இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கலைஞரைப் பிடிக்காதவர்களும், திராவிட இயக்கத்தின் மீது பற்று இல்லாதவர்களும் கலைஞரை பலவாறு விமர்சனம் செய்வது கண்கூடு. இது அரசியல். ஆனால் அதற்காக அவருடைய சாதனைகளை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்? அவர் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றியுள்ள சேவைகளை யாராவது மறுக்க முடியுமா? அப்படியே மறுத்தாலும் அவரால் எழுதப்பட்ட நூல்களை நாம் மறந்துபோக முடியுமா? அல்லது அவற்றை தடைசெய்துவிட முடியுமா?
நான் இப்படி ஏன் எழுதுகிறேன் என்றால் ஒருவரால் செய்யப்பட்ட நல்ல காரியங்களை நாம் பாராட்டும் பண்புமிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக. அதை விடுத்து அவற்றைக் காழ்ப்புணர்ச்சியில் அழிக்க முற்படுவது மனிதத்தன்மையற்ற அரக்கத்தணாமான செயலாகும்.
பூம்புகார் பற்றி எழுதும்போது ஏன் இந்த ஆவேசம் என்று நீங்கள் கேட்கலாம். நான் சமீபத்தில் பூம்புகார் சென்று அங்கு கண்ட அவலங்கலால்தான் மனம் வெதும்பிய நிலையில் இதை எழுதுகிறேன்.
அவலங்கள் என்பதோடு அலங்கோலம் என்பதுதான் பொருந்தும். நுழைவாயிலிலேயே ஓர் ஒழுங்கில்லை. சுத்தம் சுகாதாரம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. உள்ளே நுழைந்ததும் எதுவுமே பராமரிக்கப்படாத நிலை. மக்கள் கூட்டமோ, சுற்றுலா பயணிகள் கூட்டமோ அதிகம் இல்லாத வெறிச்சோடிய பரிதாப நிலை.
போகும் வழியில் குப்பைகள். கூட்டி பலநாட்கள் ஆகியிருக்கலாம். சாயம் அடிக்காமல் மங்கிப்போன நிலையில் நினைவுச் சின்னங்கள். தனியே விடப்பட்ட கலைக்கூடம். நான் முன்பே அது பொலிவுடன் திகழ்ந்த காலத்தில் பார்த்திருந்ததால் இத்தகைய பொலிவற்ற நிலையில் காண உள்ளே செல்லவில்லை. அதற்கு மாறாக சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் கடலை நோக்கி நடந்தேன்.
குளிர்ந்த கடல் காற்று வீசும் என்று சென்றபோது குடலைக் கலக்கும் துர்நாற்ற வாடையே என்னைத் தாக்கியது! எப்போது பூம்புகார் கடற்கரை இப்படி நாற்றமெடுக்கும் சாக்கடையானது என்ற கவலையுடன் கண்ணகி கோட்டம் நோக்கிச சென்றேன அங்கு போகும் அலங்கோல வீதியின் இருபுறமும் கருவாடு விற்பனைக் கடைகள் நிறைந்திருந்தன! எனக்கு ஆச்சரியம்!
உலகில் இதுபோன்ற நினைவுச் சின்னம் எழுப்பியுள்ள எந்த நாட்டிலும் இத்தகைய கேவலமான நிலையைக் காண முடியாது! அதை இங்குதான் காணமுடிந்தது. அதிலும் தமிழகத்தில் கரிகால் மன்னன்கூட ஆண்டதாகக் கூறப்படும் சோழநாட்டின் துறைமுகப் பட்டினம் இருந்ததாகக் கூறப்படும் பூம்புகாரில்தான் காணமுடிந்தது.உலகப் புகழ் பெற்றுவிட்ட சிலப்பதிகாரம் வர்ணித்துள்ள பூம்புகாரில்தான் இதைக் காணமுடிந்தது!
துர்நாற்றம் மூக்கைத் துளைத்த நிலையில் கைக்குட்டையால் மூடிக்கொண்டு கண்ணகிக் கோட்டம் சென்றேன். அதுகூட பராமரிக்கப்படாமல் பார்பதற்கு ஆட்கள் வராத நிலையில் வெறிச்சோடிதான் நின்றது. அங்கெ ஓர் இளம் காதல் ஜோடிகள் அந்த ” மனோகரமான ” மணக்கும் சூழலில் காதல் மொழி பேசி கொஞ்சிக்கொண்டிருப்பது தெரிந்தது! காதலுக்குக் கண்ணில்லை, காதில்லை என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். காதலுக்கு மூக்கும் இல்லை என்பதை அங்குதான் நான் தெரிந்துகொண்டேன்!
அங்கு காணப்பட்ட ஒருசிலரிடம் ஏன் அந்த இடம் அப்படி கேட்பாரற்று கிடக்கிறது என்று வினவினேன். அதற்கு அவர்கள் அந்த பூம்புகார் கடற்கரைப் பகுதியை இன்றைய தமிழக அரசு கருவாடு வியாபாரிகளுக்கு குத்தகை விட்டுவிட்டதாகக் கூறினார்கள். அது கலைஞர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதால் தற்போதைய ஆட்சி அப்படி செய்துவிட்டது என்றும் கூறினார்கள்! அதோடு அங்கு அதிக நேரம் கழிக்கமுடியாத நிலையில் வெளியேறினேன்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஓர் எல்லை கிடையாதா? இந்த அவலத்துக்கு அடிமையானது பூம்புகார் மட்டுமல்ல. கன்னியாகுமரிக் கடலில் கலைஞரால் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கும் இதே நிலைதானாம். அங்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லையாம். இதே நிலைதான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கும், கலைஞர் ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய சட்டமன்ற கட்டிடத்துக்கும் உண்டாகியுள்ளது.
இதுபோன்ற கொடுங்கோல்தனமாக, ஆட்சிக்கு வருவோரெல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் கலையும் கலாச்சாரமும் என்னாவது?
சர்வாதிகாரி ஹிட்லரைவிடவா இவர்கள் கொடுங்கோலர்கள்? இவர்களைப் பார்க்கும்போது அந்த ஹிட்லர் எவ்வளவோ மேல் என்று எண்ணத்தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரின் உற்ச கட்டத்தின்போது ஜெர்மன் படைகள் பாரிஸ் நகரைக் கைப்பற்றி அதனுள் புகுந்துகொண்டிருந்த வேளை. நகரம் குண்டு வீச்சால் தாக்கப்படுவதற்கு முன்னர் ஹிட்லர் அவகளுக்கு இட்ட அவசரக் கட்டளை என்ன தெரியுமா? ” பாரிஸ் நகரின் எழில்மிகு கட்டிடங்களுக்கும், கலைக்கூடங்களுக்கும் எவ்வித சேதமும் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ” என்பதே!
( தொடுவானம் தொடரும் )
- பண்டமாற்று
- பொன்னியின் செல்வன் படக்கதை 5
- அவன், அவள். அது…! -2
- தோற்றம்
- மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்
- 2015 செப்டம்பர் 16 ஆம் தேதி சில்லியில் நேர்ந்த 8.3 ரிக்டர் பூகம்பத்தில் சிறிய சுனாமி, சிதைவுகள், மக்கள் மரணம்.
- எஸ்.வைதீஸ்வரனின் நகரச் சுவர்கள் கவிதைத் தொகுதி பற்றி எழுதிய மதிப்புரை (– நவீன விருட்சம் 1995).
- அரிமா விருதுகள் 2015
- சாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி
- பணிமனையில் ஒரு பயணம் [கண்மணி குணசேகரனின் நாவல் “ நெடுஞ்சாலை “ யை முன்வைத்து]
- சுந்தரி காண்டம் 6. சர்வலங்கார பூஷணி சுந்தரி
- தூ…து
- கனவு இலக்கிய வட்டம்
- திருப்பூர் : மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட
- வானம்பாடிகளும் ஞானியும் (2)
- தொடுவானம் 86. கருவாட்டுச் சந்தையான கலைக்கூடம்.