தொடுவானம் 112. திராவிட நாடு திராவிடருக்கே!

This entry is part 8 of 14 in the series 20 மார்ச் 2016

அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை அந்த ராஜ்ய சபை உறுப்பினர்களுக்குப் புதுமையாக இருந்திருக்கும். அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். காரணம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக மக்கள்தான் அதுவரை அறிந்திருப்பார்கள். திராவிட ஏடுகளைப் படித்தவர்கள் மட்டுமே அதுபற்றி அதிகம் தெரிந்திருப்பார்கள். பாமர மக்கள் அது பற்றி மேடைகளில்தான் கேட்டிருப்பார்கள். பலருக்கு அதன் உண்மையான பொருள் தெரிந்திருக்க வாயிப்பில்லை. திராவிடர் இயக்கத்திற்கு எதிரானவர்கள் அதை ஒரு மாயை என்று கூறினர்.

திராவிட நாடு என்பது இருந்ததில்லைதான். அப்படிப் பார்த்தால் இந்தியா என்ற ஒரு நாடும் இல்லாமல்தான் இருந்தது.இந்தியா முழுதும் ஒரே ஆட்சிக்குள் அசோகர் காலத்தில்தான்  ஆளப்பட்டுள்ளது. முகலாயர்கள் இந்தியாவை இந்துஸ்தான் என்று கூறி ஆண்டுள்ளனர் அதன்பின்பு ஆங்கிலேயர்கள் கைவசம் வந்தபின்புதான் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதை ” பிரிட்டிஸ் இந்தியா ” என்று அழைத்தனர்.

          இந்தியா என்ற பெயரை இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அறிந்திருக்கவில்லை. அதை இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குச் சூட்டவில்லை. இந்தியா என்பது சிந்து நதியிலிருந்து மருவிய ஒரு சொல். உலகின் மிக உயரமான இமயமலையிலிருந்து சிந்து நதியும் கங்கை நதியும் தோன்றி முறையே காஷ்மீர் பள்ளத்தாக்கின் வழியாகவும், நெப்பாள பள்ளத்தாக்கின் வழியாகவும் சமபூமியில் ஓடி கடலில் கலக்கின்றன. இவற்றில் பாகிஸ்தான் வழியாக ஓடிய சிந்து நதியால்தான் சிந்து பள்ளத்தாக்கு நாகரீகம் தோன்றியது. அங்குதான் இந்தியா என்ற பெயரும் உருவானது. அப்போது அங்கு வாழ்ந்த மக்கள்  அதை  சிந்து நதி என்று அழைத்தனர். அங்கு வந்த பாரசீகர்களால் ” சி ” என்பதை உச்சரிக்க முடியாமல் சிந்து என்பதற்குப்  பதிலாக ஹிந்து என்று அழைத்தனர்.பாரசீகத்திலிருந்து அந்த பெயர் கிரேக்க நாடு சென்றது. அதன்பின் சிந்து நதிக்கு அப்பால் உள்ள நாட்டை ஹிந்து என்றே அழைத்தனர்.அதன்பின் முகலாயர்களின் படையெடுப்பின்போது பாரசீகர்கள் அழைத்த ஹிந்து என்ற பெயர் ஹிந்துஸ்தான் ஆனது. ஹிந்துஸ்தானில் வாழ்ந்த மக்கள் ஹிந்து என்று அழைக்கப்பட்டனர்.கி. மு. ஐந்தாம் நுற்றாண்டில் பாரசீக மன்னன் டேரியஸ் காலத்தில் இந்தப் பகுதி அவர்களால் ஆளப்பட்டபோது இது ஹிண்டூஸ் ஆகியது.இது கிரேக்க நாட்டில் இந்தொஸ் ஆனது. அதன்பின் இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கர்களால் இது இந்தியா ஆனது.

திராவிடர் என்ற சொல்லை முதன்முதலாகக் கூறியவர் கால்டுவெல் என்னும் மேல்நாட்டு மிஷனரி ஆவர். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னாட்டு மொழிகளைக் கற்றறிந்து, அவற்றை திராவிட மொழிகள் என்றார். இவை வடமொழி கலப்பின்றி தொன்றுதொட்டே தனித்தியங்கி வருபவை என்றார். திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலம் தமிழ்தான் என்றார். இது ஆராய்ச்சிப்பூர்வமான உண்மை என்றாலும், இதை மற்ற மாநிலத்தவர் அவ்வளவு ஆர்வத்துடன் ஏற்றதாகத் தெரியவில்லை.

ஆனால் தந்தை பெரியார் இதை வைத்து தென்னாட்டவர் அனைவரும் திராவிட இனத்தவர் என்றார். திராவிடர் கழகம் அமைத்தார். அதன் பிறகுதான் திராவிடர் என்ற பெயர் தமிழகத்தில் பிரபலமானது. இது மற்ற தென் மாநிலங்களில் பிரபலம் ஆகவில்லை. திராவிட இயக்கத்தைத் துவங்கியவர்கள் மற்ற மாநிலங்களில் கவனம் செலுத்தாமல் போனது பெருங்குறையே.

இது போததென்று மற்றொரு புதிய கண்டுபிடிப்பும் ஆங்கிலேயரின் ஆட்சியின்போது வெளியானது. அது சிந்து வெளிப் பள்ளத்தாக்கில் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு. இன்றைய பஞ்சாப், பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள ஹாரப்பா, மொஹஞ்சந்தாரோ என்னும் பகுதிகளில் நடந்த அந்த ஆராய்ச்சிகளில் மண்ணுக்கடியில் புதைந்துபோன ஒரு பழம்பெரும் நாகரிகம் இருந்துள்ளதாகக்  கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கிடைத்த உடைந்த மண் பாத்திரங்களில் சில சின்னங்களும், இலச்சினைகளும், சித்திர வடிவிலான எழுத்துக்களும் கிடைத்தன. அவற்றை ஆராய்ந்த ஹீராசு பாதிரியார் அவை திராவிட எழுத்துகள் என்றும் அதிலும் குறிப்பாக அவை பழைய தமிழ் எழுத்துகள் என்பதையும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்றும் அது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்றும் நிர்ணயம் செய்தார்.

