Articles Posted in the " அரசியல் சமூகம் " Category

 • அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி

    ஜோதிர்லதா கிரிஜா      தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்த மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி மே மாதம் 30 ஆம் நாளில் தம் 81 ஆம் வயதில் காலமானார். அனைத்திந்தியப் பார்வை மட்டுமின்றி, அனைத்துலக நோக்கும் கொண்டிருந்த அவர் வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அறுபதுகளில் ஐக்கிய நாடுகளின் அவையின் நிரு[பராய்ப் பணியாற்றினார். பின்னர், இந்தியாவுக்குத் திரும்பியதும், இடது […]


 • நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

    குமரி எஸ். நீலகண்டன்   சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து வைக்கிறது சிவகுமாரின் எழுத்து. இந்து தமிழ் திசை இணையதளத்தில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கொங்கு தேன் நூலில் பிளேக் பற்றிய செய்தியைப் படிக்கும் போது இன்றைய கொரோனாதான் நம் மனதில் நினைவுகளை விரிக்கிறது. அன்றைய பிளேக் சிவகுமாரின் 12 […] • நனவிடை தோய்தல்: 1983  கறுப்பு ஜூலையும்  ஊடக வாழ்வு அனுபவமும்

                                                                        முருகபூபதி     தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு இது திருவள்ளுவர் வாக்கு.  இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப் படித்தார்களா..? என்பது தெரியவில்லை ! 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு பதவியேற்ற காலப்பகுதியில்தான், அவர் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பிறந்த இல்லத்தில் பின்னாளில் […]


 • இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி

  இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி

          அவுஸ்திரேலியாவில்  புலம்பெயர்ந்து வதியும் இலங்கை எழுத்தாளர்  முருகபூபதியின்  70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு,  யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள   “ கதைத் தொகுப்பின் கதை  “ நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகள் பற்றியும் 15 இலக்கிய வாசகர்களின் வாசிப்பு அனுபவங்களின் தொகுப்பு:   கணங்கள் ஈழத்து வாழ்வுவெளியிலிருந்து பிடுங்கி, அவுஸ்திரேலிய வாழ்வு வௌியில், அன்பின் பேரிணைப்பில் வாழுமாறு, காலம் நட்டுவைத்த, தமிழர் – சிங்களவர் என்ற ஈரினத்தாரின் பாதிப்பை, இன்னோர் […] • (அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை

  (அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை

    கா.ரபீக் ராஜா “தம்பி சிக்கன், மட்டன், மீன்ன்னு டெய்லி ஏதாவது வேணும். செவ்வாய், வெள்ளி மட்டும் சாம்பார் ரசம் ரெண்டு கூட்டு பொரியல்ன்னு சைவம் வைக்க சொல்லுங்க”   முழுக்க முழுக்க 5D கேமராவில் எடுக்கப்பட்ட வழக்கு எண்: 18/9 திரைப்படம் குறைந்த செலவில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்கலாம் நம்பிக்கையை விட நாமும் ஒரு படம் எடுத்து பார்க்கலாம் போலேயே என்கிற நம்பிக்கையை ஊருக்கு ஒரு நாற்பது, ஐம்பது இயக்குனர்களை உருவாக்கி வைத்தது. அதில் […]


 • தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்

    என்.எஸ்.வெங்கட்ராமன், வேதியியல் பொறியாளர் நிறுவனர், நந்தினி வாய்ஸ் ஃபார் தி டிப்ரைடு, M-60/1,4வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர் சென்னை 600090 Ph:044-24916037 மின்னஞ்சல்: nsvenkatchennai@gmail.com   குடிகாரக் கணவனிடம் அடிவாங்கும் மனைவி, குடிகார மகனிடம் அடிவாங்கும் தாய், இதுதான் தமிழ் நாட்டில் பல பெண்கள் சந்திக்கும் அவலநிலை. பெரும்பாலும் இத்தகைய சீர்கெட்ட நிலை ஏழைப் பெண்களிடம் காணப்படுகிறது. இதற்கு என்ன தீர்வு? மதுவிலக்கின் கதை   தமிழ் நாட்டையும், குறிப்பாக ஏழைப் பெண்களின் நலனையும் காக்க, மதுவிலக்கு அவசியம் […]


 • இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

  இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

    ஜோதிர்லதா கிரிஜா ஈஷா யோகா அமைப்பாளர் ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாள்களாக இந்துக் கோவில்களை அற நிலையத் துறையினின்று விடுவித்துத் தனியார் வசம் ஒப்பபடைக்க வேண்டும் எனும் கருத்தை வெளியிட்டு வருகிறார். அண்மையில் நிதித் துறை அமைச்சர் மாண்புமிகு பழநிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  அவர் தெரிவித்துள்ள கருத்துகளில் ஜக்கி வாசுதேவ் பற்றிய விமர்சனமே பெருமளவுக்கு இருக்கிறதே தவிர, அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அமைச்சரிடமிருந்து […]


 • ஒளிப்படங்களும் நாமும்

      நடேசன்  ஒளிப்படங்களுக்கான வருடம்தான்  2021.  இந்த வருடத்தில் எவ்வளவு  ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல்  ஒளிப்படங்கள்  எடுப்பார்கள்  என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில்  பெரும் பகுதி சேமிக்கப்படும் . பயணம் போகும்போது கமராவும் கையுமாக அலையும் பலரில் நானும் ஒருவன். ஆரம்ப காலத்தில் எடுத்த ஒளிப்படங்களில் குறை கண்டதால் தற்பொழுது கமராவைக் கையாளுதல் மற்றும் அதை எடிட் பண்ணும் திறமையையும் சிறிது பெற்றுள்ளேன் […]