Articles Posted in the " கதைகள் " Category

 • ஊமைகளின் உலகம்..!

  ஊமைகளின் உலகம்..!

         குரு அரவிந்தன்   அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக நேரம் அவளால் அனுபவிக்க முடியவில்லை. பூப்போன்ற சின்னஞ் சிறிய அந்த உதடுகளின் தேடலில் அங்கே சுரப்பதற்கு எதுவுமில்லை என்று தெரிந்த போது குழந்தையின் ‘வீல்’ என்ற அந்த அலறல் சத்தம்தான் அவளது செவிகளில் முட்டி […]


 • மழை

  மழை

    ம.செ காட்சி-1    “நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்”- காயத்ரியின் அம்மா      காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள், நல்ல கருமேகம் மழை வந்தால் அடை மழை தான் என்று நினைத்துக் கொண்டு      “அம்மா நான் மாடிக்கு போறேன் நீயும் வா” என்று விரைந்தாள்      காயத்ரி நல்ல வடிவான, அழகான எழிலான, மாடர்னான பி. காம். இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. அவளை விட வடிவு அவளது […]


 • தாயகக் கனவுடன்…

  தாயகக் கனவுடன்…

      குரு அரவிந்தன்     (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்)   ஸ்டோர்ரூம் சுவரில் சாய்ந்தபடி நான் விம்மியழுததை சுவேதா கவனித்திருக்க வேண்டும்.   ‘அப்பா, ஏன் அழுவுறீங்க?’ என்றாள்   ‘இல்லை, ஒன்றுமில்லை.’ என்று தலையை அசைத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டேன்.   ‘அழாதீங்கப்பா, […]


 • துபாய் முருங்கை

  சுப்ரபாரதி மணியன் கை நிறைய தீபா முருங்கைக்கீரையைப் பறித்துக் கொண்டு நின்றது அவளும் அதனுடன் ஒன்றி போய் விட்டது போல் இருந்தது .ஒரு சிறு இலையாகி விட்டாள். ஒல்லியாக உருவம் சிறுத்திருந்தது.“என்ன இவ்வளவு ‘“ இன்னைக்கு பொறியில் இதுதான். தினமும் மட்டன் ,மீன் போட்டு அலுத்துப் போச்சு .அதுதான ““தேவையான அளவு எல்லாம் கிடைச்சதா “பூங்காவில் நடைபயிற்சியை முடித்திருந்தார்கள் .நடை பயணப் பாதையில் ஸ்டார்ட் என்று எழுதப்பட்டு ஓர் இடம் இருந்தது. அப்படி என்றால் பினிஷ் என்ற […]


 • முகவரி

  முகவரி

  30 ஆண்டுகளுக்கு முன் நான் சிங்கப்பூர் புறப்பட்டபோது அத்தா சொன்னார். ‘நல்லபடியாகப் போய்வா. அங்கே நிரந்தரமாகக்கூட இருக்கும்படி  ஆகலாம். ஆனால் இந்த மண்ணில் உனக்கென்று முகவரி எப்போதும் இருக்க வேண்டும்.’ செடி வைக்க குழி பறித்தபோது, புதையல் கிடைத்ததுபோல், சிங்கப்பூரில் இருக்கும் என் தூரத்து உறவினர், நாணயமாற்று வியாபாரி இஸ்மாயில்,  என்னை குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு அழைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தார். மிகப் பெரிய கூட்டுக்குடும்பத்தில் நான், என் மனைவி, மூன்று மகள்கள் இருக்கிறோம். இறைக்கும் நெல்லைப் பொறுக்க, […]


 • புகுந்த வீடு  

  மீனாட்சி சுந்தரமூர்த்தி ‘சீக்கிரமாகக் கிளம்பு திருநாவு (ஓட்டுநர்) வந்துவிட்டார்.’ என் கணவர் குரல் கொடுத்தார். ‘சரிங்க, தண்ணீர் பாட்டில் எடுத்து வைத்தீர்களா? ஹார்லிக்ஸ் (சம்மந்தி அம்மாவிற்கு) எடுத்து வைத்தீர்களா?’ ‘நீ கொடுத்த அத்தனையும் கட்டைப் பையில் வைத்து வண்டியில் வைத்தாயிற்று. நான் எனது கைப்பையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு வெளியீட்டு விழாவில் வாங்கி வந்த கவிதை நூலையும், எனக்குப் பிடித்த அழகின் சிரிப்பு மற்றும் உமார் கயாம் கவிதைகளையும் எடுத்துக் கொண்டு […]


 • வித்தியாசமான கதை…

  அழகியசிங்கர்             பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி  நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.             ‘தென்னாட்டுப் பழங்கதைகள்’ என்ற புத்தகம்.  ஒவ்வொரு புத்தகமும் 320 பக்கங்கள் இருக்கும்.  கிட்டத்தட்ட 8 பாகங்கள் இருக்கும்.              இராமசாமிப் புலவர் தொகுத்தது.  அந்தப் புத்தகங்களை எடுத்துப் படிக்கும்போது பரவசம் அடைந்து விடுவேன். சைவ சித்தாந்த கழகம் வெளியிட்ட புத்தகம்.  ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது, சைவ சித்தாந்த கழகத்திடம் போய், ‘இந்தப் புத்தகம் இருக்கிறதா?’ என்று கேட்பேன். அவர்கள் கை விரிப்பார்கள். […]


 • பயணம்

  பயணம்

                                                          –எஸ்ஸார்சி    புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம்.  பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்   வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என் மனைவியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தோம். இது நாள் வரைக்கும் வாடகைக்காரில் மட்டுமே  எங்கள் பயணம்.  அது மட்டுமே சாத்தியமானது. ஆம் அப்படித்தான்   சென்றும்  வந்தும் இருக்கிறோம்   எல்லோ போர்டு மாட்டிக் கொண்ட வண்டியில் சென்ற போதெல்லாம் போகும் சாலை எப்படி  […]


 • பரிசு…

  பரிசு…

                                                                                            ச.சிவபிரகாஷ் பத்திரிகை துறையிலும், இலக்கிய துறையிலும் கா.சு என்று சொன்னால் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. கா.சுப்பிரமணி என்னும் பெயர் சுருக்கமே கா.சு. இவர் அரசு சாரா நன்மை நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, பத்திரிக்கைக்கு, எழுதியும் வருகிறார். பல கவிதைகள்,சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல எழுதி, சொந்த செலவில் புத்தகங்கள்  வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இவரது இலக்கிய சேவையை பாராட்டி அண்டை நாடான மலேசியாவில் இயங்கும் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒன்று […]


 • ருக்கு அத்தை 

  ருக்கு அத்தை 

                                                                               சோம. அழகு                                                                                                                   மிக்க அன்புள்ள ருக்கு அத்தை,               27 வருடங்களுக்கு முன்பு மரித்த உங்களைக் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் அறிவேன்.   வெறும் உப்பு மட்டுமே இட்டு உங்கள் கைகளால் குழையப் பிசையப்பட்ட தயிர் சாதத்திற்கே அவ்வளவு ருசி இருக்குமாம். ஒரு கை சோறு பொங்கி ஊருக்கே ஆக்கிப் போடும் கெட்டிக்காரி என ஆச்சி ஒருத்தி உங்களைச் சிலாகித்திருக்கிறாளாம். மல்லிப்பூ என்றால் உங்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஒரு கையில் […]