அழகின் விளிப்பு

This entry is part 19 of 24 in the series 7 ஜூன் 2015

சி. ஜெயபாரதன், கனடா

azakin

அழகினைக் கண்டால், உளம்போய்
அடிமை ஆகுதடி !
நிழலினைப் போல, தொடர்ந்து
நெருங்க ஆசையடி !

கற்ற மறையெல்லாம் ஒருகணம்
காற்றில் பறக்குதடி !
ஒற்றரைப் போல ஒளிந்தே
உளவச் செல்லுதடி !

சுற்றுப் புறமெல்லாம் மறந்து
சூனிய மாகுதடி !
முற்றுகை செய்யுதடி துணைக் கோளாய்
முழு உணர் விழந்தபடி !

பட்டப் பகலிலும் கனவுகள்
பளிச்சிடு கின்றதடி !
வட்டப் புள்ளி போல கோலமிட்டு
வலம் வருகுதடி !

Series Navigationநாய் இல்லாத பங்களாகடந்து செல்லுதல்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *