“2015” வெறும் நம்பர் அல்ல.

This entry is part 27 of 33 in the series 4 ஜனவரி 2015

ருத்ரா

“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”
……………….
2013 ஐப் பார்த்து 2014
இப்படி பாடி முடிப்பதற்குள்
2015 வந்து விட்டது
2014 ஐ பார்த்து இப்படிப்பாட!

எத்தனையோ ஓடி விட்டது.
காலுக்குள்ளும் கைக்குள்ளும் புகுந்து.
எத்தனையோ அலைகள்
அலைகளின் மேல்
அலைகளின் கீழ்
அலைகளின் அலைகளாய்
தங்க மணல்
ஏக்கங்களை தடம்பதிக்க‌
நீல வானம் “கொண்டைதிருக்கு” சூடி
நீளமான கூந்தல் எனும்
கால விழுதுகள் ஆடவிட்டு..
கனவுகள் எனும் பஞ்சுமிட்டாய் நட்டுவைத்த‌
காதல் நுரைவனங்கள் தாண்டி
ஏதோ நிறைவடையாத நிலவுகளுக்கு ஏங்கி…
விழி பிதுங்கி விரல் தட்டிய
தட்டெழுத்துக்களில் எல்லாம்
இனம் புரியாத முலாம் பூசி..
நிறம் தெரியாத பூ தெரியாத‌
மெகந்தியை இனிமையான பூரான்களாய்
நளினமாய் ஊர்ந்து செல்லவிட்டு
வெண்ணெய்ச்சிற்பமென வழுக்கும்
கைகளில் நெளியும்
அந்த அற்பத்தீயின் அடிச்சுவையில்
ஆகாசங்களை கருவுற்று..
இன்னும் முடியவில்லை..
அதற்குள் இந்த திரையே கிழிந்து விட்டதா?…

அதோ
ஒரு நள்ளிரவில்
பன்னிரண்டு அடித்து
நாக்கு தொங்கி
வெட வெடக்க காத்திருக்கிறது.
வா..வா..வா
புத்தாண்டே!

அடித்து நொறுக்கி அடித்து நொறுக்கி
அந்த சில்லுகளை அரசியல் ஆக்கி
பொய் எனும் உண்மையை தூக்கிப்பிடித்து
அல்லது
உண்மையாகவே உண்மையிடம் ஏமாந்து போய்
எத்தனை தடவை
தோல்விகளை வெற்றி என்று
ஜிகினாப்பயிர்களை அறுவடை செய்திருக்கிறோம்.

வரும் ஆண்டு
நிச்சயம் அந்த கதவுகளை திறக்கும்.
சுவர் இல்லை..கூரை இல்லை
வீடே இல்லை..வாசலும் இல்லை..
ஆனால் கதவுகள் மட்டும்
அதோ கனத்த பூட்டில்..

2015
அதை உடைத்து சுக்கு நூறாக்கட்டும்.
நம்பிக்கைகளில்
அதோ
ஆயிரம் கூடங்குளங்கள்.
2015 எனும்
ஆற்றல் பிரவாகமே
நம் மெதுவான நத்தைக்கூட்டுக்குள்ளும்
ஹிக்ஸ் போஸான்கள் கதிரியக்கம் செய்யும்.
புதிர்கள் தெளிய புதுப்பூவாய் வரும்
2015 ஐ கையில் எடுத்துக்கொள்.
வரப்போகும் எல்லா நூற்றாண்டுகளையும்
ஒரு சேர சுருட்டி எடுத்துக்கொள்ளும்
ஒரு “ஏ டி எம்” கார்டின் “பின்”
அந்த 2015.
ஆம்.அது வெறும் நம்பர் அல்ல.

Series Navigationதொடு நல் வாடைரவா தோசா கதா
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *