ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
ஊஞ்லின் மீது அமர்ந்திருந்தாள் யாழினி. சுற்றிலும் பரந்து விரிந்திருந்த மணற் பரப்பு. இரண்டு ஊஞ்சல்கள் ஒரு சருக்கு மரம், ஒரு சாரியில் வைக்கப்பட்டிருந்ததென்னை மரம், அந்த தென்னை மரங்களை கடந்து சதுரமாய் ஒரு புல்வெளி. அதற்கு பார்டர் அமைத்ததைப் போல குரோட்டன்ஸ் செடிகள் ஒரு சீராய் வெட்டிவிடப் பட்டிருந்தது.
தத்தி தத்தி வந்துக்கொண்டிருந்தாள் குட்டி யாழினி! வாழ்க்கை எத்தனை தூரிதமாய் கடந்து விடுகிறது. ஊரை விட்டு வந்து 3வருடங்களுக்கு மேல் ஆயிற்று.
குழந்தை,அம்மா என்று அழைத்தபடி ஓடி வர வாரி அணைத்துக்கொண்டாள். இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள் .
“என் செல்லம். என் கண்ணு.”
“என்ன அம்மாவும் பொண்ணும் ஒரே கொஞ்சல் மழை தானா,” என்றான் அங்கே வந்த டேவிட்.
முதல் முறை அந்த இடத்திற்கு வர எத்தனை பயந்தாள். இப்பொழுதோ அந்த இடம் அவளுக்கு தாய் வீடாகியிருந்தது. இல்லை இல்லை அந்த இடத்தை அநேகருக்கு கல்வி தரும் சரணாலயமாக மாற்றியிருந்தாள் யாழினி.
தேவகி ஆசைப்பட்டது போலவே இயற்கை விவசாயம் செழித்த விளங்கும் பூமியாக மாற்றியிருந்தாள்.
“சகாதேவன் வந்திருக்கார் யாழினி,” என்றான் டேவிட்
“எதற்காம் அண்ணா,” என்றாள்
“நீயே பேசேன்,” என்றான் அதே நேரம் சகா தேவனும் அங்கு வந்து சேர்ந்தான்.
டேவிட் குழந்தையைச் சுமந்த படி அங்கிருந்து அவர்கள் பேசவென தனிமை உருவாக்கி கடந்தான்.
சொல்ல “சகா” என்று பேச்சைத் துவக்கினாள் யாழினி
அவளே பேச்சைத் துவக்கவே, தைரியம் ஏற்பட்டுவிட சற்று தொண்டையை செருமிக்கொண்டவன் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் யாழினி என்றான்.
மனத்தில் ஓர் அதிர்ச்சி, புயலடிப்பு !
“என்ன சொன்ன சகா,” என்றாள் யாழினி
“வந்து நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா ?” என்று இழுத்தான்
“நிலத்தை தான் கையெழுத்து போட்டுக்கொடுத்துட்டேனே சகா வேறென்ன சொத்து இருக்கு என்கிட்ட,” என்றாள் புருவங்களை இடுக்கி.
“இல்லை யாழினி நான் எதுவும் கேக்கல அம்மா தான்…”
“நீ பேசாம சும்மா தான இருந்த.”
“அதுக்கும் நாம கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் யாழினி,” என்றான் நிமிர்ந்து
“ஒரு பொண்ணு ஒரு முறை தான் சகா கல்யாணம் பண்ணிக்க முடியும்,” என்றாள் யாழினி.
“மாத்தி மாத்தி கல்யாணம் பண்ணிக்கிறது ஃபாரின் கல்ச்சரா இருக்கலாம்.நான் தமிழ் பொண்ணாவே தான் இருக்க விரும்புறேன்.”
“தமிழ் கலாச்சாரமே மாறி வருது யாழினி, முன்ன போல தாலியை போற்றி வணங்குறதில்ல, தேவைப்பட்டா மாட்டிக்கறாங்க, தேவை இல்லேன்னா கழட்டி ஆணியிலமாட்டிடுறாங்க, அப்படியும் இல்லேன்னா வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சுடறாங்க.”
“அதனாலதான் சகா நான் தாலியே கட்டிக்கல.”
“தாயும்பிள்ளை ரெண்டு பேருமே பொண்ணுங்க யாழினி, இந்த சமுதாயத்துல எப்படி தனியா வாழுவீங்க ?”
“பொண்ணுன்னா தனியா வாழ முடியாதா? பெத்தவங்க செத்து பச்சமண் கூட காயல, சொத்து வேணும்ன்னு கேட்டு கூட வாங்கல, பொய் பத்திரத்து வச்சு மிரட்டினாங்கஉங்க அம்மா, வாயை மூடிக்கிட்டு சும்மா இருந்த நீ, பேப்பர்ல தான் எவ்வளவோசெய்தி போடுறாங்களே சகா, என் பொண்ணுக்கிட்ட நீ உண்மையா நடந்துப்பன்னு என்னநிச்சயம் ?”
“யாழினி,” என்று கத்தியபடி வெகுண்டு அறைய வந்த சகாதேவனின் கை யாழினியின் பார்வையில் அப்படியே தணிந்து அடங்கியது.
“ஒரு குழந்தை உருவாக காரணமானவன் தான் அந்த குழந்தைக்கு அப்பா, நான் உன்ன கட்டிக்கிட்டா எனக்கு ஒரு புருஷன் கிடைக்கலாம், என் பொண்ணுக்கு அப்பாநிச்சயமா கிடைக்கமாட்டான். வாழ்க்கைய திரும்ப சிக்கலாக்கிக்க எனக்கு விருப்பமில்ல சகா,” என்று கூறியவள் எழுந்து தேவிகாவின் அறையை நோக்கி நடக்கத் துவங்கினாள்.
தேவிகாவின் படுக்கையில் அமர்ந்தவள், மெல்ல அந்த நாட்குறிப்பை கைகளால் வருடினாள்.
“மன்னிச்சுடு தேவிகா உன் மகனை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. என் தாய் அன்பை அவனுக்கு பகிர முடியவில்லை,” என்று மானசீகமாய் தேவிகாவின் ஆன்மாவோடு பேசினாள்.
ராஜம் கொடுத்த உடைகள் அடங்கிய பையை அவள் திறக்கும் அவகாசமே கிடைக்கவில்லை. அந்த பையை அவள் எப்படிக்கொண்டு போனாளோ அதே போலவேகொண்டு வந்து அந்த அறையின் அலமாரியில் வைத்திருந்தாள்.
பார்வை அந்த பையில் பட ராஜம் இந்த உடைகளை பயன்படுத்திக்கொள்ள சொன்னது நினைவில் வந்தது. புகழ்பெற்ற எழுத்தாளரான ராஜம் இறந்த செய்திக்கூடதனக்கு அறிவிக்கவில்லை என்ற கவலை ஒருபுறம் இருக்க, அந்த சில நான் ராஜமோடு இருந்த போது தாய்மை உணர்வை முழுமையாக அனுபவித்திருந்தாள் யாழினி.
ஒரு தூய்மையான அன்பை அனுபவிக்க அல்லது கொடுக்க ஆணோ பெண்ணோ என்ற வகைப்பாடு தேவை இல்லை என்று தோன்றியது.
அந்த பையை திறந்தாள். சில உடைகளுக்கு அடியில், ஒரு புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தில் மேல் அட்டையில் ஒரு பெண் இருந்தாள். புத்தகத்தின் தலைப்போ
“யாழினி ஐ.ஏ.எஸ்” என்று எழுதப்பட்டிருந்தது.
குழந்தையை தூக்கி வந்த டேவிட், “யாழினி ஒரு குட் நீயுஸ்,” என்றான்.
“என்னண்ணா” என்றாள் யாழினி.
நீ ஐ.ஏ.எஸ் மெயின் எக்சாமிலயும் பாஸ்பண்ணிட்ட நீ இப்போது யாழினி ஐ.ஏ.எஸ் ஆகிட்ட என்றான்.
இரு துளி கண்ணீர் அந்த புத்தகத்தின் மீது விழுந்தது.
“ஆனா ஒன்னு மட்டும் புரியலேண்ணா,” என்றாள்
அவள் என்ன சொல்லவருகிறாள் என்பதைப் புரிந்துக்கொண்ட டேவிட் அவள் கைகளைப்பற்றி, டேவிட் என்கின்ற விநோதன் என்றான் நிதானமாய். பற்றிய கரங்களில்இருவிழி நீர் சொட்டியது தூய அன்பின் அடையாளமாக.
[முற்றும்]
- பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.
- எலி
- மிதிலாவிலாஸ்-24
- தொடுவானம் 74. விடுதியில் வினோதம்
- தெருக்கூத்து
- அணைப்பு
- வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா
- காய்களும் கனிகளும்
- கவி ருது வான போது
- திருக்குறளில் இல்லறம்
- அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
- எப்படியும் மாறும் என்ற நினைப்பில்
- தெரவுசு
- புதிய சொல்
- சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா
- திரை விமர்சனம் நேற்று இன்று நாளை
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12
- ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
- திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்