கோவிந்த் கருப்
கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது…
மிராகிள் அல்லது நல்லிதய சம்பவம்
கிண்டி பொறியியற் கல்லூரியில் காலையில் அக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர் தம் நண்பர்கள் நடையாடுதல் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் திரு. அப்துல்கலாம் காலை நடையாடிய பாதைகள்.
அது போல பல நல் இதயம் சுமந்து பல பாதங்கள் நடந்து கொண்டிருந்த காலை பொழுது…
8 ஆகஸ்ட் 2015,
எல்லோராலும் நட்புடன் பழகும்
கலகலப்பின் மையப்பகுதியாய் வலம் வரும், திரு சரவணன் ( 1984ல் ECE முடித்தவர் ) அவர்தம் நண்பர்கள் திரு ஜெய்சங்கர், திரு பரமசிவம் மற்றும் பலராக சி இ ஜி (கிண்டி பொறியற் கல்லூரி ) பாதைகளில் வலம் வரும் போது,
கண்ணில் பட்டது,
லெதர் பையுடன் ஒரு கிராமப் பெண் மற்றும் வயோதிக கிராமப் பெண். அவர்கள் கையில் ஒரு பேப்பர், செக்யூரிட்டியுடன் விசாரித்தவாறு.
திரு சரவணனுக்கு எப்போதுமே வலிய போய் விசாரிக்கும் குணம்.
விசாரித்தார்…
கவுன்சிலிங் வந்துள்ளனர்.
BSc ( Agri ) :)
காலை 830 க்கு அண்ணா அரங்கத்தில்.
ம்ஹீம்….. ஏதோ தவறு….
அதை அனுப்பியவர்கள் TNAU – ( Tamilnadu Agricultural University )
அதாவது,
கோயமுத்தூர் அக்ரி போக வேண்டியவர்கள், அண்ணா பல்கலைக் கழக வாசலில்..
ஏன்..?
1. மின்னஞ்சல் வந்தவுடன், அதில் வர வேண்டிய நேரமும், வர வேண்டிய இடத்தில், “அண்ணா அரங்கம்” என்று மட்டும் இருந்தது.
அதாவது, வரவேண்டிய ஊரும் கல்லூரிய்ம் தெரியுமே என்று நினைத்து விட்டதால்.
2. இந்தப் பெண்ணும் , அண்ணா அரங்கம் என்றவுடன் மெட்ராஸ் போகனும் என்று அம்மாவிடம் சொல்ல, அம்மாவோ, “மெட்ராஸில் இன்ஜினியர்க்கு தானே போகனும் என்றார்.
3. ஆனால், பெண் அம்மா சொன்னதை பொருட்படுத்தவே இல்லை…
ஏன்..?
அம்மா ஆடு மேய்ப்பவர்.
அப்பா கிடையாது…
கிடைபோட்டு குட்டி ஆட்டை வளர்த்து, குரும்பையாட்டு கறிக்கு வாழ்க்கை நடத்தும் அம்மாவிற்கு என்ன தெரியும் என்ற அந்த வயதுக்குறிய ஒரு நினைப்பு…
இப்போது, நொந்து விசும்பலுடன்…
மணியோ 630 தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது…
நல்லவேளை அங்கிருந்தோருக்கு நல்ல உள்ளம் இருந்தது…
ஒருவர் கோயமுத்தூர் அக்ரி கல்லூரி ரெஜிஸ்டாருக்கு தொடர்பு வழி பார்க்க..
ஒருவர் ஃபிளைட் டிக்கெட் வாங்க வீட்டிற்கு போய் வர…
என துரித நடவடிக்கை …
துரிதமாக செயல்பட்ட்டு, 10.05 ஃபிளைட்டில் ஏற்றிவிட்டார்கள். கோயமுத்தூரில் விசாரித்து, அங்கு காரில் போக கையில் காசும் கொடுத்து விட்டார்கள்.
ஃபிளேனில் போக பயந்து ஆடு மேய்க்கும் அம்மாவிற்கு தைரியம் ஊட்டுதல்,
போர்ட்டிங் செய்யுமிடத்தில் உதவிக்கு வேண்டுகோள், என எல்லாம் தங்கள் வீட்டினருக்கு செய்வது போல்…
மதியம் 02 00 மணிக்கு அந்த பெண்ணிறிற்கு .Sc. – bio technology கிடைத்தது என்ற செய்தி வந்தது சந்தோஷமானார்கள்.
அவர்கள் அதுவரை பதைபதைப்புடன் இருந்தார்கள், காரணம்
கையில் ரூபாய் கொடுத்தும் பலதடவை சொல்லியும் ( ஏர்போர்ட் உள்ளேயே டாக்ஸி பிடித்துக் கொள்ளச் சொல்லி ) அந்தப் பெண் ஆட்டோவில் போனது,
அதனால் நேர தாமதம் ஆக ஆக இவர்கள்,
ஃபோன் செய்து நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது…
அந்த மாணவி கொஞ்சம் இல்லை இல்லை முழுதாய் பெரியவர்கள் சொல்வதை இனியாவது கேட்பது நன்று – அவருக்கு…
அருமை, திரு. சரவணன், திரு பரமசிவம், திரு ஜெய்சங்கர்… அவர்களே…
இந்த செய்தியை முகம் தெரியாத உதவியவர்கள் என்று நெட்டில் பார்த்திருக்கலாம்…
இதை மிராகிள் என்று சொல்வதை தவிர்க்கலாம்…
எங்கெல்லாம் நல் உள்ளங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இது போல் உதவிகள் சகஜமாக நடக்கும்…
அது அதிகமாக இருக்கட்டும்… மிராகிள் என்று சொல்லும் போது அது குறைவாகி போனது போல் தொன்றச் செய்கிறது…
இறைவன் எங்கோ தனியே நாம் தேடி சென்று மொட்டையடிக்கும் நிலையில் இல்லை…
அருகிலேயே பலரின் மூலம் பல சதவிகிதங்களில் வருகிறார்..
எல்லா நல் உள்ள சேவை புரிவோர் அனைவருமே தெய்வங்கள் தான்..
‘உன்னில் விலகி
எங்கோ இருந்தால்
எங்கோ இருக்கும்
என நினைக்கும்
ஒன்றிடம்
நீ நல்லது தா
என வேண்டினால்
பின்
உன்னிடம் இருப்பது என்ன..?
நீ யார்..?
நீயே
நல் எண்ணமும்
நல் செயலும்
கிளர்ந்திடும் ஊற்று
என்று நினை..
நினைத்தால்
உன்னில் ஒன்றியது தானே
கடவுள்..
உணர்வாய் நீ…
கோவிந்த் கருப்
- பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?
- கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது
- கோணல் மன(ர)ங்கள்
- மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015
- இருதலைக்கொள்ளி
- காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1
- மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3
- உதவிடலாம் !
- பயன்
- சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி
- அப்துல் கலாம்
- சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு
- இரா. பூபாலன் கவிதைகள்
- பரிசு
- என் வாழ்வின் வசந்தம்
- பந்தம்
- நிலாமகள் கவிதைகள்
- பொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்
- மாரித்தாத்தா நட்ட மரம்
- இசை: தமிழ்மரபு
- அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- தொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு
- அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்