சிங்கப்பூரின் வரலாறு சுவையானது.அதைக் கண்டுபிடித்தவர் சர் ஸ்டாம்போர்ட் ரேபிள்ஸ். அவர்தான் சிங்கப்பூரின் தந்தையாகப் போற்றப்படுகிறார்.
அவர் 1805ல் இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பினாங்கு தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆட்சி புரிந்த ஆங்கில ஆளுநருக்கு உதவிச் செயலாளராகப் பணியாற்றினார்.
1811ல் ஜாவா தீவிலிருந்த டச்சு காலனிமீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றினார். அவரையே அந்தக் காலனிக்கு ( இன்றைய ஜாக்கர்த்தா ) ஆளுநராக நியமணம் செய்தது கிழக்கிந்தியக் கம்பெனி. ஐரோப்பாவில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டபின் புதிய ஒப்பந்தத்தின்படி கைப்பற்றப்பட்ட டச்சு காலனி திரும்ப டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்து திரும்பிய ரேபிள்ஸ் மீண்டும் சுமத்திரா தீவிலுள்ள பென்கூலன் என்னும் பிரிட்டிஷ் காலனிக்கு ஆளுநராக நியமனம் பெற்றார். அங்கிருந்தபோது அவர் கம்பெனியின் வாணிபத்தை மேலும் விருத்தி செய்ய வேறு நல்ல துறைமுகம் தேவை என்பதை உணர்ந்தார். மேலிடத்தின் சம்மதத்துடன் புதிய இடம் தேடும் முயற்சியை மேற்கொண்டார்.
கப்பல் படையுடன் புறப்பட்டு தேடியபோதுதான் சிங்கப்பூர் தீவு தென்பட்டது. அடர்ந்த காடுகளுடன் காணப்பட்ட அந்தத் தீவை நல்ல துறைமுகமாக மாற்றலாம் என்று அவர் எண்ணினார். தீவின் தென் பகுதியில் குடியிருப்புகளைக் கண்டு அங்கு இறங்கினார். அவர் இறங்கிய நாள் ஜனவரி 28, 1819. அந்த இடம் சிங்கப்பூர் நதி கடலுடன் கலக்குமிடம். அதன் கரையோரத்தில் சில குடிசைகள் இருந்தன. அங்கு குடியிருந்தவர்கள் மலாய்க்காரர்கள்.அவர்களுக்கு ” தெமெங்க்காங் ” என்ற தலைவர் இருந்தார். அவர்தான் ஜொகூர் சுல்தானின் பிரதிநிதி.அவரிடம் பேசி அந்த இடத்தை வாங்க வேண்டும் என்று கேட்டார். ஜனவரி 30 அன்று அவர்கள் இருவரும் ஒரு தற்காலிக ஒப்பந்தம் செய்துகொண்டனர். அப்போதே ஆங்கிலேயரின் ” யூனியன் ஜேக் ” கொடி அங்கு ஏற்றப்பட்டது! அதைத் தொடர்ந்து பெப்ருவரி 6 அன்று சுல்த்தான் ஹுசேன், தெமெங்காங், ரேபிள்ஸ் ஆகியோர் நிரந்தர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அன்றே சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனியாகிவிட்டது
ஸ்ரீ விஜயம் எப்படி உருவானது என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால் கி.மு. 200 ஆம் ஆண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை தென்கிழக்கு ஆசியத் தீவுகளில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்துள்ளது. அதனால்தான் அவை அனைத்தும் கிழக்கு இந்தியத் தீவுகள் என்றும் அழைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் பெலம்பாங் என்ற தலைநகரைக்கொண்டு தென்கிழக்கு நாடுகளையெல்லாம் தன வசம் வைத்திருந்தது. சீனாவிலிருந்து தமிழகம் வரை வர்த்தகம் செய்துள்ளது. இராஜ ராஜ சோழன் ஸ்ரீ விஜய மன்னனுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் இராஜேந்திரச் சோழன் பெரிய கடற்படையுடன் சென்று ஸ்ரீ விஜத்தை வீழ்த்தி அதன் மன்னனையும் சிறை பிடித்துள்ளார். அதற்குக் காரணம் அப்போது கம்போடியாவை ஆண்டுகொண்டிருந்த மன்னன் ஜெயவர்மன் இராஜேந்திரச் சோழரின் உதவியை நாடியதே. அதன்பின்பு சோழ மன்னர்களான முதலாம் குலோத்துங்க சோழனும், இரண்டாம் இராஜராஜ சோழனும் ஸ்ரீ விஜயத்தை ஆண்டுள்ளனர். இது வரலாறு.ஸ்ரீ விஜயத்தின் ஆட்சியின்போது சமஸ்கிருதம் வழக்கில் இருந்துள்ளதெனில் அதற்கு முன்பே இந்தியர்கள் சுமத்ரா ஜாவா தீவுகளுக்கு வந்து ஆண்டுள்ளனர் என்பது புலப்படுகிறது. அவர்கள் மூலமே சமஸ்கிருதம் வழக்கில் வந்துள்ளது எனலாம்.
- எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1
- தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்
- ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை
- புரியாத மனிதர்கள்….
- குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு
- நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்
- கவிதைத் தேர்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு
- குழந்தை