Articles Posted in the " கவிதைகள் " Category

 • ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

  ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

    ப.தனஞ்ஜெயன்   1. நல்ல பிராண்ட் சார்ட் நல்ல பிராண்ட் செல் நல்ல பிராண்ட் வாட்ச் நல்ல ஓட்டல் நல்ல உணவு நல்ல வீடு நல்ல கம்பெனி வண்டி பிள்ளைகளுக்கு நல்ல ஸ்கூல் இதற்கு மேல் ஒரு சிலர் பிராண்டட் கார் இப்படி நல்ல நல்ல பட்டியலோடு வாழ்வு நடத்தும் மனிதர்கள் ஒரு நாளும் நல்ல விவசாயத்தை விரும்பாதது கவலை கொள்ளவே செய்கிறது நல்ல விவசாயம் என்று தேடும்பொழுது விவசாயியைச் சந்திப்பீர்கள் இந்த சந்திப்பு ஒவ்வொரு […] • நெருடல்

  நெருடல்

    கே.எஸ்.சுதாகர்   நள்ளிரவு, நாய்களின் ஓலம் சருகுகளின் சலசலப்பு நான்கு சுவர்களுக்குள் படுக்கை என்றாலும் நடுக்கம்தான் வருகிறது.    இது குளிரின் நடுக்கமன்று, குண்டின் நடுக்கம். பக்கத்து அறையில் அம்மா, தங்கை முன் விறாந்தையில் அப்பா, தம்பி ஓர் கணம் கிரிசாந்தி கமலிட்டா வந்து போனார்கள்.   ஓர் நெருப்புக் குச்சியேனும்  கிடைக்காதாவென தானாகக் கைகள் தலையணைக்குள் நீளுகையில் நான்கு ‘பூட்ஸ்’ ஒலிகள் நகர்ந்து போயின.   பாட்டொன்றை முணுமுணுத்துப் பாடுவதிலிருந்து, அவர்களுக்கும் பயம் இருப்பது  தெரிகிறது.   நேற்று முன் தினம் கோப்ரல் […]


 • கவியின் இருப்பும் இன்மையும்

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   சிலர் சதா சர்வகாலமும் SELF PROMOTION செய்தவாறும் உரக்க மிக உரக்கக் கத்தி சரமாரியாக அவரிவரைக் குத்திக்கிழித்து தம்மைப் பெருங்கவிஞர்களாகப் பறையறிவித்த படியும் பெருநகரப் பெரும்புள்ளிகளின் தோளோடு தோள்சேர்த்து நின்று தமக்கான பிராபல்யத்தை நிறுவப் பிரயத்தனப்பட்டுக்கொண்டும் புதிதாக எதையோ எழுதுவதான பாவனையில் அரைத்த மாவையே அரைத்தரைத்து நிறைவாசகரைத் தம் குறைக் கவித்துவத்தால் கதிகலங்கச் செய்துகொண்டிருக்க _ வேறு சிலர் வெகு இயல்பாக கவிதையின் சாரத்தை நாடித் துடிப்பாகக் கொண்டு நிறையவோ […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        தினம் நிகழும் கவியின் சாவு அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத் தின்னும்போதும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும் அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ சிறு கவிதையொன்றில் குசேலனது அவிலென அள்ளி முடிந்துகொண்டு தரச்சென்றவனை ஒரு கையில் கடப்பாரையும் மறு கைநிறைய ஈரச்சாணியும் ஏந்தி வழிமறித்த வாசக – திறனாய்வாளர் சிலர் கண்ணனை மறைமுகமாய் புகழ்ந்தேத்தும் நீ கொடூர நீச மோச நாச வேச தாரி யென் றேச, பழி […]


 • மூன்று பேர்

  மூன்று பேர்

      ஹிந்தியில் : தேவி பிரசாத் மிஸ்ர தமிழில் : வசந்ததீபன் _________________   எங்கே தில்லி மற்றும் காஜியாபாத்தின் எல்லை சந்திக்கிறது  அங்கே மூன்று பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மேல் ஏறி வந்து இருக்கிறார்கள் அவர்கள் ஈ. டி. எம். மில் அன்பின் பஞ்சாயத்தின் தீர்ப்பு பார்ப்பார்கள் என்பது மட்டும் இப்போது உறுதியாக இருக்கிறது.    அதற்குப் பிறகான நடவடிக்கை உறுதியாக இல்லை.    ஓடும் சினிமா பார்ப்பது மற்றும் அரங்கில் அரட்டையடித்து […]


 • ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      வாசகக்காளான்கள் – 1   பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்களுக்கு முன்பே  கவிதைபாட ஆரம்பித்தவன் குரலை இருந்தாற்போலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தன் கையடக்க அலைபேசியில் பதிவுசெய்து  ’ஃபார்வர்டு’ செய்ய வாசிப்பென்று துரும்பையும் எடுத்துக்  கிள்ளிப்போடத் தயாராயில்லாத  அ–வாசகர்கள் சிலர் அவர் கவிதையை அனா ஆவன்னாவிலிருந்து  கேட்கத் தொடங்குவதாய் கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாமல்  பொதுவெளியில் பெருமைப்பட்டுக்கொள்ளத்  தயார்நிலையிலிருப்பதை _ பறைசாற்ற ஒருவர் சிவப்புக்கம்பளம் விரித்து  உவப்போடு இடமளிப்பதை _ _ எல்லாவற்றையும் ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருக்கும்  […]


 • மரங்கள்

  மரங்கள்

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இரவு பகல் பாராமல் நின்று கொண்டிருக்கும் உங்களுக்குக் கால் வலி வேரில் தெரியும்தானே    உங்கள் இலைக் குழந்தைகளின் எண்ணிக்கையை எப்போது உணரப் போகிறீர்கள்   மனிதர்களுக்கு உங்கள் மௌனமொழி விளக்கம் என்ன ?   எங்களுக்கு நிழல் தரும் பெருமையை நினைத்துப் பார்ப்பதுண்டா ?    ஆக்சிஜன் தருவதற்கு வசூல் ஏதும் செய்யாத அதிசய   மருத்துவர்கள் நீங்கள்   உங்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் தருணத்தில் கூட மௌனம் […]


 • கலியுக அசுரப்படைகள்

  கலியுக அசுரப்படைகள்

    War Paintings by Pablo Picasso:     கலியுக அசுரப்படைகள்   சி.ஜெயபாரதன், கனடா   இருப தாண்டுப் போர் இருபது நாட்களில் முடிந்தது. தோற்று ஓடுபவை சூப்பர்  வல்லரசுகள் ! ரஷ்யப் படையால் வெல்ல முடிய வில்லை !  அணு ஆயுத அமெரிக்கா, பிரிட்டன் படை கொடுத்து, பணம் கொடுத்து, ஆயுதம் ஈந்து பயிற்சி அளித்து,  பலனின்றிப், பல்லுயிர் பலி கொடுத்து, வலுவிழந்து, ஓய்ந்து போய்ப் பின்வாங்கின ! வென்றவர்  துப்பாக்கி மூர்க்கர், கொள்ளை அடிப்போர், கொலைகாரர், பள்ளிக்குப் போகும் […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

        நாத்திகாத்திகமும் நாமும் புல்லாங்குழலை யொரு அரூப ஓவியமாய் வரைந்தவர் அதைத் தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டினார்.   வந்துபோகும் விருந்தாளிகளெல்லாம் வாயாரப் பாராட்டியபோது விகசித்துப்போனது மனம்.   யாரைப் பற்றியது என்று புரியுமோ புரியாதோ என்ற பரிதவிப்பில் குட்டிக் கண்ணனின் அகலத்திறந்த வாயில் அகிலக்கோளம் காணும்படியாக இன்னொரு படத்தைப் பாமரனுக்கும் புரியும்படியாகத் தெளிவாக வரைந்து எங்கெங்கோ தேடி வெல்வெட்டாய் மின்னும் மயில்வண்ணச் சட்டமிடும் கடையொன்றைக் கண்டுபிடித்து காத்திருந்து கையோடு பிரேம் போட்ட படத்தை […]