– சிறகு இரவி
0
விபத்தில் இறக்கும் இளம்பெண்ணின் ஆவி, அவள் அலைபேசிக்குள் நுழைந்து பழி வாங்கும் வினோதக் கதை!
3 ஜி என்கிற இந்திப்படத்தின் கதையை ஒற்றியெடுத்து, கொஞ்சம் சுந்தர் சி காமெடி சேர்த்து, இயக்குனர் பாஸ்கர் உருவாக்கிய படம் சோடையில்லை!
மரண கானா பாடும் வஞ்சிரத்தின் தங்கை கவிதா. அவளைக் காதலிக்கீறான் சில்லறை திருடன் அமுதன். ஒரு விபத்தில் இறக்கும் வட இந்திய / சேட்டு பெண் ஶ்ரீதேவியின் அலைபேசியை லவட்டி விடுகிறான் அமுதன். தேவி காதலித்த மருத்துவர் சரவணனை பழி வாங்க, அவளது ஆவி செல்பேசி மூலம் அமுதனின் வாழ்வில் நுழைகிறது. கவிதாவின் உடலிலும் புகுகிறது. அமுதன் கவிதாவை மீட்டு தேவியின் ஆவியை வென்றானா என்பதை சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.
அமுதனாக வைபவ், கவிதாவாக ஐஸ்வர்யா ராஜேஷ், வஞ்சிரமாக வி.டி.வி. கணேஷ், சரவணனாக கருணாகரன், ஆவியை விரட்டும் சாமியார் கேமாக ( Game) சிங்கம் புலி என எண்ணற்ற காமெடி பாத்திரங்கள். கவர்வது என்னவோ ஆவி ஶ்ரீதேவியாக வரும் ஓவியா தான். தேவி ஆவி, உடலில் புகுந்த கவிதாவாக ஐஸ்வர்யா கொஞ்சம் மிரட்டுகிறார்.
தயாரிப்பாளர் சுந்தர்.சி. என்பதால் “ அரண்மனை “ பாதிப்பில் கறுப்பு புகையும், சுண்ணாம்பு முகங்களும் வலம் வருகின்றன. பயம் தான் வரவில்லை.
சித்தார்த் விபின் தன் வித்தியாச இசை மூலம் கவர்கிறார். “ மஜ்ஜா மல்ஸா “ என்கீற குத்து பாடலில் விஜய் சேதுபதியின் குரல் ஈர்க்கிறது. தேவன், ஸ்வேதா மேனன் குரல்களில் ஒலிக்கும் “ கோழி குருடா இருந்தாலும் “ ஒரு நல்ல பாடல். இடையில் வரும் “ கனவு சேர்ந்து சேர்ந்து தூக்கம் தூரம் போனதடி “ போன்ற கவிதை வரிகளும் உண்டு! பின்னணி இசையும் ஓகே!
பானு முருகனின் ஒளிப்பதிவு வெளிச்சக் காட்சிகளில் உவக்கவும், இருட்டு காட்சிகளில் இதயம் துடிக்கவும் வைக்கிறது.
இரைச்சலான வி.டி.வி. கணேஷின் மதறாஸ் பாஷை முதல் வரிசைகளின் விசில்களுக்கு சொந்தமாகிறது!
“ மொத்த ஒடம்பும் ஆடணும்! பிட்டு பிட்டா ஆடறதுக்கு இது ஷகிலா படம் இல்லை”
“ ஸ்கூட்டின்னா பொம்பளை பேய்! பல்ஸர்னா ஆம்பளை பேய் “
அப;த்தமான பல பேய் படங்களுக்கு மத்தியில் எஸ். பாஸ்கரின் இந்தப் படம், கிச்சு கிச்சு மூட்டும் கிலி படம்.
அதற்கு 110 நிமிடங்களுக்குள் படம் முடிய கத்தரி போட்ட என்.பி.ஶ்ரீகாந்தும் ஒரு காரணம்.
0
பார்வை : ஹிசாசு!
மொழி : பேயாக்கி ஓவியாவை இப்படி பழி வாங்கியிருக்க வேண்டாம் மாம்ஸ்!
0
- தமிழக தேர்தல் விளையாட்டுகள்
- தினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்
- தொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.
- மேல்
- ’ரிப்ஸ்’
- பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்
- ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்
- செங்கைஆழியான் நினைவுகள்
- ஹலோ நான் பேய் பேசறேன்
- support Thangavel Kids Education Fundraiser
- இரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….
- முயல்கள்
- பிஸ்மார்க் கவிதை எழுதினார்
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி
- பெண்டிர்க்கழகு
- தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.
- அக இருப்பு