Articles Posted in the " கலைகள். சமையல் " Category

 • (அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை

  (அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை

    கா.ரபீக் ராஜா “தம்பி சிக்கன், மட்டன், மீன்ன்னு டெய்லி ஏதாவது வேணும். செவ்வாய், வெள்ளி மட்டும் சாம்பார் ரசம் ரெண்டு கூட்டு பொரியல்ன்னு சைவம் வைக்க சொல்லுங்க”   முழுக்க முழுக்க 5D கேமராவில் எடுக்கப்பட்ட வழக்கு எண்: 18/9 திரைப்படம் குறைந்த செலவில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்கலாம் நம்பிக்கையை விட நாமும் ஒரு படம் எடுத்து பார்க்கலாம் போலேயே என்கிற நம்பிக்கையை ஊருக்கு ஒரு நாற்பது, ஐம்பது இயக்குனர்களை உருவாக்கி வைத்தது. அதில் […]


 • தி பேர்ட் கேஜ்

  அழகர்சாமி சக்திவேல்  திரைப்பட விமர்சனம் –  பெண்ணுடையாளன் (drag queen) என்ற, பெண்ணின் உடையணிந்து வந்து, நிகழ்ச்சிகள் நடத்தும் ஆண்கள், தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்றாலும், மேலைநாடுகள், இதுபோன்ற பெண்ணுடையாளன்களுக்கு, கொடுக்கும் ஒரு பெரிய வரவேற்பு, தமிழ்ப் பண்பாட்டில், அவ்வளவு இல்லை என்றே, நான் சொல்லுவேன். அந்தக் காலங்களில், தமிழ் நாடக மேடைகளிலும், தமிழ்த் தெருக்கூத்துக்களிலும், பெண் வேடம் இட்டு நடிப்பதற்கு, தமிழ்ப்பெண்கள், அவ்வளவு முன் வராத காரணத்தால், நல்லதங்காள் போன்ற நாடகங்களில், பெண் வேடம் இட்டு, சில ஆண்கள் நடித்து […]


 • மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்

    அழகர்சாமி சக்திவேல்  திரைப்பட விமர்சனம் –  ஒரு லெஸ்பியன் தாய், அவள் காதலி, இவர்கள் இருவரும், விந்து வங்கி மூலம் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் பெறுவதற்குக் காரணமான தந்தை, இவர்களில் யார் மீது பிள்ளைகள் பாசம் காட்டும்? இது ஒரு முக்கோணம்.     ஒரு தாய், அவள் கணவன், அந்தக் கணவனுக்கு ஒரு காதலன், இவர்களில் யார் மீது ஒரு மகன் பாசம் காட்டுவான்? இது, இன்னொரு முக்கோணம்.     ஒரு கணவன், அவனுக்கு […]


 • ட்ராபிகல் மாலடி 

    அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –   தாய்லாந்து மொழிப்படமான இந்த மூன்றாம் பாலினத் திரைப்படம், 2004-இல், பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்படவிருது விழாவில் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களில், பாதிப் பேர், பாதிப் படத்திலேயே, எழுந்து போய் விட்டார்கள். படம் முழுக்கப் பார்த்த மக்களில், மீதிச் சிலரோ, படத்தைப் பார்த்துவிட்டு, ஒருவித சலிப்புக் குரலுடன் எழுந்து போனார்கள். ஆனால், இத்தனை சலிப்புக்களையும் தாண்டி, அந்த கேன்ஸ் திரைப்பட விழாவின், நடுவர் தேர்வுக்குழு, […]


 • “I AM SLAVE”    – திரைப்பட பார்வை

    சபா. தயாபரன் Gabriel Rang இயக்கத்தில் Wunmi Mosaku, Isaach de Bankolél ஆகியோரின் பண்பட்ட நடிப்பில் 2010 ஆண்டளவில் வெளிவந்த I AM SLAVE என்ற அழகிய திரைப் படத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷமான அனுபவம் என்றே சொல்ல வேண்டும் சூடான் மலைபிரதேசத்தில் நூபா என்ற மலைப்பிரதேசத்தில் வாழும் அழகிய இனிமையான குடும்பம் மாலியாவினுடையது. வறிய குடுமபமாயினும் 12 வயதாகும் மாலியா மகாராணிக்குரிய செல்லத்துடன் வளர்க்கப்படுகிறாள். திடீரென்று மாலியா முகார்ஜீன் படைகளின் முற்றுகையின் […]


 • புனிதக்  கருமாந்திரம்

  புனிதக் கருமாந்திரம்

                   சோம. அழகு                                                                                                                ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. – ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற்ற(!) ஓவியத்திற்கு’த் திவசம் கொண்டாடப்படும் போது நடப்பவையே மேற்கூறியவை. […]


 • டகால்டி – சில கேள்விகள்

  டகால்டி – சில கேள்விகள்

  அருணா சுப்ரமணியன் எஸ்.பி. செளதரி தயாரிப்பில் விஜய் ஆனந்த் எழுதி இயக்கி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “டகால்ட்டி” என்னும் ஆக்ஷன் காமெடி திரைப்படம்  குறித்தான எனது கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன்.  தமிழ் சினிமாவில் வழமையாகிப்போன திரைக்கதை. மும்பையில் வசிக்கும் ஏகத்துக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ள பணக்காரன் சாம்ராட்டுக்கு ஒரு வினோத பழக்கம். தன்  மனதில் தோன்றும் பெண்ணுருவத்தை வரைந்து அதே சாயலில் உள்ள பெண்ணை எத்தனை செலவானாலும் தேடிக்  கண்டுபிடித்து தன்னிடம் சேர்ப்பிக்க கட்டளையிடுவான். அதனை சிரமேற்கொண்டு செய்து தர நாடெங்கிலும் பல […]


 • 3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

  3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

  குமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள்.  பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும் பயனுள்ள விதமாக கலை, இலக்கியம், இசை, நடனமென பல்வேறு தங்களது ஆர்வமுள்ள துறைகளில் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் தனித் தனியாக நடித்து வெளிவந்த கொரோனா குறித்த […]


 • மஹாவைத்தியநாத சிவன்

  லலிதாராம் இன்று மஹாவைத்தியநாத சிவனின் நினைவு நாள். அதைச் சாக்கிட்டு முன்பெழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.  கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத பாகவதர் முதல் குன்னக்குடி வைத்தியநாதன் வரை யாவரும் இதில் அடக்கம். இப்படிப்பட்ட வரிசையில், ‘மஹா’ வைத்தியநாதனாக விளங்குபவர் வையச்சேரி வைத்தியநாத ஐயர். தஞ்சாவூர் ஜில்லாவில், வையச்சேரி என்ற ஊரில், பஞ்சநாத ஐயருக்கும் அருந்ததி அம்மாளுக்கும் […]