யாருக்கு வேண்டும் cashless economy

This entry is part 8 of 19 in the series 20 நவம்பர் 2016

சிறு தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது மிகவும் கடினம்.அவர்களின் சேமிப்பே சீட்டு கட்டுவது தான்.அதனை வங்கிகள் ஏற்று கொள்ளுமா,அல்லது சீட்டு ஏலம் நடத்துமா
மாதம் 1000 முதல் லட்சம் ரூபாய் வரை சீட்டு உண்டு.சீட்டை தள்ளி எடுப்பவர்களுக்கு கிடைக்கும் பணம் தொழில் துவங்க,வீடு கட்ட கிடைக்கும் கடனுக்கு ஒப்பாகும்.எடுத்துக்காட்டாக 30 பேர்,20 பேர் மாதம் 10000 சீட்டு காட்டுகிறார்கள் என்பதை எடுத்து கொள்வோம். மொத்த value 3 லட்சம் .முதல் மாதம் சீட்டு எடுப்பவர் 150000 லட்ச ரூபாய்க்கு கூட எடுப்பார்.இரண்டாம் சீட்டு முழுதாக சீட்டு நடத்துபவருக்கு செல்லும்.அனைவரிடமும் வசூல் செய்யும் பொறுப்பு கொண்டவர் அவர் தானே.யாராவது கொடுக்க தவறினாலும் இவர் கொடுத்து விட்டு வசூலிக்க வேண்டும்.150000 தள்ளி சீட்டு எடுக்கும் போது கட்ட வேண்டிய தொகை பாதியாகும்.ஒவ்வொரு மாதமும் கட்டட வேண்டிய தொகை 5000 முதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.முதல் மாதம் 150000 க்கு சீட்டு எடுத்தவர் 30 மாதங்கள் கழித்து கட்டிய தொகையை கூட்டி பார்த்தால் 210000 அருகில் வரும் .30 ஆம் மாதம் எடுப்பவர் 210000 கட்டி 300000 பணம் பெறுவார். எளிதில் கடன் கிடைக்க அல்லது சேமிக்கும் வழி இது தான்.
இவர்களை ஏன் வங்கிக்குள் இழுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.இவர்களிடம் வரி வாங்கி தான் வல்லரசாக வேண்டுமா.சென்ற மழையில் இவர்களுக்கு பல ஆயிரம் முதல் பல லட்சம் வரை நட்டம்.அரசு ஊழியருக்கு மழை என்பதால் கூடுதல் விடுமுறை,வட்டியில்லா கடன்,அதே ஊதியம் .செக்யூரிட்டி உள்ள மக்கள் வரி கட்டுவதற்கும் ரிஸ்க் உள்ள வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.அரசு வேலையை விட்டு விட்டு,தனியார் துறையில் வரி கட்டும் அளவு ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு யாரும் பிளாட்பாரத்தில் கடை வைக்க,மீனை தெருத்தெருவாக எடுத்து வந்து விற்க ,கொளுத்து வேலை செய்யும் ஆண்,பெண்ணாக செல்வது கிடையாது
அரசு ஊழியன் வாங்கும் மூன்று லட்சம் ஊதியத்துக்கும் அதே வருவாய் ஈட்டும் மீன்கடை,காய்கறிக்கடை,பெட்டிக்கடை வைத்திருப்பவருக்கும் அடிப்படை வித்தியாசங்களை உணர்ந்தால் இந்த குறைந்த சதவீத மக்களே வருமான வரி கட்டுகிறார்கள் என்ற வாதம் வராது
சட்டப்படி தள்ளுபடி சீட்டு எல்லாம் எடுக்க முடியாது. சீட்டை நடத்துபவர் முழுதாக இரண்டாம் சீட்டை எடுத்து கொள்வது அவர் எடுக்கும் ரிஸ்க்க்குக்கான ஊதியம்.இங்கு அரசும் வங்கிகளும் நுழைய வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள்.
கணவனுக்கு,அவர் குடும்பத்துக்கு தெரியாமல் உதவும் லட்சக்கணக்கான பெண்கள் நாடு முழுவதும் உண்டு.தன் குடும்பம்,நட்பு,உறவுகளுக்கு உதவும் ஆண்களும் பல லட்சம் உண்டு.இவை அனைத்தும் வெளிப்படையாக செய்ய முடியாது. கல்யாணத்தில் எவ்வளவு பவுன் நகை போடுகிறார்கள்,எவ்வளவு பேரை அழைத்தார்கள் என்று ரிஜிஸ்டர் ஆபிஸில் நோட்டிஸ் ஓட்ட வேண்டும் என்றும் அடுத்து சொல்லலாம்.இப்போது பண விஷயத்தில் சொல்வதும் அதே தானே
எல்லாரும் கிருத்தவர் ஆக வேண்டும்,அல்லோபதி மட்டுமே பயன்படுத்த வேண்டும் ,paleo உணவே உண்ண வேண்டும் என்பதற்கும் பணம் வங்கிகளின் மூலமே ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் கிடையாது.. எல்லோருக்கு உள்ளும் ஒரு சுப்ரமணிய சாமியும் ஜேப்பியாரும் உறங்கி கொண்டிருப்பதை தான் இந்த தனி மனித உரிமைகளுக்கு எதிரான,மக்கள் ஆட்சிக்கு எதிரான,கூட்டாட்சிக்கு எதிரான ,தனி நபர் விருப்பத்திற்கு எதிரான சர்வாதிகார முடிவிற்கு பலரும் தெரிவிக்கும் ஆதரவு உணர்த்துகிறது

Series Navigationதா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?தாத்தா வீடு
author

பூவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    // இவர்களை ஏன் வங்கிக்குள் இழுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.இவர்களிடம் வரி வாங்கி தான் வல்லரசாக வேண்டுமா…..//

    மக்களுடைய சேமிப்பு,சம்பளம்,சிறு வணிகர்களிடையே புழங்கும் பணம் ஆகிய அனைத்தையும் வங்கிக்குள் கொண்டுவருவதுதான் இவர்கள் நோக்கம்.

    பணப்பொருளாதாரத்திலிருந்து வங்கிப் பொருளாதாரத்திற்கு மாற்றுவதன் மூலம் மக்களுடைய பணம் வங்கிக்குக் செல்கிறது.பிறகு, மக்கள் பணம் மலை முழுங்கி மல்லையாக்களின் பணமாக மாறிவிடும். .2013-2015 வருடத்திற்கிடையில் மட்டும் அரசு வங்கிகள் ரூபாய்.1,20,000 கோடி வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளன.

    மக்களை வங்கிக்கணக்கு வலையில் சிக்க வைத்து, அவர்களுடைய சேமிப்பு பணத்தை தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்குவது.பெரு முதலாளிகளுக்கு வரி விலக்கு,சிறு தொழில் செய்வோர்,சிறு வணிகர்களுக்கு வரி விதிப்பு.இதுதான் மோடி அவர்களின் பாரத் மாதாவில் நடக்கிறது.

    தேச பக்தர்களின் நல்ல பணம் அப்படியே சுவிஸ் வங்கியில் ஆடாமல் அசையாமல் ஆழ்ந்து உறங்கும்.கருப்புப்பண நடவடிக்கையை ஆதரிக்கும் அப்பாவி பொதுமக்கள் கைகளில் மை வைத்து கவர்மெண்டு.. கறைப்படுத்தும்.கிராமங்களில் ஓட்டுக்குப் பணம் கொடுத்த கையோட அவர்களில் விரல்களில் மை வைக்கும் தந்திரத்தை இதுவரை பார்த்துள்ளோம்.

    ஆனால் நோட்டுக்கு மை வைக்கும் அரசை இப்போதுதான் பார்க்கிறோம்.ஓட்டுப் போட்டாலும் மை.நோட்டு வாங்கினாலும் மை. வாழ்க! நம்ம மத்திய “மை’ய்ய அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *