மனிதம் உயிர்த்த பெரு மழை

மனிதம் உயிர்த்த பெரு மழை
This entry is part 7 of 19 in the series 30 அக்டோபர் 2016

received_1155955741119559

முகுளத்தில் அடிபட்டு மூர்ச்சையான குழந்தை

மூன்று நாள் கழித்து கண் விழிக்கும் வேளை

கவலையுற்று நிற்கும் தாயென

வெள்ளம் வடிந்த இரண்டாம் நாள்

சென்னையைக் கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தது

அந்திப்பொழுது

இனி இழப்பதற்கொன்று மில்லை

உயிரைத் தவிரவென

பிழைத்திருந்தோர் நினைத்திருந்த

வெறுமையின் நசநசப்பில் உப்புக்காற்று

சுயமிழந்தது

இறுதி மூச்சு வெளியேறும் கணத்தின்

நாசியென

செயலிழக்கும் மனத்தின் அச்சம் அகலாது

துக்கத்தின் விசாரிப்புகளில்

விக்கித்துப் போன இரவில்

மனிதம் மெல்ல உதிக்கத் தொடங்கியது

ஒளியை வழங்கும் சூரியனாக

கரங்கள் நீண்டன

வழங்குதல் என்பதே வாழ்வின் வரமென

அன்பு என்பது

வார்த்தைகளாக

உடல் உழைப்பாக

வழங்குதலாக

கொடுக்கும் மனத்தின் குளிர் வெளியாக

குவிந்த பொருள்கள்

ஆறுதலாய் ஆதரவாய்

உடையாய் உணவாய்

அதுவாய் இதுவாய் உயிராய்

இளைய சமூகத்தின் மாண்பு

வாஞ்சை கூட்டிய பொறுப்பின் உச்சம்

செயலாக மாறிய வாழ்வின் சாரம்

எல்லாம் அழித்தது பெருமழை

மனிதம் உயிர்த்த பேய் மழை.

 

(சென்னைப் பெருவெள்ளத்தில் மக்கள் பணியாற்றிய அயனாவரம் ஹேமாவதி போன்ற

இளைய சமூகத்திற்கு)

 

தமிழ்மணவாளன்

Series Navigationசொல்லியும் சொல்லாமலும் – பாகம் ஒன்றுஅடையாளம்…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *