உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்

This entry is part 14 of 17 in the series 18 செப்டம்பர் 2016

 

உறவுகளை

அன்பால் வகு

ஈவு இன்பம்

காசால் வகு

ஈவு துன்பம்

********

ராட்சசன்

நண்பனானால்

அவனைவிட

நீதான் பலசாலி

**********

சிக்கலை

நீக்கையில்

சில முடிகள்

உதிரும்

**************

வினாடிகளாகத்தான்

கழிகிறது வாழ்க்கை

நினைவு கூரப்படுவது

சில வினாடிகளே

***********

மலரப்போகும்

வினாடியை

எழுதிவிட்டுத்தான்

ஒரு மொட்டு

பிறக்கிறது

***********

மிதப்பவை

ஒருநாள்

கரை ஒதுங்கும்

********

ஆயுளுக்கும்

தேவையான

பிசின் நூலோடுதான்

ஒரு சிலந்தி

படைக்கப்படுகிறது

*******

தன்னை

உருவாக்கிய

மரத்தையே

உருவாக்கமுடியுமென்று

அந்த விதைக்கு

அப்போது

தெரியவில்லை

******

 

அமீதாம்மள்

 

Series Navigationகேள்வியும் பதிலும்பெண்மனசு
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *