வே.ம.அருச்சுணன் – மலேசியா
தைப்பூசம் 2016 கோலாலம்பூர்,ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்களின் தலைமையில் பத்துமலைத் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்ததுள்ளது.இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கும் அவருக்கு இவ்வேளயில் நமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்வோம். அவரது பணி தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இனிதே அமைய வாழ்த்துவோம்.
இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு தரப்புகளின் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.குறிப்பாக தைப்பூசத் திருவிழா தொடங்கிய நாள் முதல் அவ்விழா இனிதே முடியும் வரையில் தங்கு தடையின்றி எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கி காவல் துறையினரின் அரிய பணிகளைப் பாராட்டியே ஆக வேண்டும்.
இந்து பெருமக்களின் இப்பெருவிழாவுக்கு,அரசாங்கம் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் உதவிகளுக்கும் நாட்டுப் பிரதமர் நஜீப் அவர்களுக்கு இந்திய சமுதாயம் நன்றி கூற கடமை பட்டுள்ளது.பிரதமருக்கு நமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வோம்.
தைப்பூசத்திருவிழா தொடங்குவதற்கு முன்,மலேசிய இந்து சங்கம் வழங்கிய ஆலோசனைகளால் பக்தர்கள் நெறி தவறாமல் தங்களின் நேர்த்திக்கடன்களைச் செய்வதற்குப் பேருதவியாக இருந்தது.இவ்வேளையில் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஷான் அவர்களுக்கு நமது நன்றியைப் புலப்படுத்திக் கொள்வோம். மேலும் சமநெறிகளுக்குப் புறம்பாக நடக்கும் பக்தர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும்படி இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறோம்.சமயத்திற்கு மாசு கற்பிக்கும் வகையில் சமயத்திற்குப் பொருத்தமில்லாதக் காவடிகளை அத்துமீறி எடுக்கும் நடவடிக்கைகளை முற்றாய் முறியடிக்கும் நடவடிக்கைகளில் சங்கம் தீவிரம் காட்டும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.தவறான அணுகுமுறைகளை எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் மேற்கொள்ளாமல் இருப்பதற்குச் சங்கம் உதவ வேண்டும்.
தைப்பூசத்திருநாளில் வருகை தந்த பல பக்தர்கள் பாராட்டும் வகையில் மிகவும் சிறப்பான முறையில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதைப் பாராட்டலாம். தைப்பூச விழா தொடங்கியதிலிருந்து முடியும் வரையில் விழாக்கோலம் பூண்ட பத்துமலைத்திருத்தலத்தில் பக்திப் பரவசத்துடன் கூடிய பல இலட்சம் பக்தர்கள் பொறுப்புடன் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
பசித்த பக்தர்களுக்கு உண்ண உணவு கொடுத்தும்,பக்தர்களின் தாகம் தீர்த்த தண்ணீர் பந்தல் நடத்துனர்களும் நமது நன்றிக்குரியவர்கள்.பல வருடங்களாகப் பக்தர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வரும் வள்ளலார் மன்றத்தைப் பாராட்ட வேண்டும்.பல இலட்சம் பக்தர்களுக்கு இன்முகத்துடன் இருக்கையில் அமர வைத்து உணவு பரிமாறியது வியப்பாக உள்ளது.
சுத்தமான சூழலில் அவர்கள் பக்தர்களுக்கு உணவழித்தது சிறப்பானது. அங்கு தொண்டுழியர்களாகப் பணிபுரிந்த பல இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பக்தர்களுக்கு உணவு பரிமாறியது இன ஒற்றுமைக்கு வழிகோலியது.பத்துமலைக் கவிஞர் ஏ.ஆர்.சுப்ரமணியம் அறிவிப்பு பணிகளூடே பத்துமலை வேல் முருகனின் புகழ்பாடும் கவிதைகள் பலவற்றை அரங்கேற்றி பக்தர்களை மனம் குளிரச்செய்தார். வாழ்க கவிஞரே.
பத்துமலைத் தைப்பூசத்தின் போது கண்ட இடங்களில் குப்பைகளை போடாதிருக்க பல இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது வரவேற்கத்தக்கது எனினும் பல பக்தர்கள்கண்ட இடங்களில் குப்பைகளை வீசி எறிந்தது வருத்தத்தைத் தருகிறது.இயன்றவரையில் குப்பைகளைத் தொட்டிகளில் போடாமல் சுயமாய்த் தாங்கள் கொண்டுவரும் பைகளில் குப்பைகளைச் சேர்த்து வைப்பது சிறப்பானது.குப்பைத் தொட்டிகள் இருப்பதற்காக வேண்டுமென்றே அதில் குப்பைகளைப் போடும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
பல இனமக்களிடையே வாழ்கின்ற நிலையில் நமது சமயத்தை வளர்ப்பதற் இந்நாட்டின் சட்டவிதிகள் நமக்குச் சாதகமாக இருந்தாலும் பிற இன மக்களின் சமய நம்பிக்கைகளையும் கருத்தில் கொண்டு நமது சமயத்தை வளர்ப்பது அவசியமாகும். இதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளதை, அண்மையில் இனிதே நடந்து முடிந்த தைப்பூசத்திருவிழா இதனை நமக்குப் புலப்படுத்துகிறது.
இங்கு ஒரு சமயத்தில் மலாய்,சீன,தமிழர்கள் என மூன்று இனத்தவர்களே முக்கியமாக இருந்தனர்.நம்மிடையே புரிந்துணர்வும் சகோதரத்துவமும் குறைவின்றி இருந்தன.ஆனால்,இன்று நிலைமை மாறியுள்ளதை அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியமும்அவசரமும் ஆகும். .உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள மக்கள் பல்வேறு மதங்களையும் கலாசாரங்களையும் கொண்டவர்கள். நமது வாழ்க்கை பின்னணியிலிருந்து அவர்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்கை நெறிகளையும் கலை கலாசாரங்களையும் கொண்டவர்கள்.இந்நாட்டில், இன்று இந்தியர்களின் எண்ணிக்கையை விட வேற்று நாட்டு மக்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.இந்நிலை உணர்ந்து நாம் அனைவரும் மலேசிய இந்தியர்கள் எனும் வகையில் நமது வாழ்க்கை முறைகள் என்றும் சிறப்பாக அமைவதை மலேசியத்தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல் படுவதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து இங்கு பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் நமது சகோதர்கள் முகம் சுளிக்கும் நிலையில் நமது நடவடிக்கைகள் அமையாமலிருப்பது அவசியமாகும்.தமிழ்க்கடவுள் திருமுகன் பேசிய தெய்வ மொழியை அதன் இனிமை குன்றாமல் நாம் தமிழர்களிடையே பிறமொழி கலப்பின்றி பிழை இல்லாமல் நல்ல தமிழிலே பேசும் போது நமது மொழியைக் காக்கின்ற பெருமையை நாம் பெறலாம் அல்லவா?
தைப்பூசத்திருநாளில் அனைவரும் தமிழிலேயே பேசும் வழக்கத்தைக் கொண்டால், இந்நாட்டில் தமிழிலே பேசுவோம் என்ற இயக்கத்தை நடத்திவரும் தலைநகர் க.கண்ணன் போன்ற மொழிப் போராட்டவாதிகளின் நடவடிக்கைகளுக்கு முருகபக்தர்கள் அனைவரும் கைகொடுப்பதன் மூலம் அவர்களின் போராட்டம் வெற்றி பெறுவதுடன் தமிழ்மொழி இந்நாட்டில் தொடர்ந்து வளர்வதற்கும் வாழ்வதற்கும் வழிவகுக்கும் அல்லவா?
இந்நிலையில் நமது சமய நம்பிக்கைக்கும், கலை கலாசாரங்களுக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் நமது பக்தர்கள் நடந்து கொள்வது முறையன்று. பிற மதத்தினர் நம்மை ஏளனப் பார்வையுடன் பார்க்கும் நிலையில் வகையில் நமது நடவடிக்கைகள் கண்ணியத்துடன் அமைவதே சிறப்பாகும்.
அடுத்த ஆண்டு சிறந்த தைப்பூசத் திருவிழாவைக் காண நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் வாரீர்.
முற்றும்
- ஆட்டோ ஓட்டி
- காக்கைக்குப் பிடிபட்டது
- ’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….
- அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!
- பிளந்தாயிற்று
- விசாரணை
- பெங்களூர் நாட்கள்
- கருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறு
- பிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்
- விஜயதாரகை அறிமுகம் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்
- ஆண் பாவங்கள்
- வாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பகிர்வு அவசியம்! – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
- குப்பையும் சாக்கடையும் துணை!
- புரட்சித்தாய்
- பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்
- தைப்பூசமும் சன்மார்க்கமும்
- தொடுவானம் 107. அவள் பறந்து போனாளே!
- முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு – 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை