ஆத்ம கீதங்கள் –22 ஆடவனுக்கு வேண்டியவை -2 [தொடர்ச்சி]

This entry is part 5 of 32 in the series 29 மார்ச் 2015

ஆத்ம கீதங்கள் –22 ஆடவனுக்கு வேண்டியவை -2
[தொடர்ச்சி]
[A Man’s Requirements]

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உனது குரலால் என்னை நேசி,

எனக்குத் திடீர் மயக்கம் அளிக்க;

சிவக்கும் முகத்தோ டென்னை நேசி

முணுக்கும் உணர்ச்சிக் கனப்பால் !

சிந்திக்கும் ஆன்மாவால் என்னை நேசி,

காதற் பெருமூச்சு பிளக்க வேண்டும்;

செம்மையாய் வாழும் உன் சிந்தனையில்

பிறப்பையும், இறப்பையும் பின்னி நேசி !

உலகு உனக்கு கிரீடம் அளித்த போது

உலவும் தென்றலில் என்னை நேசி,

உன்னைச் சுற்றி தேவதைகள் நிற்க

மண்டியில் வழிபடும் போது நேசி;

தூய்மை யோடு குருமார் போல் நேசி,

வான்வெளி நிழற் தளத்தில் நின்று;

களிப்பாய்,விரைவாய், மெய்யாய் நேசி,

கைப் பற்றிய மங்கை போல் எண்ணி.

மன வலுவு அளிக்கும் உறுதிகள் மூலம்,

தொலை விலோ, அன்றி நெருங்கியோ;

வீட்டுக்கோ இடுகாட்டுக்கோ அல்லது

உன்னத மேலுல குக்கோ நேசி என்னை !

இளமங்கை காதல் புனைவில்லை என

நீ எனக்கு நிரூபித்திட முடிந்தால்,

நானுனை நேசிப்பேன் அரை ஆண்டு !

மானிடன் காதலிக்க முடிவது போல்.

[முற்றும்]

++++++++++++++++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/

2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

3. http://www.online-literature.com/elizabeth-browning/

Series Navigationகோழி போடணும்.சிரித்த முகம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *