சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 5

author
5 minutes, 33 seconds Read
This entry is part 15 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

photonselvaraj

என் செல்வராஜ்

சிறந்த சிறுகதைகள் கட்டுரை தொடரில் இதுவரை நான்கு கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை குறிப்பிட்டு இருக்கிறேன் இந்த கட்டுரையில் மேலும் சில பதிவுகளைக் காணலாம்.

இந்த கட்டுரையில் கலைமகள், மணிக்கொடி, தீபம், அமுதசுரபி, கணையாழி, முல்லை, முன்றில், நடை, இலக்கிய வட்டம், சரஸ்வதி, சுபமங்களா, கசடதபற, கனவு, சிகரம், அன்னம் விடு தூது , ஞானரதம், மன ஓசை, பன்முகம், புதுப்புனல் ஆகிய இதழ்களின் தொகுப்புக்களில் வந்த கதைகள் பற்றிக்காணலாம்.
மேலும் சில எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் காண்போம்.

தங்கள் மனதைக் கவர்ந்த 10 சிறுகதைகளை மூன்று பிரபலங்கள் 02 ஏப்ரல் 2015 புதிய தலைமுறை இதழில் பதிவு செய்து இருக்கிறார்கள்.
சு தமிழ்ச்செல்வி – எழுத்தாளர் – நாவல்கள் எழுதி இருக்கிறார்.
அவருக்கு பிடித்த கதைகள்
1.கொல்லனின் ஆறு பெண்மக்கள் -கோணங்கி
2. பரிசு – இமையம்
3. யோசிக்கிறவன் -இலக்குமி குமாரன் ஞானதிரவியம்
4. காஞ்சனை – புதுமைப்பித்தன்
5. வலை -கண்மணி குணசேகரன்
6. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
7. மகாமுனி – பிரேம் ரமேஷ்
8. நாகலிங்க மரம் – ஆர் சூடாமணி
இரண்டு கதைகள் பிற மொழிக்கதைகள்

இயக்குனர் சசி – அவருக்கு பிடித்த கதைகள்

1. காசுமரம –அகிலன் 2. தனுமை -வண்ணதாசன்
3. யானை டாக்டர் -ஜெயமோகன் 4. தட்டி – ஆதவன்
5. வெயிலோடு போய் – ச தமிழ்செல்வன்
6. பிரசாதம் – சுந்தர ராமசாமி
7. புலிக்கட்டம் – எஸ் ராமகிருஷ்ணன்
8. கன்னிமை – கி ராஜநாராயணன்
9. ஆண்களின் படித்துறை -ஜே பி சாணக்யா
10. நகரம் – சுஜாதா

பொன்னீலன் – நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர் அவருக்கு பிடித்த கதைகள்

1. யாருக்காக அழுதான் – ஜெயகாந்தன்
2. காலை முதல் -கிருஷ்ணன் நம்பி
3. கோயில் மாடும் உழவு மாடும் – சுந்தர ராமசாமி
4. காக்கைக்கூடு -ஐசக் அருமைராஜன்
5. தவம் -செம்பை மணாளன்
6. ஈரம் -பொன்னீலன்
7. தப்புக்கணக்கு – மாலன்
8. அசோகவனம் – ச தமிழ்செல்வன்
9. கிணறு – திலக பாமா
10. ஒரு சாமியாரும் ஐந்து சிறுவர்களும் – ஸ்ரீதர கணேசன்

நடை இதழ்த் தொகுப்பு – 1968 – 1970 ல் எட்டு இதழ்களே வெளிவந்த நடை தமிழின் முதல் கலை இலக்கிய இதழ் என அறியப்படுகிறது.
.இதன் ஆசிரியர் சி மணி.தொகுப்பாசிரியர் கி அ சச்சிதானந்தம்.இந்த இதழ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள்…

1. நடப்பு – ந முத்துசாமி 2. தீக்கை – ப சாமி
3. சண்டையும் சமாதானமும் – நீல பத்மநாபன் 4. ஒரு வேளை – ஐராவதம்
5.பிணைப்பு – ல ரா கார்த்திகேயன் 6. பார்வை -அசோகமித்திரன்
7. பேரம் – அருள் 8. நிழல்கள் – மா தக்ஷிணாமூர்த்தி
9. ஓர் இரவின் பிற்பகுதியில் – நா கிருஷ்ணமூர்த்தி
10. பின்கட்டு – ராமகிருஷ்ணன்
11. ஊரல் -இந்துமதி சுகுமாரன் 12. இழப்பு – ந முத்துசாமி
13.மறுநாள் வந்துகொண்டிருந்தது – கி அ சச்சிதானந்தம்

சிகரம் இதழ் தொகுப்பு 1975-1982 . இந்த இதழின் ஆசிரியர் ச செந்தில்நாதன். தொகுப்பாசிரியர் கமலாலயன். இந்த இதழ் முற்போக்கு இதழ்கள் மத்தியில் தனி இடம் பிடித்தது. இந்த இதழ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள்.

1. புரியாத விஷயம் – வல்லிக்கண்ணன் 2. விளிப்பு – சி ஆர் ரவீந்திரன்
3. கருப்பாயி – அப்பாக்குட்டி 4. சுழலும் சக்கரம் – கொ ச பலராமன்
5.பாறாங்கல் – ஜானகிகாந்தன் 6. பக்தனும் சித்தனும் – டி செல்வராஜ்
7. தகப்பன் சாமி – ஷெரீப் 8. பசிகள் – மன்னர் மன்னன்
9. நட்சத்திரங்களுக்கு அப்பால் – காஸ்யபன்
10. எமர்ஜென்ஸி – பொள்ளாச்சி அம்பலம்
11. இருளுக்கு அழைப்பவர்கள்- பா செயப்பிரகாசம்
12. வெளிச்சம் பரவுகிறது -உதயை மு வீரையன்
13. சுய கணிப்புகள் – என் ஆர் தாசன்
14. இங்கேயும் அந்த விழுதுகள்- மேலாண்மை பொன்னுச்சாமி
15. நம்பிக்கை நட்சத்திரங்கள் – பாப்ரியா
16. ஒரு பிரதிநிதி உருவாக்கப்படுகிறான் – மோ சிவகுமார்
17. கருத்த நட்சத்திரங்கள் – தி மதுசூதனன்
18. சிசுஹத்தி – சௌ மதார்மைதீன் 19. குருவி – கமலாலயன்
20.தூக்கணாங்குருவிக் குஞ்சு – யோ பெனடிக்ற் பாலன்
21.காவல் நீதி – ராஜம் கிருஷ்ணன் 22. நினைவில் ஒரு நீண்ட பயணம் – துரை
23. காவு – வித்யாஷங்கர் 24. இருட்டு – கோணங்கி

மணிக்கொடி இதழ் தொகுப்பு- 1933 ல் தொடங்கப்பட்டு ஆறு வருடங்களுக்கு குறைவாகவே வெளிவந்த இதழின் தொகுப்பு இது. இதை தொகுத்தவர்கள் சிட்டி, அசோகமித்திரன், ப.முத்துக்குமாரசாமி ஆகியோர். கலைஞன் பதிப்பகம் 2001 ல்.வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்…..

1. கார்னிவல் – பி எஸ் ராமையா 2. அனாதாஸ்ரமம் – பி எஸ் ராமையா
3. ஆற்றங்கரைப் பிள்ளையார் – புதுமைப்பித்தன்
4. பதினெட்டாம் பெருக்கு – ந பிச்சமூர்த்தி
5.என்ன தைரியம் ?- கு ப ராஜகோபாலன்
6. அந்தி மந்தாரை -பெ கோ சுந்தரராஜன்
7. கைதியின் கர்வம் – சி எஸ் செல்லப்பா
8. வேலையும் விவாகமும் – என் சிதம்பர சுப்ரமண்யன்
9. அழியாச்சுடர் – மௌனி
10. பேசாமடந்தை – க நா சுப்ரமண்யம்
11. சூரசம்ஹாரம் – லா ச ராமாமிர்தம் 12. துணை – தி ஜானகிராமன்
13. நாலு அவுன்ஸ் பிராந்தி – அ நா சிவராமன்
14. சிவகாமி – வி அனந்த கிருஷ்ணன்
15. நினைவும் மறதியும் – வி வினாயகம்
16. அவன் ஒரு அனாதை – பி எஸ் கிருஷ்ணமூர்த்தி
17. முதலைச்சட்டை – எஸ் கமலாம்பாள் 18. ஷண்பகா தேவி – சுந்தா
19.நாடகமுடிவு – ஆர் சண்முகசுந்தரம் 20. வேட்கை – கு பா வெங்கடாசலம்
21. ஹாஸ்ய பத்திரிகாசிரியன் – கி ரா 22. இடம் மாற்றம் – வியாசன்
23. பிச்சைக்காரன் – விஸ்கி 24. செம்படவச் சிறுமி – சங்கு சுப்ரமணியம்
25. மறு ஜன்மம் – பி எம் கண்ணன் 26.செல்வமும் சுசீலாவும் – கே டி எஸ்
27. முறுக்குப் பாட்டி – பி எம் சிவசுப்ரமணியன்
28. சிபார்சு – பி எம் சிவசுப்ரமணியன்
29. கனம் சின்னத் தம்பி – என் நாராயணன்
30. தத்துப்பிள்ளை – எம் வி வெங்கட் ராமன்
31. வாழ்க்கைத் திறவுகோல் – எல் ரங்கநாதன்
32. நீண்ட ஆயுள்- ம ஆலி சாஹிப்
33. கோஷா ஆஸ்பத்திரியில் – டி எம் ஜம்புநாதன்
34.முத்த மாரி – வேங்கடவன் 35. விதி விட்ட வழி – அனசூயாதேவி
36. இருண்ட உலகம் – வாணிதாசன்
37. ஆலமரத்துப் பிசாசு – ரா சாரங்கபாணி
38. ராஜ பிக்ஷு -எஸ் குஞ்சிதபாதம்
39. மூடிய கண்கள் – ப ராமஸ்வாமி 40. பசி -எஸ் பாலசுந்தரம்
41.புத்தம் சரணம் கச்சாமி – சேது அம்மாள் 42. சத்திரத்து சாப்பாடு – மாரார்
43. அஞ்ஞானம் – சேதுராமன் 44. மங்கிலியப் பெண்டுகள் – ஸ்ரீமதி எஸ் வி
45. அனாதைப் பெண் – டி வி ராமமூர்த்தி
46. பெற்ற மனம் – உ வே சாமிநாதய்யர்
47.சுமை தாங்கி -எல்லார்வி 48. நம்ப முடியுமா – வி எஸ் ராமகிருஷ்ணன்
49. இளையாள் – வ சா நாகராஜன் 50. மரண பயம் – மாயா
51. இதுதான் வாழ்க்கை -சரஸ்வதி ராமநாத்
52. நினைப்பதும் நடப்பதும் – சந்திர பிரபா 53. வெறி – ரஜனி
54. காதலா லீலையா ? – வில்லன்

சரஸ்வதி களஞ்சியம் :- சரஸ்வதி இதழ்களின் தொகுப்பு.இதை சரஸ்வதி இதழின் ஆசிரியர் வ விஜயபாஸ்கரன்தொகுத்துள்ளார். இந்த தொகுப்பு 2001ல் பரஞ்சோதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இதில் 31 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

1. பற்றுக்கோடு – விஜயரங்கம்(தமிழ் ஒளி)
2. மக்கள் கவிஞன் – மாஜினி
3. புது மண் – ஆர் கே கண்ணன
4. மூட்டை சொன்ன கதை – டி செல்வராஜ்
5. அகம் -சுந்தர ராமசாமி 6. நெஞ்சு பொறுக்குதில்லை – கு சின்னப்ப பாரதி
7. ரெட்டைப் பிள்ளையார் – க நா சுப்ரமணியம்
8. சுதந்திர தாகம் -டொமினிக் ஜீவா 9. சுமை – கே டானியல்
10. எழுத்தாளன் நாடி – காவலூர் ராஜதுரை
11.மாய மான் – கி ராஜநாராயணன் 12.யமசாதனை – முருகையன்
13. நிழலாட்டம் – ந பிச்சமூர்த்தி 14. தீராக் குறை – ஜி நாகராஜன்
15. குக்கலும் சிக்கலும் – விந்தன் 16. பிரசவம் – செ கணேசலிங்கம்
17. எக்ஸெண்ட்ரிக் – கிருஷ்ணன் நம்பி 18.பழுப்பும் பச்சையும் – ஆர் வி
19. பெரியமனுஷி – வல்லிக்கண்ணன் 20. விடுதலை – வேந்தன்
21. பைத்தியங்கள் – வ அ இராசரத்தினம் 22. டிரெடில் – ஜெயகாந்தன்
23. யாத்திரை – நகுலன் 24. சலனம் – தேவன் (யாழ்ப்பாணம்)
25. கோடை மழை -அ முத்துலிங்கம் 26.மொட்டு – எஸ் பொன்னுதுரை
27. எட்டணா நாணயம் – ஆர் சூடாமணி 28. பிரக்ஞை வெளியில் – மௌனி
29. நெருப்பு – என் கே ரகுநாதன் 30. மனிதக்குரங்கு – இலங்கையர்கோன்
30. எரிமலை – ரகுநாதன்

தீபம் இதழ் தொகுப்பு – இந்த தொகுப்பை வே சபாநாயகம் தொகுத்து இருக்கிறார். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. கலைஞன் பதிப்பகம் இதை 2004 ல் வெளியிட்டுள்ளது.இதில் உள்ள சிறுகதைகள் .தீபம் இதழ் 1965 முதல் 1988 வரை வெளியானது.
இதன் ஆசிரியர் நா பார்த்தசாரதி.

பாகம் -1
1. பசிகள் – கே ராமசாமி 2. ஞானம் – வண்ணதாசன்
3. சாதனை – எம் வி வெங்கட் ராம்
4. நல்ல திருமணம் – ஆர் சண்முகசுந்தரம்
5. சத்தியச்சிறை – வாசவன் 6. கன்னிமை – கி ராஜநாராயணன்
7. அவர்களும் ஒரு விதத்தில் குருடர்களே – கர்ணன்
8. வீடு – நீல பத்மநாபன் 9. மூட்டைப்பூச்சி – வியார்ஜி
10. சந்தோஷம் – க நா சுப்ரமணியம்
11. மரணம் என்ற எல்லை – சார்வாகன் 12. நாய்க்குட்டி – து ராமமூர்த்தி
13. குழந்தையும் தெய்வமும் – அழ கிருஷ்ணமூர்த்தி
14. உண்மையின் நிறம் – தி சா ராஜு 15.போட்டி – கிருஷ்ணன் நம்பி
16. சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் – தி ஜானகிராமன்
17.கேட்பதற்கு -ஆர் வி 18. மனம் என்ற இருட்டு – இந்திரா பார்த்தசாரதி
19. விதிகளில் அடங்காது – ஆர் சூடாமணி
20.அட்டவணை பிசகியபோது….. -ஆதவன்
21. பண வியாபாரம் – ந முத்துசாமி
22. ரொட்டிக்காக – எஸ் கிருஷ்ணமூர்த்தி
23. நினைவுச்சக்கரம் – சாத்தப்பன் கந்தசாமி
24.அவனுக்கு மிகப் பிடித்தமான நட்சத்திரம் – அசோகமித்திரன்
25. நொண்டிச் சாக்கு – ஆ மாதவன்
26. புதிய மனிதர் – ரெ கார்த்திகேசு
27. செய்தி வேட்டை -டொமினிக் ஜீவா
28.ஒரு சிநேகிதியின் மறு சந்திப்பு – பொன்முடி
29. ஒரு மொட்டு -எஸ் பொன்னுத்துரை
30. போன அவன் நின்ற அவள் – ஐராவதம்
31. குறைகள் – திருவாழத்தான்
32. ஒரு நெல்லின் மரணம் – பாரவி
33. வெள்ளைச்சாமி வழக்கு – ந சிதம்பர சுப்பிரமணியன்
34. பள்ளி திறந்தாச்சு – ஆர் கண்ணன்
35.கரையும் உருவங்கள் – வண்ணநிலவன்
36. நிஜத்தை மீறிய நிழல்கள் – வா மூர்த்தி
37. குமார், நான்,பொம்மைப் பெட்டி – தீபப்ரகாசன்
38. ஓர் ஆண்பிள்ளை அழுகிறான்… – ஜே வி நாதன்
39. உள்ளிருப்பவன் – எம் சுப்பிரமணியன் 40. கோட்டை – மாலன்

பாகம் – 2
1. ஒளியைத்தேடி – சுபானு 2. வட்டி – க அ கயிலை ராஜன்
3. ஒரு தொழிலாளியின் இரக்கம் – கோதா பார்த்தசாரதி
4.கஞ்சிக்கு உப்பு – கே ஆர் கிருஷ்ணா 5. மறைவுக்குப்பின் – வே சபாநாயகம்
6.வியாபாரம் – சங்கொலி பாலகிருஷ்ணன்
7. விழித்துக்கொண்ட ஒரு இந்திய கிராமம் – கொ மா கோதண்டம்
8. ராகு காலம் – பாரதிப்பித்தன் 9.தரிசனம் – பறம்பை அ செகதீன்
10. ஐந்தில் நான்கு – நாஞ்சில் நாடன் 11. வேஷங்கள்- உஷா மணியன்
12. சடங்கு – சிவசு 13. போணி – சிவசங்கரி
14. யாருக்கு சொந்தம் – ச முருகானந்தம் (இலங்கை)
15.ஒரு சம்சாரியின் பஞ்சங்கள் – அ முத்தானந்தம்
16. நிவாரணம் – விட்டல் ராவ் 17. மனிதர்கள் – ஏ ஏ ஹெச் கே கோரி
18. இடம் – ச கலியாண ராமன் 19. ஏமாற்றம் – ம ந ராமசாமி
20. சுயரூபத்தை மறந்த விசுவரூபங்கள் – மாத்தளை சோமு
21. மீன் நாற்றம் – ஐசக் அருமைராஜன் 22. மரம் வைத்தவன் – சி எம் முத்து
23. மேல்புரத்து நரிகள் – ராகுலதாசன் 24. வேஸ்ட் – கமலாலயன்
25. நகை – ஞானபானு 26. செல்லமாக்கா – ஆர் பி எஸ் சுப்ரபாரதி மணியன்
27. கொழுந்துகளை நறுக்கும் வேர்கள் – சூர்யகாந்தன்
28. ஊன ராகங்கள் – ஜெயதீர்த் 29.போனவன் – நந்தா
30. ராஜதந்திரிகள் – நா பார்த்தசாரதி 31. அம்மாப்பிள்ளை – பாவண்ணன்
32. ஆறு கிலோ அரிசி – வீராஜ் 33. விடுதலை – யுவபாரதி
34. நாளைக்கு – லதாராமன் 35. சந்தோஷம் – மோகனன்
36. சுயம்வரம் – லாவண்யா 37. அழகான களைகள் – பா அமிழ்தன்
38. நெருடல் – சி ஆர் ரவீந்திரன்
39. சூரிய விளக்கும் சூறாவளியும் – எஸ் சங்கரநாராயணன்
40. வேஷங்கள் – கனிவண்ணன்
41. சைவப்புலிகள் – வாமனன் 42. தங்கக்குடம் – பிரேமா நந்தகுமார்
43. வலி – கௌதம சித்தார்த்தன் 44. அடி – சுதர்மன்
45. தேங்காய் – மா அரங்கநாதன்
46. சூரியனைத் தொடுதல் – ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி
47.தினம்தினம் – இரா ஆனந்தி 48. அந்தக் கண்களே வேறு – என் ஆர் தாசன்
49. சோதனை – கழனியூரன் 50. பிலோமினா – ஜெயடேவி
51. தவமும் வரமும் – ஜெயமோகன் 52. கைமேல் பலன் – ஆதிராஜ்
53. நாய் எப்படி குலைக்கும் ? – நாக நாகராஜ்

கலைமகள் இதழ் 1932 முதல் வெளிவருகிறது. இதன் இதழ் தொகுப்பு 2003 ல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொகுப்பாசிரியர்
இப்போதைய கலைமகளின் ஆசிரியரான கீழாம்பூர். இதில் உள்ள கதைகள்..

பாகம் -1

1. களவு போன வைரமணிகள் – ச கு கணபதி ஐயர்
2. இரும்புக்கடலை -டி எஸ் ராமச்சந்திர ஐயர்
3. திகம்பரன் – கே சாவித்திரி அம்மாள்
4. சக்ரவாகம் – என் சிதம்பர சுப்ரமணியன்
5. ஒரு தீர்மானம் – புரசு பாலகிருஷ்ணன் 6.சுயம்வரம் – சங்கரராம்
7.கொந்தளிக்கும் பாசம் -ஏ முகம்மது ரஷீத்
8. பைத்தியக்காரி – சி வைத்தியலிங்கம் 9. ஊர்வாய் – கி ரா
10. ஒரே மண் – கா ஸ்ரீ ஸ்ரீ
11. நாச்சியார் கட்டளை – ஸ்ரீரங்கம் நரசிம்மன்
12. படமும் வாழ்க்கையும் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
13.ஆடலும் பாடலும் – சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
14. ஞாபகச்சின்னம் – த நா ஸேனாபதி

பாகம் -2

பாகம் – 2 முழுவதும் சிறுகதைகள் மட்டுமே கொண்டது.இதில் உள்ள சிறுகதைகள்….

1. பெருமை – வல்லிக்கண்ணன் 2. விடுதலை – கௌசிகன்
3. தாய் – அநுத்தமா
4. கண்ணன் என் குழந்தை – காப்டன் என் சேஷாத்ரி நாதன்
5. எலிப் புத்தி – ராசு 6. புது வீடு – சரோஜா ராமமூர்த்தி
7. பகை – சி ஆர் ராஜம்மா 8. கமலி – ஹேமா ஆனந்ததீர்த்தன்
9. பரிசயம் – குமுதினி 10. ஆரவல்லி ஆஸ்பத்திரி – லக்ஷ்மி
11. மந்திர மோதிரம் – எம் எஸ் ஸ்ரீனிவாசன்
12.பொறாமைத்தீ – எஸ் வரதராஜன்
13. சட்டம் சொல்லட்டும் – கே எஸ் எஸ் ராகவன்
14. கனவு பலித்தது – பி வி ஆர் 15. நம்பிக்கை – சரோஜா ராமமூர்த்தி
16. தபதி – கு ப சேது அம்மாள் 17. வாழ்க்கை – சுபஸ்ரீ
18. அழகும் அக்கினியும் – பஞ்சாபகேசன்
19. நினைவுகள் – க நா சுப்ரமண்யம்
20. கற்பனையேயானாலும் … நா பார்த்தசாரதி
21. பிரம்மசாரினி – துமிலன் 22. வித்தியாசம் – சங்கரசுப்பு
23. கூஜா – ஆண்டாள் 24. பஞ்சகல்யாணி -ஸ்ரீவத்ஸன்
25.தண்டனை – எல்லார்வி 26. பைத்தியமானாலும் – ஸ்ரீவத்ஸன்
27.மீனா – எம் பி ராஜன் 28. இதயம் எங்கே ? – ஜமீலா
29.சமத்துவம் – மெலட்டூர் விசுவநாதன்
30. வெண்புறா – எஸ் விஜயராகவன் 31. மின்னல் -கி ராஜநாராயணன்
32. மனக்குறை -ரேவதி 33. பொதினிக் கண்ணகி – ஆயிழை கணபதி
34. மாட்டுப் பெண் –சுரபி 35.கலை மோகம் -சங்கரராம்
36. திருமணப்பரிசு – ருக்மிணி பார்த்தசாரதி 37. குரல் – வாசவன்
38. கல்லா மழலை – மதுரா
39. இங்கேயே கங்கை இங்கேயே இமயம் -இனியவன்
40. மணல் வீடு – கே வைதேகி
41. தூபக்கால் – மு மேத்தா 42. ஒரு கிளைப் பறவைகள் – கே பி நீலமணி
43. சாரதியின் புது வியாபாரம் -தமயந்தி
44. தியாகங்கள் – எஸ் கிருஷ்ணமூர்த்தி
45. ஜன்னல் ஓரத்துச்சிலை – ஏ எஸ் ராகவன் 46. சிட்டுக் குருவி – நாடோடி
47. பூர்வீகம் -சுப்ர பாலன் 48.நாத வெள்ளம் – மாயாவி
49. தீராத மனக்குறை – ஆர் வைத்தியநாதன்
50. வழக்கு ஒன்று தீர்ப்பு இரண்டு – அய்க்கண்
51. மின்னி மறையும் வைரங்கள் – ராஜம் கிருஷ்ணன்
52.கேவலம் மனிதர்கள் – கோமகள்
53. பூவும் பழமும் – லட்சுமி ராஜரத்தினம்
54. நிழலின் அருமை -எல்லார்வி
55. குழந்தைக்கு ஜுரம் -தி ஜானகிராமன் 56. பொங்கல் வெளியீடு – துமிலன்
57. சேவை – அசோகமித்திரன் 58. கார்த்திகை விளக்கு – கி வா ஜகந்நாதன்
59. முள்ளும் ரோஜாவும் -என் பிச்சமூர்த்தி 60. மகாலெட்சுமி -சம்பந்தன்
61. நொண்டிக்கிளி – தி ஜ ர 62. மர்மம் -ஆர் வி
63. நான்கு சுவர்கள் – எஸ் லட்சுமி சுப்பிரமணியம்
64. இழப்பு -தாமரை மணாளன் 65. சாவிக் கொத்து – ஏ எஸ் ராகவன்
66. தனிமை – கு வேங்கடரமணி 67. பூஜ்யம் – கோவி மணிசேகரன்
68. பாட்டி ஊருக்கு போகிறாள் – ஆர் சூடாமணி
69, ஜானாவின் துணிச்சல் – கே வேங்கடராமன் 70. பரிசு – சித்ரா
71. சரிவு – அ வேதாசலம் 72. எங்கிருந்து வருகிறதோ ? – மித்ரா
73. நிழலாகி நின்றே சிரிக்கும் – கோமதி சுப்பிரமணியம்
74. ஆதங்கம் – வீ சுவாமிநாதன் 75. ஆசாரம் – ரஸவாதி
76. காற்று – கா முவ 77. ரோஜாமுள் – ராம பாரதி
78. நிறைவு – எஸ் பி ஹரன்
79. பிரதிபலிப்பு – துடுப்பதி ரகுநாதன் 80. நெஞ்சிலே புரண்டது – புஷ்யன்
81. தாய்மை – கோமகள் 82. தியாகத்தழும்பு – இரா சந்திரசேகரன்
83.அசடாக இல்லையே – ஜி கே பொன்னம்மாள்
84. அப்பனும் புருஷனும் – வை ரங்கநாதன்
85. பார்த்தனுக்கு வாய்த்த மனைவி – வாதூலன்
86. பொம்மை நாய் – பெ தூரன்
87. கை விலங்கு – ருக்மிணி பார்த்தசாரதி
88. அந்த இருவர் – எச் வி ஆர் ஐயங்கார்
89. பாடிப் பறந்த குயில் – மஹி 90. நாவல் மரம் – வி எஸ் எஸ்
91. போர்முனைத் தூரிகை – தி சா ராஜு

அமுதசுரபி இதழின் முதல் தொகுப்பு தமிழ்ச்சுரபி என்ற பெயரில் 2015 ல் வெளிவந்துள்ளது. இந்த தொகுப்பு 1948 – 1958 இதழ்களில் வந்த சிறந்த கட்டுரை, சிறுகதை, கவிதைகளின் தொகுப்பு. இந்த தொகுப்பை விக்கிரமன் தொகுத்து இலக்கியப்பீடம் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள சிறுகதைகள்…..

1.புரிந்தது – மாயா 2. மாறுதல் – உமாசந்திரன்
3. நட்சத்திர நடிகை – பூவாளூர் சுந்தரராமன்
4. புரியாத புதிர் – குகப்ரியை 5. கண்ணீர்க் காணிக்கை – எம் எஸ் கமலா
6.முத்து வீர பூபதி – எம் எஸ் சுப்பிரமணிய ஐயர்
7.அன்னை – ஸரோஜா ராமமூர்த்தி 8. மரண தாகம் – துறைவன்
9.வந்த பெண் – கரிச்சான் குஞ்சு
10. அட்டஹாசம் – ஸ்வாமிநாத ஆத்ரேயன்
11. பட்டணம் கை – பெ தூரன் 12. சகோதரி – ரா ஆறுமுகம்
13. தந்தையின் வஞ்சம் -ஜீவா 14. ராஜரத்தினம் – பி எஸ் ராமையா
15. தேவசேவை -க நா சுப்ரமண்யம் 16. கலக்கம் – எஸ் டி ஸ்ரீநிவாசன்
17. தைத்தமுள் – வஸந்தன் 18. விஷக்கத்தி – வேம்பு

புதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற சாகித்ய அக்காதெமி வெளியிட்ட நூலில் முனைவர் க சண்முகசுந்தரம் விடுதலைக்குப் பின் தமிழ் சிறுகதைகள்
என்ற கட்டுரையில் குறிப்பிடும் சிறந்த கதைகள்…

1. அண்ணாதுரை – தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில், சொர்க்கத்தில் நரகம், திருமலை கண்ட திவ்யஜோதி, புலிநகம், விஷசாம்பல் , சொல்வதை எழுதேண்டா
செவ்வாழை. கருப்பண்ணசாமி யோசிக்கிறார், தனபால் செட்டியார் கம்பெனி
2. கு அழகிரிசாமி – பாம்புக்குட்டி, ஓட்டப்பந்தயம், ஞாபகார்த்தம், சுயரூபம், இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள்
3. ஜெயகாந்தன் – அக்னிப்பிரவேசம், மௌனம் ஒரு பாஷை, தாம்பத்யம் பௌருஷம் , பால்பேதம் , மாலை மயக்கம் , ட்ரெடில், சுயரூபம், யுகசந்தி
4. விந்தன் – மாட்டுத்தொழுவம் , வருத்துவது யார், முதல் தேதி, யாருக்கு பிரதிநிதி, முல்லைக்கொடியாள்
5. சிதம்பர ரகுநாதன் – ஐந்தாம் படை
6. சுந்தர ராமசாமி – கோவில் காளையும் உழவு மாடும், வாழ்வும் வசந்தமும் , ரத்னாபாயின் ஆங்கிலம், கிடாரி,சன்னல், விகாசம், மேல்பார்வை, பள்ளம்.
7.நீல பத்மநாபன் – கடிகாரம், க்ஷணங்கள், திரைகடல் ஓடி, காளியமர்த்தனம், சத்தியத்தின் சன்னதியில், ஜின்னின் மனம், மூவந்தி
8. அசோகமித்திரன் — புலிக்கலைஞன், போட்டோ, சங்கமம், பிரயாணம்
9. தி ஜானகிராமன் – முள்முடி, பாயசம், கங்கா ஸ்நானம், சக்தி வைத்தியம், சிலிர்ப்பு
10. ந முத்துசாமி – சப்பாத்தி பழம், இழப்பு, யார்துணை, மழைக்கோட்டும் கந்தல் குடையும், இழப்பு, புஞ்சை , சூழ்நிலை, செம்பனார் கோயில் போவது எப்படி? , அப்பாவின் பார்வைக்கூடம்
11. ஜி நாகராஜன் – ஆண்மை, குனிந்த ஜாதி, தீராக்குறை, எங்கள் ஊர், மிஸ் பாக்கியம், கிழவனின் வருகை
12.ராஜம் கிருஷ்ணன் – ஊசியும் உணர்வும், மஞ்சள் கயிறு, ஏக்கம், வால், திங்கட்கிழமை
13. சூடாமணி – நான்காம் ஆசிரமம், ரோஜா பதியன், சந்திப்பு, ரயில், டாக்டர் அம்மா அறை, புவனாவும் வியாழக்கிழமையும், பெருமையின் முடிவில்
14. சிவசங்கரி – பொழுது, போளி , வைராக்கியம்
15. அம்பை – வெளிப்பாடு, சூரியன், த்ரிசங்கு, அம்மா ஒரு கொலை செய்தாள் , புனர்,அறைக்குள் இருந்தவன், ம்ருத்யு
16. கிருஷ்ணன் நம்பி – சங்கிலி, சட்டை, மருமகள் வாக்கு, நீலக்கடல், பொம்மைகள்
17. ஆ மாதவன் – பாம்பு உறங்கும் பாற்கடல், நாயனம், மீசைப்பூனை, ஆனைச்சந்தம், பறிமுதல்
18.இந்திரா பார்த்தசாரதி – தொலைவு, இளமாறன் கொடுத்த பேட்டி, அணில், எல்லை
19. சா கந்தசாமி – நிழல், பிணைப்பு, பாய்ச்சல்
20. சுஜாதா – நகரம் , தாஜ்மஹால், பார்வை, அரிசி, ஜன்னல், திமலா
21. வண்ணதாசன் – தனுமை, பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக ஞாபகம், நிலை, கூறல், போர்த்திக்கொள்ளுதல்,போய்க்கொண்டிருப்பவன்
22. வண்ணநிலவன் – மழை, பாம்பும் பிடாரனும், எஸ்தர், கரையும் உருவங்கள், குடும்பச்சித்திரம்
23, பிரபஞ்சன் – பிரும்மம், ஆண்களும் பெண்களும், ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், பாதுகை, ஒரு மனுஷி
24. ஆதவன் – முதலில் இரவு வரும், ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம், கணபதி ஒரு கடைநிலை ஊழியன்,லேடி
25, சு சமுத்திரம் – போதும் உங்க உபசாரம்
26. பா செயப்பிரகாசம் – கரிசலின் இருள்கள், அம்பலக்காரர் வீடு,
ஒரு செருசலேம்
27. மேலாண்மை பொன்னுச்சாமி – ஈரம், புது ஐயா
28. கந்தர்வன் – சாசனம்
29. இராஜேந்திர சோழன் – எதிர்பார்ப்புகள், வானம் வெளி வாங்கி, புற்றில் உறையும் பாம்புகள், கோணல் வடிவங்கள்
30. ஜெயமோகன் – பத்ம வியூகம், மாடன் மோட்சம் , திசைகளின் நடுவே, நதி வலை, படுகை
31. திலீப்குமார் – தீர்வு, நிகழ மறுத்த அற்புதம், மூங்கில் குருத்து

கனவு சிற்றிதழ் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன், கனவு இதழின்
தொகுப்பு இதன் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன் தொகுக்க காவ்யா 2008 ல் வெளியிட்டுள்ளது. இதில் 37 சிறுகதைகள் உள்ளன.

1. குழந்தைகள் – அசோகமித்திரன்
2. மூன்றாவது பிரார்த்தனை – சா கந்தசாமி
3. கருட யோகி -பிரமிள் 4. பிரிவு – நகுலன்
5. 542 – ஜெயந்தன் 6. பிடிக்காத நிறம் பூசப்பட்ட போலீஸ்வேன்- தமிழவன்
7. திரிசூலம் – மா அரங்கநாதன் 8. சங்கல்பம் – சி ஆர் ரவீந்திரன்
9. கவிஞர் கமலநாதனின் தற்கொலை – பிச்சுமணி கைவல்யம்
10. பிம்பங்கள்- சுரேஷ்குமார் இந்திரஜித்
11. வனம் -ஜெயமோகன் 12. விருட்சங்களும் அவனும் – சுப்ரபாரதி மணியன்
13. லட்சணம்- எஸ் சங்கரநாராயணன்
14. இரண்டு வளையல்கள் – எஸ் ராமகிருஷ்ணன்
15. தர்மயுத்தம் – விட்டல் ராவ் 16. வெளியேற்றம் -நாஞ்சில் நாடன்
17. பவழமல்லி – காவேரி 18. கணிதவியலாளன் – அழகு சுப்ரமணியம்
19. அந்நியர்கள் – ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
20. ஒரு தனித்த வனத்தில் – பொ கருணாகர மூர்த்தி
21. காவு -நா கண்ணன் 22. தேர்தல் – ரெ பாண்டியன்
23. உடம்பு – சு வேணுகோபால் 24. ஆற்றோடு போனவன் – ஜி முருகன்
25. ஓட்டம் – கோலாகல் ஸ்ரீநிவாஸ் 26. விலகல் – மு புஷ்பராஜன்
27. விழுக்காடு – அ முத்துலிங்கம்
28. தாஸ்தயெவ்ஸ்கியின் தந்தை – ஸ்ரீபதி பத்மநாபா
29. தீண்டாநாயகி – க சீ சிவக்குமார்
30.திடத்திலிருந்து ஆவியாகி – க்ருஷாங்கினி
31. புதைந்த காற்று – சுப்ரபாரதிமணியன்
32. பிரம்மாண்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
33. நட்சத்திரங்களுடன் பேசுபவள் – தி சுதாகர்கத்தக்
34. வருகை – ம காமுத்துரை
35. பேயைக்காட்டுபவர் – என் ஸ்ரீ ராம்
36. ஏகாந்தி – சுதேசமித்திரன்
37. இரவு எழுதிய நாட்குறிப்பு – பாப்லோ அறிவுக்குயில்

முன்றில் இதழ் 1988 முதல் 1996 வரை வெளிவந்தது. மா அரங்கநாதன் இதன் ஆசிரியர். இந்த இதழின் தொகுப்பை காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்து 2010 ல் இந்த இதழ் தொகுப்பை காவ்யா வெளியிட்டுள்ளது. இதில் 30 சிறுகதைகள்
தொகுக்கப்பட்டுள்ளன.

1. ஓய்வு – அசோகமித்திரன் 2. புதுப்பழக்கம் – சுப்ரபாரதி மணியன்
3. மீதி – மா அரங்கநாதன் 4. எங்கேயோ போதல் – மா அரங்கநாதன்
5. மண்டேலாவை நேசிக்கிறேன் – மா அரங்கநாதன்
6. ரோபோ – மா அரங்கநாதன் 7. பெருநகர்த்தடம் – மா அரங்கநாதன்
8. ஆட்டோ – நகுலன்
9. கார்ல் மார்க்சும் தாணு ஆசாரியும் – தமிழவன்
10. வேஷம் – தமிழவன் 11. பலி நாடகம் – தமிழவன்
12. உயர்திணை அஃறிணை ஒரு சங்கமம் – கோபி கிருஷ்ணன்
13. ஈடான் தோட்டம் தொட்டு இறையுணர்வுக் கூட்டம் ஊடாக ஐந்து
நட்சத்திர ஓட்டல் வரை – மா அரங்கநாதன்
14. மார்ட்டின் ஹைடேக்கரும் மத்தியான சோறும் – உதயஷங்கர்
15. ரொட்டி – பா வெங்கடேசன் 16. மீண்டும் – ராம்ஜி ஸ்வாமி நாதன்
17. அழகு – பாவண்னன் 18. இடம் – மாயன்
19. காத்திருந்தவன் – சுரேஷ்குமார் இந்திரஜித் 20. ஈடு – அநாமிகா
21. டெர்ரரிசம் – சமயவேல் 22. மணல் முகமூடி – கோணங்கி
23. முதலாம் தோட்டத்தின் அதிசய வரிகளினூடே கோணாங்கியின்
“பரிவாள்” – நாகார்ஜுனன்
24.ராமசாமிகளின் வம்ச சரித்திரம் : மறைக்கப்பட்ட உண்மைகள்
– எஸ் ராமகிருஷ்ணன்
25. ரகஸிய ஆண்கள் – எஸ் ராமகிருஷ்ணன்
26. இடம் பெயர்தல் – ஜி காசிராசன்
27. யாதும் ஊரே – பஞ்சாட்சரம் செல்வராஜ்
28. தகவல்காரர் -இரா முருகன்
29. தலைப்பிடாத கனவுக்கதை – பெருந்தேவி
30. ஒரு குட்டித் தியாகம் – பா விசாலம்

கணையாழி களஞ்சியம் -1 இந்த இதழின் முதல் பத்தாண்டு கால தொகுப்பு கணையாழி களஞ்சியம் -1 ஆக வெளிவந்துள்ளது. இதனை வே சபாநாயகம் தொகுத்துள்ளார். இதில் அசோகமித்திரன் தொகுத்த கணையாழி கதைகள் தொகுப்பில் உள்ள கதைகள் சேர்க்கப்படவில்லை. இதை பரஞ்சோதி பதிப்பகம் 2000ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்….

1. கதை கதையாம் – பூரணம் விசுவநாதன்
2. குமாரசுவாமி ஒரு சோஷலிஸ்ட் – எஸ் ரங்கராஜன்
3. துறவி – நா பார்த்தசாரதி 4. காலம் கடந்து – வாஸந்தி
5. குளத்தங்கரை ஆலமரம் – நா முத்துசாமி
6. புலிவேட்டை -இந்திரா பார்த்தசாரதி
7. பெரிய மனிதர் – கிருஷ்ணமணி
8. கச்சேரி நடக்கிறது …நிலா அடிக்கிறது – ஆதவன்
9. திகம்பர் சுவாமிஜி – ஆர்வி 10. எலி பிடிச்ச கதை – பராங்குசன்
11. நீலரதம் – சம்பத் 12. மழை -ஆர் சூடாமணி
13. மன நாக்கு – தி ஜானகிராமன் 14.டயரி -அசோகமித்திரன்
15. எல்லைவெளி – வல்லிக்கண்ணன் 16. விஜி – சுஜாதா
17. தனிமையெனும் இருட்டு – அம்பை 18. உறவுகள் – ம ராஜாராம்
19. அண்ட பேரண்டம் – க சுப்ரமணியன் 20. இயந்திர பூமி – ஸிந்துஜா
21. மகுடி – ராஜரங்கன் 22. பெட்கி – எம் வி வெங்கட் ராம்
23.கேள்விகள் – சுப்ரமண்ய ராஜு 24. வா வா நகரம் – சார்வாகன்
25. தண்ணீர் – ஆ மாதவன் 26. தீராத பிரச்னை – கிருத்திகா
27. நித்யத்வ உபகதி — கே ராமசாமி
28. ஒரு நீலக்குழந்தையும் வீதியில் ஓடும் இளைஞனும் – இந்துமதி
29. இண்டர்வ்யூ – வண்ணநிலவன்
30. பெரிய மனிதன் – சாந்தன் (ஈழம்)
31. வலி – உ அறவாழி 32. நாடாக்காரர்கள் – ராமச்சந்திர வைத்தியநாத்
33. ஒற்றைக்காகம் – பாலகுமாரன்
34. அம்மாசி பிரஜா உரிமை அடைகிறாள் – பா ரத்நஸபாபதி அய்யர்
(இலங்கை)
35. சில நேரங்களில் சிலை மனிதர்கள் – தூன்
36. விசாலாட்சி செத்துவிட்டாள் – பிரபு செல்வராஜ்
37. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் – கௌதமநீலாம்பரன்

கணையாழி களஞ்சியம் -2, இந்த இதழின் இரண்டாவது பத்தாண்டு கால தொகுப்பு கணையாழி களஞ்சியம் -2 ஆக வெளிவந்துள்ளது. இதனை
இந்திரா பார்த்தசாரதி தொகுத்துள்ளார். இதை பரஞ்சோதி பதிப்பகம் 2000ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்….

1. நைவேத்யம் – கிருஷ்ணன் நம்பி 2. பிம்பம் – பிரபஞ்சன்
3. சராசரிகள் – சி ஆர் ரவீந்திரன் 4. பத்தாவது குரு – ஹரி பிரசாத்
5. மிருகம் – வண்ணநிலவன் 6. வைத்தியப் பரிசோதனை – காசியபன்
7. ஒரு இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன் 8. பொழுது -சிவசங்கரி
9. மாறுதல் – அசோகமித்திரன் 10. பயம் – ஜி வேதாந்தம்
11. நரபலி – வாஸந்தி 12. பன்றி – விட்டல் ராவ்
13. சாதனைகளின் பின்னே – ருக்மணி ஜெயராமன்
14. குருபிரசாதின் கடைசி தினம் -சுஜாதா
15. ப்ரயாணம் – லா ச ராமாமிர்தம் 16. பளு -வண்ணதாசன்
17. புதுமைப்பித்தனின் துரோகம் – ஆதவன் 18. இருட்டு – லிங்கன்
19. புலி – ச முருகானந்தன் 20. திருப்தி – மா சத்தியவாகீஸ்வரன்
21. கட்டுகள் – டானியல் அன்ரனி
22. யாவரும் கேளிர் – இந்திரா பார்த்தசாரதி
23. ஒலி -ஆதவன் 24. யன்மே மாதா – ம ந ராமசாமி
25. பிறிதொரு இண்டலக்சுவல் -ம வே சிவக்குமார்
26. உபாகர்மா – ஏ சங்கரன்
27. ஆசைகளும் ஆழங்களும் – ஸ்ரீதர கணேசன்
28. கானல் மீன்கள்- காவலூர் ஜகநாதன்
29. எதிர்பார்ப்புகள் – க வே கந்தசாமி
30. மீண்டும் ஒரு அஸ்தமனம் – வெ ஜானகி
31. ரண்டாம் பாகம் நாவலில் ரண்டு அத்தியாயங்கள் -கி ராஜநாராயணன்
32. சீக்காளி- அ நாகராசன் 33. சில நெருடல்கள் – கல்யாண்குமார்
34. புஷ்பித்தல் – க்ருஷாங்கிணி
35. ஒரு நிஜ இண்டர்வ்யூ – வெ அனந்தநாராயணன்
36. தணல் – கோணங்கி
37. சரணபாலாவின் பூனைக்குட்டி – செ யோகநாதன் (இலங்கை)
38. தோற்றுப்போன விடியல் – எல் ரகோத்தமன் 39. துக்கம் – எழிலமுதன்
40. யானையும் அவனும் -ரிஷபன்
41. மனிதாபிமானமோ கொக்கோ – என் வி ராஜாமணி
42. ஏகம் ஸத் – வெ அனந்தநாரயணன்
43. இரு விழி மேடை – இரா பிரபாகரன்
44. அடுத்த மாதம் – விஜயா சாரதி 45. சபை – பாவண்னன்
46. ஒரே ஜாதி – எஸ் ராமச்சந்திரன்
47. மொகலாயத் தோட்டம் – சாரு நிவேதிதா
48. மீசை – சத்தியப்பிரியன் 49. எச்சுமி -ராம்
50. எங்கும் இரண்டாய் – பாலகுமாரசுவாமி
51. திருந்தாத ஜென்மங்கள் – கௌஸல்யா ரங்கநாதன்
52. மழை -சு வெற்றிச்செல்வன்
53. வெள்ளைக்கண்ணாடி – மா அரங்கநாதன்
54. சாதிகள் – சு கிருஷ்ணமூர்த்தி
55. என் கனவுகள் ஏன் நிகழ்ந்து விடுகின்றன -முனுரேயி
56. ஜ்வாலைகள் -இமயவன் 57. யதார்த்தங்கள் -மன்னவன்
58. ஸியஸ்- ஷண்முக புத்திரன்

கணையாழி களஞ்சியம் -3, இந்த இதழின் மூன்றாவது பத்தாண்டு கால தொகுப்பு கணையாழி களஞ்சியம் -3 ஆக வெளிவந்துள்ளது.
இதனை என் எஸ் ஜகந்நாதன் தொகுத்துள்ளார். இதை கலைஞன் பதிப்பகம் 2003ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்….

1. நீலாயதாட்சி அம்மாள் வயது அறுபது – ஆர் சூடாமணி
2. உடம்பு – ஆதவன் 3. பிளாட்பார மனிதர்கள் – செல்வன்ஜி
4. ஜெரகண்டி – சு வி ரா 5. 14 காரட் தங்க நிப் – விட்டல் ராவ்
6. அடிவானத்து ஒளிர்வுகள் – புன்னியாமின்
7. ஓடிப்போன பின்னும் – கு முரளி 8. நதி – ஜெயமோகன்
9. பஞ்சு ஒரு புதிர் – கு முரளி 10. கோடை -சுப்ரபாரதி மணியன்
11. ஹம்பி – ஜெயமோகன் 12. இரண்டு பையன்கள் –ஆதவன்
13. கர்மயோகம் – ம ந ராமசாமி 14. பதிமூன்றுக்குப் பிறகு – காவேரி
15. பார்வை – எக்பர்ட் சச்சிதானந்தம்
16. நெருப்பு மழை பெய்தபோது – தி சு இளஞ்செழியன்
17. இழை – நிஜந்தன் 18. செத்த வீட்டில் வைத்து – ஸ்ரீகாந்த்
19. நிகழ்வு -பெ முருகன் 20. மீட்சி – வசந்தா சூர்யா
21. சவாரி – அரங்க சுந்தரராஜன் 22. கூடு – ரிஷபன்
23. குருக்களும் கோபால் பல்பொடியும் -அனாமிகா
24.பரிசோதனை – வி சி ராஜேந்திரன் 25. அளவைகள் – அனாமிகா
26. நியாயம் – விதேக முக்தன் 27. அது – மதுமிதா
28. மறுபடியும் ஒரு கொலை – ஸ்ரீகாந்த்
29. சலீம் பாயின் குதிரை வண்டி – ஜனகன்
30. காப்பாற்றப்பட்ட வார்த்தை – தினேஷ் கோஸ்வாமி
31. 645 ரூபாயின் துக்கம் – ஆ மாதவன்
32. வேப்பமரத்தை வெட்டியபோது… – ராஜி ரகுநாதன்
33. அந்த மூன்று நாட்கள் – பனசை கண்னபிரான்
34. வழி மறிச்சான் குடி – மங்கலம் கிருஷ்ணமூர்த்தி
35. வேர்கள் – ராமானுஜம் 36. கீரைக்கட்டு – தி சுதாகர்
37. இலையுதிர்காலம் – கண்ணன்
38.திரும்பத் திரும்பத் தேன்நிலவு – ஏ ஏ ஹெச் கே கோரி
39. கர்ப்பக் கிருஹம்- எஸ் எம் ஏ ராம் 40. திருத்தம் – வான்முகில்
41. பட்டஞ்சுட்டி – சுஜாதா விஜயராகவன்
42. சாடைப்பேச்சு -பி முருகேசன் 43. மனித நேயங்கள் – ஷைலஜா
44. நமக்குத்தொழில் – திலகவதி
45. அந்தக்கோடு – மங்கலம் கிருஷ்ணமூர்த்தி
46. புற்று – செம்பூர் ஜெயராஜ்
47. மணிமேகலையின் கண்ணீர் – எஸ் எம் ஏ ராம்
48.இந்தியக் கலாச்சாரம் – பி ராமானுஜம்
49. வேறு பகல் -எஸ் ராமகிருஷ்ணன்
50. தேவனுக்குரியதை தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும் – அ
எக்பர்ட் சச்சிதானந்தம்
51. படம் – க்ருஷாங்கினி 52. வீடு – ஸ்ரீகாந்த் வர்மா
53. தீ – சு கணபதி 54. அடிமைகள் – விசாலம்
55. எல்லை தாண்டா அகதிகள் -மாத்தளை சோமு
56. துரோகம் – பாவண்னன்
57. மருத்துவம் – எஸ் எல் எம் ஹனீபா 58. வழிகாட்டிகள் – கீதா நாதன்
59. வலைஞர் -களந்தை பீர்முகம்மது 60. இழைகள் -ஜே என் ஜெகந்நாதன்
61. யமுனை பெரிசா -கீதா நாதன் 62. களபலி – ச முருகானந்தம்
63. கொடி -இரா முருகன் 64. ராத்திரி வண்டி – இரா முருகன்
65. உடல் -எஸ் ராமகிருஷ்ணன் 66. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
67. ஓர் எட்டு வயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக்கவிதையும் –
நகுலன்
68. இரவாகி – இரா நடராசன்
69. மன்னவன் கோல் நோக்கி … -கொற்றவை
70. வருகை – உமா மகேஸ்வரி 71. நன்றி – மைத்ரேயி புஷ்பா
72. சொக்கன் வாக்கியம் – பாரதி பாலு
73. அது அவன் அவர்கள் – இரா நடராஜன்
74. இருள் -அருணா சண்முகம் 75. மூப்பு -ஸரஸாம்பிகா
76. நிழல் -கேத்தம்பட்டி செல்வா 77.காந்தி தரிசனம் – கி கஸ்தூரி ரங்கன்
78. நமக்காக ஒரு போஸ்ட் மார்ட்டம் – வத்ஸலா
79. புதிய வேதாளக்கதைகள் –முஸ்தபா 80. மஞ்சுளா – ராஜேஸ்வரி

கசடதபற இதழ் தொகுப்பு – இந்த இதழ் 1970 முதல் மூன்று ஆண்டுகள் வெளிவந்தது. இதன் தொகுப்பை சா கந்தசாமி தொகுத்துள்ளார். இந்த தொகுப்பை கலைஞன் பதிப்பகம் 1999 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள் ….

1. தக்கையின்மீது நான்கு கண்கள் – சா கந்தசாமி
2. குதூகலம் – அசோகமித்திரன்
3. மழைக்காக காத்திருந்தவன் – ராமகிருஷ்ணன் 4. கத்திரி – நகுலன்
5. ஜன்னல் – சுஜாதா
6.ஒரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து – க நா சுப்ரமணியம்
7. புற்றில் உறையும் பாம்புகள் – ஆர் இராஜேந்திர சோழன்
8. தவறு – மௌனி 9. வந்தது – கி ராஜநாராயணன்
10. ஜன்னல் – நா சேதுராமன் 11. வருகை – நா கிருஷ்ணமூர்த்தி
12. எதிரே ஆகாயம் – நா ஜெயராமன்
13. ஜின்னின் மணம் – நீல பத்மநாபன்
14. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
15. ஏழு பேர் – ஆர் ராஜகோபாலன் 16.தனி ஊசல் – கல்யாண்ஜி
17. வழி மயக்கம் – பாலகுமாரன் 18. காப்பு – சார்வாகன்
19.தனக்கான மந்திர உபாசனைகள் – நா சேதுராமன்

முல்லை இலக்கியக் களஞ்சியம் – 1946-47 ல் வெளிவந்த முல்லை இதழ் தொகுப்பு. பதிப்பும் தொகுப்பும் முல்லை மு பழநியப்பன். இந்த தொகுப்பை முல்லை பதிப்பகம் 2003 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்…

1. நீர் குற்றவாளியா ? – கோவை அய்யாமுத்து
2. கிரஹணம் – ரகுநாதன் 3. உரிமை – மேரா
4. நம்பிக்கை – க கணபதி
5. வென்றிலன் என்றபோதும் -ரகுநாதன் 6.அரவான் – லா ச ராமாமிர்தம்
7. அரை மனிதன் – எம் வி வெங்கட் ராம்
8.புத்திர பாக்கியம் – தார்க்கோல் 9. வீணா – லா ச ராமாமிர்தம்
10. பரோபகாரம் – வல்லிக்கன்ணன்
11. ரச விகாரம் – கு அழகிரிசாமி 12. ஜாதக விசேஷம் -கொனஷ்டை

அன்னம் விடுதூது கதைகள் என்ற தொகுப்பை கதிர் தொகுத்து அன்னம் 2004 ல் வெளியிட்டுள்ளது. இந்த இதழ் 1984-85ல் வெளிவந்தது. இதில் உள்ள கதைகள்….

1.மனுஷி – பிரபஞ்சன் 2. தாவைப் பார்த்து – கி ராஜநாராயணன்
3. சீவன் – கந்தர்வன் 4. கடைசியாகத் தெரிந்தவர் – வண்ணதாசன்
5.ரத்தமும் பாலும் – சி ஆர் ரவீந்திரன்
6. மறுக்கப்பட்டவன் – சா கந்தசாமி
7. சின்னச் சின்ன – ராம் 8.நாற்றம் – ஆ மாதவன்
9. ஆறுதல் – கார்த்திகா ராஜ்குமார் 10. தகுதி – புலேந்திரன்
11. துரோகம் -அசோகமித்திரன் 12. சிதறியபடி ரூபங்கள் -தமிழவன்
13. குதிரையேற்றம் – எம் யுவன் 14. சாளரத்தின் ஊடே – நீல பத்மநாபன்
15. கிழிசல்கள் – அருணா சண்முகம்
16. மலையேற்றம் – எஸ் வி பி வீரக்குமார்
17. கட்சி மாறிகள் – மங்கலம் கிருஷ்ணமூர்த்தி
18. சின்ன மீன்கள் – தேவிபாரதி 19.துண்டு – வேலவன்
20. ஒரு தலையாக – ராம் 21. பிரட்டுப்பெண்- எம் குருமூர்த்தி
22.கிட்டுணன்- ம காமுத்துரை 23. அர்த்தம் – சி கு இராமதாஸ்
24. ஒரு கருங்கல்லும் நாங்களும் -தர்மராஜ்
25. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதிமணியன்
26. ராஜா இல்லாத ஒரு புத்தகம் – தேவிபாரதி
27. திருப்பதி சட்டை -இராமு

சுபமங்களா இதழ் தொகுப்பு – தொகுப்பாசிரியர் இளையபாரதி. கலைஞன் பதிப்பகம் 2000ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்…

1. அவனுடைய நாட்கள் – வண்னநிலவன் 2. அடி – பூமணி
3. மழை வெயில் – வண்ணதாசன்
4.அம்முக்குட்டி என்றொரு பெண்- சிவகாமி
5. தனிமையில் ஒரு தோழமை -இன்குலாப்
6. நகர் நீங்கிய காலம் – எஸ் ராமகிருஷ்ணன்
7. எங்கள் தெருவில் ஒரு யானை – பிரபஞ்சன்
8.யந்திரத்துடைப்பான் – சுந்தர ராமசாமி
9. கருவேல மரங்கள் – சு சமுத்திரம்
10. பிம்பங்கள் – ஐசக் அருமைராஜன்
11. சுழலும் மின்விசிறி – சுரேஷ்குமார் இந்திரஜித்
12. ஆழ்வார் – இரா முருகன்
13. மனம் எனும் தோணி பற்றி -திலீப்குமார்
14.பிளாக் நம்பர் : 27 ,திர்லோக்புரி – சாருநிவேதிதா
15. பாலம் – நாஞ்சில் நாடன்
16. பற்றி எறிந்த தென்னை மரம் – தஞ்சை ப்ரகாஷ்
17. பக்கத்து அறைகள் – ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
18. வேட்கை -பெருமாள் முருகன்
19. சாயம் – அசோகமித்திரன்
20.காதல் போர் வியாபாரம் – இந்திரா பார்த்தசாரதி
21. நசுக்கம் – சோ தர்மன் 22. கோஷமற்றவர்கள் – கோமல் சுவாமிநாதன்
23. ஞானக்கூத்து – மா அரங்கநாதன் 24. ஜெயம்மா – பாவண்னன்
25. எருது கட்டு – வேல ராமமூர்த்தி 26. திருவேறு – கந்தர்வன்
27. ஆறுமுகசாமியின் ஆடுகள் – சா கந்தசாமி 28. களை – அறிவுமதி
29.வெள்ளம் – ஜெயமோகன் 30. பாலைத்தெய்வம் – நா கண்ணன்

தமிழ் சிறுகதை பிறக்கிறது என்ற நூலில் சி சு செல்லப்பா குறிப்பிடும் முக்கிய சிறுகதைகள்

1. ஆறில் ஒரு பங்கு – பாரதியார்
2. குளத்தங்கரை அரசமரம் – வ வே சு ஐயர்
3.. என்னை மன்னித்து மறந்து விடு – அ மாதவையர்
4. ஊமைச்சி காதல் – றாலி 5. மலரும் மணமும் – பி எஸ் ராமையா
6. கேதாரியின் தாயார் – கல்கி
7. தபால்கார அப்துல்காதர் – எம் எஸ் கல்யாணசுந்தரம்
8. முள்ளும் ரோஜாவும் – ந பிச்சமூர்த்தி
9. காந்திமதியின் காதலன் – கல்கி
10. நூருன்னிசா -கு ப ராஜகோபாலன்
11. ஸரஸாவின் பொம்மை -சி சு செல்லப்பா
12. வேதாளம் சொன்ன கதை – சங்கு சுப்ரமணியன்
13. சிற்பியின் நகரம் – புதுமைப்பித்தன்
14. அந்தி மந்தாரை – பெ கோ சுந்தரராஜன்
15. வேலையும் விவாகமும் – ந சிதம்பரசுப்ரமணியம்
16. பைத்தியக்காரி – தி ஜ ரங்கநாதன்
17. ஏன் – மௌனி 18. ஜ்வாலை – லா ச ராமாமிர்தம்
19. வெள்ளையின் வேட்கை – பி எம் கண்ணன்
20. பரீக்ஷை – நா சிவராமன் 21. மலடு – கே ராமசாமி
22. காரவடை சுப்பையர் – எம் என் சுப்ரமண்யன்
23. சொத்துக்குடையவன் – கி ரா 24. குமரி முனையில் – சுந்தா
25. தத்துப்பிள்ளை – எம் வி வெங்கட் ராம்
26. சாவித்திரி – க நா சுப்ரமணியம்
27. கன்யாகுமரி – த நா குமாரஸ்வாமி
28. தேவநாயகி – இளங்கோவன் 29. ராஜாஜி – தேவானை
30. புரசு பாலகிருஷ்ணன் –பெற்றோர்கள் 31. கடைசி வேட்டை – சங்கரராம்
32.கலைஞன் தியாகம் – கி வா ஜகன்னாதன்

இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு – இதன் தொகுப்பாசிரியர் கி அ சச்சிதானந்தம் . இலக்கிய வட்டம் இதழ் ஆசிரியர் க நா சுப்ரமணியம்
இலக்கிய வட்டம் இதழ் 1963 நவம்பர் முதல் ஏப்ரல் 1965 வரை வெளிவந்தது. இதில் உள்ள கதைகள் …

1. ஒரு சிறு நாடகம் – க நா சுப்ரமனியம் 2. தெரு சொன்ன கதை – நகுலன்
3. வானம் – விசும்பு – -நசிகேதன் 4. கனவுகள் – க நா சுப்ரமணியம்
5. அசுவத்தம் என்று ஒரு மரம் – டி கே துரைஸ்வாமி
6. பக்த துளசி – சுந்தர ராமசாமி
7. வருகை – கிருஷ்ணன் நம்பி 8.ஒரு பாம்புக்கதை -ஹெப்சிபா ஜேசுதாசன்
9. விட்டுக்கொடுத்தவன் – நீல பத்மநாபன்

குருஷேத்திரம் என்ற தொகுப்பை நகுலன் தொகுத்து 1968 ல் வெளிவந்தது. அதில் உள்ள கதைகள் ….

1. நான் – நீல பத்மநாபன் 2. விமோசனம் – அசோகமித்திரன்
3. உறவு, பந்தம், பாசம் – மௌனி
4. தனிமை கொண்டு – எஸ் ரங்கராஜன்(சுஜாதா)
5. உத்தரீயம் – சார்வாகன் 6. சின்னூரில் கொடியேற்றம் – சார்வாகன்
7. அத்துவான வெளி – மௌனி

ஞானரதம் இதழ் தொகுப்பு – இந்த தொகுப்பை வே சபாநாயகம் தொகுத்து உள்ளார். எனி இந்தியன் பதிப்பகம் 2007 ல் வெளியிட்டுள்ளது இந்த இதழின் தொடக்க ஆசிரியர் ஜெயகாந்தன். பதிப்பாசிரியர் -சித்திரபாரதி. 1970 ல் இருந்து 1974 வரை வெளிவந்தது. இதில் உள்ள சிறுகதைகள்…

1. செத்த பாம்பு – எம் எஸ் பி முருகேசன்
2. அயோத்தி – நகுலன் 3. காதலர் இருவர் – சந்திரமௌளி
4. வேலை – எம் சுப்ரமணியன் 5. நாய்கள் நாய்கள் – ராமகிருஷ்ணன்
6. ஓர் இவள் – கி ராஜநாராயணன் 7. குரூரம் – ம ந ராமசாமி
8. திரை – ராஜரங்கன் 9. பாடாத பாட்டெல்லாம் – வண்ணதாசன்
10. ஒரு பைலின் முடிவு – வீர வேலுச்சாமி
11. சார் ! சார் ! – அசோகமித்திரன் 12.அந்தரங்கம் – ஆ மாதவன்
13. சவம் – எஸ் டி போஸ் 14. பூவும் சந்தனமும் – ஜி நாகராஜன்
15. குடையும் மனசாட்சியும் -ந சிதம்பரசுப்ரமண்யம்
16. பன்மை – ஆர் சூடாமணி 17. பிய்க்கப்படாத சிறகுகள் – பாரவி
18. ஊமைப்பேச்சு – மா சண்முகம் 19. மூன்று நொடிக்கதைகள் – நகுலன்
20. புதுமைப்பித்தன் – கே ராமசாமி
21. முடிவுறாத நாவலின் மூன்றாம் அத்தியாயம் -ஐராவதம்
22. பல்லக்கு தூக்கிகள் – சுந்தர ராமசாமி
23. சதுரச்சிறகு – தர்மோ சிவராம்
24. ஒரு நொடிக்கதையும் ஒரு நீண்ட கதையும் – நகுலன்

” சொல்லில் அடங்காத வாழ்க்கை ” என்ற தொகுப்பை காலச்சுவடு 2008 ல் வெளியிட்டுள்ளது. காலச்சுவட்டில் வெளியான( 2000-2003) சிறுகதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு இது. தொகுப்பாசிரியர் தேவிபாரதி.

இதில் உள்ள சிறுகதைகள் ……

1. நச்சுப்பொய்கை – யுவன் சந்திரசேகர்
2. நாவல் பழ இளவரசியின் கதை – பிரபஞ்சன்
3. சத்ரு – பவா செல்லதுரை
4.பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர் – நாஞ்சில் நாடன்
5. வடு – சுமதி ரூபன்
6.ஸ்ட்ரோபரி ஜாம் போத்தலும் அபிஸீனியன் பூனையும் – அ முத்துலிங்கம்
7.சந்திப்பு -கோகுலக்கண்ணன்
8. மண்பாரம் – இமையம்
9. ஓர் இயக்கம் ஒரு கோப்பு சில கண்ணீர்த்துளிகள் – அம்பை
10. மிகு மழை – ஜே பி சாணக்யா 11. சாபம் – சல்மா
12. நாகதோஷம் – அரவிந்தன் 13.கண்காணிக்கும் மரணம் -அழகிய பெரியவன்
14. கிணற்றில் குதித்தவர்கள் – என் ஸ்ரீராம் 15. வடு – உமா மகேஸ்வரி

தொப்புள் கொடி என்ற தொகுப்பை திலகவதி தொகுத்து அம்ருதா பதிப்பகம் 2009 ல் வெளியிட்டுள்ளது. இக்கதைகள் அம்ருதா மாத இதழில் வெளிவந்தவை. இந்த தொகுப்பில் உள்ள கதைகள்…….

1. குடும்பம் – இமையம் 2. பஞ்சதாரா – பவித்ரா ஸ்ரீனிவாசன்
3. கப்பக்காரர் வீடு – சோலை சுந்தர பெருமாள் 4. பழனி -சூர்யகுமாரன்
5. கடைசி சந்தேகம் – இலா வின்செண்ட் 6. தத்தளிப்பு – வண்ணதாசன்
7. துறவி – ரமேஷ் – பிரேம் 8. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா
9. தொப்புள் கொடி – சு வேணுகோபால் 10. கையெழுத்து – பாவண்னன்
11. உயிர்த்தெழுதல் -இறையன்பு 12.சிதறல்கள் – பாமா
13. யாரை நோக – வெ இன்சுவை
14. மெஹருனிசாக்களின் வாழ்க்கை – ஜென்னத்துல் பிர்தவ்ஸ்
15. அலைகள்- நாகூர் ரூமி 16. வழக்கு – பாப்லோ அறிவுக்குயில்

சேரநாட்டு சிறுகதைகள் என்ற தொகுப்பை திருவனந்தபுரம் தமிழ் சங்கம் கேரளத்தமிழ் மாத இதழில் வெளியான கதைகளில் 22 கதைகளை தொகுத்து 2004 ல் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இதில் உள்ள கதைகள் …..

1. (அ)லட்சியம் – நீல பத்மநாபன் 2. இழப்பு – காசியபன்
3. சுரப்பு – நாஞ்சில் நாடன் 4. நிழல்கள் – நகுலன்
5. மனநிறைவு – வல்லிக்கண்ணன் 6. சினிமாவும் பூனையும் – ஆ மாதவன்
7. காலத்தின் இடைவெளி – பி மதனன்
8. பூனையும் கடுவாயும் சில சம்பவங்களும் -திருமலை (ஷண்முக சுப்பையா)
9. அணுக்கரு போற்றுதும் – நெல்லை சு முத்து 10. பூசாரி – மா நயினார்
11. அவளா சொன்னாள் – எம் கே நாதன் 12. நாணுக்குட்டன் – எம் பாலு
13. பரிசு – மங்களம் ரவீந்திரன் 14. காகங்கள் – கிரிஜா சுந்தர்
15. கங்கா ஸ்னானம் – கமலா பத்மகிரீஸ்வரன்
16. இளமை மயக்கம் – பால்ராஜ்
17. வாத்தியார் வேலை – ஆர் ஹெச் எஸ் மணி
18. இலட்சியவாதி – இராமலட்சுமி
19. காலடிப்புழை – ந மோகன்தாஸ்
20.அம்மாவாசை – இரா இராதாகிருஷ்ணன்
21. பஞ்சவர்ணம் – பாண்டிய நாடன் 22.பெண் பார்க்க வந்தவர்கள் – அசுவதி

மன ஓசைக் கதைகள் என்ற தொகுப்பை மன ஓசை இதழின் ஆசிரியர் சூரியதீபன்( பா செயப்பிரகாசம்) தொகுத்து தோழமை வெளியீடாக
2010 ல் வெளிவந்துள்ளது. இந்த இதழ் 1981 நமுதல் 1991 வரை வெளிவந்தது. இதில் உள்ள கதைகள்…..

1. கோயில் மாடு – பா செயப்பிரகாசம் 2. தண்ணீர்ப்பந்தல் – பாவண்ணன்
3. வண்டி போய்க்கொண்டு – வாணியம்பாடி ராமலிங்கம்
4. ஓதாமல் ஒரு நாளும் – தேவிபாரதி
5. இந்தியன் மோட்டார்ஸ் – சமயவேல்
6. லட்சுமி ஓடிப்போகிறாள் – வீர வேலுச்சாமி
7. எதிரெதிர் உலகம் – சேர சந்திரன் 8. மூளி மாடுகள் – சுயம்புலிங்கம்
9. நரகாசுரன் – சின்ன கேசவன் 10. தேடுதல் – செ யோகநாதன்( ஈழம்)
11. இனம் – இராகுலதாசன் 12. பறிமுதல் – எஸ் உஷா
13. ஒரு பெண்ணின் ஒரு நாள் – ஜான்சி ராணி
14. வீம்பு – நா சுப்புலட்சுமி
15. நெல்லு -ப்ரவீன்
16. நத்தம் சேரியும் ஒரு ஒற்றைப் பறையொலியும் – ஜீவா
17. நந்தனார் தெரு -விழி பா இதயவேந்தன்
18. இடம் -சுப்ரபாரதி மணியன்
19. மீசை – ப ஸ்ரீதரகணேசன்
20. தார் குளிர்ந்த நதிக்கரையில் -அறிவுமதி
21. ஏலம் –பூமணி 22. அப்புச்சியும் பேரனும் – கோவிந்தராஜ்
23. இவர்கள் வேலிகள் – துரை அறிவழகன் 24. இழிவு -சீராளன்
25. நிறப்பிரிகை – பொ முருகேசன்
26. உழுகிறவன் கணக்கு – சூரங்குடி அ முத்தானந்தம்
27. கொடுப்பினை -பெருமாள் முருகன்
28. சென்று திரும்பல் -கோகுலன் (ஈழம்) 29. பழி – அபிமானி
30. மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி
தென்னிந்திய சிறுகதைகள் என்ற தொகுப்பை கே வி ஷைலஜா தொகுத்து வம்சி பதிப்பகம் 2010 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய நான்கு மொழிக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு மொழிக்கு ஏழு கதைகள். மொத்தம் 28 கதைகள் உள்ளன. தமிழ் மொழியில் 7 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை…….

1. சத்ரு – பவா செல்லதுரை 2. ஆண்களின் படித்துறை -ஜே பி சாணக்யா
3. பட்டித்தெரு – காலபைரவன் 4. அட்சர ஆழி – மனோஜ்
5. மறையும் முகம் – எஸ் செந்தில் குமார் 6. முனி விரட்டு – என் ஸ்ரீராம்
7. காட்டின் பெருங்கனவு – சந்திரா

” காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் “என்ற தொகுப்பை
ஜா மாதவராஜ் தொகுத்து வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது. வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பில் 17 கதைகள் உள்ளன. அவை….

1. காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – எம் ரிமான் ஷெரீப்
2. இரைச்சலற்ற வீடு – ரா கிரிதரன் 3. யுகபுருஷன் – அப்பாதுரை
4. படுதா – போகன் 5. சுனை நீர் – ராகவன்
6. உயிர்க்கொடி -யாழன் ஆதி 7. அசரீரி – ஸ்ரீதர் நாராயணன்
8. பெருநகர சர்ப்பம் – நிலா ரசிகன் 9.கொடலு – ஆடு மாடு
10. கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப் பாண்டியன்
11. பம்பரம் -க பாலாசி 12. அப்ரஞ்ஜி – கே ஜே அசோக்குமார்
13.முத்துப்பிள்ளை கிணறு -லக்ஷ்மி சரவணக்குமார்
14. கல்தூண் – லதா மகன் 15. கருத்த பசு – சே குமார்
16.மரம் செடி மலை – அதிஷா 17.வார்த்தைகள்- ஹேமா

வல்லமை இணைய இதழ் நடத்திய போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் வல்லமை சிறுகதைகள் என்ற பெயரில் தாரிணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்….

1. மணவாளன் – பழமை பேசி 2. நோ – பால் – மணி ராமலிங்கம்
3.அம்மாவின் தேன்குழல் – மாதவன் இளங்கோ 4. செவ்வந்தி – பழமைபேசி
5. நம்மில் ஒருவர் – பார்வதி ராமச்சந்திரன்
6. நாலடிக்கோபுரங்கள் – ஜெயஸ்ரீ சங்கர்
7. காட்சிப்பிழை – சுதாகர்
8. கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும் -அரவிந்த் சச்சிதானந்தம்
9. ஜினா என்றொரு க்ருயெல்லா – தேமொழி

சிறகிசைத்த காலம் என்ற தொகுப்பு வே நெடுஞ்செழியன், பவா செல்லதுரை ஆகியோரால் தொகுக்க வம்சி பதிப்பகம் 2003 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள் …….

1. பிரபஞ்சன் – மரி என்கிற ஆட்டுக்குட்டி
2. பவா செல்லதுரை – வேறு வேறு மனிதர்கள், பிடி
3. தங்கர் பச்சான் – குடி முந்திரி
4. திலகவதி – பொல்லாத பிள்ளையும் போலீஸ் அதிகாரியும்
5. எஸ் ராமகிருஷ்ணன் – துன்பவியலின் மூன்று சாட்சிகள்
6. சுந்தர ராமசாமி – நாடார் சார், எங்கள் டீச்சர்
7. பாரதி கிருஷ்ணகுமார் – கல்பனா

எனக்கு பிடித்த கதைகள் என சென்ஷி பண்புடன் தளத்தில் குறிப்பிட்டிருக்கும் கதைகள்……..

1. பொய் -எழில்வரதன் 2. ஊமைச் செந்நாய் -ஜெயமோகன்
3. அவ்வா – சாரு நிவேதிதா 4. சுவர்ப்பேய் -யுவன் சந்திரசேகர்
5. சிறுமியும் வண்ணத்து பூச்சிகளும் – சுரேஷ்குமார் இந்திரஜித்
6. புவியீர்ப்பு கட்டணம் – அ முத்துலிங்கம்
7. அக்ரகாரத்தில் ஒரு பூனை -திலீப் குமார்
8.வஞ்சம் -ஆதவன் தீட்சண்யா
9. சொல்லவே முடியாத கதைகளின் கதை -ஆதவன் தீட்சண்யா
10. சிதைவு -பவா செல்லதுரை 11.மதிப்பு மிகுந்த மலர் – வல்லிக்கண்ணன்
12. உறவு, பந்தம் ,பாசம் – மௌனி 13. மறுமணம் -விந்தன்
14. அகலிகை -புதுமைப்பித்தன் 15. கிருஷ்ணன் வைத்த வீடு -வண்ணதாசன்
16. நதிக்கரையில் – ஜெயமோகன் 17. எதுக்கு சொல்றேன்னா – சார்வாகன்
18. அமெரிக்காகாரி -அ முத்துலிங்கம் 19. இடலக்குடி ராசா – நாஞ்சில் நாடன்
20. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை – பவா செல்லதுரை
21. கிணறு – குமார செல்வா 22. கோப்பம்மாள் -கோணங்கி
23. பூதக்கண்ணாடி – ஜே பி சாணக்யா 24. தினம் ஒரு பூண்டு – ஆபிதீன்
25.அபூர்வ சகோதரிகள் -பா ராகவன் 26. ஹசர் தினார் -எஸ் ராமகிருஷ்ணன்
27. குட்டிப்பிசாசு – வா மு கோமு 28. மைதானத்து மரங்கள் – கந்தர்வன்

அ முத்துலிங்கம் தனக்கு பிடித்த சிறுகதைகள் சிலவற்றை ஒரு நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார். அந்த கதைகள்…

1. கண்ணன் பெருந்தூது – அ மாதவையா
2. வெள்ளிப்பாதரசம் – இலங்கையர்கோன்
3. பள்ளம் – சுந்தர ராமசாமி 4. வலை – ஜெயமோகன்
5. இருவருக்கு போதும் – அசோகமித்திரன் 6. பொய்க்குதிரை – புதுமைப்பித்தன்
7. காடன் கண்டது -பிரமிள்

தமிழ் இலக்கியத்தில் சாதனை (1947-1964) என்ற கட்டுரையில்
வெங்கட் சாமிநாதன் குறிப்பிடும் கதைகள் ,,,

1. ரகுநாதன் – ஆனைத்தீ , வென்றிலன் என்ற போதும்
2. தி ஜானகிராமன் – மணம்
3. ஜெயகாந்தன் – பிணக்கு

ந முத்துசாமியின் புஞ்சை உலகம் -இருப்பும் பிரக்ஞையும் என்ற கட்டுரையில்
வெங்கட் சாமிநாதன் குறிப்பிடும் கதைகள்…

1. புதுமைப்பித்தன் – சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப்
பிள்ளையும்
2. லா ச ராமாமிர்தம் – பாற்கடல், ஜனனி
3. மௌனி – சாவில் பிறந்த சிருஷ்டி , பிரக்ஞை வெளியில்
4. தி ஜானகிராமன் – வேண்டாம் பூசணி , சிலிர்ப்பு
5. சுந்தர ராமசாமி – பல்லக்கு தூக்கிகள்
6. ந முத்துசாமி – நீர்மை , கற்பனை அரண், புஞ்சை என்னும்
கிராமத்தில் ஒரு பொழுது

க நா சுப்ரமண்யம் கட்டுரைகளில் சிறந்த சிறுகதைகள் எனக் குறிப்பிடும் கதைகள்…..

1. கு ப ராஜகோபாலன் – கனகாம்பரம், தாய், திரை,
பண்ணைச்செங்கான், நூருன்னிசா, விடியுமா?
2. சிதம்பர சுப்ரமணியன் – சக்ரவாகம், என்று வருவானோ
3. மௌனி – அழியாச்சுடர், பிரபஞ்சகானம்
4. புதுமைப்பித்தன் – கடவுளும் கந்தசாமி பிள்ளையும்,
சாப விமோசனம், மனக்குகை ஓவியங்கள், விநாயக சதுர்த்தி,
வேதாளம் சொன்ன கதை
5. லா ச ராமாமிர்தம் – பாற்கடல், கொட்டுமேளம்
6. வண்ணநிலவன் – எஸ்தர், பலாப்பழம்
7. கு அழகிரிசாமி – அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், திரிவேணி
8. சம்பத் – சாமியார் ஜூவுக்கு போகிறார்
9. ராஜேந்திர சோழன் – எதிர்பார்ப்புகள்
10. ந பிச்சமூர்த்தி -தாய், மீனி, விஜயதசமி, வானம்பாடி,
பதினெட்டாம் பெருக்கு, ஜம்பரும் வேஷ்டியும், காவல்,
காதல் , ஞானப்பால்

அசோகமித்திரன் “பார்வைகள் ” என்ற கட்டுரை நூலில் குறிப்பிடும் சிறுகதைகள்….

1. வ வே சு அய்யர் – குளத்தங்கரை அரசமரம்
2. புதுமைப்பித்தன் – பொன்னகரம், மகாமசானம், அன்று இரவு,
சாபவிமோசனம், கபாடபுரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
செல்லம்மாள், காஞ்சனை, சித்தி
3. க நா சுப்ரமண்யம் – வரவேற்பு, தூக்கம், மகா தியாகம், சோதனை
4. சி சு செல்லப்பா – ஸரசாவின் பொம்மை , மூடி இருந்தது, காபுலிவாலா,
பந்தயம்
5. கு ப ராஜகோபாலன் – என்ன அத்தாட்சி, இந்தத் தலைமுறை, ஆற்றாமை,
திரை, நூர் உன்னிசா
6. கல்கி – கேதாரியின் தாயார் , தேரழுந்தூர் சிவக்கொழுந்து, வீணை பவானி,
தனகோடியின் மனோரதம்
7. பி எஸ் ராமையா – கார்னிவால், ஜானகிக்காக மாத்திரமல்ல
8. மௌனி – ஏன், சாவில் பிறந்த சிருஷ்டி
9. ந பிச்சமூர்த்தி – ஜம்பரும் வேஷ்டியும், மோகினி, ரேஹால், கவி,
வெள்ளம்
10. ந சிதம்பர சுப்ரமனியன் – ரகுபதியின் அவஸ்தை, என்று வருவாளோ,
ஊர்வலத்தில்
11. பிரபஞ்சன் – மீன், பிரும்மம், விழுது

பாவண்ணன் 1995க்கு பின் வந்த இளம் எழுத்தாளர்களின் சிறந்த கதைகள்
10 ஹாட். வேர்ட் பிரஸ்.காம் தளத்தில் சிலவற்றை பட்டியலிட்டு இருக்கிறார்.
அந்த கதைகள் ….

1. சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
2. மனோஜ்குமார் – பால்
3. பா வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
4. தளவாய் சுந்தரம் – ஹிம்சை
5. கோகுலக்கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
6. பவா செல்லதுரை – வேட்டை
7. லட்சுமி மணிவண்ணன் – பூனை
8.குமார செல்வா – உக்கிலு
9. பாப்லோ அறிவுக்குயில் – இருள் தின்னி
10. க சீ சிவக்குமார் – நாற்று
11. சோ தருமன் – வலைகள்
12. யூமா வாசுகி – வேட்டை, ரத்த ஒளி

அண்மைக்கால சிறுகதைகள் என்ற கட்டுரையில் ( செம்மொழி மாநாடு சிறப்பு மலர்-2010) இமையம் குறிப்பிடும் சிறந்த கதைகள்….

1. ஜீ முருகன் – கள்ளத்துப்பாக்கிகளின் கதை
2. எஸ் ராமகிருஷ்ணன் – பி விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்
3. பெருமாள் முருகன் – வெள்ளி மீன்கள்
4. ஜெயமோகன் – ஊமைச்செந்நாய்
5. அம்பை – வற்றும் ஏரியின் மீன்கள்
6. உமா மகேஸ்வரி – ரணகள்ளி
7. அ வெண்ணிலா – பூமிக்கு சற்று மேலே
8. சு தமிழ்ச்செல்வி – சாமுண்டி
9. தேன்மொழி – கடல்கோள்
10. கிருஷாங்கினி – வெள்ளை யானையும் குளிர்சாதனப் பெட்டியும்
11. ஆண்டாள் பிரியதர்ஷினி – கழிவு
12. தமயந்தி – மழையும் தொலைவும்
13. சந்திரா – பூனைகள் இல்லாத வீடு
14. பாமா – எகத்தாளம்
15. விழி பா இதயவேந்தன் – பறை
16. மு ஹரிகிருஷ்ணன் – பாதரவு
17. ப சிவகாமி – நாளும் தொடரும்
18. அழகிய பெரியவன் – களி
19. அபிமானி – முரண்
20. சோ தருமன் – தழும்பு
21. அன்பாதவன் – சர்டிபிகேட்
22. ஆதவன் தீட்சண்யா – கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்
23. புகழ் – உறமுறை 24. அமலநாயகம் – ஓட்ட மண்டயன்
25. கண்மணி குணசேகரன் – சாட்டை 26. தேவி பாரதி – பிறகொரு இரவு

எம் கே முருகானந்தன் எழுதிய கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர் கதைக்குருவிகள் …. என்ற கட்டுரையில் குறிப்பிடும் ஈழத்து சிறுகதைகள்……

1. ஆனந்தன் – தண்ணீர்த் தாகம்
2. இலங்கையர்கோன் – வெள்ளிப்பாதரசம்
3. சம்பந்தன் – துறவி 4. சி வைத்தியலிங்கம் – பாற்கஞ்சி
5. கனகசெந்திநாதன் – ஒரு பிடி சோறு 6. வ அ இராசரத்தினம் – தோணி
7. ஈழத்து சோமு – நிலவோ நெருப்போ 8. சோமகாந்தன் – ஆகுதி
9. கே டானியல் – தண்ணீர் 10. என் கே ரகுநாதன் — போர்வை
11. நீர்வை பொன்னையன் – சங்கமம்
12. நேற்றைய அடிமைகள் – செ யோகநாதன்
13. உமா வரதராஜன் – அரசனின் வருகை 14. ரஞ்சகுமார் – கோசலை
15. எஸ் எல் எம் ஹனீபா – மக்கத்து சால்வை

நகரத்தின் சிலவடிவங்கள் என்ற தொகுப்பை ஆர் ரவிச்சந்திரன் தொகுத்து புதுப்புனல் 2008 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள் பன்முகம் காலாண்டிதழில் வெளிவந்தவை.இதில் உள்ள கதைகள்…

1. கனவை வரைந்து பார்த்த கனவியல்வாதி – எச் முஜீப் ரஹ்மான்
2. இருவர் – ரமேஷ் – பிரேம் 3. பயம் – ரமேஷ் -பிரேம்
4. ராமசேஷன் என்ற எனது நண்பர் – சொ பிரபாகரன்
5. ஒரு கடிதம் – சொ பிரபாகரன்
6.ஐந்து குறுக்குவெட்டு தோற்றங்கள் -சொ பிரபாகரன் 6. குரல் – கீரா
7. திருப்பாதங்களுக்கு சமர்ப்பணம் – நாகரத்தினம் கிருஷ்ணா
8. நகரத்தின் சில வடிவங்கள் – ந பாலமுருகன்
9. சாவி – ம பாலகுருசாமி
10. எதிர்நோக்கு – இராகவன் 11. சராசரி – சிவதாணு
12.மதிப்புரையின் மறுபக்கம் – அநாமிகா
13. பதில் இல்லாத மூன்று கேள்விகள் – எஸ் செந்தில்குமார்

“சிசிஃபஸ் ” என்ற தொகுப்பை ஆர் ரவிச்சந்திரன் தொகுத்து புதுப்புனல் 2009 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள் பன்முகம் காலாண்டிதழில் வெளிவந்தவை.இதில் உள்ள கதைகள்…

1. இழந்துபோன நூல்(அ) ஐந்து பூ கதை -தமிழவன்
2. பறவைகள் – பாவண்ணன் 3. சிசிஃபஸ் – எம் ஜி சுரேஷ்
4. நிகாமாவின் கண்ணீர் – எம் ஜி சுரேஷ் 5. செய்திகள் – எம் ஜி சுரேஷ்
6. இப்படிக்கு உன் தங்கை -சதாரா மாலதி
7. அருங்காட்சியகம் – அநாமிகா 8. இடுக்கு -சுப்ரபாரதி மணியன்
9. வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது -அரவிந்த பாரதி
10. கூத்து – வெ வெங்கடாசலம் 11. மூளைக்காய்ச்சல் – பா செயப்பிரகாசம்
12. வாழ்க்கையின் அர்த்தம் சார்ந்த ஒரு புரிதலை நோக்கி –
நஞ்சுண்டார்க்கினியன்
13. அந்த வெற்றுக்காகிதமே – நஞ்சுண்டார்க்கினியன்
14. தேனூத்து கதிரேசன் – ஆனந்து
15. தேவகுமாரர்களுக்கு சாத்தான் தீர்ப்பு சொல்லியது – பா வெங்கடேசன்
16. கதை எழுதுவோருக்கு ஒரு நற்செய்தி – இராகவன்
17. லெச்சுமி – கீரா மூர்த்தி
18. பைபிள் வகுப்பின் கடைசி தினம் – ஜான் பாபுராஜ்
19. அழகான பொருள் அனைத்தும் எப்போதும் மகிழ்வுக்கு உரியதாகும் –
தினகரன் ஜெய்
20. இரவின் தனிமையில் மரணம் பற்றிய முதல் வதந்தி – தினகரன் ஜெய்

“யாரவன் ” என்ற தொகுப்பை ஆர் ரவிச்சந்திரன் தொகுத்து புதுப்புனல் 2014 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள் புதுப்புனல் இதழில் வெளிவந்தவை. இதில் உள்ள கதைகள்…

1. ம தவசி – 1. காற்றிலாடும் நெத்து, 2.பொய்யா சயனம், 3. யாரவன்
2. செம்பை முருகானந்தம் – 1. ஊதியம் உயிர்க்கு , 2. தேவை பிழைப்பு? வாழ்வு
3. வசந்த தீபன் – 1.ஊழிக்காற்று , 2.காவு
4. இல சைலபதி – துஷ்டி
5. வேரற்கேணியன் (யாழ்ப்பாணம்) – 1. யாரோ வைத்த தீயில் …. ,
2. வாழ்ந்து காட்டுகிறேன்
6. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் – உணர்வு
7. பொ செந்திலரசு – வெத நெல்லு
8. பாரவி – அலை
9. கரசூர் பத்மபாரதி – 1. திண்ணை 2. பனிக்குடம்
10. தேவராஜ் – அம்மா வாழ்ந்த வீடு
11. அர்ஷியா – பூஜான்
12. டாக்டர் நடேசன் (ஆஸ்திரேலியா) – மனக்கோலம்
13. சு பிரசன்ன கிருஷ்ணன் – தொலைந்து போனவர்கள்

“சிக்கிமுக்கி சிறுகதைகள்” என்ற தொகுப்பை தாரா கணேசன் தொகுத்து புதுமைப்பித்தன் நூலகம் 2010 ல் வெளியிட்டுள்ளது. சிக்கிமுக்கி.காம் என்ற மின்னிதழில் வெளிவந்த சிறந்த சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள கதைகள்…

1. பெரியவர்களுக்குப் புரியாது – பிரபஞ்சன்
2. ஒரு கூழாங்கல் – வண்ணதாசன்
3. உப்புக் கிணறு – நாஞ்சில் நாடன் 4. திரும்புதல் – சமயவேல்
5. முட்டையிடும் குதிரைகளின் நகரம் ….. லக்ஷ்மி சரவணக்குமார்
6. விதை விதி – உமா மகேஸ்வரி
7. மாறு கண்கள் கொண்ட ஒரு பெண்ணின் சுயசரிதை – அய்யப்ப மாதவன்
8.அதிகாலைத் தற்கொலையின் கதை – எஸ் செந்தில்குமார்
9. ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம் – அஜயன் பாலா
10. நரிகளால் நிரம்பிய ஊர் – ம தவசி 11. சூர்யக்குடை – தாரா கணேசன்
12.நிழலுக்குள் புகுந்த தனிமை – உமா ஷக்தி
13. அடைபடும் காற்று – விஜய் மகேந்திரன்

இந்த கட்டுரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.இந்த கட்டுரையில் 1287 கதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த 5 கட்டுரைகள் மூலம் 4000 க்கும் அதிகமான சிறுகதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் பல்வேறு தொகுப்புகள் மூலமும், பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளாகவும் கிடைத்துள்ளன. அனைத்து தொகுப்புக்களும் அதில் உள்ள கதைகளின் பட்டியலோடு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தொகுப்பின் தொகுப்பாசிரியர், தொகுப்பு வெளியான ஆண்டு, அந்த தொகுப்பை வெளியிட்ட பதிப்பகம் போன்ற தகவல்கள் அனைத்தும்
கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான தொகுப்புக்கள் இப்போதும் கிடைக்கின்றன. ஈழத்து சிறுகதைகள் பற்றி கிடைத்த தொகுப்புகள்
இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. மலேசிய சிறுகதைகளின் தொகுப்பும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள சிறுகதைகள் சிறந்த சிறுகதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த தொடர் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுப்புக்களை வாங்க அதிக நாட்கள் ஆனதால் இந்த கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதமுடியவில்லை. இவ்வளவு தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன என்பதே இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்த பிறகு தான் தெரியவந்தது. இன்னும் சில விடுபட்டு இருக்கலாம். அவற்றை குறிப்பிட்டால் அவற்றை ஆய்வில் சேர்க்க உதவியாக இருக்கும். அடுத்த கட்டுரையில் சிறந்த கதைகள் எவை என்பதை பார்க்கலாம்.

Email :- enselvaraju@gmail.com

Series Navigationதொடுவானம் 81. ஓலைச்சுவடியில் ஒளிந்திருந்த தமிழ்கழுதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *