Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

    குமரி எஸ். நீலகண்டன்   சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து வைக்கிறது சிவகுமாரின் எழுத்து. இந்து தமிழ் திசை இணையதளத்தில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கொங்கு தேன் நூலில் பிளேக் பற்றிய செய்தியைப் படிக்கும் போது இன்றைய கொரோனாதான் நம் மனதில் நினைவுகளை விரிக்கிறது. அன்றைய பிளேக் சிவகுமாரின் 12 […]


 • கவிதையும் ரசனையும் – 19

  கவிதையும் ரசனையும் – 19

    அழகியசிங்கர்           நான்கு விதமாகக் கவிதை வாசிப்பைக் கட்டமைத்து கவிதை நிகழ்ச்சியை வாராவாரம் நடத்திக்கொண்டு வருகிறேன்.  முதல் வாரம் அவரவர் கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது வாரம். கவிதையின் குறித்து உரையாடல்.             மற்றவர்கள் கவிதைகளை வாசிக்கும் நிகழ்ச்சியின் போது ‘ஞானக்கூத்தன் கவிதைகளை’ எல்லோரும் வாசித்தோம்.  இந்த நிகழ்ச்சிக்கு 20 அல்லது 21 கவிஞர்கள் கலந்து கொள்வார்கள். சூம் மூலம் நடக்கும் நிகழ்ச்சியால் இந்த எண்ணிக்கை.  நேரிடையாக இந்த […]


 • சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?

  சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?

        ஸிந்துஜா    சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதிய எழுத்தாளர்கள் வரிசையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பா. ராகவனில் ஆரம்பித்து, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி, சுஜாதா, தேவமைந்தன், மெலட்டூர் நடராஜன் (யார் இவர்?) என்று பலர் (tamilhelp.wordpress.com) ! துப்பறியும் சாம்பு இன்னும் கண்டு பிடிக்காதது எப்போதும் குழப்பம் நிறைந்த இந்தக் கதை எழுதும் விவகாரம்  ஒன்றுதான்.   ஆக ஒரு சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்கலாம் என்று […]


 • இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி

  இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி

          அவுஸ்திரேலியாவில்  புலம்பெயர்ந்து வதியும் இலங்கை எழுத்தாளர்  முருகபூபதியின்  70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு,  யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள   “ கதைத் தொகுப்பின் கதை  “ நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகள் பற்றியும் 15 இலக்கிய வாசகர்களின் வாசிப்பு அனுபவங்களின் தொகுப்பு:   கணங்கள் ஈழத்து வாழ்வுவெளியிலிருந்து பிடுங்கி, அவுஸ்திரேலிய வாழ்வு வௌியில், அன்பின் பேரிணைப்பில் வாழுமாறு, காலம் நட்டுவைத்த, தமிழர் – சிங்களவர் என்ற ஈரினத்தாரின் பாதிப்பை, இன்னோர் […]


 • 7.ஔவையாரும் சிலம்பியும்

  7.ஔவையாரும் சிலம்பியும்

      முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com சோழ நாடு சோறுடைத்து என்பர். காவிரி பாய்ந்து வளங்கொழிக்கும் நாடு சோழநாடு. நாடு மட்டுமல்லாமல் நாட்டில் வாழ்ந்தோர் அனைவரும் வளமாக வாழ்ந்தனர். அச்சோழ நாட்டில் சிலம்பி என்ற தாசி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு அந்நாட்டில் நல்ல பேரும் புகழும் இருந்தது. ஆனாலும் அச்சிலம்பிக்கு மனதிற்குள் ஓர் ஆசை கொழுந்துவிட்டு எரிந்தது. மன்னனைப் பாடுகின்ற புலவர் தன்னையும் புகழ்ந்து […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                  வளவ. துரையன்   ”எனக்கும் எவற்கும் இறைவன் தனக்கும்  எவனோ தவறே?”                           301   ”எனக்கும் மற்றுமுள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அவர் உங்களைப் பணியவில்லை என்பது எப்படித் தவறாகும்?                          ”இரை ஆசையால் வந்த யஞ்ஞா                          உரையாய், உறுமோ நின்ஊணே”                [302] [யஞ்ஞன்=அக்னிதேவன்; உறுதல்=அடைதல்]      ”வேள்வியில்அவியாகிய உணவு கிடைக்கும் என்னும் ஆசையால் வந்துள்ள அக்னிதேவா! உன் எண்ணத்தை நீ அடைவாயோ […]


 • தி பேர்ட் கேஜ்

  அழகர்சாமி சக்திவேல்  திரைப்பட விமர்சனம் –  பெண்ணுடையாளன் (drag queen) என்ற, பெண்ணின் உடையணிந்து வந்து, நிகழ்ச்சிகள் நடத்தும் ஆண்கள், தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்றாலும், மேலைநாடுகள், இதுபோன்ற பெண்ணுடையாளன்களுக்கு, கொடுக்கும் ஒரு பெரிய வரவேற்பு, தமிழ்ப் பண்பாட்டில், அவ்வளவு இல்லை என்றே, நான் சொல்லுவேன். அந்தக் காலங்களில், தமிழ் நாடக மேடைகளிலும், தமிழ்த் தெருக்கூத்துக்களிலும், பெண் வேடம் இட்டு நடிப்பதற்கு, தமிழ்ப்பெண்கள், அவ்வளவு முன் வராத காரணத்தால், நல்லதங்காள் போன்ற நாடகங்களில், பெண் வேடம் இட்டு, சில ஆண்கள் நடித்து […]


 • ஒளிப்படங்களும் நாமும்

      நடேசன்  ஒளிப்படங்களுக்கான வருடம்தான்  2021.  இந்த வருடத்தில் எவ்வளவு  ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல்  ஒளிப்படங்கள்  எடுப்பார்கள்  என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில்  பெரும் பகுதி சேமிக்கப்படும் . பயணம் போகும்போது கமராவும் கையுமாக அலையும் பலரில் நானும் ஒருவன். ஆரம்ப காலத்தில் எடுத்த ஒளிப்படங்களில் குறை கண்டதால் தற்பொழுது கமராவைக் கையாளுதல் மற்றும் அதை எடிட் பண்ணும் திறமையையும் சிறிது பெற்றுள்ளேன் […]


 • மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்

    அழகர்சாமி சக்திவேல்  திரைப்பட விமர்சனம் –  ஒரு லெஸ்பியன் தாய், அவள் காதலி, இவர்கள் இருவரும், விந்து வங்கி மூலம் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் பெறுவதற்குக் காரணமான தந்தை, இவர்களில் யார் மீது பிள்ளைகள் பாசம் காட்டும்? இது ஒரு முக்கோணம்.     ஒரு தாய், அவள் கணவன், அந்தக் கணவனுக்கு ஒரு காதலன், இவர்களில் யார் மீது ஒரு மகன் பாசம் காட்டுவான்? இது, இன்னொரு முக்கோணம்.     ஒரு கணவன், அவனுக்கு […]


 • ட்ராபிகல் மாலடி 

    அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –   தாய்லாந்து மொழிப்படமான இந்த மூன்றாம் பாலினத் திரைப்படம், 2004-இல், பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்படவிருது விழாவில் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களில், பாதிப் பேர், பாதிப் படத்திலேயே, எழுந்து போய் விட்டார்கள். படம் முழுக்கப் பார்த்த மக்களில், மீதிச் சிலரோ, படத்தைப் பார்த்துவிட்டு, ஒருவித சலிப்புக் குரலுடன் எழுந்து போனார்கள். ஆனால், இத்தனை சலிப்புக்களையும் தாண்டி, அந்த கேன்ஸ் திரைப்பட விழாவின், நடுவர் தேர்வுக்குழு, […]