ஆனந்த பவன் நாடகம் வையவன்   காட்சி-17

This entry is part 12 of 23 in the series 14 டிசம்பர் 2014

 

 

 

 

இடம்: ஆனந்தபவன்

 

நேரம்: மாலை மணி ஆறு

 

உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, சாரங்கன்

 

(சூழ்நிலை: ராஜாமணி கேஷ் கவுண்டரில் உட்கார்ந்திருக்கிறான். சாரங்கன் உள்ளேயிருந்த கைக் காரியத்தைப் போட்டு விட்டு ஓடி வருகிறான். அவன் பின்னால் சுப்பண்ணா வருகிறார்)

 

 

சாரங்கன்: ராஜா… ரங்கண்ணா ஒய்.சி.எம்.ஏ.வுக்குப் போனவர்  அவரா வரல்லியே… சைக்கிள்ளேறி  பார்த்துட்டு வந்துடட்டா?

 

ராஜாமணி: என்னமோ ராகவன் விஷயம் பேசணும்ணு செக்ரட்டரி ஜான்ஸன் கூப்பிட்டு அனுப்பிச்சார்ணு, நீதானேடா சொன்னே? வரப் போறார்… நிதானமாத் தான் வரட்டுமே.

 

சாரங்கன்: இது கொஞ்சம் அர்ஜண்ட் மாட்டர்.

 

சுப்பண்ணா: ஆமா ராஜா, சாரங்கன் கொஞ்சம் அவசரமா போய்ட்டு வந்துடட்டும்.

 

ராஜாமணி: என்ன அவசரம்? எங்கிட்டே கொஞ்சம் சொல்லுங்களேன்.

 

சாரங்கன்: அடுத்த ஜங்ஷன்லே ஜமுனாவைப் பார்த்ததா, கவுன்சிலர் ராமு சொல்றாரு

 

ராஜாமணி: அப்படியா எங்கயாவது ஊருக்குப் போக கௌம்பியிருப்பா!

 

சுப்பண்ணா: அப்படியிருந்தா நமக்கு ஏன் சந்தேகம் வரப் போறது? கூட அந்த ப்ராடு மோகன்… அதான் நம்ம ஹோட்டல்லே அக்கவுண்ட் வச்சிருந்தானே… அந்த டூப் மெடிகல் ரெப்ரஸென்டேடிவ்…அவன் நின்னுட்டிருந்தானாம்.

 

சாரங்கன்: அவா ரெண்டு பேரும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிண்டிருந்தாளாம்.

 

சுப்பண்ணா: ரெண்டு பேர் கையிலயும் ரெண்டு பொட்டி இருந்ததாம்.

 

ராஜாமணி: (அதிர்ச்சியுடன்) நெஜம்மாவா!

 

சாரங்கன்: இதைக் காதுல கேட்டப்பறம், எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே. ரங்கையருக்கு இதைத் தெரிவிச்சாகணும்.

 

சுப்பண்ணா: என்ன ராஜா… நோக்கு மொகம் வெளுத்துப் போச்சு! இமீடியட்டா கௌம்பலேண்ணா அவன் அவளைக் கடத்திண்டு போயி நாசம் பண்ணிடுவான்!

 

ராஜாமணி: இதுக்கு ரங்கையரைத் தேடிண்டு போயி, விஷயத்தைச் சொல்லி, அவரை வரவழச்சு, அப்பறமா கௌம்ப டயத்தை எதுக்கு வேஸ்ட் பண்ணனும்?

 

சுப்பண்ணா: பாவம் ஜம்னா… ஒண்ணுமே தெரியாத பச்சக் கொழந்தே… இவன் எந்த மருந்து, எந்த மாயம் பண்ணி, அவளை இழுத்துண்டு போறானோ தெரியலியே.

 

ராஜாமணி: சாரங்கா, நீ போய் டாக்ஸி ஸ்டாண்ட்லே ஒரு டாக்ஸியை இமீடியட்டா கூட்டிண்டு வா! நேரே அப்பாட்ட போயி அவரையும் வண்டியிலே ஏத்திட்டுப் பொறப்படலாம். ஆமா… கவுன்சிலர்ராமு, அவாளை எங்கே பார்த்தாராம்?

 

சாரங்கன்: வெய்ட்டிங் ரூம்லே.

 

ராஜாமணி: அனேகமா மெட்ராஸ்தான் போக பிளான் பண்ணியிருப்பா, மெட்ராஸுக்குத்தான் அடுத்த வண்டி ஆறரைக்கு இருக்கு. கவுன்ஸிலர் எறங்கிய வண்டிலே அவா நிச்சயமா ஏறலியா?

 

சாரங்கன்: வண்டி பொறப்பட்டப்பறம், ஸ்டேஷன் மாஸ்டரோட பேசிண்டிருந்துட்டுன்னா, அவள் கௌம்பி வந்திருக்கார்.

 

ராஜாமணி: அது பெங்களூர் வண்டி. அஞ்சே முக்கால். அடுத்து ஆறரைக்குத் தான் வண்டி! நடுவிலே வேற எதுவும் இல்லே. இப்போ பொறப்பட்டாலும் கரெக்டா ஆறே காலுக்கு அவாளைப்புடிச்சுடலாம். ஓடு… ஓடு…

 

சாரங்கன்: தோ… வெளியவே ஒரு டாக்ஸி நிக்கறதே (கை தட்டுகிறான்) டாக்ஸி… டாக்ஸி

 

ராஜாமணி: சுப்பண்ணா, நீங்களும் வாங்கோ உமாசங்கர் கேஷைப் பாத்துக்கட்டும். சாரங்கா. நீயும் வண்டியிலே ஏறு! நேரே வீட்டுக்குப் போயி அப்பாவை அழச்சுண்டு போயிடலாம்.

 

சுப்பண்ணா: பெரியண்ணா வரணுமா ராஜா?

 

ராஜாமணி: அப்பா வந்தாத்தான், ஜம்னாவாண்டே நல்லபடியா பேசி, அழச்சிண்டு வருவார்.

 

 

சுப்பண்ணா: அதுவும் சரிதான்…

 

ராஜாமணி: விஷயம் உள்ற வேற யாருக்கும் தெரியாதே!

 

சுப்பண்ணா: சாரங்கன் மொதல்லே எங்காதுல தான் வந்து சொன்னான். அவன் வாயை மூடி நேரா அழச்சுண்டு வந்துட்டேன்.

 

ராஜாமணி: கரெக்ட், வண்டியிலே ஏறுங்கோ.

 

(திரை)

 

[[தொடரும்]

Series Navigationகைவசமிருக்கும் பெருமைஎஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை – மெல்பனில் நினைவரங்கு – விமர்சன அரங்கு
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *