்நிய மதத்தவர்கள், ஒன்று – இந்துக்களாக மாறவேண்டும்; அல்லது – வெளியேற வேண்டும்// என்ற கொள்கை உடையோருக்கே ஒரு வெள்ளைக்காரன் இந்துமதத்தைப் பற்றி விமர்சனம் செய்தால், அது தவறாக, அல்லது இந்தியாவைத் துண்டாட் வைக்கும் தெரியும். Breaking India என்ற நூலை எழுதியோர் இந்தக்கருத்தைக்கொண்டவர்கள்.

      இந்தியா என்றால், இந்துக்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், ஜயினர்கள், பவுத்தர்கள்; கிருத்துவர்கள்; இயறகையை மட்டும் வழிபடும் பழங்குடியினர் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் என்ற கருத்தைக் கொண்டோர் எப்படி, இந்துமதத்தைப் பற்றி மட்டும் வரும் விமர்சனத்தை இந்தியாவைத் துண்டாட வைக்கும் சூழ்ச்சி என்று சொல்ல முடியும்? இந்துக்களை பிளவுபடுத்தும் சூழ்ச்சி என்றறால் ஏற்கலாம்? சிவலிங்க வழிபாட்டைப் பற்றிய விமர்சனத்துக்கும், இந்தியர்களான மேற்கூறிய பிறமதத்தினர்களுக்கும் என்ன தொடர்பு?

      எனவே, அரைகுறைப் புரிதலைக்கொண்டு ஆபத்தான கருத்தைக்கொண்டவர்கள் படிக்காத பாமரர்கள் என்றால், அறியாது பிதற்றுகிறார்கள் என்று விடலாம். மெத்தப்படித்தவர், அதுவும் தன் முனைவர் பட்டத்தைப் போட்டு தான் மெத்தப்படித்தவன் என்று காட்டி எழுதுபவர், இப்படிப்பட்ட தவறான சிந்தனையை பொதுவெளியில் பரப்ப முயன்றால், பாரதியார் சொன்னதுதானே பொருந்தும் அவருக்கு? // படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான், ஐயோ என்று போவான்? //

  27. Avatar
    IIM Ganapathi Raman says:

    எந்த மதத்தவராயினும் இருக்கட்டும். அவரவர் மதம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை தம் மதத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம் மட்டுமே என எடுத்து, பதில்களோ, விளக்கங்களோ, அல்லது விமர்சனம் வைத்த வெள்ளைக்காரனுக்கு ஃப்டவாவோ போடலாம். அது ஒட்டு மொத்த இந்தியர்களின் மீது வைக்கப்படும் விமர்சனமாக எடுத்து, இந்தியாவைத்துண்டாட வைக்கும் சூழ்ச்சி என்று எடுக்க முடியாது. அப்படி உண்மையில் நீர் எடுத்தீராயின் அதுவே இந்தியாவைத்துண்டாட வைக்கும் சூழ்ச்சியாகும்.

    இதைச்சொல்ல எனக்கு முனைவர் பட்டம் தேவையில்லை.

  28. Avatar
    ஆதிவாசி says:

    @ IIM Ganapathi Raman

    எந்த புத்தகத்தையும் படிக்காமல், அறியும் ஆர்வம் இல்லாமல் எல்லா விஷயங்களைப் பற்றியும் விமர்சனம் செய்யும் விருப்பம் உங்களிடம் இருக்கிறது.

    கொழும்புவில் இருந்து அல்மோரா வரை எனும் புத்தகம் விவேகானந்தரின் சீடர்களால் எழுதப்பட்ட நூல் இல்லை. அவருடைய பேச்சுகளின் தொகுப்பு.

    ஒரு விஷயம் பற்றி கருத்துச் சொல்லும்போது அது குறித்துத் தெரிந்துகொண்டு கருத்துச் சொல்லலாமே.

    நீங்கள் சுட்டி இருக்கும் சிவலிங்கம் உங்களைப் போன்ற நவீன கால காலனிய அறிவுடையவர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். ஆகம அனுமதி இல்லாதது.

    நான் ஒருமுறை சொன்னதால், மீண்டும் சொல்லவேண்டுமா என யோசிக்கிறேன். காமம் என்பதை தவறு என்று ஹிந்து தர்மம் எங்கும் சொல்லவில்லை. ஆனால், ஷிவலிங்கம் என்பது காமத்தில் இருந்து எழுந்தது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

    ஒரு தகவல். மின்சார சாதனங்களை இணைக்க பயன்படுத்தும் ப்ளக்குகளில் இருவகை உண்டு. மேல் ப்ளக். ஃபிமேல் ப்ளக்.

    இவற்றுக்கும் காமத்துக்கும் சம்பந்தம் இல்லை. அப்படி இருப்பதாக நினைத்து ஏதேனும் ஏடாகூடமாகச் செய்துகொண்டு விடவேண்டாம். ஷாக் அடித்துவிடும்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      காமத்துக்குச் சம்பந்தம் உண்டு. இந்துமதம் காமத்தைப்பாவமாக எடுக்காமல் புனிதமாகவும் எடுக்கும். ஒருவனோ, ஒருத்தியோ, தன் மனைவியிடமோ, தன் கணவனிடமோ கொள்ளும் காமம் புனிதமானது. காமசூத்திராவையே இருடி ஒருவர்தானே படைத்தார்? முறையான காமம் ஷாக் அடிக்காது.

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      //எந்த புத்தகத்தையும் படிக்காமல், அறியும் ஆர்வம் இல்லாமல் எல்லா விஷயங்களைப் பற்றியும் விமர்சனம் செய்யும் விருப்பம் உங்களிடம் இருக்கிறது.
      கொழும்புவில் இருந்து அல்மோரா வரை எனும் புத்தகம் விவேகானந்தரின் சீடர்களால் எழுதப்பட்ட நூல் இல்லை. அவருடைய பேச்சுகளின் தொகுப்பு.//

      தப்பு. அந்த நூலை படித்திருக்கிறேன். ஆனால் முழுவதையுமன்று. இராமகிருஷ்ணமடத்து ஒரு சாது எழுதிய விவேகானந்தரின் சரிதையை முழுவதும் படித்திருக்கிறேன். சரிதம் ஹேகியோ கிராஃபியாக (Hagiography) இல்லாமல் விவேகானந்தர் பல குறைகளையும் தொட்டுச்சொல்கிறது வியப்பு.

      சிகாகோ பேருரை தனியாக அம்மடத்தவரால் சிறு கையடக்கப்பிரதியாக வெளியிடப்பட்டு மலிவு விலையில் கிடைத்தது. முழு உரையையும் படித்திருக்கிறேன். I recall an extract of it :

      //I have not come here to convert you to Hinduism. Rather, I have come to make Christians more Christian, Islamists more Islamic, Buddhists more Buddhist, etc. He went on thus. This put the crowd at ease and made them prepare to see an out of the ordinary Hindu monk.//

      However, he had had many conflicts with the Hindu faith. He knew he shouldn’t mince his words to attack the enemies within. He took pains to yoke together disparate elements. We need a separate essay on this Hindu mon in Thinnai where he should be subjected to closer objective scrutiny. That may perhaps debunk many myths about him. Here one point – totally unconnected with religion – is worth mentioning. He had an amazing mastery of English : both writtern and spoken – that came out clearly, in his extempore Chicago address. Believe me or not, he is a poet of great order in English too; and I remember a few of his poems appearing in Indo-Anglian Poetry anthology.

      நான் படித்தவைகளிலிருந்து எனக்குப் புரிந்தது விவேகானந்தரின் அடிப்படை மற்றும் வளர்க்கபப்ட்ட குணங்களும் அவரின் குரு இராமகிருஷ்ணரின் குணங்களும் வெவ்வேறானவை.

    3. Avatar
      தமிழாறு says:

      ஷிவ அல்ல சிவம்.. அன்பும் சிவமும் வேறென்பர் அறிகிலார்…மின் கருவியில் மட்டுமில்லை பல துறைகளிலே அவ்வாறான வழக்கு ஆங்கில மொழி மரபு.. ஆனால் உங்களுடைய இந்த வழக்காடு முறைக்கு ஆங்கிலத்தில் strawman fallacy என பெயருண்டு, சோளக்கொல்லை பொம்மை போல் ஒன்றை ஏய்த்து திசை திருப்பும் வழக்காட்டு திருட்டுத்தனம்…

  29. Avatar
    ஆதிவாசி says:

    @ IIM Ganapathi Raman

    தமிழர்களுக்கும் ரிஷிகளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு இருந்தீர்கள்.

    மார்க்கண்டேயர் உட்பட பல நூற்றுக்கணக்கான வேத ரிஷிகள் தமிழர்கள். மார்க்கண்டேயர் பிறந்து வளர்ந்த ஊரான திருக்கடையூருக்குப் போய் நல்லறிவு பெற நீங்கள் வேண்டலாம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      பிரமாதம். இருடிகள் சிந்து சமவெளியென்று நினைக்க தமிழ்நாட்டுக்குள்ளேயே வந்துவிட்டார்கள். வடமொழியும் தமிழர்கள்தான் உருவாக்கினார்கள் என்பதும் உண்மை. எனக்கு எந்த இருடியிடமிருந்தும் நல்லறிவு வேண்டாம். இருக்கும் அறிவு போதும். வரலாறு எழுதுங்கள். பிச்சுக்கிட்டுப்போகும். வாழ்த்துக்கள்.

      என் கருத்துக்களின் எவ்வித மாற்றமும் இல்லை. அவை:-

      தமிழருக்கு வடமொழி வேதங்களும் வேத மதமும் அந்நியமானவை.
      வைதீக மதம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை.
      வேதங்கள் வடமொழியில் எழுதப்பட்டவை.
      வடமொழி தென்னாட்டு மொழியன்று.
      தமிழரின் தாய்மொழி தமிழே.
      இருடிகள் தமிழர்களல்ல.
      சித்தர்களே தமிழர்கள்.
      விவேகானந்தர் தமிழருக்கு மதத்தைப்பற்றி சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.
      அவருக்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆன்மிக வளர்ச்சியில் கரை கண்டவர்கள்.
      விவேகானந்தர் சீடர்கள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவர் தமிழருக்குத் தேவையில்லை.

      தமிழர்களுக்கு வடமொழி தெரிந்திருக்கலாம். ஆங்கிலமும்தான் தெரிகிறது. ஆங்கிலம் தமிழரின் தாய்மொழியா?
      வேதங்களை எழுதியோர் சிந்து சமவெளி மற்றும் கங்கைச்சமவெளி மனிதர்கள்.
      வடமொழியும் வைதீக மதமும் தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து வந்த பிராமணர்களால் கொண்டுவரப்பட்டவை. மன்னர்களின் செல்வாக்கு பெற்று வளர்ந்து ஏற்கனவே இருந்த தமிழர் மதம் மீது வைக்கப்பட்டு அதை அழுத்தி கிராமப்புறங்களுக்குத்தள்ளியவை. விளைவு நாட்டார் வழிபாடு கிராம மக்களிடம் மட்டுமே இன்று இருக்கிறது. அதன் நீட்சி சிற்றூர்களிலிருந்து பேரூர்களுக்குப் புலம்பெயர்ந்தவர்களால் காணப்படலாம். முனியசாமிக்கு பல்லவன் சாலை கோயில் இருப்பதைப்போல. வெள்ளைக்காரனும் அன்று ஆண்ட மன்னர்களிடம் செல்வாக்குப் பெற்றுதான் ஆதிக்கசக்தியானார்கள். அதைப்போல.

      இவை என் நிலையான கருத்துக்கள். வாதம்செய்ய இடமில்லை. இன்றைய இந்துத்வா வரலாற்றாசிரியர்கள் சொன்ன வடமொழி தமிழரின் தாய்மொழி என்றும், வைதீக மதம் தமிழரின் தாய் மதம் என்று நிலை நிறுத்துவார்கள். நீங்கள் கவலைப்படவேண்டாம். தமிழையும் அவர்தம் வழிபாடுகளையும் முற்றிலும் அழித்துவிட வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றன. உங்கள் கனவு – அதாவது வேதங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள்; தமிழர்களின் மதம் வைதீக மதம் – என்பது கண்டிப்பாக நிறைவேறும்.

    2. Avatar
      தமிழாறு says:

      தரவே இன்றி உண்மை போல் திரிப்பதும் சங்கத மொழி புரட்டு கலை

  30. Avatar
    paandiyan says:

    //படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான், ஐயோ என்று போவான் //
    correct. when you quote you should be perfect. this is the way KALAGAM tuned lot of stories earlier that had happen in printing media. here we would not allow that much easily.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //here we would not allow that much easily.//

      அந்த we என்பவர் யார்? வெளியில்தான் கூட்டமாக வந்து PK இந்தி திரைப்படம் ஓடிய சினிமாத்தியேட்டர்களை இன்று உடைத்திருக்கிறார்கள். மாதொருபாகன் நாவலாசிரியருக்கு மிரட்டல் விடுத்து அவர் நாவலை எரித்திருக்கிறார்கள். இங்கேயும் வந்துவிட்டார்களா? அந்த WE யார் யார் பாண்டியன்? பயமாக இருக்கிறதே!

      1. Avatar
        paandiyan says:

        மாதொருபாகன் NOVEL EXTRACT IS IN FACEBOOK. IF YOU AGREE THOSE VILLAGE HAD THOSE TYPE OF GIRLS THEN I SHOULD OPENLY ADMIT HERE…
        THE WRITER NOW OPENLY SAID HE DID NOT HAVE PROOF FOR THAT AND TRY TO ESCAPE AND MANY BLOG PEOPLE WITHDRAW THE SUPPORT AFTER HIS STATEMENT. NOW ITS UR TRUN… BRING PROFF AND SAY I AM AGREE FOR THOSE TYPE OF STATMENT (FOR GIRLS) IN THAT VILLAGE

  31. Avatar
    IIM Ganapathi Raman says:

    சிவலிங்க வழிபாடு எனக்கு அந்நியம். எனவே அது என்ன என்று எவர் எப்படிச்சொன்னாலும் அதை ஆதரிக்க மறுக்க எனக்கு யாதொரு பயனுமில. சிவலிங்க வழிபாட்டைக் கொண்டோர், அது ஒரு குறியீடு என நினைத்துக்கொண்டு வழிபடுவதில்லை. அவர்களெல்லாம் அது சிவனின் வடிவமே என்றுதான் வழிபடுகிறார்கள். அது என்ன என்பது மத ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே. அவர்கள் தங்களுக்கு எப்படி படுகிறதோ அப்படித்தான் எழுதுவார்கள்; பேசுவார்கள். இந்து மத ஆராய்ச்சியை இந்துக்கள்தான் செய்ய வேண்டுமென்பது இக்காலத்து இந்துத்வா பிதற்றல். எனவே வென்டி டோனியரை எதிர்த்தார்கள். திண்ணைத் தளத்தில் அப்படி செய்ய வேண்டிய தேவையில்லை. என் பிரச்சினையெல்லாம், மத ஆராய்ச்சிக்கும் அன்றாட சிவலிங்க வழிபாடு செய்பவனுக்கும் ஏன் தொடர்பு இருக்க வேண்டுமென்பதுதான். தேவையேயில்லை. எனவேதான் இக்கட்டுரை ஒரு வெட்டி வேலை.

    சிவலிங்க வழிபாடு செய்பவர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் பின்னூட்டத்தில் வந்து கட்டுரையாளர் பெரும் உண்மைகளை முன்வைத்தீர்கள் என்றும் அதைப்பற்றி ஷாலி எழுதினால், வெறும் பேத்தல் என்றும் சொல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஆராய்ந்தால் தெரிய வருவது: இவர்களுக்கு இவர்கள் தெயவத்தின் மேலே நம்பிக்கை இல்லை. இவர்கள் போலி இந்துக்கள். நாத்திகர்களோ என்றும் சங்கையெழகிறது. A true Hindu will never care what others think about his God.

    இராஜாஜியும் ஆண்டாள் ஒரு பெண் ஆழ்வார் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். அவர் ஒரு ஆண் என்றார். உடனேயே, ஆண்டாளின் திருப்பாவையை மார்கழியில் மாதத்தில் படிப்பவரும் அன்றாடம் ஓதும் வைணவரும் தொப்பென போட்டுவிட்டு கிருத்துவ மதமோ, இசுலாத்துக்கோ ஓடிவிட்டார்களா என்ன? இந்துக்கள் என்ற போர்வையில் உலாவும் வெறியர்களை நம்பி மோசம் போவாதீர் என்று பல பின்னூட்டங்களில் இங்கேயே எழுதியிருக்கிறேன்.

    எல்லாமதத்திலும் வெறியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அம்மதத்தினரும் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். Protect yourself from these religious bigots.

  32. Avatar
    எஸ். வனிதா says:

    நிறைய தகவல்கள் கொண்ட கட்டுரை. ஆசிரியரின் பதிலில் எலக்ட்ரிக் ப்ளக் உவமை நல்ல நகைச்சுவையுடன் பொருத்தமானதாக இருக்கிறது.

  33. Avatar
    ஷாலி says:

    //ஒரு தகவல். மின்சார சாதனங்களை இணைக்க பயன்படுத்தும் ப்ளக்குகளில் இருவகை உண்டு. மேல் ப்ளக். ஃபிமேல் ப்ளக்.
    இவற்றுக்கும் காமத்துக்கும் சம்பந்தம் இல்லை.//

    அய்யா! ஆதிவாசி அவர்களே! ஆண் குறி பெண்குறி இணைப்புகளில் காமம் உண்டு.இந்த காம இணைப்பை உதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே மின்சார ஆண்,பெண் இணைப்புகள்.(Gender of Connectors and Fasteners).சிவலிங்க தத்துவம் நீங்கள் நினைப்பதுபோல் வெறும் சின்னம் குறி அல்ல.மானிடர்கள் சிற்றின்ப மூலம் பேரின்பத்தை அடையலாம் என்பதை காட்டும் சிவ தத்துவம்.

    In electrical and mechanical trades and manufacturing, each half of a pair of mating connectors or fasteners is conventionally assigned the designation male or female. The “female” connector is generally a receptacle that receives and holds the “male” connector.
    The assignment is a direct analogy with genitalia and sexual intercourse; the part bearing one or more protrusions, or which fits inside the other, being designated male in contrast to the part containing the corresponding indentations, or fitting outside the other, being designated female. Extension of the analogy results in the verb to mate being used to describe the process of connecting two corresponding parts together.
    http://en.wikipedia.org/wiki/Gender_of_connectors_and_fasteners

  34. Avatar
    குலசேகரன் says:

    WE ந்னு போட்டு மிரட்டல் விடுறீக‌ளே. அந்த அவர்கள் யார் யார்? மாதொருபாகன் படிச்சிண்டிருக்கேன். முடிச்சவுடன் எழுதறேன் அது எங்கு விவாதிக்கப்படுகிறதோ அங்கு. இங்கு சிவலிங்கத்தைப்பற்றி மட்டும் பேசினாற்போதும்.

  35. Avatar
    எஸ். வனிதா says:

    ஷாலி,

    கட்டுரை ஆசிரியர் சொன்னது உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா? இல்லை புரியாததுபோல நடிக்கிறீர்களா?

    காமத்தில் இருந்துதான் எலக்ட்ரிசிட்டி கண்டுபிடிக்கப்பட்டது என்று நினைத்து மேல் பள்க், ஃபிமேல் ப்ளக் காமத்தின்மூலம் கரண்ட் எடுக்கும் என்று புரிந்துகொண்டுவிடாதீர்கள் என்று கட்டுரை ஆசிரியர் கேலி செய்திருக்கிறார்.

    சிவலிங்கம், யோனி பீடம் என்பவையும் மேல் ப்ளக், ஃபிமேல் ப்ளக் போன்ற பெயர்கள்கூட உவமை சார்ந்து எழுந்தவை. உவமைப் பெயரை மெய்ப்பொருளாக நினைத்துக் குழம்பிக் கொள்வது அறிவின் அடையாளம் இல்லை.

  36. Avatar
    BS says:

    இக்கட்டுரை இப்பொழுது மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டுவிட்டது. வைரல் என்பார்களே அது. இணையத்தில் பகிரப்படுகிறது. நீங்க ரொம்ப லேட்.

    பொய்யா உண்மையா என்பது அவரவர் நோக்கைப் பொறுத்ததுவே. உங்களைப் பொறுத்தவரை மட்டுமே பொய். பழ கருப்பையாவைப் பொறுத்தவரை உண்மை.

    கதிரவன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்பது உண்மை. அஃது உங்களைப்பொறுத்தவரை மட்டுமே உணமை. அல்லது உங்களைப் போன்று சிந்திப்பவருக்கு. விஞ்ஞானியின் பார்வையில் அது பொய். கதிரவன் தோன்றுவதுமில்லை. மறைவதுமில்லை. அவன் நின்ற நிலையிலே இடத்திலேயே இருக்கின்றான்.

    காலில் முள் குத்திவிட்டது என்று முள்ளில் மேல் பழியைப்போடுவீர்கள். முள் தன் நிலையிலேயே இருக்க அதன் மேல் காலை வைத்து முள்ளைக்குத்தியவர் நீங்கள்.

    விஞ்ஞானம் உண்மைகளைப் பொட்டென்று வைக்கும். அதன் நிலையே இப்படி என்றால், மனிதனின் கற்பனையில் தோன்றிய மதங்களின் நிலையென்ன?

    பார்வைகள் வெவ்வேறு. உங்கள் பார்வையை எல்லாருமே ஏற்கவேண்டுமென நினைக்காதீர்கள். நாட்டில் குழப்பமும் அமைதியும் கெடுவது. உன் பார்வை உனக்கு; என் பார்வை எனக்கு என்பதை ஏற்காமல் தன் பார்வையை மற்றவர்கள் மேல் திணிப்பதால்தான் :-)

    மற்றவர்கள் திணிக்கின்றார்கள் என்று அய்யோ முறையோ எனக்கதறுபவர்கள், தாமும் அதையேதான் செய்கிறோமா இல்லையா என்பதையும் பரிசோதனை செய்துவிட்டால் எல்லாருக்கும் நல்லது; நாடு அமைதி பெறும்.

  37. Avatar
    BS says:

    பழ கருப்பையா சொன்னவையிலிருந்து எப்படி மாறுபடுகிறீர்கள் என்று சொல்லி எழுதுங்கள். மொட்டையாக அவர் சொல்வது அனைத்தும் பொய் என்பது அவரின் பேச்சுரிமையைத் தடுக்க முயற்சியேயாகும்.

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *