நதியையும் புனித தாய் என்றாய்
நாட்டை தாய் என்றாய்
ஆனால்
தாயை
மொழியை அன்னை என்றாய்
நீ
ஒரு பெண் என்று பார்த்ததே இல்லை.
தாய்..
அவள் சிரிப்பும் கண்ணீரும்
உனக்கு அரச்சனைப்பூக்கள் தான்.
அவள் பிரமாண்டமாய் நிற்கிறாள்
ஒரு பெண்ணாக..!
ஆனால் உன் மனைவி எனும்
பெண்ணுக்கு நீ அர்ச்சனை செய்ததையெல்லாம்
அள்ளிக்கூட்டினால்
இந்த ஆகாயமே
சல்லடையாய் கிழிந்து தொங்கும்.
பெண் எனும் கோவில் உன் தாய் ஆனபோது
நீ ஆத்திகன் ஆனாய்.
மனைவி எனும் பெண் கோவில் ஆகும்போது
நீ நாத்திகன் ஆனாய்
ஆணாதிக்கம் என்ற சொல்லும் அலுத்துப்போனது.
டி.என்.ஏ ..ஆர்.என்.ஏ சமன்பாடுகள் சில
மாறிப்போனதால்
அவளை நோக்கி உன் கையில்
சாட்டையா?
இன்னும் உயிரியலின் இந்த நுண்கணிதம்
தெரியாத நீ
மிருகமாகவே தான் வலம் வருகிறாய்.
உன் ஆணவத்தை
நீயே “ஆவணப்படுத்தி”க்கொண்டாய்.
உலகம் பூராவும்
உன் கோரைப்பல் பட்டுமே
ஊடக உரிமை எனும்
வெளிச்சத்தில்
குரூரம் காட்டுகிறது.
பரபரப்பு விளம்பரத்தில்
பணம் குவிக்கும் புல்லுருவிகளின்
மகசூலில்
இந்த பெண்மை எனும்
உண்மை மகரந்தங்கள்
வெறும் கொச்சைப்படுத்தப்பட்ட
தூசிகளாய்
தூவிக்கிடக்கின்றன.
பெண்மையை அசிங்கப்படுத்திவிட்டு
ஆயிரம் தடவை
“மகளிர் தின”ங்களால்
கழுவிக்கொண்டாலும்
அசுத்தம் மறைவதில்லை.
ஆம்..ஆண்மை
நியாயத்தை நிலை நாட்டுவதில்
“ஆணமையற்று”ப்போன அந்த அசுத்தம்
மறைவதில்லை.
பெண்களின் இந்த
வெற்றுப் பொம்மை சமுதாயத்தில்
என்ன உயிர் இருக்கப்போகிறது?
நமது நியாயங்களெல்லாம்
“இருட்டறையில் பிணந்தழீஇய அற்று..”
இதை விட
எவனும் கடுமையாய்
தீர்ப்பு சொன்னதில்லை!
=======================
- மிதிலாவிலாஸ்-5
- கவிதைகள்
- ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்
- நப்பின்னை நங்காய்
- வைரமணிக் கதைகள் -6 ஈரம்
- பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை
- தொடரகம் – நானும் காடும்
- ஒரு தீர்ப்பு
- தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !
- விண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக்கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு
- உயரங்களும் சிகரங்களும்
- ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]
- தொடுவானம் 58. பிரியாவிடை
- பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்
- என் சடலம்
- சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு
- யாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)
- மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளை
- திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்
- பேருந்து நிலையம்
- நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 5