ஸிந்துஜா
நகரம் தின்ற இரை
அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
மகளின் மனை .
கதவைத் தட்டும்
சத்தம் கேட்டுத்
திறந்தேன் .
தாடியுடன் ஒரு
அறிமுகமற்றவர் .
சிரித்தபடி
“குப்புச்சாமி  என்று இங்கே ? ”
“இல்லை. இங்கே யாரும்
அப்படியில்லை . ”
“பக்கத்து, எதிர் ப்ளாட்டில் ? ”
” ஸாரி எனக்குத்
தெரியலை . ”
“தேங்க்ஸ் ” என்றார்
செய்யாத உதவிக்கு . 
மரக் .கதவை அடைத்தேன் .
மனக் கதவு திறக்க
சில பல ஆண்டுகள் முன்
பக்கத்து வீடுகள்
எதிர் சாரி கடைகள்
அடுத்த தெரு ஆபிஸ்கள்
லேடி டோக் போகும்
ரெட்டை ஜடை  இந்திரா .
ரெண்டு மைல் தள்ளி
தண்டல்க்காரன் பட்டியில்
வண்ணார்  தவசி  ,
கருப்புசாமி டெய்லர் ,
பால்கார லெச்சுமி
பஸ் டிரைவர் பழனி
தெரியாத ஆளில்லை
பெயரில்லை,  இடமில்லை .
அப்பா சொல்லுவார்
” நம்ம ஏரியா
போஸ்ட்மேன் இவன்தான் ” ….
மகள் குரல் கேட்டு நிகழ்வுக்கு வந்தேன் .
” அப்பா, ரொம்ப
தலைவலி  ” என்றாள்
மருந்துக் கடைக்கு போலாமென்று
கதவைத் திறந்து வெளியே வந்தேன்.
லிப்டில் போகக்
காத்திருக்கையில்,
மூன்றாம் ப்ளாட்டு கதவு திறந்தது.
வெளியே வந்தார் தாடிக்காரர் .
கூடவே வந்தது குப்புச்சாமியாம் .
அருகே வந்து
அறிமுகம் செய்தார்.
சிரித்து வைத்தேன் .
“தேங்க்ஸ் ” என்றார்
தாடிக்காரர் . 
விலகி நில் !
செயற்கரிய செயல்
செய்ய வேண்டாம் .
செய்தால்
இன்னும் கூடுதல் வேலை
வரிசையில்
வந்து நிற்கும்
.
முயற்சி
திருவினை அல்ல .
வினை ஆக்கும் .
ஒவ்வொரு வெற்றிக்குப்
பின்னாலும்
நிற்ப
நெருங்கியவரின்
துவேஷம் , பொறாமை ,
எரிச்சல் . 
எனவே
எப்போதும்
தூரத்துக் குளிர்ச்சி
கண்ணுக்குப் பசுமை. 
மதுரையை எதற்கு ?
மாதவியின்  வீட்டிலுள்ள
என் வீட்டுக் கோவலன்
நான் கண்ணகியாக
இருக்க விரும்புகிறான் .
அடுப்பில் எரியும்
விறகை எடுத்து
அவனை எரித்தால்
ஆயிற்று . 
 .
நேதாஜி 
.
மூடி மூடி வைத்திருந்ததை
எடுத்துக் காட்ட வந்தார் ஓடி
கண்டபின்பு தோன்றிற்று
மூடியே இருந்திருக்கலாமென .    
—
- இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்
 - வரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’
 - லேசான வலிமை
 - அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்
 - நாமே நமக்கு…
 - வியாழனுக்கு அப்பால்
 - கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்
 - இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..
 - நாடகத்தின் கடைசி நாள்
 - வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்
 - இலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்
 - நான்கு கவிதைகள்
 - தோழா – திரைப்பட விமர்சனம்
 - எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா
 - தொடுவானம் 114. தேர்வுகள் முடிந்தன .
 - எனக்குப் பிடிக்காத கவிதை