தந்தை பெரியார் ஒரு ஆராய்ச்சியாளர் இல்லைதான். ஆனால் எதையும் பகுத்தறிவுடன் பார்க்கும் தன்மையவர். இந்த இரண்டு கண்டுபிடிப்புகளையும் வைத்து அவர் திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வீக குடிமக்கள் என்பதை ஆணித்தரமாகக் கூறவும் எழுதவும் மேடைகளில் பேசவும் செய்தார். அப்படிக் கூறும்போது வடநாட்டினர் அனைவரும் வந்தேறிகள்தான் என்றும் கூறலானார். அதோடு திராவிட நாகரிகத்தை அழித்தவர்கள் கைபர் கனவாய் வழியாக வந்த ஆரியர்கள் என்றார். அவர்கள் வடக்கே குடி புகுந்ததால் திராவிடர்கள் தெற்கே தள்ளப்பட்டனர் என்றும் விளக்கம் கூறினார். இது நடந்து பல நூற்ற்றண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அப்படி வந்த ஆரியர்கள் இன்னும் அரியாசனத்தில் ( அரசாங்க உயர் பதவிகளில் ) அமர்ந்துகொண்டு திராவிடர்களை அடிமையாக்கி வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். அப்படி அவர்கள் செய்வதற்கு அவர்கள் கொண்டுவந்த மதத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தாங்களே கடவுளின் நெற்றியிலிருந்து வந்த கடவுளின் புதல்வர்கள் என்றும், தாங்களே மந்திரங்களை ஓதும் உரிமையுடைவர்கள் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றி நம்ப வைத்தனர். அதே தந்திரத்தைக் கையாண்டு சமூகத்தின் உயர்ந்த நிலையில் தங்களைத் தக்கவைதுக்கொண்டனர். அதோடு நில்லாமல் தாங்கள் கொண்டு வந்த வேதங்களின்படி மக்கள் நான்கு வகையான சாதியின் அடிப்படையில்தான் வாழவேண்டும் என்று சொல்லி பிராமணர் அல்லாதவர் அனைவரையும் சூத்திரர்கள் என்று தாழ்த்தி வைத்தனர். காலப்போக்கில் இந்த சாதிப் பிரிவினைகள் தீவிரமாகி மக்களுக்குள் ஒற்றுமை அடியோடு அழிந்துபோனது. இதுபோன்ற கருத்துகளை தந்தை பெரியார் மிகுந்த துணிச்சலுடன் பிராமணர்களுக்கு எதிராகவே பிரச்சாரம் செய்தார்.

பேசும் மொழியாலும், ஜாதிப் பெயரால் செய்யும் தொழிலாலும், பிளவுபட்டுக்கிடந்த மக்களை ஆயுத பலத்தால் எளிதில் அடிமையாக்கி ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டனர். அவர்களையும் தங்களுக்குச் சாதகமாகப் படன்படுத்திக்கொண்டனர் பிராமணர்கள். ஆங்கில அரசின் முக்கிய பணிகளில் அவர்கள் அமர்த்தப்பட்டனர். உயர்நிலைக் கல்வியையும் பரம்பரை பரம்பரையாக அவர்கள் பெற்றனர். அவர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்ந்த நிலையிலேயே இருந்தனர்.

இத்தகைய அடிமைத்தனத்திலிருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும் என்று பகுத்தறிவு பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். மதங்களால் மூட நம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன என்று மதத்தை வெறுத்தார். கடவுள் இல்லை என்றார். தமிழர்கள் வடநாட்டினரிடம் அடிமைப் பட்டுள்ளதாக கூறினார். அதிலிருந்து விடுதலை வேண்டும் என்றுதான் தனித் திராவிட நாடு வேண்டும் என்று குரல் எழுப்பினார். ” திராவிட நாடு திராவிடருக்கே! ” என்ற கோரிக்கை தமிழக மக்களிடையே பிரபலமானது!

பெரியாரின் வழிவந்த அண்ணாவும் அதே பாணியில்தான், ஆனால் மிகுந்த லாவகமாக ராஜ்ய சபையில் தனித் திராவிட நாடு கேட்கலானார். அதுவரை தமிழ் நாட்டிலேயே ஒலித்த தனித் திராவிட நாடு கோரிக்கை அன்று டெல்லியில் இந்தியா முழுதும் கேட்கும்படி ஒலித்தது! அது கேட்டு இந்தி பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிரண்டுபோயினர். இவ்வளவு துணிச்சலாக பிரிவினைக் கோரும் இவர் யார் என்று அன்றுதான் அண்ணாவை வியந்து பார்த்தனர். இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருகூட அப்போதுதான் அண்ணாவைக் கூர்ந்து நோக்கலானார். இந்திய சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது நடந்த மதக் கலவரத்தை அவர் மறந்துவிடவில்லை. ஆனால் அப்படியெல்லாம் மீண்டும் நடக்காது என்றும் அண்ணா முன்கூட்டியே தமது உரையில் கூறிவிட்டார். காரணம் அதுபோன்று தென்னாட்டில் வாழும் வடநாட்டினர் வடக்கு நோக்கியும் வடநாட்டில் வாழும் தென்னாட்டவர் தெற்கு நோக்கியும் புறப்படத் தேவையில்லை என்பதையும் கூறிவிட்டார். அப்போது உடனடியாக பண்டிதர் நேரு கருத்து ஏதும் தெரிவிக்காவிட்டாலும் அது பற்றி நிச்சயமாக தீவிரமாக சிந்தித்திருப்பார்.

திராவிட இயக்கத்தினரைப் பொருத்தவரை அண்ணா தனித் திராவிட நாடு கோரிக்கையை டில்லியிலேயே எழுப்பியதைப் பெரும் வெற்றியாகக் கருதலாயினர். பரவாயில்லை. இப்போது தமிழ் நாட்டில் எதிர் கட்சியாகத்தானே தி. மு. க. உள்ளது? முதலில் ஆட்சியைப் பிடிப்போம். பின்பு தனித் திராவிட நாடு கோரிக்கையை மேலும் வலிமையுடன் கோரிப்  போராடுவோம் என்று திருப்தி அடைந்தனர். அவர்களின் எண்ணப்படியே இப்போது தமிழகம் தி.மு. க. கைகளில் வந்துவிட்டது. அண்ணாவும் தமிழக முதல்வராகி விட்டார்.

அந்த அண்ணாதான் இன்று எங்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இன்னுமொரு ஆங்கில உரையாற்ற வந்துள்ளார்.அண்ணாவுக்கு அணிவகுப்பு மரியாதைபோல் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவ மாணவிகள் நீண்ட மல்லிகைச் சரத்தை தோள்களில் ஏந்தியவண்ணம் இருமருங்கிலும் மெதுவாக  நடந்துவர நடுவில் புதிய பட்டதாரிகள் வரிசையாக நடந்து வந்தனர்.

அண்ணா அரங்கத்தினுள் சென்றபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பட்டம் பெறுவோர் முதல் வரிசையில் அமர்ந்தனர். பேராசிரியர்களும் மாணவ மாணவியரும் அடுத்தடுத்த வரிசைகளில் அமர்ந்தனர்.

பட்டமளிப்பு விழா தொடங்கியது. அச்சன் ஊமன் சுருக்கமாக ஜெபம் செய்தார். அடுத்து ” Silver and Blue ” என்னும் கல்லூரிப் பாடலை அனைவரும் பாடினர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது அண்ணாவுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அண்ணா எழுந்து நின்று  ஒலிவாங்கியைக் கம்பீரமாகப் பிடித்தார். அப்போது அவருடைய தன்னம்பிக்கை அப்படியே அவருடைய முகத்தில் பிரதிபலித்தது. கையில் எந்த குறிப்பும் இல்லாமல் திறந்து விட்ட மடை போன்று அழகான இலக்கிய ஆங்கிலத்தில் உரையாற்றினார். தேனுண்ட வண்டுபோல் அனைவரும் அவரையே பார்த்தவண்ணம் கிறங்கிப்போயினர்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2016 மாத இதழ்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

23 Comments

 1. Avatar
  .சி. ஜெயபாரதன் says:

  நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

  /// அப்படிப் பார்த்தால் இந்தியா என்ற ஒரு நாடும் இல்லாமல்தான் இருந்தது.இந்தியா முழுதும் ஒரே ஆட்சிக்குள் அசோகர் காலத்தில்தான் ஆளப்பட்டுள்ளது. முகலாயர்கள் இந்தியாவை இந்துஸ்தான் என்று கூறி ஆண்டுள்ளனர் அதன்பின்பு ஆங்கிலேயர்கள் கைவசம் வந்தபின்புதான் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதை ” பிரிட்டிஸ் இந்தியா ” என்று அழைத்தனர்.

  இந்தியா என்ற பெயரை இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அறிந்திருக்க வில்லை. அதை இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குச் சூட்டவில்லை. இந்தியா என்பது சிந்து நதியிலிருந்து மருவிய ஒரு சொல்.///

  இந்தக் கூற்று ஒப்புக் கொள்ள முடியாத திராவிட கழகத்தார் ஒருமுக எழுத்து. இது மெய்யில்லை. இதற்கு எதிர்ப்பு ஆதாரங்கள் கிரேக்க வரலாற்றில் உள்ளது.

  இந்தியா என்ற பெயரை மகா அலெக்ஸாண்டருக்கு 2300 ஆண்டுக்கு முன்பே எடுத்துக் கூறிப் படையெடுக்க வழிப்படம் வரைந்தவர் அரிஸ்டாட்டில் என்னும் அவரது குரு. அதனை வரலாறு நூலாகச் எழுதியவர் கிரேக்க ஞானி புளூடார்க்.

  இந்தியா என்ற பெயரை எகிப்திய ராணி கிளியோபாத்ராவும் ஜூலியஸ் சீஸரிடம் கூறியுள்ளார்.

  http://classics.mit.edu/Plutarch/alexandr.html

  http://www.bostonleadershipbuilders.com/plutarch/alexander.htm

  சி. ஜெயபாரதன்

 2. Avatar
  .சி. ஜெயபாரதன் says:

  நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

  /// அப்படிப் பார்த்தால் இந்தியா என்ற ஒரு நாடும் இல்லாமல்தான் இருந்தது.இந்தியா முழுதும் ஒரே ஆட்சிக்குள் அசோகர் காலத்தில்தான் ஆளப்பட்டுள்ளது. முகலாயர்கள் இந்தியாவை இந்துஸ்தான் என்று கூறி ஆண்டுள்ளனர் அதன்பின்பு ஆங்கிலேயர்கள் கைவசம் வந்தபின்புதான் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதை ” பிரிட்டிஸ் இந்தியா ” என்று அழைத்தனர்.

  இந்தியா என்ற பெயரை இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அறிந்திருக்க வில்லை. அதை இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குச் சூட்டவில்லை. இந்தியா என்பது சிந்து நதியிலிருந்து மருவிய ஒரு சொல்.///

  500 வருடங்களுக்கு முன்பு இந்தியா என்ற பெயருடைய தேசத்துக்குக் கடற்பாதை கண்டுபிடிக்க கொலம்பஸ், வாஸ்கோடகாமா கப்பல் பயணம் செய்ததை எப்படி மறக்க முடியும் ? அவருக்கு இந்தியா என்னும் பெயர் எப்படித் தெரிந்தது ?

  சி. ஜெயபாரதன்

 3. Avatar
  .சி. ஜெயபாரதன் says:

  திராவிட நாடு திராவிடருக்கே என்று தி.மு.க. போராட்டவாதிகள் முழக்கிய போது, யாராவது திராவிட நாட்டுக்கு எல்லைகள் வகுத்துக் குறிப்பிட்டாரா ?

  போராடும் திராவிடர்கள் யார், யாரென்று குறிப்பிட்டாரா ?

  பாரதியாரும், முதலில் பாரதியார் சீடர் ஆன்மீகப் பாரதிதாசனும் திராவிட நாட்டைப் பற்றி எங்கும் பாடியதில்லை. பின்னாளில் நாத்தியவாதியான பாரதிதாசன் திராவிடக் கவிஞர் ஆக மாறினார்.

  எல்லைகள் இல்லாத திராவிட நாடு, யார் திராவிடர் என்று குறிப்பிடப் படாத நிலையில் கிடைக்காமலே போனதில் வியப்பில்லை. விடுதலை இந்தியாவில் பெரியார் பாராளுமன்றத் தேர்தல் முறைப் பங்கெடுப்பில் நம்பிக்கை இல்லாதவர். பாராளுமன்றத் தேர்தல் முறையில் பங்கெடுத்த தி.மு.க.உறுப்பினரை அறவே வெறுத்தவர்.

  சி. ஜெயபாரதன்

  1. Avatar
   ஷாலி says:

   //எல்லைகள் இல்லாத திராவிட நாடு, யார் திராவிடர் என்று குறிப்பிடப் படாத நிலையில் கிடைக்காமலே போனதில் வியப்பில்லை.//

   “ நாம் கேட்கின்றபடியே உபகண்டத்திலிருந்து திராவிட நாட்டை தனியாக பிரிக்க வேண்டுமென்றால்,இதில் யாருக்கு எந்த இந்தியனுக்கு அசௌகரியம் ஏற்படுகின்றது?
   திராவிட நாடு தனியே பிரிந்தால் கிழக்கே கன்னியாகுமரி முதல் பர்ஹாம்பூர் வரையும்;மேற்கே பம்பாய் வரையிலும் ஆயிரம் மைல் நீளமுள்ள கடற்கரை நமக்கு கிடைக்கின்றது.கீழக்கரை முதல் சிக்மகளூர் வரை அகலமான ஆறுகள்,அகண்ட அணைகள்,ஏரிகள் உயர்ந்த நன்செய் நிலங்கள்,முத்து கொழிக்கும் கடல்கள்,தங்கம் விளைகின்ற பல கனிகள் மலைகள் நமக்குண்டு.

   இத்தகைய திராவிட நாட்டை அதிலுள்ள ஐந்து கோடி மக்களுக்காகப் பிரித்தால்- இந்தத் திராவிட மக்களுக்கு என்ன கஷ்டம இருக்க முடியும்?சிறிய,சிறிய நாடுகளாகிய துருக்கி,கிரிஸ்,ஸ்வீடன்,லிதுவேனியா,சுவிட்சர்லாந்து,டென்மார்க்,பெல்ஜியம்,அயர்லாந்து முதலிய 20,30 நாடுகள் தனித்தனி வல்லரசுகளாக விளங்கவில்லையா?நாம் தனி ஆட்சியாக ஏன் இருக்க முடியாது?இப்படிப்பட்ட நமது நாட்டுக்குத்தான் நாம் பூரண சுயாட்சி கேட்கிறோம்.”

   — தந்தை பெரியார். குடியரசு.19-10-1946.

   1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

    //எல்லைகள் இல்லாத திராவிட நாடு, யார் திராவிடர் என்று குறிப்பிடப் படாத நிலையில் கிடைக்காமலே போனதில் வியப்பில்லை.//
    “ நாம் கேட்கின்றபடியே உபகண்டத்திலிருந்து திராவிட நாட்டை தனியாக பிரிக்க வேண்டுமென்றால்,இதில் யாருக்கு எந்த இந்தியனுக்கு அசௌகரியம் ஏற்படுகின்றது?
    திராவிட நாடு தனியே பிரிந்தால் கிழக்கே கன்னியாகுமரி முதல் பர்ஹாம்பூர் வரையும்;மேற்கே பம்பாய் வரையிலும் ஆயிரம் மைல் நீளமுள்ள கடற்கரை நமக்கு கிடைக்கின்றது.கீழக்கரை முதல் சிக்மகளூர் வரை அகலமான ஆறுகள்,அகண்ட அணைகள்,ஏரிகள் உயர்ந்த நன்செய் நிலங்கள்,முத்து கொழிக்கும் கடல்கள்,தங்கம் விளைகின்ற பல கனிகள் மலைகள் நமக்குண்டு.///

    ஷாலி திராவிட எல்லையைக் கேலி செய்கிறார் !!! திராவிட நாட்டுக்கு ஆயிரம் மைல் கடற்கரையா ?

    சி. ஜெயபாரதன்

  2. Avatar
   ஷாலி says:

   //விடுதலை இந்தியாவில் பெரியார் பாராளுமன்றத் தேர்தல் முறைப் பங்கெடுப்பில் நம்பிக்கை இல்லாதவர்.//

   “ நான் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ‘ இது சுயராஜ்யமல்ல’; “பார்ப்பன ராஜ்ஜியம்” என்று, இது ஜனநாயகமல்ல; ‘பார்ப்பன நாயகம்” என்று,எப்படியோ நாம் இந்த ஜனநாயகத்தின் யோக்கியதையைக் கண்டுகொண்டோம்.

   இந்த ஜனநாயகத்தின் யோக்கியதையைப்பற்றி பல இடங்களில் சொல்லியிருக்கின்றேன்.இலண்டனில்,பெர்னாட்ஷா என்ற அறிஞரிடம் பலர் சென்று ஜனநாயகம் என்பதற்கு விளக்கம் தரும்படி கேட்டார்கள். அவர் அதற்க்கு அழகான விளக்கம் தந்தார்.என்ன விளக்கம் தந்தார் என்றால்,

   “ ஜனநாயகம் என்பது முட்டாள்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அயோக்கியர்களின் ஆளும் கட்சி” என்பதாக விளக்கம் கூறினர்.அது ஏறக்குறைய நம் நாட்டிற்கு ஏற்ற மாதிரியில் அமைந்து போய் விட்டது. ஒருவர் கூறினர், “ இரண்டு உழக்குப் பொரிக்கு ஓட்டு வாங்கினார்கள்” என்று. ஜனங்கள் என்ன முட்டாள்களா, இல்லையா? இல்லவே இல்லை.ஜனங்களை அந்தப் பக்குவத்தில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை ஆரம்பித்தார்கள்.-ஜனநாயகம் என்றால் என்ன என்பதைப்பற்றிக் கவலைப்படாமல்.”

   — தந்தை பெரியார். விடுதலை.15-5-1954.

 4. Avatar
  ஷாலி says:

  //தமிழர்கள் வடநாட்டினரிடம் அடிமைப் பட்டுள்ளதாக கூறினார். அதிலிருந்து விடுதலை வேண்டும் என்றுதான் தனித் திராவிட நாடு வேண்டும் என்று குரல் எழுப்பினார்.//

  ..விளக்கமாக…..சென்னை மாகாணம் முழு சுயேட்சையுடன் – பிர்லாக்கள்,டாட்டாக்கள்,
  மகாத்மாக்கள்,நேருக்கள்,வெள்ளைக்காரர்கள்,யாராயிருந்தாலும்,சென்னை மாகாணம் என்னும் திராவிட நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டுமென்றால், “பாஸ்போர்ட்” அனுமதிசீட்டு வாங்கிக்கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும்.எந்த வட நாட்டவனும் நமது நாட்டு தலைவனாகவோ,இராஷ்ராபதியாகவோ,மகாத்மாவாகவோ இருக்கக்கூடாது.

  மனிதரெல்லாம் சமமாக வாழவேண்டும்.மனித வர்க்கத்திலெ,பறையனோ,சூத்திரனோ,சக்கிலயோ,பிராமணனோ,இழிசாதியானோ இருக்கக்கூடாது.உலக நாடுகள் பெற்றுள்ளதைப் போல நமது நாடு சுதந்திரம் பெற்று தனி நாடாக இருக்க வேண்டும்.ஐந்து கோடி மக்களிலே யார் வேண்டுமானலும் மந்திரியாகவோ,மகாத்மாகவோ இருக்கட்டும்.நம்மிலே அத்தகைய தகுதிடையவர்கள் இல்லையா?

  – தந்தை பெரியார். குடியரசு. 19-10-1946.

 5. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள நண்பர் ஜெயபாரதன் அவர்களே,இந்தியா என்ற பெயரை இந்தியர்கள் சூட்டவில்லை.அதை இந்தியர் அல்லாதவர்தான் சூட்டியுள்ளனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்? பண்டைய கிரேக்கர்களுக்கு அந்த பெயர் எப்படி தெரியவந்தது என்பதைத்தான் நான் சொல்லிவிட்டேனே? உண்மையில் இந்தக் கருத்தைக் கூறியுள்ளவர் A. L . Basham என்னும் புகழ்மிக்க வரலாற்று பேராசிரியர்.அவர் எழுதியுள்ள , ” The Wonder that was India ” எனும் நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  ” The Indians knew this river as Sindhu, and the Persians, who found difficulty in pronouncing an initial s, called it Hindu.From Persia the word passed to Greece, where the whole of India became known by the name of the western river. The ancient Indians knew their sub-continent as Jambudvipa or Bharatavarsa. With the Muslim invasion the Persian name returned in the form Hindustan, and those of its inhabitants who followed the old religion became known as Hindus. ”
  பண்டைய கிரேக்கர்களுக்கு இந்தியா என்பது இப்படித்தான் தெரிந்துள்ளது. மார்க்கோ போலோ, கொலம்பஸ், வஸ்கொடகாமா போன்ற கடல்/ தரை மார்க்கப் பிரயாணிகளுக்கு இந்தியா என்பது இப்படிதான் தெரிந்துள்ளது. ஆகவே இந்தியா என்ற பெயரை தங்கள் நாட்டுக்கு இந்தியர்கள் சூட்டவில்லை என்பதே உண்மை.இதைப் பெரியாரோ அண்ணாவோ கூறவில்லை. நான்தான் கூறுகிறேன் இத்தகைய ஆதாரத்துடன். அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   The Wonder that was India இந்த நூல் என்னிடமும் உள்ளது.
   கீழுள்ள விபரம் அந்த நூலில் இல்லை.

   ///இந்தியா என்ற பெயரை மகா அலெக்ஸாண்டருக்கு 2300 ஆண்டுக்கு முன்பே எடுத்துக் கூறிப் படையெடுக்க வழிப்படம் வரைந்தவர் அரிஸ்டாட்டில் என்னும் அவரது குரு. அதனை வரலாறு நூலாகச் எழுதியவர் கிரேக்க ஞானி புளூடார்க்.
   இந்தியா என்ற பெயரை எகிப்திய ராணி கிளியோபாத்ராவும் ஜூலியஸ் சீஸரிடம் கூறியுள்ளார். ///

   http://classics.mit.edu/Plutarch/alexandr.html
   http://www.bostonleadershipbuilders.com/plutarch/alexander.htm

   ///ஆகவே இந்தியா என்ற பெயரை தங்கள் நாட்டுக்கு இந்தியர்கள் சூட்டவில்லை என்பதே உண்மை///

   நீங்கள் கூறும் இந்த இந்தியர்கள் யார் ?

   சி. ஜெயபாரதன்

  2. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

   ////பண்டைய கிரேக்கர்களுக்கு இந்தியா என்பது இப்படித்தான் தெரிந்துள்ளது.///

   எப்படித்தான் ?

   ///மார்க்கோ போலோ, கொலம்பஸ், வஸ்கொடகாமா போன்ற கடல்/ தரை மார்க்கப் பிரயாணிகளுக்கு இந்தியா என்பது இப்படிதான் தெரிந்துள்ளது. ஆகவே இந்தியா என்ற பெயரை தங்கள் நாட்டுக்கு இந்தியர்கள் சூட்டவில்லை என்பதே உண்மை.இதைப் பெரியாரோ அண்ணாவோ கூறவில்லை. நான்தான் கூறுகிறேன் ///

   2500 ஆண்டுகட்கு முன்பு அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுக்க வரைப்படம் வடித்த அவரது குரு அரிஸ்டாட்டிலுக்கு இந்தியா என்ற பெயர் யார் சொல்லிக் கொடுத்தது ?

   கிளியோபாத்ராவுக்கு இந்தியா பெயர் எப்படித் தெரிந்தது ?

   யார் திராவிடர்கள் ? தமிழக இஸ்லாமியர், கிறிஸ்துவர் திராவிடரா ? தமிழ் நாட்டில் வாழும் பிராமணர் [முதல் மந்திரி ஜெயலலிதா]திராவிடரா ?

   சி. ஜெயபாரதன்

   சி. ஜெயபாரதன்.

  3. Avatar
   ஷாலி says:

   //ஆகவே இந்தியா என்ற பெயரை தங்கள் நாட்டுக்கு இந்தியர்கள் சூட்டவில்லை என்பதே உண்மை.இதைப் பெரியாரோ அண்ணாவோ கூறவில்லை. நான்தான் கூறுகிறேன்…//

   “…இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ,இந்துக்கள் என்ற பெயரோ, எங்காவது வழங்கப்பட்டு இருந்ததாக உங்களில் யாராவது கூறமுடியுமா?கூறமுடியுமானால்,அதற்கு உங்கள் வேதத்திலோ,சாஸ்திரத்திலோ,இதிகாசங்களிலோ, ஒரே ஒரு ஆதாரமாவது காட்டமுடியுமா?ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்.யாராவது சொல்வார்களானால் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள தயாராய் இருக்கிறேன்.நன்றியறிதலோடு என் தவற்றை திருத்திக்கொள்ளவும் தயாராய் இருக்கிறேன்.

   230 ஆண்டுகளுக்கு முன் பூகோளத்தின்படி இத்தேசத்திற்கு இந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமா?இந்தியா என்பதும் இந்துக்கள் என்பதும்,நடுவாந்திரத்தில் அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக்கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய, பழைய மூலப் பெயர்கள் அல்ல.”
   – தந்தை பெரியார்.குடியரசு.8-5-1948.

   “சிந்து நதிக்கரையில் ஆரியர்கள் முதல் முதல் நமது நாட்டில் குடியேறினவர்களாதலினால் அந்த நதியின் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டு, “சிந்து” என்பது, “இந்து”-வாகி-“இந்தியர்” என்று மாறிவிட்டது என்று சொல்கிறார்கள்.அதற்கு ஆதாரமாக,ஆங்கில அகராதிகளிலும் இந்து என்றால் ஆரியன் என்றும்;இந்து மதம் என்றால் பார்ப்பன மதமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

   ஆங்கில அகராதிதான் அப்படி சொல்கிறது என்பதாக,அதன் மீது நாம் குறை சொல்வதாக இருந்தாலும்- ஆரியர்கலாலேயே எழுதப்பட்டதும்.ஒப்புக்கொள்ளப்பட்டதுமான வேதம்,சாஸ்திரம்,ஸ்மிருதி,ஆகமம்,இவைகளின் பாஷியம் புராணம்,என்பனவற்றில் ஒரு ஆதாரத்திலாவது “இந்து”, “இந்து மதம்” என்ற வார்த்தைகள் கிடையவே கிடையாது.

   – தந்தை பெரியார். நூல்: வைக்கம் வீரர் சொற்பொழிவு.1923.

 6. Avatar
  Dr.G.Johnson says:

  சகலகலாவல்ல நண்பர் ஷாலி அவர்களே, நீண்ட இடைவெளிக்குப் பின் தங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி. நல்ல வேலையாக நீங்கள் நண்பர் ஜெயபாரதன் அவர்களுக்கு தக்க சான்றுகளுடன் பதில் தந்து மடக்கிவிட்டீர்கள். அவர் என்ன சொல்வது என்று திக்குமுக்காடுவது தெரிகிறது. தக்க நேரத்தில் வந்து எனக்குக் கைகொடுத்து உதவியுள்ளீர்கள். இதைத்தான் வள்ளுவர்,
  ” நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி
  ஒல்லும்வாய் ஊன்றும் நிலை ” என்றார்.
  தந்தை பெரியார் 1946 ஆம் வருடம் விடுதலை பத்திரிகையில் திராவிட நாடு ஏன், எதற்கு ,எப்படி என்று விளக்கமாகக் கூறியுள்ளதை அப்படியே தாங்கள் இங்கே எடுத்துக்காட்டியது வியப்பை உண்டுபண்ணுகிறது. 1946ல் தான் நான் பிறந்தேன்.70 வருடங்கள் கழித்து அதைப் படிப்பது மகிழ்ச்சி தருகிறது. இது குறித்து நண்பர் ஜெயபாரதனும், நண்பர் கிருஷ்ணகுமாரும் என்ன சொல்வார்கள் என்று அறிய ஆவலுடன் காத்துள்ளேன். நன்றி ஷாலி….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 7. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

  எத்தனை உத்தரங்களை ஒருதடவைக்கு மேல் பதிவு செய்வது என்று தெரியவில்லை. ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களது உரை தேசத்தின் இறையாண்மையை தெளிவாக விளக்கி இருக்கிறது.

  \\ நல்ல வேலையாக நீங்கள் நண்பர் ஜெயபாரதன் அவர்களுக்கு தக்க சான்றுகளுடன் பதில் தந்து மடக்கிவிட்டீர்கள். \\

  ராமசாமி நாயக்கருடைய ஜாதிக்காழ்ப்புப் பேச்சுக்கள் ஜாதிக்காழ்ப்புக்கும் பொழுதுபோவதற்கும் மட்டிலுமானவை. இதையெல்லாம் சான்றுகள் என்று நீங்கள் சொன்னால் அதுவும் கூட ஜாதிக்காழ்ப்புக்கு / பொழுது போக்க என்று புறத்தொதுக்க வேண்டும்.

  த்ராவிட நாட்டுப் போராளித் தலைவர்கள் த்ராவிடம் பற்றி ……….. மலை…….. மயிர் ……….. என்றெல்லாம் கூட அளந்திருக்கிறார். அதையெல்லாம் சாய்ஸில் விட்டு விடலாம் இல்லையா?

  ம்……………ராமசாமி நாயக்கர் ***தமிழ் காட்டுமிராண்டி பாஷை*** என்று கூடச் சொல்லியிருக்கிறார். விட்டா இதையும் நீங்கள் சான்று என்று சொல்லிவிடுவீர்களா?

  த்ராவிடம் பற்றிய இலக்கிய சான்றினை நான் தங்களுக்கு இதே தளத்தில் முன்னர் பகிர்ந்திருக்கிறேன்.

  *இந்தியா* என்ற சொல் புதிதாக இருக்கலாம். *பாரதம்* என்ற சொல் புதிது இல்லை. இந்தப் பெயர்களால் நாம் அறியும் நம் தாய்நாட்டின் நிலப்பரப்பு ஹிந்துஸ்தானத்தின் புராதனமான சம்ஸ்க்ருத நூற்களிலும் தொல் தமிழ் நூற்களிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை ஜாதிக்காழ்ப்பினை அடிப்படையாக் கொண்ட ராமசாமி நாயக்கரின் காழ்ப்புக் கருத்துக்களுக்கு இடையில் பதிவு செய்ய மனம் வரவில்லை.

  தங்கள் தரப்பிலிருந்து தேசத்தின் இறையாண்மையை இழிவு செய்யும் படிக்கான இந்தப் பதிவு மிக்க வருத்தம் தருகிறது.

  தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை………… என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. இது போன்ற பதிவுகள் தேசத்தின் இறையாண்மையை மட்டிலும் இழிவு செய்யவில்லை ஐயா.

  ஹிந்துஸ்தானத்தின் அனைத்து மொழியைச் சார்ந்த மதத்தைச் சார்ந்த ஜாதிகளைச் சார்ந்த நமது சஹோதர ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை நமது நலனுக்காக தேசத்தின் இறையாண்மைக்காக ஈந்ததையும் கூட இப்படிப்பட்ட பதிவுகள் இழிவு செய்கின்றன.

  விவிலியம் பற்றி cherry picking செய்து அங்கொன்று இங்கொன்று என்று உருவிக் கருத்துப் பகிர்வது தவறு என்பது தங்கள் அபிப்ராயம். அதே போன்ற அபிப்ராயத்தை நீங்கள் ஏன் தேசத்தின் இறையாண்மை சார்ந்து கைக்கொள்ளக்கூடாது?

  ஜெய்ஹிந்த்

 8. Avatar
  smitha says:

  The Aryan invasion theory has been proved wrong. Maxmuller who advocated it has never visited India & during the last years of his life admitted that he was wrong.

  However, EVR used it to drive a wedge between brahmin & non brahmin communities. TN is witnessing caste clashes as never before which is the result of EVR’s relentless hate campaign, which has ruined the tamil society.

  Annadurai emotionally blackmailed the people into the dravida naadu concept & conveniently backed out when he came to power.

  Also, once he split from EVR, the “no (hindu) God” slogan turned into “Ondre Kulam Oruvane Devan”.

  Sacrificing principles for the sake of power is not only restricted to present day politicians.

  Brahmins were occupying big posts & the primary reason was education. They have (& are) always given importance to education & that is what is sustaining them even today.

 9. Avatar
  smitha says:

  Regarding the dravida naadu concept, it never really took off. The other southern states were never taken into confidence & they did not show interest. It was only the TN Dravidian leaders who kept harping on it.

  C.P Aadithanaar, founder of Daily Thanthi tried to convince EVR & Anna about the futility of this concept but they did not agree. He was proved right in the end.

 10. Avatar
  முனைவா் பு.பிரபுராம் says:

  திராவிடநாடு திராவிடா்க்கே! தமிழ்நாடு தமிழருக்கே! என்ற வகையில் கூறப்படும் முழக்கங்கள், இனி ஒருங்கிணைந்த இந்தியாவில் நிச்சயமாக சாத்தியமேயில்லை. அரசியலாகட்டும், ஆட்சிப்பணியாகட்டும் மத்திய அரசின் முக்கிய அதிகாரப் பதிவிகளைத் தமிழ்நாட்டைச் சாா்ந்தோா் பெற முயற்சிக்கவேண்டும். அப்படிப் பெற்றால்தான் நம் மாநில உாிமைகளை நாம் நிலைநாட்ட இயலும். தற்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திராவிடம் என்றும் தமிழ் தேசியம் என்றும், ஓட்டுக்காக மக்களைத் தெளிவாகக் குழப்பிவருகின்றனா்.

 11. Avatar
  Rama says:

  EVR could be “Thanthai”to many but not to me and many others. Bharath is as old as time and Dravida desam is part and parcel of Bharath. Arya and Dravida division was brought on by the British and the theory of Aryan invasion is pure bunkum. It is high time Tamilians think themselves of as Indians first and foremost.
  BTW, Shri JB, I did visit Akashi Kaiko bridge in Japan. It is not far from Kobe. Fantastic to see it in real life. Huge and breath taking.Thanks for information that you have provided.

 12. Avatar
  S Ganesh says:

  Tamil was founded by Agathiyar a brahmin. The Tamil grammar was writen by Tholkappiar a brahmin. In sanga pulavargal kapilar was a brahmin. In silapadhikaram madala mariavan is a brahmin. Where is the question of brahmins coming through the khyber pass. Among the samaya kuravargal Sundarar, Gnan Sambandar and manika Vasagar are brahmins. Many alwars including Perialwar, Thondaradipodi alwar are brahmins. Tamil Thatha U. Ve. Sa is a brahmin. Kalki who brought reform in tamil novel writing is a brahmin. Even today many tamil sangams abroad and in other cities in India are membered and run by brahmins. 40 years ago all the tamil teachers in schools were brahmins. Periar was not a Tamil. Anna was not a Tamil. MGR was not a tamil. Vaiko is not a tamil. Vijayakant is not a tamil. All these people allege and accuse that brahmins are not tamils. A law abiding, peaceful, graceful, cultured community has been vilified to the extreme extent in Tamilnadu. All the doctors, lawyers and CAs of these dravidian political leaders are brahmins.

 13. Avatar
  Muthu says:

  Do you have any proof that Tholkappiyar, Agathiyar, Kapilar are Bramins? They are not. In Tamizh literature use the word “anthanar””parpanar” and these anthanar and parpanars are different from so called Bramins.

 14. Avatar
  Muthuramachrish says:

  Will you publish this comment?
  திருவள்ளுவர்,
  மறப்பினும் ஒத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
  பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
  என்று கூறினார் போலும். வள்ளுவர்கள் என்போர் ஒரு காலத்தில் அரசர்களிடத்தில் பணியாற்றிய ஆள்வினையாளர்களாகும். தமிழ்க் குமுகத்தின் பல்வேறு அறிவியல் துறைகள் அவர்களின் கட்டில் இருந்தன. இன்று பறையர்கள் எனும் சாதியில் ஓர் உட்பிரிவாக அவர்கள் உள்ளனர். திருவள்ளுவர் பார்ப்பனரின் வரையறுக்கப்பட்ட கடமைகளை மீறிய செயற்பாட்டை மிக மென்மையாகக் கண்டிக்கிறாரேயன்றி வருணப் பாகுபாடு என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது திருக்குறளில் ஆங்காங்கே வெளிப்படுகிறது. அவர் அரசர்களிடம் பணிபுரியும் மக்கள் குழுவைச் சேர்ந்தவர் என்பதால்தான் இவர்களுடைய வரம்பு மீறலை எளிதாக விளங்கிக்கொள்ள முடிந்தது போலும்.

 15. Avatar
  Shiva says:

  Ganesh, in your list of brahmins who contributed to Tamil, you have left out Bharathiyaar. I think history should be studied and researched. The acceptance/rejection of Aryan invasion theory should be based on proofs (if any) and research not based on whether you like EVR or whether you like to sign off your posts with Jai Hind. I am equally turned off by Dravidian divisive politicans and Tambrahms and non-Tamils who are ever so eager to refute the distinct Tamil history and culture. I know in the field of Carnatic music, the contribution of Tamil music is unknown/rejected by many and glorified/exaggerated by some.

 16. Avatar
  raam says:

  In the year 1962 anti partition act was passed by Parliament and Anna immediately dropped his Dravidanad demand. Just to fool the public he started Makkal Urimai Kazhagam( People rights association) Kaamaraj sarcastically asked in Tamil ” athu nenna makkal urimai kazhakasm. ippo yenna urimaiyillaiyaaneen ” The movement was a non starter. Even this EVR could not sell his Dravidanad beyond Gummidipoondi Coimbutore and Jolarpet If you go to Andhra all the tamilswould be called including Brahmins” Aravandu dhonga vaadu” ( all tamils are thieves. The Kannadigas do not gicve Cauvery water The Malayaalees Mullaiperiyaar water. And Karuna is using Periyars’s dictum to find fault with the Brahmin news paper if he is defeated and when victoroius he would hail Victory for Dravidans During the British Raj the uppercaste hindus also illtreated the Dalits and the Non Brahmin Jamindars of Tanjore district as a punishment or to extract truth made them drink cowdung mix( See details in Prbanjan’s two novels Periyaar never uttered a word about the illtreatment of Dalits by Mooppanaars Vandyars Pillai thevars and Mudaliyar When 60 agriculturists were burnt to death by a Naidu Land (Irinjur GopalaKrishna Naidu in 1968 when the Dravidan CNA was the CM Periyasar did not say ” if you see a snake and a Naidu kill the Naidu and not Brahmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *