ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்

This entry is part 10 of 17 in the series 13 நவம்பர் 2016

கோவிந்த் கருப்

whytrump1தமிழில் ஒரு பழமொழி உண்டு,

உண்மை அம்மணமாகத் தான் வரும் என்று.

ஆம், உலகின் இரு பெரும் ஜனநாயக தேசத்தின் இரு முதன்மை வேட்பாளர்கள் மிக மிக அதிகமாக விமர்சிக்கப்பார்கள் – வெளிப்படையாக பேசியதால்.

மோடி இந்தியா

டிரம்ப் – யூ எஸ் ஏ

இருவனும் ஏதோ உலக மகா கொடுங்கோலர்கள் போலவும், மத இன வெறி பிடித்தவர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டார்கள்,

இதில் மிக மிக கேடான நிலையெடுத்தவர்கள், தங்களை செக்யூலரிஸ்ட் என்ற தரம் குறைந்த கூட்டம்.

ஒன்று : பெண் சம்பந்தப்பட்டது;

மோடி , பிரதமர் வேட்பாளாரில் முந்துகிறார் என்றவுடன்,
அவர் ஒரு இளம் பெண்ணை பாதுகாக்க என்னவெல்லாம் செய்தார், அந்த ஃபோன் உரையாடல், புகைப்படம் என மீடியாவினர் டீ ஆர் பி ஏத்த எல்லா நிலையும் கண்டனர்.

டிரம்ப் ; அவருடன் படுத்தெழுந்த பெண்கள் அவர் பாலியில் தொந்தரவு செய்தார் என்று.
எனக்கு ஒன்று புரியவில்லை, ஏதோ நியூயார்க் ரோட்டில் கையைப் பிடித்து இழுத்த மாதிரியும்,
வீடு புகுந்து கட்டிப் பிடித்தது மாதிரியும்
அவர் மீது வன்புணர் குற்றச்சாட்டு,

பி.கு ; ஏதோ கிளிண்டன் உலக மகா தாய்க்குலத்தின் காவலர் மாதிரி.

இரண்டு; சட்டத்திற்கு புறம்பாக குடியமர்தல்.

இந்திரா காந்தி வாக்கு வேண்டும் எனும் ஒரே காரணத்திற்காக, பங்களாதேஷ் விஷயத்தில் நடக்க இன்னும் நாம் அனுபவிக்கிறோம்.

திருட்டு அரசியல்வாதிகளுக்கு இது ஒரு ஓட்டு வங்கி. நமக்கு, ?

டிரம்ப்; சட்டத்திற்கு புறம்பாக குடியேறிகளை பற்றிப் பேசினால், டிரம்ப் ஏதோ கேடு விளைவித்தல் நடவடிக்கையில் இறங்கி உள்ளார் என்பது போல் கூச்சல்.
அமெரிக்காவில் முறையாக குடியமரும் வகைகள் தாண்டி, அங்கு செட்டில் ஆகுபவர்களுக்கு தானே வலிக்கனும்.
இவர்களுக்கு ஏன் வலிக்கிறது.

கலிஃபோர்னியா மாநிலத்த்தில் அதிகாமான அளவில் திருட்டு குடியேறிகள். அங்கு ஜெயிக்க முடியவில்லை டிரம்ப்பால்.
இது தான் உண்மை.

இதில், திருட்டுக் கும்பல் வரி கட்டுகிறதாம், அதனால் அவர்களுக்கு குடியுரிமை தர வேண்டுமாம்.

அவன் பெத்த பிள்ளைக்கு, மன்னிப்புத் தரணுமாம்.
இது எப்படி இருக்கிறது என்றால், கொள்ளையடித்து கோலாகலமாக வாழ்ந்தவனின் பிள்ளை,
அவன் பிடி பட்டவுடன், பிள்ளையை விட்டு விடுங்கள், அவன் சுகமாக இருந்துவிட்டான் , அப்பனையும் பிரிய முடியாது
விட்டு விடுங்கள் தண்டனை வேண்டாம் என்பது போல்.

அப்ப, சட்டத்தை மதித்தவன், யோக்கியன் மயிரப்புடிக்கிட்டு அலையனுமா.

என்னங்கடா உங்க நியாயம்.
அவன் நல்லவன்ப்பா, ஆப்பு அடி
கெட்டவன கொண்டாடு எனில்,

நாளைய உலகம் என்னவாகும்.?

மூன்று – அவுட் சோர்சிங்

ஐ டி கம்பெனி முதலாளி இங்கு 7000 கோடி இருக்கு என்கிறான்,

ஆனால் அவனிடம் வேலை பார்ப்பவன் லோன் போட்டு வாழ்கிறான்.

அமெரிக்காவையும், இந்தியாவை ஒரே சமயத்தில் ஏமாற்றும் இந்த மாதிரி பித்தலாட்டக்காரர்களுக்கு கட்டாயம் தேவை டிரம்ப்.
அங்கிருக்கும் பணத்தை இங்கொரு கம்பெனி ஆரம்பித்து டிரன்ஸ்பர் செய்து , அங்கு ஐ ஆர் எஸ் ஸிற்கு அல்வா.
இங்கு செல்வு எழுதி இங்கு ஐ டிக்கு அல்வா

ஒரே அல்வாவில், இரு தேசத்திற்கு துரோகம் செய்பவர்கள் இக் கூட்டம்.
அதனால், அவுட் சோர்சிங் முறைபடுத்தப்பட வேண்டும்.

மேடைப் பேச்சு;

அது ஒரு கலையாம். இப்படி பேசனும், அப்படி பேசனும், மேடை நாகரீகம் அது இது என.
பொய் சொல்பனுக்குத் தான் ஒத்திகை தேவை.
உண்மை பேசுவனுக்கு ?

நிர்வாணா எனும் நிலை பற்றி தத்துவம் சொன்ன இந்தியா வாழ் மக்கள் கூட டிரம்பை அதிகமாக விமர்சித்தது.

வெளியில் நமக்கோ, ‘such a nasty woman’ என்று சொன்னதற்கு பதில் சொல்லாமல், அப்படி சொல்லியிருக்க கூடாது என்று தான் ஆர்குயூமெண்ட்.

ஆனால், டிரம்பை அசிங்க பட கதை நாயகன் மாதிரி சித்தரிப்பு.

இன்று, அயோக்கியர்களுக்கு எதிராக ‘கதை’ சுழற்றப் போகும் கதா நாயகனாக நிற்கிறார்.

மகாபாரதம் படித்தவர்களில்,
ஒரு கும்பல் சொன்னதாம்,
‘ கிருஷ்ண்ன் பொண்ணுங்க பின்னாடியே சுத்தினாரு.. பெரிய ஸ்திரீ லோலன் போலிருக்கு என்று.

இன்னொரு கும்பல் சொன்னதாம்;
கிருஷ்ணன் அநீதிக்கு எதிராக யுத்த நாதம் கொண்டு, பெருங்கும்பலாய் இருப்பினும் அழித்து வென்றார் என்று.

நாம் யாரோ அது தான் நம் கண்ணிற்கு படும் என்பதே உண்மை

ஒர் பொழுது,
இந்தியாவில் இரவு – மோடி கொண்டு வந்தார் 500 , 1000 செல்லவதற்கு முறைகள்.

அமெரிக்காவில் காலை – டிரம்ப் பை தேர்ந்தடுத்துள்ளனர் .

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த களிப்பில் காலம்.

மோடி, டிரம்ப் இருவர் கை இணையட்டும்

இந்தியா – அமெரிக்க உறவு செழிக்கட்டும்.

பின் குறிப்பு;
மிகக் கேவலாமக விமர்சிக்கப்பட்டேன், டிரம்பையும், மோடியையும் ஆதரித்ததால்.

எனக்கு இந்தியாவை பொறுத்தவரை, யுனைட்டட் ஸ்டேட் ஆப் இந்தியா – எனும் ஆட்சி முறையில் மட்டுமே நம்பிக்கை உண்டு.

திருட்டத்தனமாக தொழில் செய்யாததால், என் தூரத்து உறவினரால், கையாலாகாதவன் என்று அடையாளம் பெற்றேன்.

அமெரிக்காவில் இருக்க வழி இருந்தும், திரும்பி வந்து,

அமெரிக்காவில் முறையற்ற குடியேறுதல், மற்றும்

தவறாக அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பிடுங்கும் கும்பலை பற்றி எழுதினால், திட்டப்படுகிறேன்.

இப்போது, எனக்கு ,

என் நிலைப்பாட்டின் மேல் அதீத நம்பிக்கையும்,

அமெரிக்க மக்களின் மேல் அதீத மரியாதையும்,

மோ(டி)ரம்ப் இருவரின் மீது அளவு கடந்த பாசமும் வந்திருக்கிறது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மீண்டும் தர்மமே வெல்லும்

கோவிந்த் கருப்

Series Navigationமௌனம் பேசுமா !காரணங்கள் தீர்வதில்லை
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    வளர்ச்சி!….வளர்ச்சி!!…..மாற்றம்… என்ற மோடியின் வாய்ப் பந்தலை நம்பி வாக்களிக்க அன்று கியூவில் நின்ற மக்கள்…இன்று போட்ட ஒட்டின் பலனை அனுபவிக்க வங்கி வாசலில் கியூவில்…

    அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் வளர்ச்சி…அப்பாவி பொதுமக்களுக்கு மாற்றம்…ஆம்! ஏ…மாற்றம்!

    கட்டுரையாளர் கோவிந்த் கருப்பு அவர்கள், பிரதமர் மோடியை கண்ணை மூடி ஆதரிக்கக் காரணம்…ஒருவேளை அவர் வங்கிக் கணக்கில் பதினைந்து லட்சம் (கருப்பு) பங்குப் பணத்தை மோடி போட்டுவிட்டாரோ என்னமோ…

    நாங்க பாடுபட்டு உழைத்த பணத்தை பாங்கில் போட்டதற்குப் மோடி கொடுத்த பரிசு…’சொந்தக்காசில் சூனியம்’ வைத்தமாதிரி ஆகிவிட்டது.

    டொனால்ட் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் பல ஒற்றுமை உண்டு என்று கோவிந்த் கருப்பு போட்ட பட்டியலில் ஒரு பெண்ணும் சம்பந்தபட்டிருக்கிறாராம்.உண்மைதான்.

    உண்மை அம்மணமாகவே வரும் என்று அண்ணன் கோவிந்தே சொன்னதுபோல் “போர்னோ” பெண் அம்மணமாகவே வந்து இன்று அமெரிக்கா அரியணை ஏறிவிட்டார்.

    //அவர் ஒரு இளம் பெண்ணை பாதுகாக்க என்னவெல்லாம் செய்தார், அந்த ஃபோன் உரையாடல், புகைப்படம் என மீடியாவினர் டீ ஆர் பி ஏத்த எல்லா நிலையும் கண்டனர்//

    சரி! மோடி அவர்கள் பாதுகாத்த பெண்ணை விட்டுவிடுவோம். திருமணம் முடித்து தன்னை பாதுகாப்பார் என்று நம்பி வந்த (மனைவி) பெண்ணைப் பேசுவோம்.

    .

    ஆனால் இங்கு என்ன நடக்கிறது?.தாலி கட்டிய குடும்பப்பெண் கோட்டையில் குத்துவிளக்கு ஏற்றமுடியவில்லை.பிரதமர் மோடி தனி மரமாகவே நிற்கிறார்.ஆனால் அமெரிக்காவில் “அம்மணம்” அரியணை ஏறி “முதல் குடிமகள்” ஆக முடிகிறது.

    என்ன இருந்தாலும் அமெரிக்கா…அமெரிக்காதான்.என்ன சொல்கிறீர்கள் கோவிந்த் கருப்?

    // அப்ப சட்டத்தை மதித்தவன்,யோக்கியன் மயிரைப் புடிச்சுக்கிட்டு அலையனுமா….என்னங்கடா உங்க நியாயம்.
    அவன் நல்லவன்ப்பா.. ஆப்பு அடி! கெட்டவனை கொண்டாடு எனில்,
    நாளைய உலகம் என்னாகும்..? //

    அதானே…சட்டத்தை மதித்த பொதுமக்கள் பிச்சைக் காரனைப்போல் தெருவில் கியூவில் நின்று கொடுக்கிற காசை வாங்கவேண்டும்.ஆனால் வங்கியை திவாலாக்கி கொள்ளையடித்த மல்லையா மன்னார் அண்டு கம்பெனிகள் முதலைகள் லண்டனில் உல்லாசம்.

    கோவிந்த் கருப்பு சொல்வது போல் நல்லவனுக்கு அடி ஆப்பு! மல்லையாவுக்கு போடு சோப்பு! இது தானே இந்தியா!

    கள்ள நோட்டை ஒழிக்க கொண்டு வந்த அதிரடி உத்தரவிலும்….அதானி …அம்பானி (ரிலையன்ஸ்) ஆண்டேகளுக்கு,கல்லாக் கட்டி வெள்ளையாக்க அருமையான வாய்ப்பு….என்ன அது? பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளிலும் ஐநூறு, ஆயிரம் ரூபாய்களை மாற்றிக் கொள்ளலாம்.

    இந்தியாவில் சுமார் அறுபதாயிரம் பெட்ரோல் பங்குகள் உள்ளன.எல்லாம் கொடுப்பதைக் கொடுத்து லைசென்ஸ் வாங்கிய பெரு வணிகர்கள்,அரசியல் வாதிகள்.ரிலையன்ஸ்,எஸ்ஸார்,மற்றும் பினாமிகள்.இந்த கொழுத்த முதலாளிகள் கறுப்பை வெள்ளையாக்க கொடுத்த வரமே அது.

    பிரதமர் மோடி கொண்டு வந்த மாற்றத்தை மக்கள் பார்த்துவிட்டார்கள்.நாளைக்கே எலெக்சன் வைத்தால்…மறுபடியும் டீ விற்க போகும் நிலைதான்.ஆனால் டிரம்பு இன்னும் பதவிக்கு வருவதற்கு முன்பே அவருக்கு ஆப்பு அடிக்க அங்கு செனட் பிரதிநிதிகளிடம் கையெழுத்து வேலை நடக்கிறது. இந்தியாக்காரன் மாதிரி அமெரிக்ககாரனும் மாற்றத்தை நம்பி ஏமாற்றமடைய வேண்டும் என்பதுதான் கட்டுரையாளரின் கோவிந்த் கருப்பின் ஆசை! இந்த ஆசை நிராசை ஆகாமல் நிச்சயம் நிறைவேற நமது அட்வான்ஸ் ஆசிர்வாதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *