எலி

This entry is part 2 of 19 in the series 28 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன்
0
கடத்தல் கூட்டத்தில் ஊடுருவி, அவர்களை கூண்டோடு சிறைக்குத் தள்ளும் காமெடி எலி!
0
1758957882eli movie posters1எலிச்சாமி சில்லறைத் திருடன். அவனுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி, சர்வதேச சிகரெட் கடத்தல்காரன் நாகராஜனை வளைத்துப் பிடிக்க நினைக்கிறது காவல்துறை. எலியின் சாமர்த்தியம் செல்லுபடியாகிறதா என்பதைக் காமிக் புத்தகமாகச் சொல்கிறது படம்.
வடிவேலுவின் அத்தனை பரிமாணங்களையும் பிழிந்து எடுத்து எலியின் பாத்திரத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன். அவர் மேல் உள்ள நம்பிக்கையில் அதிக ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார் வைகைப் புயல்.
‘கஜினி’ வில்லன் பிரதீப் ராவத், அதே கொடுரத்துடன் இதில் நாகராஜனாக வலம் வருகிறார். அவரை வடிவேலு ஏமாற்றும் இடங்கள் நகைச்சுவை விருந்து. எலியின் காதலி ஜூலியாக ‘அன்னியன்’ சதா, பின்பாதியில் வந்து, குறைந்த உடைகளில் கவர்ச்சி காட்டுகிறார்.
வடிவேலுவை ஊமை என்று எண்ணி அனைவரும் ஊமை பாஷையில் பேசும் காட்சியில், அவரது உடல்மொழியும், முகமும் அரங்கை சிரிப்பலைகளில் ஆழ்த்துகின்றன. பலே!
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பின்னணி இசையையும், தமிழக ஜேம்ஸ் பாண்ட் ஜெயசங்கரின் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின் இசையையும் கலந்து இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர்.
அறுபதுகளில் நடைபெறும் கதையில், கலை இயக்குனர் தோட்டா தரணி அசத்தியிருக்கிறார். நுட்பமாக, விளக்குகள், திரைசீலைகள், கடைகளின் பெயர் பலகைகள், தொலைபேசிகள் என அவர் அசல் போல் வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
ராஜேஷ் கன்னாவின் ‘ ஆராதனா’ படப் பாடலான “ மேரே சப்னோங்கி ராணி ‘ க்கு வடிவேலுவும் சதாவும் அந்த படக் காலத்து உடைகளில் ஆடுவது, சீனியர்களுக்கு விருந்து.
ஆங்காங்கே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள் உண்டு.
“ அண்ணன் ஒரு ஷேவிங் செய்த சிங்கம் டா!” ( சிங்கத்துக்கு ஷேவிங் செஞ்சா அசிங்கமா இருக்கும்டா! ( வடிவேலு)
“ தமிழ் தண்டூரி சிக்கன் மாதிரி அழகா இருக்கறப்ப, ஏன் ஊறுகாய் மாதிரி இருக்கற இங்கிலீஷை அடிக்கடி தொட்டுக்கறீங்க? “ – சிந்திக்க வைக்கும் வசனம்.
இந்தி படங்களின் அந்தக் கால நடனக் கூடத்தை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார் ஒளிப்பதிவாளர் பால் லிவிங்க்ஸ்டன். மஞ்சள் ஒளியில் சதாவின் ஆட்டம் சூப்பர்.
வைகைப்புயலுக்கு இன்னுமொரு இறகு தொப்பியில்.
0
பார்வை : குஷி
0
மொழி : இன்னமும் வடிவேலுவுக்கான இடம் காலியாத்தான் இருக்குது அப்பு!
0

Series Navigationபிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால்  பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.மிதிலாவிலாஸ்-24
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *