பகீர் பகிர்வு

author
0 minutes, 1 second Read
This entry is part 14 of 20 in the series 4 செப்டம்பர் 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

அவளிடம் பகிர்ந்துகொள்ளும்

எந்த விஷயமும்

அவளது மூன்று நெருங்கிய தோழிகளிடம்

உடனே பகிரப்பட்டு விடும்.

பகீரதப் பிரயத்தனம் செய்தும்

பிறரிடம் அவள் பகிரக்கூடாதவற்றை

என்னால் சொல்லாமல் இருக்கமுடிவதில்லை,

சொல்லாமல் மறைக்கவும் தெரிவதில்லை

‘யாரிடமும் சொல்லாதே’ என்று

சொல்வதில் இருக்கிறது –

மறக்காமல் சொல்லவேண்டும் என்ற அடிக்குறிப்பை

அவள் மனதில் எழுதிவிடும் பேராபத்து!

seyonyazhvaendhan@gmail.com

 

Series Navigationகாப்பியக் காட்சிகள் ​18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் – சிறு குறிப்புகள் -1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *